Sunday, July 7, 2013

மாற்றத்தோடு கடக்கும் ஞாயிறு...

 


 
வர வர ஞாயிற்றுக்கிழமையை கண்டாலே பிடிக்கமாட்டேன் என்கிறது. இது எப்ப இருந்து என்றால் சமீபத்தில் இருந்து தான் காலை எழுந்ததும் மட்டன் கடைக்கு போய் மட்டன் எடுத்துகிட்டு பேப்பர் வாங்கிவிட்டு இஞ்சி, பூண்டு எல்லாம் வாங்கிட்டு வந்து ஒரு காபியை கையில் எடுத்து தினமலரை புரட்ட தொடங்கும் போது மட்டன் மசாலா தீர்ந்துடுச்சு போய் வாங்கிட்டு வாங்க என்பார்கள் அப்படியே பிபி உச்சந்தலை வரை ஏறும் இப்பத்தான போய்ட்டு வந்தேன் கடை என்ன பக்கமாவா இருக்கு 6 கிலோ மீட்டர் போகனுமுள்ள என்று அன்றைக்கு கறி திங்கும் ஆசையே போய்விடும் அப்புறம் அப்படி இப்படி என்று சமாதானம் ஆகி ( இல்லை என்றால் கறி கிடைக்காதே) 4 இட்லி அரைக்கிலோ கறிய உள்ள விட்டாத்தான் மனசு ஆறும்.

ஊருக்கு போனாலும் இதே பிரச்சனை தான் என்ன அங்க இளம் ஆட்டு கறி கிடைக்கும் ஆதாலால் வெளுத்து வாங்கலாம் என்று ஆறுமணிக்கே எச்சில் ஊற ஆரம்பதிது விடும் அதுவும் நாட்டுக்கோழி என்றால் அம்மாவே அறுத்து ஒரு கரண்டியில் கோழி இரத்தத்தை பிடிச்சு கொஞ்சம் உப்புக்கல்லு போட்டு இரத்தத்தை வறுத்து கொடுப்பாங்க இன்று வரை அந்த இரத்தப்பொறியல் எனக்குத்தான் எங்கவீட்டில்.

திருமணம் ஆனதற்கு பின் தான் இப்படி என்றால் திருமணத்திற்கு முன் ஞாயிற்றுக்கிழமை என்றாலே மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சி என்ன அதற்கு மேலும் பறக்கும். அந்த அளவிக்கு பிடித்தமான நாள் தான் இந்த ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை அடிச்ச மப்பு இறங்கி ஞாயிறுகாலை எழுவதற்கே 8 ஆகிடும் அப்படியே பெட் காபி குடிச்சிட்டு ஊர் திண்ணைக்கு வந்தால் அந்த வாரம் எல்லாம் சந்திக்காத எல்லா நண்பர்களும் அங்கு ஆஜராகி இருப்போம். அப்படியே 11 மணி வரை உள்ளூர் மேட்டரில் இருந்து உலக மேட்டர் வரை அலசி ஆராய்ந்துவிட்டு அப்புறம் வீட்டுக்கு வந்து ஒரு சாப்பாட்டை தாக்கு தாக்கிவிட்டு கிரிக்கெட் விளையாடும் குரூப் ஒரு பக்கமும்... ஆலமரத்தடியில் 9 பேர் கொண்ட விளையாட்டு தனியாகவும் என ஞாயிறு போவதே தெரியாது அந்த அளவிற்கு அனுபவிப்போம்..

இன்னும் சிறுவயதில் ஞாயிறுகளில் தான் தூதர்ஷனில் திரைப்படங்கள் திரையிடுவர் ஒரு வாரம் 4 மணிக்கு படம் தொடங்கும் என்பார்கள் ஒரு வாரம் 5 மணி என்று இருக்கும் காலையில் தினத்தந்தியில் நேரத்தை பார்த்துவிட்டு எல்லோரும் எத்தனை மணிக்கு படத்திற்கு போகவேண்டும் என்று முடிவு செய்து இடம் பிடிக்க போவோம்... 5 மணி படத்துக்கு 4 மணிக்கே குளித்து பாயை எடுத்துக்கொண்டு முன்னாடி போய் இடம் பிடித்துக்கொள்வோம் பஞ்சாயத்து அரையில் இருந்து தொலைக்காட்சியை 5 நிமிடத்துக்கு முன்னர் தான் எடுத்து வைப்பர் எல்லாரும் தலை சீவி மேக்கப்போட்டுகிட்டு தான் அங்கு வந்து அலப்பறை செய்வர்.

நீ முந்தி நான் முந்தி என்று இடம் பிடித்து பெடம் முடிந்து தமிழ் ஆங்கில செய்திகளை எல்லாம் பார்த்த பின் புள்ளி புள்ளியாக வரும் அதுக்கு நாங்க வைத்த பெயர் டிவிக்காரங்க வடை சுடுறாங்க என்போம் அதற்கு பின்தான் அனைவரும் வீடு சேருவது ஒரு காலம் அந்த ஞாயிறுகளின் சுகம் தனி..

பின் எல்லா வீட்டிலும் டிவி வந்து பின் பஞ்சாயத்து தொலைக்காட்சி மறைந்துவிட்டது இப்போது அதற்கான அறியும் இல்லை குறியும் இல்லை. அதற்கு பின் வந்த ஞாயிறுகள் எல்லாம் நண்பர்களுடன் செலவாகிக்கொண்டு தான் இருந்தது. இப்போது மனைவி மகன்களுடன் கடந்து செல்கிறது..

அடுத்த பல வருடங்களில் இன்னும் நிறைய மாற்றத்தோடு நம்மை கடந்து செல்லும் ஞாயிறு.....

27 comments:

  1. மாற்றம் எல்லாவற்றையும் மாற்றி விடும் (லாம்..!)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தனபாலன்... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  2. அந்த ஞாயிறு எனக்கும் நன்றாக நியாபகம் உள்ளது.. தொடர் பதிவே எழுதலாம் போலவே, அவ்வளவு நியாபகம் அள்ளுகிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சீனு... இப்ப பதிவெழுதுவதே பெரிய விசயம் இதுல எங்க தொடர்பதிவு எழுத அழைப்பது என விட்டு விட்டேன் சீனு....

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  3. ஞாயிறுகளில் தான் தூதர்ஷனில் திரைப்படங்கள் திரையிடுவர் ஒரு வாரம் 4 மணிக்கு படம் தொடங்கும் என்பார்கள் ஒரு வாரம் 5 மணி என்று இருக்கும் காலையில் தினத்தந்தியில் நேரத்தை பார்த்துவிட்டு எல்லோரும் எத்தனை மணிக்கு படத்திற்கு போகவேண்டும் என்று முடிவு செய்து இடம் பிடிக்க போவோம்... இதில் நானும் ஒரு ஆள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  4. அன்பின் சங்கவி - மாற்றம் ஒன்று தான் மாறாதது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  5. ஞாயிறு மட்டும் அல்ல எல்லா நாட்களுமே மாறி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.... ஆனாலு ஞாயிறு தான் தனி சுகம்...

      Delete
  6. ஞாயிறுன்னாலே தனி ஸ்பெஷல்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  7. அடுத்த பல வருடங்களில் இன்னும் நிறைய மாற்றத்தோடு நம்மை கடந்து செல்லும் ஞாயிறு.....

    மாற்றம் என்பதே வாழ்க்கை.... மாற்றம் எல்லாவற்றையும் மாற்றும்....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மாற்றமே வாழ்க்கை...

      Delete
  8. எனக்குள்ளும் பழைய ஞாயிறுகள்
    பல வந்து ஏக்கப் பெருமூச்சு
    விடச் செய்து போகிறது
    மனம் கவர்ந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  9. கோழிக்கறியுடன் கூவும் ஞாயிறு :) அதுவும் சுகமே.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நாட்டுக்கோழியோடு...

      Delete
  10. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  11. அனுபவ நினைவுகள் சுகம், வயசான பின்பு ஆலமரத்தடிதான் தினந்தோறும் இல்லையா ஹி ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆலமரத்தடியில் நண்பர்களோடு உட்கார்ந்து ஊர்கதை பேசுவதில்தான்எத்தனை சுகம்...

      Delete
  12. மாற்றம் ஒன்றே மாறாதது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  13. பசுமை நிறைந்த நினைவுகள்

    ReplyDelete
  14. அப்படியே எங்க வீட்டை எட்டி பார்த்து எழுதினது மாதிரி இருக்கு...... ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசற்படி ! என்ன இருந்தாலும் ஞாயிறு கிழமைகளில் அப்பா வெளியே கூட்டி சென்று ஐஸ் கிரீம் வாங்கி தருவது மட்டும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது !

    ReplyDelete
  15. இனிமேல் மட்டன் எடுக்க கடைக்குப் போனா, கையோடு மட்டன் ம்சாலாவும் வாங்கிட்டுப் போங்க சதீஷ்.

    ReplyDelete