Tuesday, November 30, 2010

இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் - நேசக்கரம் நீட்டுவோம்


உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே, எய்ட்ஸ் பற்றிய பல தகவல்களை இன்றைய தினத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை கண்டறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும்.

முதல் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது கூறப்பட்டது. 1982ல் தான் இது சி.டி.சியால் எய்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இதன் பின், 3 ஆண்டுகளில், அதாவது 1984ல் எச்.ஐ.வி. எனப்படும் ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் பிரித்தறியப்பட்டது.
உலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.

தென் மாநிலங்களில் எச்.ஐ.வி., தொற்று குறைந்து வருகிறது என்ற சமீபத்திய உலக சுகாதார நிறுவன அறிக்கை, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஒன்றே எச்.ஐ.வி., பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று உலகம் முழுவதும் அறிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகம் முழுவதுமே, எச்.ஐ.வி., பரவும் வேகத்தில் குறைவு காணப்படுகிறது. ஏறத்தாழ 17 சதவீதம் குறைந்துள்ளது. பிரசவத்தின் போது எடுக்கப்படும் பரிசோதனையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயம், ஆசியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் பாதிப்பேர் இந்தியாவில் உள்ளனர். ஆகவே இந்தியாவில் எச்.ஐ.வி., தடுப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
"எய்ட்ஸ் வேக்ஸ்' எனும் தடுப்பு மருந்தும் எச்.ஐ.வி., பரவுவதை 31 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து 100 சதவீதம் எச்.ஐ.வி.,யை தடுக்கும் மருந்து உருவாக அடிப்படையாக அமையலாம். எச்.ஐ.வி., மனித உடலுக்குள் பல்கிப் பெருகும் பல்வேறு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை செயல்படவிடாமல் தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். அது வெற்றி பெறும் வரை, உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி., தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எச்.ஐ.வி உள்ளர் நம்முடன் பழகும் போது கீழ்உள்ள எது நடந்தாலும் நமக்கு நோய் பரவாது..
  • வீட்டில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • வேலை செய்யும் இடத்தில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • தட்டு, தம்ளர், ஸ்பூன் அகியவற்றை சேர்த்து உபயோகிப்பதால்
  • உணவு, தண்ணீர் பகிர்ந்து கொள்வதால்
  • அவர்கள் உபயோகிக்கும் கழிவறை, அல்லது குளியல் தெட்டியை பயன்படுத்துவதன் மூலம்
  • முத்தம் இட்டுக் கொண்டால், இரும்பல் மற்றும் தும்பல் தெறித்தது விட்டால்
  • நோய்யினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம், கை குலுக்குவதன் மூலம்
  • நோயாளியைக் கடித்த கொசு, மூட்டைப் பூச்சி உங்களை கடித்துவிட்டால்
  • கண்ணீர், உமிழ் நீர் அல்லது வியர்வை உங்கள் மேல் படுவதால்
  • எய்ட்ஸ் கிருமி உள்ளவரின் சிறுநீர், மலத்தை மிதித்து விட்டால்
கிருமி பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து நாம் அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்வதன் மூலம் அவர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படுத்த முடியும்... 


நமக்கு தெரிந்த யாருக்கேனும் இருந்தால் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி நம்மால் ஆன உதவிகளை செய்யலாம்....
எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றியான எனது பதிவுகள்...

18 comments:

  1. கிருமி பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து நாம் அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்வதன் மூலம் அவர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படுத்த முடியும்...

    .....உண்மைதான். நல்ல விழிப்புணர்வு கொடுக்கும் பதிவு.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி அண்ணே.....இப்போ ஹலோ FM ல பாதிகப்பட்ட குழந்தைங்களுக்கு உதவற மாறி ஒரு திட்டம் போய்ட்டு இருக்கு..... 750 ரூபா குடுக்கணும்....நல்ல response போல...

    ReplyDelete
  3. நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  4. நல்ல பதிவு நண்பா. இரண்டாம் ஆண்டிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //கிருமி பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து நாம் அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்வதன் மூலம் அவர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படுத்த முடியும்... //

    இதைவிடப் பெரிய ஆறுதல் அவர்களுக்கு வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  6. ///இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.
    //

    என்ன கொடுமைங்க இது .?
    நிச்சயம் இதற்க்கான விழிப்புணர்வு வேண்டும் ..!!

    ReplyDelete
  7. அவசியமான பதிவு.

    ReplyDelete
  8. எனது கரங்களையும் இணைத்துக் கொள்கிறேன் ...

    ReplyDelete
  9. // ஹலோ FM ல பாதிகப்பட்ட குழந்தைங்களுக்கு உதவற மாறி ஒரு திட்டம் போய்ட்டு இருக்கு..... 750 ரூபா குடுக்கணும் //

    ஆமா கமல் குரலில் (வசூல் ராஜா வல்லவா!!) நல்ல பகிர்வு சார்!!

    ReplyDelete
  10. கிருமி பாதித்தவர்களை ஆதரிப்போம்,நேசிப்போம்..

    ReplyDelete
  11. ஏங்க சாதாரண காய்ச்சல் வந்தாலே நமை ஒரு மாதிரி பார்க்கும் ச்மூகமிது.எய்ட்ஸ் நோயாளிகள் கிட்ட அன்பா அரவணைப்பா இருக்கப்போறாங்களா.

    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  12. நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. எவ்வளவுதான் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக எழுதினாலும் எல்லோரும் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    ReplyDelete
  14. அவசியமான பதிவு.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  16. தேவையான பகிர்வு.. இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள் சங்கவி..

    ReplyDelete
  17. உங்கள் விழிப்புணர்வு பணி சிறக்கட்டும்

    ReplyDelete