Monday, November 8, 2010

காமக்கொடூரன் என்கவுன்டர்.. காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

போன வாரத்தில் நம் நாட்டை உலுக்கிய சம்பவம் கோவையில் நடந்தது. குழந்தைகளை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தான் மோகன்ராஜ் என்னும் காமக்கொடூரன் அதைப்பற்றி நம் பதிவர்கள் நிறைய பதிவுகளை எழுதி இருந்தோம் நானும் காமக்கொடூரன்களை என்ன செய்யலாம் எனற தலைப்பில் எழுதியிருந்தேன். அப்பதிவை படித்தவர்கள் அனைவரும் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

கண்டனம் செய்ததுடன் நிற்காமல் அவர்களை உயிருடன் விடக்கூடாது என்று தான் நிறைய பேர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நம் நாட்டுச்சட்டத்தில் அவர்களை கோர்ட்டில் நிறுத்தி கோர்ட் அளிக்கும் தண்டனை வருவதற்கு சுமார் 1 வருடம் ஆகும் அதற்குள் நாம் மறந்து விடுவோம் என்று எழுதியிருந்தேன்.

நாம் அந்த சம்பத்தை மறந்து தீபாவளி சந்தோசமாக கொண்டாடி தீபாவளி சந்தோசத்தில் இருந்து மீள்வதற்குள் தமிழக காவல்துறையால் அடுத்த சந்தோசமான நிகழ்வு  காமக்கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர். 

கோவையில் நடந்த சம்பத்தால் அனைவரும் மனவேதனை அடைந்தனர் என்றால் அது மிகையாகது அத்தனை பேரும் இன்று அவன் என்கவுண்டர் என்று அறிந்தவுடன் மிக்க மகிழ்ச்சி கொள்வர். இனி மேல் குழந்தைகளை கடத்துபவர்களை பிடிச்சு என்கவுண்டர் செய்யனும் அப்பத்தான் எவனுக்கும் கடத்தலாம் என்று கனவு கூட வராது.

இந்த என்கவுண்டரை நடத்திய தமிழக  காவல் துறையினருக்கும், கோவை கமிசனர் சைலேந்தர் பாபு அவர்களுக்கும், இச்சம்பவத்தில் கொலையாளியை பிடிக்கவும், என்கவுண்டர் செய்யவும் உதவிய அனைத்து காவல் துறை நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

26 comments:

  1. தகவலுக்கு நன்றி. காவல்துறை நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்...

    special கமிசனர் சைலேந்தர் பாபு sir.

    ReplyDelete
  2. http://tamilmalarnews.blogspot.com/2010/11/blog-post_8748.html

    ithai paarkkavum

    ReplyDelete
  3. இந்த மாதிரி தீர்ப்பு வரவேற்கத்தக்கது...கோவம் தணிந்த நிலையில் மக்களோடு நானும்..அந்த மலர்கள் வானத்தில் இருந்து சிரிப்பது போல் தெரிய கண்களில் நீர் தெரிக்கிறது...

    ReplyDelete
  4. இப்படி தண்டனை கிடைச்சா தான் இது போல இன்னொரு வாட்டி செய்யறதுக்கு யோசிப்பானுங்க....

    ReplyDelete
  5. கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

    கோவை மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கொந்தளித்தனர். குற்றவாளியை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கோசமிட்டனர்.

    ஆனால் கைதுசெய்யப்பட்டவன் உண்மை குற்றவாளியா?
    யாரும் யோசிக்கவில்லை.

    பணத்துக்காக குழந்தைகளை கடத்தியவன் ஏன் பணம்கேட்டு ஒரு போன் கூட செய்யவில்லை?
    சாணிப்பவுடரை கொடுத்து தான் குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க வேண்டுமா?
    சாப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டு பையை கோயில் வேல்கம்பில் ஏன் மாட்டிவிடவேண்டும்?
    பாலியல் பலாத்காரம் என்பதை பிரேதபரிசோதனைக்கு முன்பே உறுதிபடுத்தியது ஏன்?

    இப்படி பல சந்தேகங்களுக்கு இடையில்

    கோவை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை குளறுபடி ஒன்று நடந்தது ஏன்?
    அடையாள அணிவகுப்புக்கு முன்பே பாட்டிக்கு போட்டோ காண்பிக்கப்பட்டது ஏன்?
    பொதுமக்கள் முன்னிலையில் முகத்தை காண்பித்து ஆக்ரோசத்தை எழுப்பியது.
    இது எல்லாம் எதற்காக?

    போலீசார் விசாரனை பாதையில் என்னதான் நடக்கிறது?

    இப்படி எல்லாம் யோசிப்பதற்குள்

    இன்று அதிகாலை விசாரனைக்காக அழைத்து சென்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

    ஒரு அப்பாவியை(விசாரனை கைதியை) சுட்டுக்கொல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

    பொது மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்

    போலீசாரால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட பலர் நிரபராதிகளாகியிருக்கிறார்கள்.

    வேனில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க ஆய்வாளரின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு தப்பிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றவனா மோகன்ராஜ்?

    பொது மக்களே தயவு செய்து உணர்ச்சிவசப்படாதீர்கள்

    போலீசார் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சுட்டுவிட்டு தப்பித்து ஓட முயன்ற விசாரணை கைதியை என்கவுன்டரில் சுட்டு தள்ள இது ஓன்றும் தமிழ்சினிமா அல்ல.

    இந்த சம்பவத்தின் பின்னனி என்ன?

    உண்மை குற்றவாளி யார்?

    நான் நிச்சயமாக சொல்வேன்
    இந்த என்கவுன்டர் போலீசாரின் தரம்கெட்ட கோழைத்தனம் தான்.

    ReplyDelete
  6. உண்மைலேயே சந்தோசமான நிகழ்வுதான் ..!!

    ReplyDelete
  7. நான் தமிழ்மலரோடு ஒத்துப் போகிறேன் நண்பரே. எளிதில் உணர்ச்சி வசப்படுதல் நல்லதல்ல. அவர் கேட்ட கேள்விகள் மிகவும் முக்கியமானவை. எனக்கும் அந்த வயதில் பெண் குழந்தை உண்டு. அதன் வலியும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இது சரியல்ல.

    ReplyDelete
  8. இரண்டு குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் என்றால் தவறான கொள்கைகள் மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகளுக்கு???

    ReplyDelete
  9. இப்படியான முடிவுகள் மக்கள் மனதில் காவல் மீது
    நம்பிக்கையே வரும்

    ReplyDelete
  10. வாழ்த்த வேண்டிய விஷயம் தான்..

    ReplyDelete
  11. ஹிட்லருக்கும் நமக்கும் வித்தியாசம் இருப்பதாய் எனக்கு படலை எனக்கு படலை.

    ReplyDelete
  12. கடவுள் தந்த தீர்ப்பு

    ReplyDelete
  13. //ஹிட்லருக்கும் நமக்கும் வித்தியாசம் இருப்பதாய் எனக்கு படலை எனக்கு படலை. //

    உண்மைதான் ......% மட்டும் சிறிது மாறுபடும் ......

    ReplyDelete
  14. //நான் தமிழ்மலரோடும் முனைவர் தி.பரமேசுவரி அவர்களுடனும் ஒத்துப் போகிறேன்//

    எளிதில் உணர்ச்சி வசப்படுதல் நல்லதல்ல. அவர் கேட்ட கேள்விகள் மிகவும் முக்கியமானவை. எனக்கும் அந்த வயதில் பெண் குழந்தை உண்டு. அதன் வலியும் வேதனையையும் என்னாலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இது சரியல்ல.

    ReplyDelete
  15. உணர்ச்சி வசப்பட்டு எல்லோரும் என்கவுண்டர் சரி என் சொல்கிறார்கள்.
    (சிலர் தவிர்த்து)
    தவறு......மிகப் பெரியதவறு.
    விசாரணையின்றி ஒருவரை தண்டிப்பது தவறு.

    இது பொலிஸார் செய்த ஒரு கொலை.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உங்களில் ஒருவர்கூட நாளை குற்றவாளியாக சித்தரிக்கப் படலாம். இதே தண்டனையை அன்று ஒத்துக் கொள்வீர்களா?

    குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இது வழியல்ல.

    பொலீஸாரின் எந்த ஒரு என்கவுண்டரையும் ஆதரிக்காதீர்கள். அது சட்டத்திற்க்கு எதிராக உங்களுக்கு நீங்களே தோண்டும் புதைகுழி!!

    ReplyDelete
  16. நானும் தமிழ்மலரோடு ஒத்து போகிறேன்.இதுல ஏதோ உள் குத்து இருக்கு

    ReplyDelete
  17. We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!

    On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.

    Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

    So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
    Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

    So, "ore kallil irandu maangaa"- proverb.

    ReplyDelete
  18. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது. ஆனால், குற்றவாளி pistol- ஐப் பிடுங்கி சுட வந்ததாகக் கூறும் காவல்துறை என்ன முதல் முறையாக ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதா? ஆயுதம் ஏதும் இல்லா குற்றவாளி ஆயுதத்துடன் கும்பலாக வரும் காவல் துறையினரை தக்க முனைந்ததாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. குற்றம் சாற்றப் பெற்றவரை குற்ற நிகழ்விடத்துக்கு அழைத்துப் போகும் தேவை என்ன? தேவை என்றால் இரண்டாவதாகக் குற்றம் சாற்றப் பெற்ற மனோகரன் எங்கே போனார்? A Elangovan

    ReplyDelete
  19. சபாஷ்!! சரியான தீர்ப்பு!!! இப்படித்தான் இருக்க வேண்டும் தண்டனை. காவல் துறையின் மிக துல்லியமான செயல்பாடு இதுவரை அவர்கள் மேல் இருந்த தவறான எண்ணங்களை தகர்த்து எறிந்து விட்டது. குற்றவாளிகளை நீதி மன்றத் தில் அனுப்பி இவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால் கி. பி ௨௦௩௬ வரை மக்கள் காத்து கொண்டிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட குற்றவாளி தேர்தல் சமயத்துக்கு முன்பே "நன்னடத்தை" காரணமாகவோ அல்லது " அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் முன்னிட்டோ சிறையை விட்டு வெளியேறாவும் வாய்ப்புக்கள் அதிகம். எனது மனத்தை பாதித்த விசயம் என்னவென்றால் மனித உரிமைகள் அமைப்பு என்று கூறி சில வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்து "போராட்டம்" செய்த செயால்தான் குற்றவாளிகள் செய்த செயலை விடவும் மிகவும் கீழ் தரமானது. மக்கள் ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விட்டனர். நன்றாக செயல்படும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் கதி நமது கோவை மாநகர் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு அவர்களுக்கும் இட மாறுதல் போன்ற சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் என கருதுகிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்!!!, இந்த நல்லகாரியத்தை நடத்திய காவல்துறையினருக்கும் கோடானகோடி நன்றிகள்.

    ReplyDelete
  20. காவல்துறை என்கவுன்டரில் இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த ரவுடிகளே. இந்தக் கொடூரச்செயலைச்செய்த கொலைபாதகன் சுடப்பட்டது இது போன்றச் செயலில் ஈடுபட மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
    இந்தக்கொலைபாதகனுக்கு வக்காலத்து வாங்கும் மனித உரிமையாளர்களுக்கு அவர்களுடைய மனைவி பெண்களுக்கு இதுபோல் ஒரு நிகழ்வு நேர சாபமிடுகிறேன்.

    ReplyDelete
  21. தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்ங்குறதுக்கு இந்த சம்பவம் ஒரு முன்னோடியா அமையணும்.

    ReplyDelete
  22. இந்த என்கவுன்டரை எதிர்ப்பது

    2 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு பதறிபோய் காவல்நிலையம் கூட வராத குழந்தைகளின் பெற்றோருக்காகவோ,

    கணவனை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற செய்தி தெரிவிக்கப்படாத நிறைமாத கர்ப்பிணிக்காகவோ அல்ல.

    இனி என்கவுன்டர் என்றபெயரில் காவல்நிலைய கட்டப்பஞ்சாத்துகளில் மிரட்டப்படும் அப்பாவிகளுக்காக தான்.

    அரசியல், சமுதாயம், மதம், சாதி, பணம், குற்றப்பின்னனி இப்படி எதுவுமே இல்லாத ஒருவனை எளிமையாக என்கவுன்டர் செய்து விட்டீர்கள்.

    இந்த பின்னனிகள் உள்ள ஒருவனை என்கவுன்டர் செய்யும் தைரியம் இல்லாத போலீசாருக்கு நீங்கள் போடும் சல்யூட் கேவலமானது என்பது உங்களுக்கு எப்படி புரியவைப்பது?

    இன்று நடந்த ஒரு சம்பவம் :

    காவல் நிலைய கட்டப்பஞ்சாத்தில் ஒரு அப்பாவி மிரட்டப்பட்டிருக்கிறான்

    போலிசு வேனில் ஏறுகிறாயா?

    சமுதாயம் இதற்கு என்ன பதில்சொல்ல காத்திருக்கிறது.

    தயவு செய்து உணர்ச்சிவசப்படாமல் யோசித்துபாருங்கள்...

    ReplyDelete
  23. Thandanai manasachikku onmaiya irukkurathinal ithai othu kollalam.
    but sattam than kailyil enru police ninethu vida ithu oru eduthukatta irunthuvidumo enru payam varuthu..

    ReplyDelete