Monday, August 5, 2013

பூச்சாட்டியாச்சு... பதிவர் நோம்பிக்கு வந்திருங்க...



முத வருச நோம்பி சிறப்பா நடத்தியாச்சு.. ரெண்டா வருச செறப்பா நடத்த வேணும்ன்னு மெட்ராஸ் பதிவர் சனமெல்லாம் முடிவு செஞ்சு இந்த வருசமும் நோம்பிக்கு நாள் குறிச்சிட்டாங்க செப்டம்பர் முத ஞாயித்துக்கிழமை மெட்ராஸ் பட்டணத்துல வடபழனியில் இருக்கிற சினி மியூசியன்ஸ் அரங்கத்துல காலம்பர 9.30 மணிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விஐபி பதிவருங்க எல்லாரும் கலந்துக்கனுமுங்கோ..

நோம்பிக்கு வர்றவுங்களுக்கு வந்து தங்கறதுவங்க, காலங்காத்தால வந்து குளிச்சிட்டு நோம்பிக்கு வருவர்களுக்கு அதுக்கான இட வசதியை செய்யறது நம்ம ஆருர் முனா செந்திலுங்க.. அவருக்கு ஒத்தாசைக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆளை போட்டாச்சுங்க. அவுங்ககிட்ட நீங்க வரும் சமாச்சாரச்தை சொல்லிபுட்டீங்கன்னா எல்லாத்தையும் அவுங்க பாத்துக்குவாங்கங்க...

இவுங்க தாங்க அவுங்க...

· ஆரூர் மூனா செந்தில்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை, ஈரோடு, சேலம்
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்

நோம்பிக்கு வர்றவுங்க எல்லாம் முன்னாடியே உங்க வருகையை உறுதி சொல்லீட்டிங்கன்னாத்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யறதுக்கு கரைக்கிட்டா இருக்கும். இந்த வருசம் கெடா விருந்தா வைக்கலமான்னு யோசிச்சிகிட்டு இருக்காங்க சாப்பாட்டுக்கடை குழுக்கல். கெடா விருந்தும் உண்டு சைவ சாப்பாட்டுக்காரங்களுக்கும் என்ன வகை உணவுன்னு முடிவு செய்யறதுக்குன்னு ஒரு குழு அமைச்சு அவுங்க வயிறு முட்ட சோறு போட தயாராகிட்டாங்க...

 இவுங்க தாங்க சாப்பாட்டுக்குழு...

காணாமல் போன கனவுகள் ராஜி
கேஆர்பி செந்தில்
கேபிள் சங்கர்
சிராஜூதீன்
ரஹீம் கஸாலி
அஞ்சாசிங்கம் செல்வின்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
பிலாசபி பிரபாகரன்
ஆரூர் மூனா செந்தில்

விழாவில் இவரு தாங்க முக்கியமா ஆளு.. ஆமாங்க விழா நடக்கவேனும்னா கந்தாயம் வசூல் செய்யனுமுள்ள அந்த கந்தாயம் வசூல் பண்றதுக்கு மணியகாரை நியமிச்சாச்சு அது தாங்க நம்ம பட்டிக்காட்டான் ஜெய் இவரு நோட்ட வெச்சிகிட்டு ரெடியா இருக்கறாரு கந்தாய வசூலிக்க அப்படியே நன்கொடை தருபவர்களும் இவருகிட்டேயும் இவருக்கு உறுதுணையா நம்ம மதுமதிகிட்டேயும் அவுங்க கை பேசியிலோ அல்லது மின்அஞ்சலிலோ கூப்பிட்டு சொல்லிடுங்கோ...

நிகழ்ச்சி ஏற்பாட்டை எல்லாம் நம்ம கவிஞர் மதுமதி ஏத்துகிட்டு பம்பரமா சுத்திகிட்டு இருக்காருங்க எதாவது நிகழ்ச்சியில் உங்க பங்களிப்பு இருக்க வேனுமுன்னா உடனே அவருகிட்ட பேசிடுங்கோ..

சரிங்கோ எல்லா ஏற்பாட்டையும் சொல்லியாச்சு அடுத்து இந்த சந்திப்பில் எனது கவிதை தொகுப்பான இதழில் எழுதிய கவிதைகளும், நம்ம வக்கீல் அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமாரின் ஒரு கட்டுரை தொகுப்பும் வெளியாகுதுங்கோ.. எல்லாரும் நோம்பிக்கு வந்து கொண்டாடிட்டு, கிடா விருந்த முடிச்சிட்டு போகும் போது எங்க புத்தகத்தையும் வாங்கிட்டு போங்க சாமியோவ்...

மறக்காம நோம்பிக்கு வந்திருங்கோ... உங்களுக்காக உங்களுக்கு புடித்த பதிவரெல்லாம் காத்திகிட்டு இருக்கோமுங்கோ... வாங்க சந்திப்போம், அளாவடுவோம், புதிய சிநேகிதர்கள் கிடைச்ச சந்தோசத்துல திரும்பிவோம்... 

மறக்காம வந்திடுங்கோ சென்னை பட்டிணத்துக்கு....

17 comments:

  1. வந்திடுறோம்ங்க சாமியோவ்.

    ReplyDelete
  2. ரெண்டு ரூபா தினகரன் பேப்பரையே பக்கத்து வீட்டுல கடன் வாங்கி படிக்குற ஆளுங்க நாங்க. அத்னால, புத்தகம்லாம் காசு குடுத்து வாங்க மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. அக்கா நீங்கோ வாங்கலீனா.. அப்புறம் யாரு வாங்குவா அதனால கோப்படாம வாங்கிக்குங்கோ...

      Delete
  3. நானை வருகிறேன். எனக்கு தலைக்கறி வேணும். இப்பவே சொல்லீட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா நிச்சயம் இருந்தால் எடுத்து வைக்கிறோம்..

      Delete
  4. Replies
    1. மச்சி டிக்கெட் போட்டாச்சா

      Delete
  5. கலக்குவோம்...மச்சி,...

    ReplyDelete
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள்...
    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. புத்தக வெளியீட்டுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. விழா சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. ஆவலோடு காத்திருக்கிறேன்....... விரைவில் சிந்திப்போம் சதீஷ் ! உங்களது நூல் வெற்றியடைய வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. சாப்பாட்டுக்கு ஆரூர் மூனா செந்தில் :Correct choice

    @செந்தில் :Expecting more varieties, like தலைக்கறி.....

    ReplyDelete
  11. விழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்.
    புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நோம்பி நெருங்கீட்டு இருக்குதே, அழைப்பு ஒண்ணையும் காணோமே?

    ReplyDelete