Tuesday, July 30, 2013

தாவணிக்கனவுகள்...


 இன்று எத்தனையோ நவ நாகரீக உடைகள் வந்தாலும் இந்த பாவடை தாவணியின் அழகிற்கு ஈடு இல்லை என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு தாவணியை ரசித்தவர்களில் நானும் ஒருவன்..

நிறைய பேர் அவர்களின் ரசிப்பை சொல்ல கூச்சப்படுவர், சிலர் வெட்கப்படுவர் பலர் ஐயோ நான் ரொம்ப நல்லவன் என்பார்கள் ஆனாலும் இவர்கள் எல்லாம் நிச்சயம் ரசித்து இருப்பர் இந்த தாவணி உடையை.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் 50 பெண்கள் இருந்தால் அதில் ஒரு பெண் தாவணி அணிந்திருந்தால் அந்த பெண் தான் நிச்சயம் அனைவரின் கண்ணுக்கு பளிச் என்று இருப்பால் இதை மறுக்க இயலாது.


அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள்  12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நெற்றியில் ஒரு மெல்லிய கோடாக திருநீறும் அதன் கீழ் குங்குமம் ஒரு கோடு போலவும் இரட்டை சடை பின்னி அதில் ஒரு நாள் கனகாம்பரமும், ஒரு நாள் செம்பருத்தியும் அணிந்து வரும் அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்..

வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து மல்லிகை பூவும் உடன் காதுக்கு பின் ரோஜாப்பூவை சரோஜதேவி ஸ்டைலில் குத்தியிருப்பாள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் டூயட் பாடுவது போல நானும் அவளும் என் அன்றைய  கனவில் அவளோடு தான் டூயட் பாடுவோம்.

இரண்டு லாங் சைஸ் நோட்டும் டிபன் பாக்சும் வைத்து இருகைகளால் அதை மார்போடு அனைத்த படி அவள் வருகையில் சைக்கிளில் இரண்டு மூன்று முறை அந்த சாலையில் அவள் கண்ளில் படுவது போல வண்டி ஓட்டுவது ஒரு 3 மாதமாக தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

எனக்கு வேறு
எதுவும் வேண்டாம்
உன் நோட்புக்காக
மட்டும் நான்
இருந்தால் போதுமடி.....

ஒற்றைச்சடையோடு
தலை குணிந்து
ஞானத்தோடு
உன் கால் விரல்கள்
கோலம் போட
ஏங்குகிறேன்
உன்ஓரப்பார்வைக்காக...
இப்படி எல்லாம் அன்றைக்கு கடிதம் எழுதத் தெரியவில்லை. இன்று நினைவுகளோடு எழுதுகிறேன்.

காலில் கொழுசு சத்தம் ஜல் ஜல் என சல சலக்க தோழிகளின் நடுவில் அவள் இருப்பாள் சுற்றிலும் பாதுகவாலர்கள் போல இந்த பக்கம் இரண்டு அந்த பக்கம் இரண்டு என அந்த ஐவர் அணியை காண நாங்கள் சுத்தி சுத்தி வருவோம். அந்த ஐவர் அணிக்கு நாலு பக்கமும் கண்கள் போல எங்கிருந்து வந்தாலும் பார்த்து தகவல் சொல்லிவிடுவார்கள்.

8.20க்கு அவள் வரும் ABT பஸ்ஸைக்காக 8 மணிக்கே தவமாய் தவமிருப்போம். சனிக்கிழமைகளில் அவள் கலர் தாவணி அணிந்து வருவாள் பச்சை நிற பாவடையில் ரோஸ் நிற தாவணியும் என்னவென்று சொல்வது வஞ்சி அவளின் அழகை, எப்படி சொன்னாலும் கடைசியில் அவள் அழகு என்று தான் சொல்லவேண்டும்.

அந்த தேவதைக்கு ஒரு சுபநாளில் காதலை சொல்ல முற்பட்ட போது , எங்கிருந்தோ இடையில் வந்த அப்பா. என்னடா இங்கே ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாயா? அவள் காது பட அழைத்து கொத்தாக அள்ளிப்போனார்.

ஆஹா இந்த தாவணி எனக்கில்லை போல அப்பா அவமானப்படுத்தி விட்டார் என்று எண்ணும் போது தாவணியின் உடன் வந்த சின்ன தாவணி நண்பனுக்கு அப்புறம் என்ன அடைகாத்த கோழி போல நண்பனுடன் ஒட்டி திரிந்தோம். சில நாட்கள் கழித்து எல்லோரும் பாரியூர் கோயிலுக்கு போறோம் நீங்களும் வாங்க அண்ணா என்று நண்பனின் காதலி எங்களை அழைக்க, நண்பனின் காதிலோ புகை. (ஐவர் அணி கூட தனியாக போகவேண்டும் என்பது அவன் நினைப்பு ) எப்படா சனிக்கிழமை வரும் கோயிலுக்கு போவோம் எஎன காத்திருந்தோம் கோயிலுக்கே போகாத எங்களைஅந்த தாவணிக்காக எல்லா கோயில் படியேறவும் காத்திருந்தோம் எங்கள் மூவர் அணி.



சனிக்கிழமை காலை இருப்பதிலேயே ஒசத்தியான சட்டையும், பேண்டும் போட்டுகிட்டு முகத்துக்கு கொஞ்சம் பேரன் லவ்லியும் பான்ஸ் பவுடரும் அப்பி நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று பக்தி பழமாக நான் மட்டும் வருகிறேன் என்று நினைத்தால் எனக்கு முன்னே நண்பனுகள் வெய்ட்டிங். 9 மணி பேருந்துக்கு 7 மணியில் இருந்தே காத்திருக்கிறோம்.

சைக்கிளை விட்டுவிட்டு பஸ்நிலையத்தில் காத்திருக்கும் போது அவர்களும் ஒவ்வொருவராக வந்து சேர பாரியூர் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் உருளி வரை பேசிக்கொண்டே நடந்தோம் ஏனோ அன்று தாவணி கொஞ்சம் எடுப்பாகவும் மல்லிகையும், அவள் அழகிடம் தோற்று போய் இருந்தது. சரி எப்படியும் இன்று என் காதலை சொல்லிடவேண்டும் என்று முடிவில் நான் இருக்க எனக்கு முன்னே அவள் இதழ்கள் பேசத் துவங்கியது.

இனிமேல் நீங்க என்னைய பார்க்க முடியாது,  திங்கள் முதல் நாங்க எல்லாம் விடுதிக்கு செல்கிறோம் அதனால தான் உங்கள வரச்சொன்னோம் சும்மா காதலிக்கிறேன் நீ தான் உலகம் என்று எல்லாம் சுத்திகிட்டு இருக்காம +2 பாஸ்ஆகும் வழியப்பாருங்க..

நாங்களும் பாஸ் ஆகி எல்லாரும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேருவோம் இதுதான் நம்ம டார்கெட். நீ படிச்சு பாஸ் ஆகி காலேஜ் வரும் வரை இதே போல அப்பவறைக்கும் என் மேல பாசம் இருக்கா உனக்குன்னு பார்ப்போம் எப்பவும் என்னையே நினைக்காமா பாஸ் ஆகற வழிய பாரு என்றாள்.

ஆக உனக்கு என்னை பிடிச்சிருக்கு சொல்லு ஆமா இந்த மரமண்டைக்கு விம் பவுடர் போட்டு விளக்கனுமா. ஊர் நோம்பி போது சும்மா பின்னாடியே சுத்தாதே சரியா..

சரி உனக்கு தீபாவளிக்கு துணி எடுத்து தரணும் என்பது என் ஆவல் சங்ககிரி செட்டியார் கடைக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போய்டுங்க சரியா. உதை வாங்க போற நீ.

நானொல்லாம் அங்க வரமாட்டேங்க நீங்களே எடுத்து காவ்யா கிட்ட கொடுத்து விடுங்க..

சரி உனக்கு நதியா மாடல் சுடிதார் ஒகே தானே ....

நோ நோ நான் எப்பவும் தாவணி தான் அணிவேன் உன் டேஸ்ட்டுக்கு எனக்கு ஒரு தாவணி எடுத்து கொடு அது போதும் எனக்கு, கல்யாணம் ஆகும் வரை தாவணி அப்புறம் சேலை தான் என் சாய்ஸ்.

சரி சரி எடுத்து கொடுத்துவிடுகிறேன் எனறு பல அளவாடளுக்கு பிறகு பிரிந்தோம்.

சிகப்பு கலர் தாவணியும், கருப்பு கலரில் பூப்போட்ட பாவடையோடு ஒரு மியூசிக் கிரிட்டிங்கார்டு வாங்கி தோழியிடம் கொடுத்து அனுப்பினேன் நாட்கள் செல்ல செல்ல கடிதம் மூலம் வளர்ந்தது காதல்.

 +2 பரிட்சை முடிஞ்சு  ரிசல்ட் வந்ததும் கோபி ஆர்ட்சில் சேர வேண்டும் என தீயாக படிச்சோம். விடுதியில் இருந்த வரை நடந்த கடிதப்போக்குவரத்து வீட்டுக்கு வந்ததும் நின்றது.

+2 பரிட்சையில் அவள் மட்டும் பாஸ் எங்களுக்கெல்லாம் எல்லாம் ஊத்திகிச்சு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்று கேள்விப்பட எந்த கல்லூரி என்று அறிய பக்கத்து ஊரான அவள் ஊருக்கு சென்று புதிதாக அவள் ஊரில் நண்பர்களை ஏற்படுத்தி அப்புறம் எந்த கல்லூரி என்று கண்டுபிடித்து அவள் இருக்கும் விடுதி எல்லாவற்றையும் கண்டுபிடித்து அவளின் வீட்டு வளையத்தில் இருந்து அவளை பார்க்கவேண்டும் என்பதற்குள் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது அதற்குள் இங்கு பல தாவணிகள் வந்து போய்விட்டது மனதில்.  நானும் வேலை விசயமாக ஊரைவிட்டு வந்தாச்சு.

கடைசியாக கோபி பாய்ண்டு பாய்ண்ட் பஸ்சில் அவளைப்பார்த்தேன் தாவணியில் ஆனால் பேச இயலவில்லை கூடவே வில்லன்கள் இருப்பதால் கண்களில் மட்டும் மோதின ஆனால் பேச இயலவில்லை என் தாவணி கனவாகவே போய்விட்டாள்...

கடந்த முறை அவள் ஊர் நண்பனை எதாச்சையாக சந்தித்தபோது அவள் எப்படி இருக்காள் என்று விசாரித்தேன் அண்ணே அந்த அக்கா கல்லூரி முடிச்சதும் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கட்டிவெச்சிட்டாங்க. எங்க வீட்ல நான் கூட கல்யாணத்துக்கு போகல எங்கண்ணன்தான் போனோன் என்றான்...

அடப்பாவமே பாவாடையும், தாவணியும், புடவையை மட்டும் காதலித்து அணிந்தவள் இன்று அமெரிக்காவில் எப்படி மாடன் உடையில் இருப்பாளோ அவள் தாவணியும் கனவாகிவிட்டது.....

(இது உண்மைக்கதை என்று மட்டும் நம்பிடாதீங்க மக்களே)

48 comments:

  1. ITHU UNMAI - KATHAI ILLAI :)

    ReplyDelete
  2. இது உண்மைக்கதை என்று மட்டும் நம்பிடாதீங்க மக்களே
    >>
    ஹவுஸ் பாஸ்கிட்ட வாங்க போற அடிக்கு பயந்து இப்படி டிஸ்கின்னு நம்பிடாதீங்க மக்களே!

    ReplyDelete
    Replies
    1. அக்கா... அடிச்சிறுவாங்களா?? அடிச்சிறுவாங்களா??

      அடிச்சா கம்முன்னு இருக்க மாட்டோம்... திரும்பி நின்று வாங்கிக்குவேன்...

      Delete
    2. என்னை மாதிரி ஒரு சிங்கம் நம்ம தமிழ்நாட்டுலேயும் இருக்கா என்ன?

      Delete
    3. நீரும் நானும் ஓர் இனம் தானோ...

      Delete
  3. தாவணி கனவுகள் என்று ஆரம்பித்து இது உண்மை கதை இல்லை என்று முடித்து இருக்கிறீர்கள்..... நடுவில் நடந்ததெல்லாம் கனவுன்னு நாங்க நம்பிட்டோம் ! சரி, என்ன இருந்தாலும் நீங்க போட்டு இருந்த படங்கள் எல்லாம் நல்லா இருந்துச்சு, அதுக்காக பொழைச்சு போங்க.... :-)

    ReplyDelete
    Replies
    1. உண்மை இல்லீங்க உண்மையாலும்... நயன்தாரா காப்பாத்தீட்டாங்க போல...

      Delete
  4. அட்டகாசம் அண்ணே ...
    எனக்கும் தாவணிகளை ரசிக்கும் கொடுப்பினை இருந்துச்சி...
    இனி வரும் சந்ததிகளுக்கு அவ்வாய்ப்பு இல்லை ... என்னதான் மாடர்ன் உடை வந்தாலும் இதற்கு ஈடு வேறு ஏதுமில்லை ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அரசன்...

      இப்போது வாய்ப்புகள் குறைந்துவிட்டன தாவணிக்கு..

      Delete
  5. அட போங்க... அந்த ரசனையே வேறே... ...ம்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க.. அது ஒரு கனாக்காலம்...

      Delete
  6. பழைய நெனைப்புல .......... மஞ்சள் குளிப்பா?? :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாணிக்கம் அண்ணே... எப்படி இருக்கீக..

      பார்த்து ரொம்பநாள் ஆச்சு...

      Delete
  7. கடந்த முறை அவள் ஊர் நண்பனை எதாச்சையாக சந்தித்தபோது அவள் எப்படி இருக்காள் என்று விசாரித்தேன் அண்ணே அந்த அக்கா கல்லூரி முடிச்சதும் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கட்டிவெச்சிட்டாங்க.

    கதைக்கண்ணோட்டம் அருமையாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன்..

      Delete
  8. தாவணியைக் கண்டாலே கனவுகளும் வந்துவிடும் போல. :))

    ReplyDelete
    Replies
    1. பின்ன தாவணி என்றால் சும்மாவா மாதேவி...

      Delete
  9. அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்.ஆம் தாவணியில்.உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கண்ணதாசன் சார்....

      Delete
  10. தாவாணி...தாவாணி தான்......அசைசிக்க முடியாது....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாம்ஸ்... தாவணிய பார்த்தாலே மனசு பத்திக்குது...

      Delete
  11. உண்மையோ கதையோ அருமையான பகிர்வு! டீன் ஏஜ் வயதில் இது சகஜமான ஒன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்...

      Delete
  12. ஒற்றைச்சடையோடு
    தலை குணிந்து
    நாணத்தோடு
    உன் கால் விரல்கள்
    கோலம் போட

    தாவணிக் கனவுகளும் மீட் டும் நினை வுகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க உண்மையான நினைவுகள்...

      Delete
  13. உங்க கனவில கூட தாவணிதானோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... ஏன் பாஸ் உங்களுக்கு வருவதில்லையோ...

      Delete
  14. azhakaana kathaiyaa..!

    illai!

    unarvukal..!

    ReplyDelete
  15. சங்கவி நீங்க எல்லாம் கொடுத்து வைச்சவங்க இன்னும் பல தாவணிகளை ஒரக் கண்ணால் பார்த்து ரசிக்க வாய்ப்பு இருக்கு. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நாங்க போடும் படத்தில் ரசிங்க நண்பரே...

      Delete
  16. தாவணிக் கனவுகள்..... :)

    கடைசி லைனை நம்பிட்டோம்!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... எல்லாம் இருக்கறது தான் பாஸ்...

      Delete
  17. தாவணிக் கனவுகள் நல்லாவே இருக்கு. இதுல பாதி உண்மை பாதி கற்பனை சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. உண்மையே இல்லீங்க எல்லாம் கற்பனை..

      Delete
  18. தாவணி .. நானும் கனவுக்குள்...

    ReplyDelete
    Replies
    1. ஐ... நீங்களும் என் இனமா..

      Delete
  19. உண்மைதாங்க. அந்த காலத்துல அதுதானே யூனிஃபார்ம் மாதிரி இருந்துது? இப்பருக்கற சூடிதார் மாதிரி?

    தாவணிக் கனவுகள்னு ஒரு படமே வந்துதே? சூடிதார எப்ப வேணும்னாலும் போட்டுக்கலாம். ஆனா தாவணி போடற வயசு ஒரு முறைதான் வரும். அது ஏந்தான் இந்த காலத்து பசங்களுக்கு புரிய மாட்டேங்குதோ தெரியல.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்... இனி புரிஞ்சு என்ன சார் ஆகப்போகுது...

      தாவணி காணமல் போகப்போகுது விரைவில்...

      Delete

  20. பாவாடை தாவணியைவிட கிக்கான உடை ஏதேனும் உண்டா என்ன...? முன்பெல்லாம் பள்ளி சீருடைகூட பாவாடை தாவணியில் இருக்கும். இப்போ சுடிதாருக்கு மாறிடிச்சி...ம்ம்ம்...அதெல்லாம் அந்தக் காலம்... பெரு மூச்சுதான் விட்டுக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே.. அது நம் கண்ணிற்கு ஒரு கனாக்காலம்..

      Delete
  21. அன்பின் சங்கவி - தாவணிக் கனவுகள் அருமை - நிஜமா அல்லது கனவுகள் கண்டீர்களோ - காண வேண்டுமென விரும்பினீர்களோ - அல்லது மனதில் கண்டு பதிவெழுதியதோடு சரியா - நல்
    வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஐயா.. கனவுதாங்க... நம்புங்க...

      Delete
  22. நம்பிட்டோம் :-)))

    எங்கூர்ல தாவணி ஃபேஷனாக்கும். பின்னே, தாவணியின் இன்னொரு உருவம்தானே இங்கே உள்ள லெஹங்கா சோளி, சனியா சோளி எல்லாம் :-)

    ReplyDelete
  23. அது என்னங்க சொல்ற எல்லாத்தையும் சொல்லிப்புட்டு சிகரெட் பாக்கெட்டுல உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு போடுற மாதிரி உண்மைக்கதையின்னு நம்பிடதீங்கன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும்...

    ReplyDelete