Tuesday, August 13, 2013

ஈரோடு புத்தக திருவிழா 2013



சென்னை போன்ற பெரு நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்து வெற்றி பெறுவது மிக சாதாரணம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை அங்கு உண்டு. ஆனால் ஈரோடு போன்ற வளரும் நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தி அதை வெற்றியாக்குவது சுலபமானது அல்ல, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து புத்தக கண்காட்சிக்கு அதிக கூட்டமும் விற்பனையும் ஈரோட்டில் தான் என்றால் அது மிகையாகாது என்று சொன்னவர் ஒரு பதிப்பாளர்.

புத்தக கண்காட்சியை கடந்த ஒன்பது வருடமாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். நிச்சயம் ஆரம்பத்தில் இவ்வளவு கூட்டத்தையும் இத்தனை ஸ்டால்களையும் அவர் கொண்டு வர மிக கஷ்டப்பட்டு இருப்பார் ஆனால் இன்று லட்சக்கணக்கான மக்கள் புத்தக கண்காட்சிக்கு வருகிறார்கள் என்றால் அது அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, ஆர்வத்திற்கு கிடைத்த வெற்றி, ஈரோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் எல்லாரையும் வாசிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் முற்போக்கு எண்ணத்திற்கு கிடைத்த வெற்றி.

பாமரன் முதல் ஈரோட்டின் புகழ் பெற்ற மருத்துவர்கள் வரை நேற்று கண்டேன் கண்காட்சியில் ஒன்பது வருட இந்த புத்தக திருவிழாவிற்க்கு நான் முதன் முதலாக சென்றது 2009 இல் அப்போது தான் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் முழுவதும் கேட்கவில்லை ஈரோடு சங்கமத்தில் 2011ம் ஆண்டு அவர் தான் சிறப்புரை கிட்டத்தட்ட 1 மணி நேரம் 30 நிமிடம் பேசினார் அருமையான உரை, அழகான விளக்கம், நல்லதொரு சிறுகதை கேட்பவர்கள் ஈர்க்கும் கனீர் குரலால் அன்றைய மேடையை அழகாக அழங்கரித்தார் அவரின் பேச்சில் தெரிந்தது அவர் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்ற அந்த வாசிப்பு பழக்கம் அனைவருக்கும் வேண்டும் என்ற அவர் லட்சியம் இன்று நிறைவேறி விட்டதில் அவருக்கு பெருமை அவரால் வாசிப்பு பழக்கத்தை அறிந்த ஈரோட்டு மக்களுக்கும் பெருமை.


இந்த புத்தக திருவிழாவின் மறுபக்கத்தில் பேச்சாளர் அரங்கம் தினமும் ஒரு தலைப்பில் சிறந்த பேச்சாளர்களை இலக்கியவாதிகளை பேச வைத்து ஈரோட்டு மக்களுக்கு அது அடுத்த வரப்பிரசாதம் இங்கு வைகோ, தமிழருவிமணியன், சிவக்குமார் போன்ற பிரபலங்கள் பேசி உள்ளனர் வருடா வருடம் பேசியவர்களையே பேச வைக்காமல் புது புது தலைப்பில் புதிய பிரபலங்களின் பேச வைத்து பேச்சு வெள்ளத்தில் மிதக்க வைக்கின்றனர் மக்கள் சிந்தனை பேரவையினர். தினமும் இங்கு நடக்கும் சொற்பொழிவுக்கு குறைந்த பட்சம் 2500 பேருக்கு மேல் பங்கேற்கின்றனர் என்று சொன்னார் அன்றைய பேச்சை கேட்க காத்திருந்த ஒரு கிராமத்து பள்ளியின் தலைமையாசிரியர்.
தொடரட்டும் இவர்களின் நற்பணி...


இத்தனை சீறும் சிறப்பாக நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு போகமல் இருக்கலாமா ? ஞாயிறு அன்று வாமு.கோமுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று விட்டு நானும் நண்பர் வீடு சுரேசும் புத்தக திருவிழாவை சுற்ற கிளம்பினோம்..

ஈரோடு வஉசி பூங்காவிற்கு செல்லும் வழி எங்கும் மக்கள் வெள்ளம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. கண்காட்சி வாசலில் நுழையும் போது பாதுகாவலர்கள் இருச்க்கர வாகனங்கள். நான்கு சக்கர வாகனங்கள் என்று பிரித்து நிற்குமிடத்திற்கு அனுப்பினர். கண்காட்சியில் உணவுப்பொருளுக்கு என்று ஒரு இடத்தையும் அங்கு சில கடைகளும் இருந்தன. அடுத்து பேச்சாளர்களுக்கென மிகப்பெரிய மேடை கிழே நேர்த்தியாக அடுக்கப்பட்ட நாற்காலிகள் என பார்க்கவே அங்கு சிறிது நேரம் உட்கார வேண்டும் போல தோன்றியது.

நிறைவான கூட்டங்களுக்கு நடுவே உள்ளே சென்றோம் நன்கு இடை வெளி விட்டு ஸ்டால்கள் அமைத்திருந்தனர் 10 ஸ்டால்களுக்கு பின் அவரச வழி என்று ஒன்றை ஏற்படுத்தி அவசர காலத்தில் வெளியேறுவதற்கு தக்கவாறு அமைக்கப்பட்டு இருந்தது அனைத்து ஸ்டால்களும் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட கடைகள் எல்லா கடைகளிலும் கூட்டம், சிறுவர் காமிக்ஸ் தொடங்கி, பக்தி, விளையாட்டு, கவிதைகள், நாவல் என ஆளுக்கு குறைந்த பட்சம் 10 புத்தகத்தை தூக்கிக்கொண்டு நடந்தனர்.

இளம்பெண்களின் கூட்டம் மிக நிறைவாக இருந்தது வழியில் நம்ம வாத்தியார் கார்த்திகைபாண்டியனையும், வா.மணிகண்டனையும் சந்தித்தோம். பின் அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே வந்தோம். நான் வம்சி, காலச்சுவடு மற்றும் கிழக்கு பதிப்பகத்தில் சில புத்தகங்களை வாங்கினேன். ஈரோடு புத்தக கண்காட்சியில் இவ்வளவு கூட்டமா என்று திகைக்கும் அளவில் இருந்தது கூட்டம். மிக்க மகிழ்ச்யோடு விடை பெற்றேன் புத்தக கண்காட்சியில் இருந்து..

இந்த கட்டுரை எழுத மிக முக்கிய காரணம் வம்சி புத்தக நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது ஒரு பெண்ணும் அவரின் தந்தையும் உள் வந்தனர் அந்த பெண் தற்போது கல்லூரியில் படிக்கும் பெண்போல அந்த பெண்ணின் தந்தை உனக்கு என்ன புத்தகம் வேணுமோ வாங்கிக்கோம்மா காச பத்தி கவலைப்படதே என்றார், அந்த பெண்ணும் சரி என்று சொல்ல மீண்டும் அவர் காலையில நம்ம பழைய மணிகாரர் சொன்னார் ஈரோட்டுல புத்தக திருவிழா போட்டு இருக்காங்க நேத்து தான் போனேன் நிறைய புத்தகங்கள் வாங்கினேன் புத்தகம் படிக்க படிக்க அறிவும் மனதும் புத்துணர்ச்சி பெறும் என்றார் அது தான் நீ கூப்பிட்டவுடன் நானும் வந்தேன் சாமி நீ எது வேனுமோ அது வாங்கிக்க என்றார் அவர். தான் படிக்க வில்லை என்றாலும் தன் பெண் படித்து நல்ல அறிவோட வளரவேண்டும் என்ற ஏக்கம் அவர் கண்ணில்...

இந்த நிகழ்வு எண்ணை மிக ஈர்த்தது...

இந்த புத்தக கண்காட்சியை மிக சிறப்பான முறையில் நடத்தி வரும் மக்கள் சிந்தனை பேரவைக்கும் ஐயா. திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...

19 comments:

  1. நல்லதொரு வாய்ப்பு. பிடிச்ச, படிக்க தவறிய புத்தகங்களை வாங்கிக்கோங்க சங்கவி!

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் வாங்கியாச்சுங்க...

      Delete
  2. நேர்த்தியாக எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜோதிஜி...

      Delete
  3. ஈர்த்த நிகழ்வு ஈர்த்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  4. அடுத்த வருடம் உங்க புத்தகமும் அங்கே விற்கும், அப்புறம் பெரிய எழுத்தாளர் ஆகி வெளிநாடெல்லாம் போய்ட்டு வருவிங்க, அப்புறம் சினிமாவில் பாட்டு வசனமெல்லாம் எழுதி பெரியாள் ஆகிடுவிங்க, நாங்க அப்பவும் கமெண்ட் போட்டுகிட்டு இருப்போம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... ஏன் ஏன் இப்படி போட்டு தாக்கறீங்க... நான் எழுத்தாளனோ கவிஞனோ இல்லை அருண்... ஓர் கிராமத்தான்... இது தான் என் அடைமொழி கூட...

      Delete
    2. //அடுத்த வருடம் உங்க புத்தகமும் அங்கே விற்கும், அப்புறம் பெரிய எழுத்தாளர் ஆகி வெளிநாடெல்லாம் போய்ட்டு வருவிங்க, அப்புறம் சினிமாவில் பாட்டு வசனமெல்லாம் எழுதி பெரியாள் ஆகிடுவிங்க,//

      ....அப்புறம் மேடை சரியில்லைன்னும் சொல்லலாம்! :) :)

      Delete
  5. புத்தகநிலையத்திலிருந்து வெளி வந்த போது தந்தை, பெண் உரையாடல் நன்றாக இருக்கிறது.அப்பா சொன்னது முற்றிலும் உண்மை. குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுத்து அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது மிகவும் நல்லது.
    //மக்கள் சிந்தனை பேரவைக்கும் ஐயா. திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...//

    என் நன்றிகளும் இப்படி வெற்றிகரமாக புத்தகதிருவிழா நடத்துவதற்கு.
    நல்ல பகிர்வு தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்

    புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் நிகழ்வு நடப்பதாக நினைவுபடுத்தியமைக்கு மிக நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்கின்றோம்.

    ReplyDelete
  9. அன்பின் சங்கவி - ஈரோடு புத்தகத் திருவிழா - ஒரு நாள் நிகழ்வுகளை எல்லாம் அருமையாகத் தொகுத்து பதிவாக்கியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. //வெளிநாடெல்லாம் போய்ட்டு வருவிங்க, அப்புறம் சினிமாவில் பாட்டு வசனமெல்லாம் எழுதி பெரியாள் ஆகிடுவிங்க//

    அப்புறம் வாசகர் விமர்சன கூட்டம் போட்டு தண்ணியடிச்சு கும்மாளம் போட்டு எவன் எல்லாம் உங்களை பாராட்டவில்லையோ அவனை எல்லாம் சகட்டு மேனிக்கு தாக்க்கி எழுதலாம் இலக்கிய மேதை ஆகிடுவிங்க

    ReplyDelete
  11. புத்தகக் கண்காட்சியின் மூலம் கிடக்கும் புத்துணர்வே அதீதம் தான்... படிக்கிறோமோ இல்லையோ பார்க்கும் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிக் குவிக்க வேண்டும் போல் தோன்றும்...

    அந்தத் தந்தை கூறிய சொற்கள் நெகிழ்ச்சியானவை தான்

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு..

    தனக்குக் கிடைக்காதது தன் பெண்ணுக்குக் கிடைக்கணும்ங்கற அந்தத்தந்தையின் ஆர்வம் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  13. புத்தகக் கண்காட்சிகளுக்காகவே தமிழகத்திற்கு வந்துவிடலாமா எனத் தோன்றுகிறது.....

    தில்லியிலும் புத்தகக் கண்காட்சி வருடா வருடம் நடந்தாலும் நமது தமிழ் புத்தகங்கள் அவ்வளவாக கிடைப்பதில்லையே.... :(

    ReplyDelete