Monday, July 22, 2013

வைரவிழா மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்...

 



கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மிகவும் பழமை வாய்ந்ததும் அனைவரும் அறிந்த பள்ளி தான் வைரவிழா மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் படிப்பதே பெருமை என்ற அளவிற்கு இன்றும் இருந்து வருகிறது.. ஊரில் நிறைய தனியார் பள்ளிகள் வந்தாலும் வைரவிழாவிற்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு..

இந்த பள்ளி கட்டுவதற்காக நிலத்தை தானமாக வழங்கியவர் கோபிசெட்டிபாளையத்தின் பெரும் நிழக்கிழார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் சொத்து சுகங்களை இழந்த லட்சுமண ஐயர் ஆவார்.

 


விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுற்ற நிழையில் இங்கிலாந்து அரசு ஆழும் இடங்களில் எல்லாம் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடினர். அந்த காலகட்டத்தில் கோபிசெட்டிபாளையம் ஆங்கிலேயரின் மாவட்ட தலைமையிடமாக செயல் பட்டதாம். இன்றும் கோபி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், துணை ஆட்சியல் அலுவலகம் எல்லாம் அந்த கால கட்டிடங்கள் என்பார்கள். அந்த கட்டிடங்களின் அமைப்பும் சிறப்பாக இருக்கும். அந்த விழாவை கொண்டாடும் போதுதான் கோபிசெட்டிபாளையத்தி சேர்ந்த நிழக்கிழார்கள், வக்கீல்கள் மற்றும் மருத்துவர்கள் எல்லாம் ஒன்றினைந்து கோபியில் எவ்வாறு கொண்டாடுவது என்று யோசிக்கும் போது தான் பள்ளி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். பள்ளி திறக்கலாம் பள்ளிக்கு இடம் என்றதும் கொடை வள்ளல் ஐயா லட்சுமண ஐயர் அவர்கள் அவரின் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.

பள்ளியின் பெயரையும் வைரவிழா என்று சூட்டிவிட்டனர். இந்த விழா கொண்டாடிய சமயங்களில் பல இடங்களில் இந்த பெயரை சூட்டி இருக்கலாம்.. டாக்ட‌ர்.வ‌ர்கீஸ் குரியன் எங்கள் பள்ளியில் படித்தார் என்று அடிக்கடி பெருமையாக கூறுவார்கள்.. பள்ளியின் காலை அசெம்பளி நடக்கும் இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும் இங்கு தான் காந்தி அமர்ந்திருந்தார் என்பார்கள்.. காந்தி பள்ளிக்குவந்த வரலாறு உண்டு அங்கு அமர்ந்தார் என சொல்லத்தான் நான் கேட்டுள்ளேன்.. அதே ஆலமரத்தில் விநோபாவும் அமர்ந்தார் என்றும் அந்த அளவிற்கு புகழ்பெற்றது இந்த மரம் என்பார்கள்.. ( நானும் அடிக்கடி அந்த மரத்தடியில் உட்காருவேன் பின்னாளில் ஒரு புகழ்ச்சிக்கு ஆகுமள்ளவா)

பள்ளி துவக்கத்தில் இருபாலரும் படிக்கும் பள்ளியாகத்தான் இருந்துள்ளது பிற்காலத்தில் பெண்களுக்கு என்று பழனியம்மாள் பள்ளியை துவக்கிவிட்டனர். இந்த ஆண்கள் பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்பது என் விதி போலும். 9 ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன்.. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று உலகில் பல இடங்களில் பல உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் கணக்கெடுத்தால் பதிவின் எண்ணிக்கை தாங்காது.

1992 முதல் 1996 வரை இந்தபள்ளியின் மாணவனாக நான் இருந்ததில் எனக்கு மிக பெருமையே. இந்த பள்ளியில் அப்போதெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிட் தினமும் பாட வேளைகளில் அடி பின்னி எடுப்பார்கள்.. எங்கள் கணித ஆசிரியரை பற்றி மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும் அவர் பெயர் கந்தசாமி தற்போது தலைமையாசிரியர் என்று கேள்விப்பட்டேன். இவர் தான் எனக்கு வகுப்பாசிரியர் மற்றும் எங்கள் விடுதியின் காப்பாளரும் இவர் கணித வகுப்பு வராமல் கட்டி அடித்துவிட்டோம் என்றால் காரமடை பெரம்பை எப்போதும் கையில் வைத்திருப்பார் அதிலேயே பின்னி பெடல் எடுப்பார். அவரின் வகுப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவார் அவர் கணிதம் சொல்லிக்கொடுக்கம் பாணியே தனி. ஒவ்வொரு முறை என்னை அடிக்கும் போதெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க நீ என்னடா என்றால் ஊர் சுற்றுவதிலேயே குறியாக இருக்கிறாயா என்று விலாசு விலாசு என்று விலாசுவார் பள்ளியில் மட்டுமல்ல விடுதியிலும்...

எங்கள் பள்ளி விளையாட்டில் அப்போதைய கோபி கல்விமாவட்டத்தில் மிக புகழ்பெற்றது கால்பந்து, கூடைபந்து, ஹாக்கி, பால்பேட்மின்டன், கோ கோ என அனைத்து விளையாட்டிலும் கொடி கட்டி பறப்போம். விளையாட்டில் நானும் உண்டு எங்கள் பள்ளியின் ஜீனியர் சீனியர் என இரு அணிகளுக்கும் நான்  தான் கோல்கீப்பர். ஹாக்கி பேட்டை தூக்கிகிட்டு கூடவே பேடு, ஹெல்மெட் என கவச குண்டலத்தோடு வலம் வருவேன். அப்போது மாவட்ட அளவிலான இரு பரிசுகளையும் அப்புறம் டிவிசன் லெவலில் கோவைக்கு வந்தும் விளையாடி உள்ளோம்.

ஒவ்வொரு விளையாட்டும் ஒரு விளையாட்டு ஆசிரியர் என்று அப்போது 6 பேர் பணியாற்றினார்கள். எங்கள் பள்ளியில் நான் படிக்கும் போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் மாணவர்கள் படித்தார்கள் தற்போதைய நிலவரம் அறியவில்லை. எனது கல்வி படிப்பை அங்கு நிறைவு செய்யும் போது இனியன் அ. கோவிந்தராஜன் பள்ளியின் முதல்வராக இருந்தார். 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அப்போது டவுசர் எல்லாம் கிடையாது அனைவருக்கும் முழுக்கால் பேண்ட் தான். ஈரோடு சத்தியமங்களம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பள்ளியை இன்று கடக்கும் போது நினைவுகள் ஊஞ்சலாடும்... எனக்கு மட்டுமல்ல முன்னாள் மாணவர்களுக்கெல்லாம்...

 பல பெரிய கட்டிடங்களையும், பல படிப்பாளிகளையும், உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மற்றும் விளையாட்டு வீரர்களையும் இன்றும் அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறது எங்கள் வைரவிழா மேல்நிலைப்பள்ளி..

23 comments:

  1. வாழ்த்துக்கள்...

    பள்ளியின் சிறப்பை அறிந்தேன்..


    வைரவிழா பெயர் காரணம் நன்று...

    இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. வைரவிழா பள்ளியின் பெயரே அசத்தலாக இருக்கிறது. நான் ஏதோ பள்ளிக்கு வைரவிழா கொண்டாடுகிறார்கள் என்று நினைத்தேன். அப்பள்ளியில் பயின்ற உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  3. காந்தியும் விநோபாவும் அமர்ந்த ஆலமரத்தில் உட்கார்ந்த அதிர்ஷ்டசாலிக்கு வாழ்த்துக்கள்...

    இனிய நினைவுகளுக்கும், வைரவிழா மேல்நிலைப்பள்ளியின் சிறப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  4. பள்ளி நினைவுகள் எப்போதும் நம்மை உற்சாகபடுத்தும்..... காந்தி, வினோபா அமர்ந்த மரத்தடியில், நாமும் அமர்ந்துள்ளோம் என்பதே பெருமைதானே !

    அங்கு படித்து புகழ் பெற்ற சிலரின் பெயர்களையாவது சொல்லி இருக்கலாமே !

    நல்ல பதிவுக்கு, நன்றிகள் !

    ReplyDelete
  5. அருமை ,.. என்ன வென்று சொல்வது சங்கமேஸ்(சங்கவி).

    எனக்கும் எண்ணற்ற நியாபகம் .... நானும் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்த்தும் விளையாடியும் பல சேட்டைகள் செய்ததும் இன்னும் நியாபகம் இருக்கு ...

    கந்தசாமி... நானும்(yevarum) அவரை மரகல, அவரும் என்ன மரகல ....12 வருடம் கழித்து Hostelukku போய் இருதேன் என் பேர் மற்றும் ஊரையும் சொன்னார்...

    மனுஷன் இன்னும் இதையெல்லாம் நியாபகம் வெச்சு இருக்கராறே.

    Number of students 2500, not 6000

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  6. சங்கவி நானும் இதே பள்ளியில் இதே வெள்ளாளர் மாணவர் விடுதியில் 1991-95 படித்தேன் [9 to 12]. கடந்த முறை ஊருக்கு வந்த போது கந்தசாமி அவர்களை மரியாதை நிமித்தம் சென்று சந்தித்து வந்தேன். எந்த மாற்றமும் இல்லை அதே போலத் தான் இருக்கிறார் :-).

    விளையாட்டில் கலக்கிய முகமது மீரான் என்னுடைய வகுப்பு தான். விடுதியில் திங்கள் இரவு சப்பாத்தியும் புதன் காலை ப்ரெட்டும் என்னால் மறக்கவே முடியாது :-).

    ReplyDelete
    Replies
    1. நான் 92 முதல் 94 வரை நானும் அங்கதாங்க இருந்தேன்...

      Delete
  7. School inaugurate on 3rd March 1898.

    ReplyDelete
  8. total strength of the school on 1996 is around 2500 ppl not 6000 ( 60 ppl per class * 6 sections * (from 6th to 12th) 7)) = 2520, if you are count elementary school its 6K ppl

    ReplyDelete
    Replies
    1. சரிங்க மாத்திக்கிறேன்..

      Delete
  9. one more clarification, this is govt aided school, not a private school..

    ReplyDelete
  10. பள்ளியின் பல தகவல்கள் அறிந்தேன், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  11. அன்பின் சங்கவி - பழம் பெருமை வாய்ந்த - புகழ் பெற்ற பள்ளியில் படித்தமை நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. வைரவிழா கொண்டாடும் தாங்கள் படித்த பள்ளியை பற்றி அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  14. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete