வணக்கம் நண்பர்களே.,
எனது நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது வரும் செப்ட்டம்பர் முதல் தேதி. நான் கனவிலும் நினைக்காத ஒன்று ஆம் எனது முதல் புத்தகம் வெளிவர இருக்கிறது. முகநூலில் எனது இதழ்களில் இருந்து உதித்த வரிகளை ( கவிதை என்று சொல்லமாட்டேன்) தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அது நிறைவேறப்போகிறது.
முதலில் இதை புத்தகமாக போடலாமா என்ற சந்தேகம் மிக இருந்தது நண்பர்களின் ஊக்கத்தில் புத்தகமாக போடலாம் என்ற முடிவுக்கு வந்தேன் அப்போது முகநூலில் எனது வரிகளை தொகுத்து போடலாம் என்று இருக்கேன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது கிட்டத்தட்ட 200 நண்பர்கள் பதிலிட்டு இருந்தனர் அதில் நண்பர் சுரேகா எனக்காக கொடுத்த தலைப்பு தான் இதழில் எழுதிய கவிதைகள் அதையே தலைப்பாக்கினேன். இந்த புத்தகம் முன்னாடியே வர வேண்டிய ஒன்று நிதி நெருக்கடியால் தற்போது தான் வெளியிட நேர்ந்தது.
இந்த புத்தகத்தில் எனது மனதில் உதித்த காதல் மற்றும் முத்தத்தை நனவாக கொண்டது. காதலும் முத்தமும் பிரிக்க முடியாத ஒன்று காதல் வரிகளில் முத்தத்தை பிரிக்க முடியாது அது போத்தான் என் வரிகளும் அமைந்துள்ளது.
ஊடலுக்கு
பின்
தான்
அதிகமாகிறது
சந்தோசம்
அன்று
இரண்டு
சேர்த்து கிடைக்கும்
என்பதால்....
மற்றும்
காதோரம்
ஏற்பட்ட
சிலுசிலுப்பை
தள்ளிவிட மனமில்லை
தழுவட்டும்
என்றிருந்தேன்
அவள் மூச்சு
காற்று என்பதால்....
நமக்கிடையே
நடக்கும்
போட்டியில்
நீ
தோற்றால்
எனக்கொரு
முத்தம் தர
தயாராக இரு
நான்
தோற்றால்
பல முத்தம்
தர தயாராகவே
இருக்கறேன்
இது போன்ற பல வரிகளை தொகுத்து எனது முதல் தொகுப்பாக உங்களின் பேராதரவோடு வெளியிட இருக்கிறேன்...
நான் முதலில் எழுத ஆரம்பித்தது பதிவில் தான் என்னை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு கொண்டு வந்ததும் பல நல்ல நண்பர்களையும், தரமான எழுத்துக்களையும் வாசிக்க அறிமுகப்படுத்திய இந்த பதிவுலகம் தான். இந்த பதிவுலக நண்பர்கள் எல்லாம் கூடும் போது எனது தொகுப்பை வெளியிடுவது தான் சரி அதனால் பதிவுலக நண்பர்களின் ஆசியோடு அன்று வெளியிடுகிறேன்...
.jpg)

