Friday, July 19, 2013

டயட்டில் இருக்கீங்களா?? அப்ப இந்த பக்கம் வாங்க...


 பதிவுகள், முகநூல் மற்றும் இரண்டு நண்பர்கள் சேர்ந்தால் பேச்சோடு பேச்சாக பேசுவது உடலைப்பற்றித்தான். உடல் நலம் எப்படி இருக்கு என்னடா மச்சி தொப்பை விட்டுவிட்டது போல.. மாமானார் வீட்டு சாப்பாடு ரொம்ப அதிகமோ என்ற பேச்சுக்கள் பேசுவது இயல்பு.
இன்று 30 வயதை தாண்டியவுடன் கூடவே பிபி மற்றும் சர்க்கரை லேசாக நம் உடலை எட்டிப்பார்க்கிறது இதற்கு மிக முக்கிய காரணம் நம் உணவு வகை மாற்றம் தான் மற்றும் சரியான உடற்பயிற்சி இன்மை வேலைப்பளுவால் உண்டான மனஅழுத்தம் போன்றவை தான் இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம்.

அடுத்த காரணம் உணவு இன்று வாரத்தில் 2 நாளாவது ஓட்டலில் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது அனைவருக்கும் மூக்கு முட்ட தின்று விட்டு பின் கோக், சோடா என குடித்து அஜீரணக்கோளாறில் இருந்து தப்புகிறோம்.. இதை எல்லாம் குறைக்கனுமா அப்ப டயட் இருங்க என்று விளம்பரம் மற்றும் நண்பர்களின் வழிகாட்டலால் டயட் தான் சரியான வழி என்று அதை பின்பற்றுகின்றனர் இன்றைய மக்கள்..
 


 பெண்களை குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒல்லியாக வேண்டும் என்று சாப்பாடு சாப்பிடுவதையேக் குறைத்து சப்பாத்தி மட்டும் தின்பவர்கள் நிறைய இருக்கின்றனர். டயட் என்ற பெயரில் நேர நேரத்திற்கு சாப்பிடாமல் உடலை கெடுப்பவர்கள் தான் அதிகம்...

நண்பன் ஒருவன் தினக்கு பிபி இருக்கிறது என்றான் எனக்கும் இருக்குடா என்றேன் நான் டயட் இருந்து கொழுப்பை குறைக்கிறேன் என்ற பேர்வழியாக கடந்த 8 மாதங்களாக டயட்டில் இருக்கிறான்.. சமீபத்தில் அவனுக்கு போன் செய்து விட்டு வீட்டுக்கு சென்றேன் ஆள் ஓமக்குச்சி நரசிம்மன் போலாகி இருந்தான் அடட ஆச்சர்யம் என்றேன்.. உடனே அவன் மனைவி ஏன்னாகேக்கறுங்க இவ்ர் கதையை டயட் டயட் என்ற பெயரில் ஒன்னும் திங்காம உடம்பில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் பைக்க ஸ்டார்ட் செய்வதற்கே மிக தடுமாறுகிறார். அரிசி மூட்டைய தூக்க முடியல 1 மணி நேரம் கார் ஓட்டுவதற்குகே பாடாப்படுத்துகிறார் என்றால் ஏன்டா இப்படி என்று அவனை பேசிவிட்டு நல்லா சாப்பிடுடா என்றேன்..

 

அப்புறம் உன் டயட் என்னடான்னு கேட்டேன்.. ( பதிவ தேத்துனமுள்ள) காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் க்ரீன் டீ அப்புறம் ஓட்ஸ் 1 கப், மதியம் 1 கப் சாதம், கொஞ்சம் கீரை, கொஞ்சம் ரசமாம், மீண்டும் இரவு 7 மணிக்கு 3 சப்பாத்தி அவ்வளவுதான் அவன் உணவாம் இடையில் எந்த பழங்களோ, திண்பண்டங்களோ சாப்பிடுவதில்லை இப்படி 8 மாதம் தின்னா அந்த உடம்பின் என்ன இருக்கும் இப்ப எழும்பு தான் இருக்கு... நல்லா சாப்பிடு மகனே என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்...
டாக்டர் நண்பருக்கு அழைத்து இவன் பிரச்சனையை சொன்னதும் அவர் சிரி சிரி என்று சிரிக்கிறார். எப்பவும் என்பது எண்ணெய் பண்டங்களையும், கொழுப்பு உள்ள பொருட்களை உண்ணுவதையும் குறைச்சிக்கனும் இது எல்லோரும் செய்யலாம்  உங்க நண்பர் போல சாப்பிடாமல் இருப்பது மிக தவறான ஒன்று இந்த டயட் எல்லாம் இப்ப 10 வருடத்துக்குள் தான் வந்தது நாம் சாப்பிடும் உணவிற்கு சரியான உடல் உழைப்பு இல்லாதவர்கள் அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும் அதுவும் சத்தான உணவுகளை உண்ணலாம் என்றார்.

முழு டயட்டில் ஈடுபடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை பேரிலே டயட்டில் இருப்பது நன்று. இணையத்தில் படிப்பது, பத்திரிக்கை செய்தியை படித்து டயட் இருப்பதெல்லாம் தவறு. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிச்சயம் தங்கள் உடலை முழுபரிசோதனைக்கு உட்பட்டு பின் அவர்கள் என்ன சாப்பிடலாம் என்பதை மருத்துவரின் சொற்படிதான் தான் டயட் எல்லாம் இருக்கனும்.

30 வயதை கடந்தவர்கள் எல்லாம் உணவுகளை உட்கொண்டு அதற்கான உடற்பயிற்சியான நடைபயிற்சி, தியாணம், யோகா போன்றவற்றை தினமும் 40 நிமிடம் செய்யலாம். குறைந்த வயதில் டயட் இருந்தால் 45 வயதிற்கு மேல் உடலில் வழு இல்லாமல் போய்விடும் உடல் நல்ல வலிமையாக இருந்தால் தான் 65 வயதிற்கு பின் வாழ முடியும். இன்றும் நம் தாத்தாக்கள், அப்பாக்கல் எல்லாம் அவர்களே பஸ், இரயில் எல்லாம் ஏறி இறங்குகின்றனர் ஆனால் குறைந்த வயதில் உள்ளவர்கள் டயட் இருந்து ஒன்னும் திங்காத உடலை கெடுத்துக்கொண்டல் நிச்சயம் நடப்பதற்கு கூட சிறமப்படவேண்டி இருக்கும்...

காலை எழுந்தஉடன் ஒரு 30 நிமிடம் யோகா பின் 10 நிமிடம் கழித்து 2 சொம்பு தண்ணீர் அல்லது அதற்கு மேல் குடித்து விட்டு ஒரு 20 நிமிடம் நடை பயணம் போதும் இளவயதுக்காரங்களுக்கு பின் காலை உணவை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் இடையில் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களை மிக குறைத்துக்கொள்ளவேண்டும் அதற்குன்னு சாப்பிடாமல் இருக்கவேண்டாம் வாரம் இரு முறை சாப்பிடலாம் பொறி, வேகவைத்த கடலை, மற்றும் பழங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் முக்கியமா இரவு அரைவயிறு சாப்பிட்டு விட்டு கால் வயிறு தண்ணீரோடு முடிச்சிக்கனும் இரவு உணவு.. உண்ட பின் ஒரு 1 மணி நேரம் கழித்து தூங்குவது நலம்.

டயட்டு டயட்டு என்று குறைந்த வயதிலேயே தொப்பைய குறைக்கிறேன், இடுப்பை குறைக்கிறேன் என்று எதையும் சாப்பிடாம இருந்தீங்கன்ன அப்புறம் உடலில் சத்தே இல்லாமல் சீக்கிரம் போய்ச்சேரவேண்டியது தான்...

நிறைய சாப்பிடுங்கு தினமும் மறக்காம 1 மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்க... பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு செல்ல நடந்து செல்லுங்க, அலுவலகத்தில் லிப்ட் பயன்படுத்தாம படிக்கட்டுகளில் நடந்து செல்வதை வழக்கமாக வைச்சுக்குங்க உடம்பு சிக்குன்னு இருக்கும்....

10 comments:

  1. உடனடி டயட் பிரச்சனை தான்...!

    இப்படி இருந்தால் சீக்கிரம் போய்ச் சேர வேண்டியது என்பதும் உண்மை தான்...

    + நண்பருக்கு : மனதார ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்கச் சொல்லுங்க...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  2. ரைட்டு. அப்போ நான்லாம் எப்படிதான் உடல் எடையை குறைப்பதாம்?!

    ReplyDelete
    Replies
    1. தினமும் ஓடுங்க ஆரணிக்கும் விழுப்புரத்துக்கும் எல்லாம் பறந்துவிடும்...

      Delete
  3. பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
    விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஓன்று பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ஒரு சின்ன திருத்தம்...
    காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு கிளாஸ் தண்ணீர் வரை பருகலாம்...கிட்னிக்கு ஓவர் லோடிங் கூடாது!
    பிறகு 10 நிமிடம் ஸ்ரெட்சிங்...
    மினிமம் 36நிமிடம் வாக்கிங்...
    20 நிமிடம் ரிலாக்ஸின்க்....
    பிறகு தான் யோகா செய்ய வேண்டும்!

    எப்போது நீர் குடித்தாலும், ஒரே சமயம் அதிகமாப் பருக வேண்டாம்!
    இது தான் மருத்துவர் பரிந்துரைப்பது..!

    மேலும் ஓட்ஸை விட கொள்ளு ஊற வைத்த தண்ணீர்..அதிகப் பலன் தரும், கொழுப்பை கரைக்கும்!

    நன்றி!

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு சங்கவி.

    ஏழு நாட்களுக்கு ஒரு கிலோ குறையும்படி தான் ஒருவர் டயட் இருக்க வேண்டும்.ஒரேயடியாக குறைக்கக்கூடாது.மேலும், குறிப்பிட்ட வயது/உயரத்திற்கு குறிப்பிட்ட எடை இருப்பது அவசியம். அதற்குக் கீழே எடையைக் குறைத்துவிடக்கூடாது. எந்த உணவில் எவ்வளவு கலோரி/கொழுப்பு உள்ளது என்று அறிந்து டயட்டில் இறங்குவதும் அவசியம்!

    ReplyDelete
  7. சரியான உடல் உழைப்பு இல்லாதவர்கள் அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும்//யாரால் முடியுது

    ReplyDelete
  8. டயட்ல இருக்கேன்னு ரொம்ப ஓவரா அதைக் கடைப்பிடிச்சாலும் தப்புதான். மருத்துவர் ஆலோசனைப்படி இருக்கறதே சிறந்தது. நல்ல கருத்தை அழகான நடையில சொல்லிருக்கீங்க நண்பா!

    இதே மாதிரி சுவாரஸ்யமா உங்க கம்ப்யூட்டர் அனுபவத்தைச் சொல்ல உங்களை தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன் நான்! வாங்க...

    http://www.minnalvarigal.blogspot.com/2013/07/blog-post_20.html

    ReplyDelete