Wednesday, August 28, 2013

களை கட்டும் சென்னை பதிவர் சந்திப்பும் +கிசு கிசு


வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் அன்னை... இது உண்மை தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஊரில் இருந்து வேலை தேடி புறப்படும்போது சென்னை போகிறேன் என்ற பெருமையாக பேசுவோம் உண்மையாவா பட்டணத்துக்கு போறியா என்பார்கள்..
இன்று தமிழகத்தில் பல இலட்சம் இளைஞர்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகது.. தமிழில் எழுதும் பதிவர்கள் அநேகம் பேர் சென்னையில் தான் இருக்கின்றனர். சென்னையை பற்றியும் சென்னையில் உள்ள நம் பதிவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அத்தனை சுவாரஸ்யங்கள் இருக்கும் ஒவ்வொரு பதிவர் நிகழ்விலும்.
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு அற்புதமான பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் நிறைய குழுக்கள் அமைத்து அதன் மூலம் நிகழ்ச்சியை அற்புதமாக அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தும் வகையில் அமைத்து வருவது பாராட்டுக்குரியது.

இந்த முறை உணவு விசயத்தில் நிறைய அக்கறை எடுத்துக்கொண்டு அற்புதமான உணவை வழங்க இருக்கின்றனர் அதுவும் அந்த மெனுவை பார்த்ததும் இப்பவே நாக்கில் ஏங்குது.

விழாவில் அற்புதமான எழுத்தாளர்கள் பேச இருக்கின்றனர் என்பது தான் மிக முக்கியமான விசயம். ஏற்கனவே பல முறை பாமரன் அவர்களின் பேச்சை கேட்டுள்ளேன் அவர் பேச்சை கேட்க கேட்க அவருக்கு கொடுத்து நேரம் மிக குறைவு போல என்று தோணும் அந்த அளவிக்கு கலக்குவார்.

கண்மணி குணசேகரன் இவரின் நான் பேச்சை கேட்டதில்லை ஆனாலும் நண்பர்கள் எல்லாரும் கலக்குவார் இவரின் பேச்சில் என்று ஆவலை தூண்டு விட்டனர்.

அடுத்ததாக பதிவர்களின் மேடை நாடகம் ( அதப்பத்தி கிசு கிசுவில் பார்ப்போம்)

கடந்த வருட சந்திப்பில் 1 புத்தகமும் இந்த வருட சந்திப்பில் 4 புத்தகங்களும் வெளியாகிறது அதுவும் எனது வரிகளின் முதல் தொகுப்பு வெளியாகிறது இதழில் எழுதிய கவிதைகள் என்ற தலைப்பில் மிக்க மகிழ்ச்சியான ஒன்று இந்த வருட சந்திப்பு எனக்கு...
நாம் எழுதும் எழுத்தை படித்து பாராட்டும் ஊக்கமும், ஆக்கமும் தரும் நம் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது நிச்சயம் நாமக்கு மிக மகிழ்ச்சிதான்.. வாங்க மக்களே சந்திப்போம்... 
நான் இன்று மாலையே மூட்டை முடிச்ச கட்டிகிட்டு சொந்த ஊருக்கு போய்ட்டு நாளைக்கு மதியம் நண்பர்களோடு சேர்ந்து கட்டுச்சோத்த கட்கிட்டு ஏற்காடு எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்னை பதிவர் சந்திப்பிற்காக சனிக்கிழமை காலை 4 மணிக்கே சென்ட்ரலுக்கு வந்து விடுவேன் என்பதை மகிழ்வோடு பகிர்கிறேன்...
நண்பர்களே மறந்தும் இருந்து விடாதீர்கள்...
சில கிசு கிசு
1. பதிவுலகின் பிரபல ஜம்புவான்கள் எல்லாம் அதாவது 2006 இல் இருந்து பதிவெழுதும் பதிவர்கள் நிறைய கலந்து கொள்கிறார்கள்.
2. யாரும் எதிர்பாராதா இவர்கள் வருவார்களா என்று நினைக்க முடியாத பதிவர்கள் 3 பேர் வருகின்றனர்.

3. பதிவர் சந்திப்பில் நடக்கும் நாடகத்திற்கு கதாநாயாகி தயாராம் அவருக்கு ஏற்ற நாயகனை தேடி வருகிறார்களாம்.

4. டைரக்டர் ஒருவர் கதநாயகனை தேடிக்கொண்டு இருக்கிறார் அவர் பதிவராக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாம்.

5. பதிவர் சந்திப்பில் புகைப்படம் எடுக்க தனியா புகைப்பட கலைஞரை நியமித்து இருக்கிறார் ஒரு பிரபல பதிவர்
6. பதிவர் சந்திப்புக்கு வரும் பன்னிக்குட்டி ராமசாமியை கண்டுபிடிக்க அவரின் நெருங்கிய நண்பர் ஒரு ஐடியா கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால் அவருக்கு இடுப்பு கிள்ளுனா துள்ளி குதிச்சு ஓடுவாராம்.... (மக்களே தயாரகிக்குங்க பன்னியின் இடுப்பை கிள்ள)
7.  பிரபல பெண் பதிவர் ஒருவர் க்ளாசிக்கல் நடனம் ஆடுகிறார்.
8. பெங்களூர் சென்று அங்கிருந்து ப்ளைட் பிடிச்சு வருகிறார் ஒரு பிரபல பதிவர்.

9. சென்னையை சேர்ந்த கவிதாயினி  யாரும் எதிர்பார்க்க வண்ண்ம் மேடை யில் ஒரு நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் அசத்த இருக்கிறாராம்...
இது வரைக்கும் தெரிஞ்ச கிசு கிசு இவ்வளவு தாங்க..
 

Tuesday, August 27, 2013

புத்தகம் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...

வணக்கம் நண்பர்களே.,

எனது நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது வரும் செப்ட்டம்பர் முதல் தேதி. நான் கனவிலும் நினைக்காத ஒன்று ஆம் எனது முதல் புத்தகம் வெளிவர இருக்கிறது. முகநூலில் எனது இதழ்களில் இருந்து உதித்த வரிகளை ( கவிதை என்று சொல்லமாட்டேன்) தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அது நிறைவேறப்போகிறது.

முதலில் இதை புத்தகமாக போடலாமா என்ற சந்தேகம் மிக இருந்தது நண்பர்களின் ஊக்கத்தில் புத்தகமாக போடலாம் என்ற முடிவுக்கு வந்தேன் அப்போது முகநூலில் எனது வரிகளை தொகுத்து போடலாம் என்று இருக்கேன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது கிட்டத்தட்ட 200 நண்பர்கள் பதிலிட்டு இருந்தனர் அதில் நண்பர் சுரேகா எனக்காக கொடுத்த தலைப்பு தான் இதழில் எழுதிய கவிதைகள் அதையே தலைப்பாக்கினேன். இந்த புத்தகம் முன்னாடியே வர வேண்டிய ஒன்று நிதி நெருக்கடியால் தற்போது தான் வெளியிட நேர்ந்தது.

இந்த புத்தகத்தில் எனது மனதில் உதித்த காதல் மற்றும் முத்தத்தை நனவாக கொண்டது. காதலும் முத்தமும் பிரிக்க முடியாத ஒன்று காதல் வரிகளில் முத்தத்தை பிரிக்க முடியாது அது போத்தான் என் வரிகளும் அமைந்துள்ளது.

ஊடலுக்கு
பின்
தான்
அதிகமாகிறது
சந்தோசம்
அன்று
இரண்டு
சேர்த்து கிடைக்கும்
என்பதால்....

மற்றும்

காதோரம்
ஏற்பட்ட
சிலுசிலுப்பை
தள்ளிவிட மனமில்லை
தழுவட்டும் 
என்றிருந்தேன்
அவள் மூச்சு
காற்று என்பதால்....

நமக்கிடையே
நடக்கும்
போட்டியில்
நீ 
தோற்றால்
எனக்கொரு
முத்தம் தர
தயாராக இரு
நான் 
தோற்றால்
பல முத்தம்
தர தயாராகவே
இருக்கறேன்

இது போன்ற பல வரிகளை தொகுத்து எனது முதல் தொகுப்பாக உங்களின் பேராதரவோடு வெளியிட இருக்கிறேன்...

நான் முதலில் எழுத ஆரம்பித்தது பதிவில் தான் என்னை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு கொண்டு வந்ததும் பல நல்ல நண்பர்களையும், தரமான எழுத்துக்களையும் வாசிக்க அறிமுகப்படுத்திய இந்த பதிவுலகம் தான். இந்த பதிவுலக நண்பர்கள் எல்லாம் கூடும் போது எனது தொகுப்பை வெளியிடுவது தான் சரி அதனால் பதிவுலக நண்பர்களின் ஆசியோடு அன்று வெளியிடுகிறேன்...

அனைவரும் வருக நல் ஆதரவு தருக....

இப்புத்தகம் அகநாழிகை புத்தக உலகத்திலும். டிஸ்கவரி புக் பேலசிலும் கிடைக்கும்.

பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்தில் சலுகை விலையாக 50 ரூபாய்க்கு கிடைக்கும்.

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதல்...


Wednesday, August 21, 2013

அஞ்சறைப்பெட்டி 22.08.2013



  



உள்ளுரில் இருந்து உலகம் வரை........




விடுமுறை விட்டாலே பதிவு எழுதுவது தோய்ந்து விடுகிறது. ஆம் கடந்த வியாழனன்று விடுமுறை வெள்ளியன்று அஞ்சறைப்பெட்டி எழுதலாம் என்று நினைத்ததோடு சரி முடியவில்லை. எப்பவும் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சின்ன கேப் விட்டாலும் அது தடை போலத்தான் மீண்டும் தொடர்வது கொஞ்சம் கடினம் என்பது உண்மை தான் போலும். நமது பதிவர்கள் நிறைய எழுதிய காலம் எல்லாம் கரை ஏறிவிட்டது அதற்கு காரணம் நிச்சயம் இந்த கேப் ஆக இருக்கலாம். மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...
.......................................


இலங்கை அமைச்சர் அதுவும் காமென்வெல்த் மாநாட்டிற்கு அழைக்க வந்தவர் கொடுக்கும் பேட்டியில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர் அதனால் நாங்கள் கைது செய்தோம் இப்போதைக்கு விடமாட்டோம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று பேட்டியளிக்கிறார் நம் தலைநகரில் அவரை யாரும் கண்டித்தாக தெரியவில்லை. என்ன செய்வது நமக்கு நட்பு நாடு என்று கருத்து தெரிவிக்காமல், கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் போலும்.

 .......................................

நம் நாட்டை சுற்றி இருக்கும் நாட்டை எல்லாம் நாம் நண்பர்களாக நினைக்க ஆனால் அவர்கள் நம்மை பங்காளிகளாத்தான் நினைக்கின்றனர். இந்த பக்கம் பாகிஸ்தான் எல்லை தாண்டி வருகின்றனர் அந்த பக்கம் சீனா கொஞ்சம் அதிகப்படியாக 20 கிலோமீட்டர் வரை உள்ளே வந்து கூடாரம் போட்டு தங்குகின்றனர் மிகுந்த பேச்சு வார்த்தைக்கு பின் போனால் போகுது என்று வெளியேறுகின்றனர். அந்த அளவிற்கு உள்ளது நமது நட்பு..

இதற்கு என்று விடிவு காலம் பிறக்குமோ...
.......................................


தெலுங்கான அமைப்பது மத்திய அரசின் முடிவு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். போராட்டம் அமைதி வழியில் நடந்தால் சரி அது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மாற இருக்கும் போது தான் வருத்தப்பட வைக்கின்றது.

முடிவில் மாற்றம் இல்லை என்று ஒரு கட்சியினரும் எதிர்க்கிறோம் என்று ஒரு புறமும் தொடர்ந்து தொல்லைகளாகத்தான் இருக்கிறது ஆர்ப்பாட்டங்களும், போரட்டங்களும்...
 
....................................... 

'ஃபேஸ் புக்', 'நெட்லாக்', 'யூடியூப்' போன்ற இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த சீன போலீசார் தொடர்பான புகைப்படங்கள் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.

சீனாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜியாங்சியின் வடக்கு பகுதியில் குளுகுளு மலைப் பிரதேசமான லுஷான் பகுதி உள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் இப்பகுதியில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் கடமையாற்ற சென்ற போலீசார், சீருடைகளை எல்லாம் ஒரு நீர்நிலையின் கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, நிர்வாணமாக நீந்தி கும்மாளமடிக்கும் காட்சிகளை சில குறும்புக்கார இளைஞர்கள் வீடியோவில் படம் பிடித்தனர்.

இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த காட்சிகள் விறுவிறுவென காட்டுத்தீ போல் பரவியதால் சீன போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த காட்சிகளை உன்னிப்பாக கவனித்த உயரதிகாரிகள் கடமையின் போது கண்ணியக் குறைவாக நடந்துக்கொண்ட 8 போலீசாரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டனர்.

மேலும், 3 போலீஸ் அதிகாரிகளுக்கும் பதவி குறைப்பு அல்லது பதவி பறிப்பு தண்டனை வழங்கப்படும் எனவும் மாகாண போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.



..............................

உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால், நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் ஆகும்.

ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் தனது மகனுடனும், இரண்டாவது கணவருடனும் வசித்து வருபவர் ஆஷா மண்டேலா ஆவார். 50 வயதாகும் இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் நீளமான கூந்தலுக்கான முதல் பெண்ணாக இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அடுத்த வருடம் இவரது ஒரு முடிக்கற்றையின் நீளம் 19 அடி,6 அங்குலமாக இருந்தது. இதனால், இவரே இவரது சாதனையை முறியடித்தவராக அறியப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் இதுபோல் பின்னப்பட்டிருக்கும் முடிக்கற்றைகள் மிக நீளமாக வளரும் தன்மை கொண்டிருப்பதால் கின்னஸ் புத்தகமே அந்த சாதனையைக் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டது. 

சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு அதில் தனது முடியை சுருளாக்கி வைத்துக் கொள்கின்றார். சென்ற வாரம் அளந்தபோது இவரது முடிக்கற்றையின் நீளம் 55அடி, 7 அங்குலமாக இருந்துள்ளது. 39 பவுண்டு எடை கொண்ட இவரது முடி இவருக்கு ஏராளமான ரசிகைகளைப் பெற்றுத்தந்துள்ளது. இவரது முடி ஒன்பதாவது உலக அதிசயம் என்றும் இவரை நடமாடும் சரித்திரம் என்றும் இவரது ரசிகைகள் அழைக்கின்றனர்.

இரண்டு முறை மாரடைப்பு வந்தபோதும், கான்சர் நோயினால் தாக்கப்பட்டு மருத்துவம் செய்துகொண்ட போதும் இவரது முடி கொட்டவில்லை. மருத்துவர்கள் இத்தனை நீளமான முடி சுகாதரத்திற்குக் கெடுதல் என்று கூறியுள்ள போதிலும், இதனைக் கத்தரிப்பதில் ஆஷாவிற்கு விருப்பமில்லை.



..............................

 


பதிவர் நண்பர்களே...


சென்னையில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி ஞாயிறு அன்று பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. அது சமயம் நம் வீட்டுத் திருவிழாவில் பங்கேற்க அனைவரும் வாரீர் வாரீர்


..............................


வணக்கம் நண்பர்களே...

சென்னையில் செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடக்கும் பதிவர்கள் மாநாட்டில் எனது இதழில் எழுதிய கவிதைகள் என்ற எனது முகநூல் கவிதை தொகுப்பு புத்தகமாக வெளியிடுகிறேன் தங்களின் பேராதரவோடு....


Place: Cine Musicians Auditorium, 297 N.S.K. Salai, Vadapalani
Time: 2.30 pm


அகநாழிகை வாசுதேவன் அவர்களின் அகவொளி பதிப்பகத்தின் மூலம் வெளியாகும் இத்தொகுப்பை

கொங்கு மண்ணின் மைந்தர்கள்
ஈரோடு தாமோதர் சந்துருவும்,
திருப்பூர் வெய்யிலான் ரமேஷ் அவர்களும்
வெளியிட...
 இயக்குநர் IRS செல்வக்குமார் அவர்களும்
கவிதை தென்றல் கவிஞர் கோவை சக்திசெல்வி

அவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள்..

வாழ்த்துரை

அகநாழிகை வாசுதேவன்
கவிஞர் மதுமதி


ஏற்புரை
சதீஸ் சங்கவி..

பதிவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்...
 
தகவல்




மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில் சிறிய நினைவாற்றல் இழப்பு என்ற நிலையில் தொடங்கும் ஆல்சைமர் நோய், நாளடைவில் மனக்குழப்பம், மனச்சிதைவு, நீண்டகால நினைவாற்றல் இழப்பாக உருமாறி இறுதிகட்டத்தில் புலன் உணர்வுகளை குறைத்து இறப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நோய்க்கு முழு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் தொடர்பான நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்நோய் தொடர்பாக நடத்திய ஆய்வில், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அதிக அளவில் காணப்படும் தாமிரம் (செம்பு) மூளை மண்டலத்தில் காரைப் படலத்தை ஏற்படுத்தி ஆல்சைமர் நோயை தீவிரப்படுத்துகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஈரல், சாக்லேட், பருப்பு, எள், சிப்பி மற்றும் கனவா மீனில் தாமிர சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நரம்பு மண்டல செயல்பாடு, எலும்பு வளர்ச்சி, இயங்கு தசைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பி ஆகியவற்றில் தாமிரத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றும் குடிநீர் நமது அறிவாற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் டியென் குறிப்பிட்டுள்ளார்.



தத்துவம்

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.

கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை..

Monday, August 19, 2013

சென்னை பதிவர் மாநாடு (01.09.2013) நிகழ்ச்சி நிரல்....


வணக்கம் வலையுலக பங்காளிகளே...

நலமா, நலம் அறிய ஆவல்., சென்னையில் உள்ள பதிவர்கள் கடந்த வருடம் ஒரு மாநாட்டை சீறும் சிறப்புமாக நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் பதிவுலகில் உள்ள அனைவரையும் முக்கியமாக பதிவு எழுதி அப்புறம் விடுமுறை விட்டு விட்டு சென்ற பதிவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து சென்னை மட்டுமல்லாது தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் ஒரு குழு அமைத்து தமிழகம் மற்றும் பிற பகுதி பதிவர்களை அழைக்கவேண்டும் என்று ஒரு குழு அமைத்துள்ளனர் அந்த அந்த ஏரியாவில் உள்ள பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்ய வரவேற்பு குழுவினரை அழைத்து உறுதி செய்யும் பொழுது தான் தங்கள் உணவு மற்றும் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்..

வரவேற்பு குழு ஒருங்கிணைப்பு ஆரூர் முனா செந்தில்.

அஞ்சாசிங்கம் செல்வின்
பிலாசபி பிரபாகரன்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
தமிழ்வாசி பிரகாஷ்
திண்டுக்கல் தனபாலன்
கோகுல்
வீடு சுரேஷ்
சதீஸ் சங்கவி

உணவு ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பு ஆரூர் முனா செந்தில்

கேஆர்பி செந்தில்
கேபிள் சங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
பிலாசபி பிரபாகரன்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
ராஜீ

மறக்காமல் தங்கள் பதிவை உறுதி செய்யுங்கள். அடுத்து மிக முக்கியமான ஒன்று நிகழ்ச்சி நடத்தவேண்டும் எனில் அதற்காக போதிய நிதிவசதி வேண்டும் மாநாடு நடத்துவதற்கு நிறைய வேண்டும் அதுவும் கடந்த வருடம் மக்கள் சந்தை நிதி உதவி செய்ததால் நிறைவாக இருந்தது இந்த வருடம் பதிவர்கள் தங்கள் மேலான நிதி உதவியை அளிக்க அழைக்கவேண்டிய நபர் ஜெய் மற்றும் மதுமதி தற்போது அழைத்து கொடுத்தாலும் நல்லது நிகழ்வு  நடக்கும் பொழுது அழைத்து கொடுத்தாலும் நன்று.. ஆனால் மறக்காமல் தங்களால் முயன்றதை அன்போடு கொடுக்கவும்...

நிகழ்ச்சி நிரல்..

பதிவர் சந்திப்பில் முக்கியமான ஒன்று நிகழ்வு வந்தோம், சந்தித்தோம், சாப்பிட்டோம், சந்தோசமாக இருந்தோம் என்பது மிக முக்கியமான ஒன்று ஆனால் அங்கு என்ன நடந்தது என்று தானே எல்லோரும் கேட்பர். தற்போது அனைவரும் அறிந்தது பதிவர் அறிமுகம், பதிவர்களின் புத்தகம் வெளியீடு இது மட்டுமே ஆனால் இது போதாது இன்னும் இன்னும் வேண்டுமென எல்லாரும் மண்டைய போட்டு குழப்பு யாரைக் கூப்பிடலாம் என்று ஒரு வழியாக முடிவு செய்து அவரை அழைத்தால் நிச்சயம் வருகிறேன்  பதிவர்களுடன் பேசி பலநாட்கள் ஆச்சு அதுவும் தற்போது பதிவு மட்டுமல்லாமல் முகநூலிலும் அனைவரும் நிறைய கருத்து சொல்றீங்க உங்ககிட்ட நிச்சயம் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்... யார் அந்த பேச்சாளர், எழுத்தாளர் சத்தியமாக எனக்கு தெரியாதுங்க... பொறுங்கள் நிச்சயம் அவரின் பேச்சு நமக்கு இன்னும் நிறைய எழுத ஏதுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..

இது மட்டுமில்லாமல் இன்னொருத்தரும் பேசுகின்றாராம் அவரு யாருன்னும் தெரியாமலா போய்விடும்.. (ஜெய், மதுமதி நீர் எப்படியும் அழைப்பிதழில் சொல்லித்தானே ஆகவேண்டும்...

புத்தக வெளியீட்டு விழா..

இந்த வருடம் 3 பதிவர்களின் புத்தகம் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

பிரபல பதிவர் மற்றும் என் இனிய நண்பர் சேட்டைக்காரன் அவர்களின் "மொட்டைத்தலையும், முழங்காலும்" என்ற நகைச்சுவை தொகுப்பு வெளியாகிறது..

அகநாழிகை வாசுதேவன் அவர்களின் அகவொளி பதிப்பகத்தின் வெளியீடாக
வீடு திரும்பல் மோகன் குமாரின் வெற்றிக்கோடு (கட்டுரைகள்) என்ற புத்தகம் வெளியாக இருக்கிறது..



அகவொளி பதிப்பகத்தின் வெளியீடாக எனது இதழில் உதிர்ந்த வரிகளை கொண்டு முகநூலில் நான் எழுதிய காதலையும் முத்தத்தை கலந்த கலவையாக இதழில் எழுதிய கவிதைகள் என்ற தலைப்பில் எனது வரிகளின் தொகுப்பு வெளியாக உள்ளது.

இவ்வளவு நிகழ்ச்சி நடக்க உள்ளது இது வரை வருவதாக 250க்குமேற்பட்ட பதிவர்கள் பெயர் கொடுத்துள்ளனர் அதனால் அனைவரும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்..

என்றும் அன்புடன்
தங்கள் வருகையை எதிர்நோக்கும்
சங்கமேஸ்வரன் (எ) சதீஸ் சங்கவி.,
 

Friday, August 16, 2013

சுதந்திரநாடு சோத்துக்கு கேடு


சுதந்திரநாடு சோத்துக்கு கேடு

நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா? என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் அவர்களின் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். அவர்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால் தான் நாம் இன்னும் இப்போதும் சுதந்திரமாக இருக்கிறோம்.

சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் திட்டலாம், அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.
 
ஊடகங்கள் இன்று சுதந்திரமாக செயல்படுகின்றன சட்டமன்ற உறுப்பினர் முதல் பிரதமர் வரை யாராக இருந்தாலும் செய்திகள் வெளியிடுகின்றனர். காரணம் இருந்தாலும் இல்லை என்றாலும் நீதிமன்றம் செல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. பயந்து இருந்தவர்கள் எல்லாம் இன்று பயம் இல்லாமல் சுதந்திரமாக நிச்சயம் வாழ்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
 

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.


சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கப்போகிறோம். உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்த நாம் இனி இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நம் சோத்துக்கு கேடு தான். இன்று நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். இன்றைய காலகட்டத்தில் விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம். விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

Wednesday, August 14, 2013

40 நிமிட பேருந்து பயணம்



புத்தகம் வெளியீட்டுக்கும், புத்தக கண்காட்சிக்கும் போகவேண்டும் என்று திட்டம் போட்டதும் சித்தாரில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்தில் போய் ரொம்ப நாள் ஆச்சு பேருந்தில் போகலாம் என்று முடிவு செய்திருந்தேன். பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை வீடு சுரேஷ் நான் ஈரோடு வந்து விட்டேன் என்றார் பக்கத்து வீட்டு அக்காவிடம் பேசிய பேச்சை கட் செய்து விட்டு துண்டு எடுத்து பொடக்காலிக்கு போய் ஒரு காக்கா குளியல் போட்டுகிட்டு, பேருந்தில் பொம்பள புள்ளைக எல்லாம் வரும் என்ற எண்ணம் மனதில் உதித்ததும் ஹமாம் சோப்பை நாலு தடவ மூஞ்சிக்கு போட்டு குளித்தேன் அப்பவும் அதே கலரு தான்..

ஜீன்ஸ் பேண்டை மாட்டிகிட்டு சட்டைய போட்டு நெற்றியில் திருநீரோடு நின்றேன் பஸ் வந்ததும் ஓடி வந்து முன்னாடி படிக்கெட்டில் தொத்தினேன் எனக்கு முன்னே ஏறிய பெண் மல்லிகைப்பூ இரண்டு முழம் வெச்சிகிட்டு நின்றாள் மல்லிகை வாசத்தில் மெய் மறந்து ஒரு கம்பியில சாய்ந்துகிட்டு மல்லிகைப்பூவின் வாசத்தில் கிறங்கி நின்னேன்.

டிரைவர் சீட்டில் இருந்து கடைசி சீட்டு வரை அப்படியே ஒரு நோட்டாம் போட்டேன் எத்தனை விதமான மனுசன்கள், அழகான பெண்கள் அழுக்கான பெண்கள் என களை கட்டியது பேருந்து.

டிரைவேர் பேனட்டு மேல் ஒரு நடுத்தர வயது பெண்மணியை உட்காரவைத்து ஊர் நாயம் உலக நாயம் எல்லாம் பேசினார் அடுத்த சீட்டில் குடுப்பமே தூங்க வழிந்தது. இரட்டை சீட்டில் வரிசையாக 3 ஜோடிகள் கண்ணுக்குளிராக ஈருஉடல் ஓருடளாக கடலையை வறுத்துக்கொண்டு இருந்தனர். பாதி பேர் காதில் ஹெட் போனை மாட்டிகிட்டு பூம்பூம் மாடு போல தலையசைத்தனர்.

நான் நின்ற சீட்டில் இருந்து தள்ளி 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர் கருப்பு தான் என்றாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்த முகலட்சனம் சரி இன்னிக்கு ஈரோடுக்கு போறதுக்கு நல்லா பொழுது போகும் என்று பார்வையை சுழட்டி சுழட்டி அடித்தேன் எந்த ரியாச்னும் இல்லை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் நம் பார்வை கரைக்கும் என்று கூவி கூவி பார்த்தேன் ஒன்னும் நடக்கல..

பவானி வந்ததும் இருவரும் ஏதோ பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள் அப்படியே மனசு பறந்தது.. தம்பி தம்பி ப்ளு கலர் சட்டை தம்பி என்று ஒரு குரல் யாரையோ என்று நினைக்க யோவ் தம்பி உன்னத்தானய்யா கடைசி சீட்டூ காலியா இருக்கு அங்க போய் உட்காரு என்று பேயடித்தது போல உட்கார வைத்தனர்.

அட்ப்பாவிகளா இப்ப தாண்டா பாத்தாங்க என்று நினைக்கையிலே கடைசி சீட்டு வா வா என்று அழைத்தது.....