Wednesday, November 10, 2010

அஞ்சறைப்பெட்டி 11.11.2010


நண்பர்களுக்கு வணக்கம். இது வரை எனதுவலைப்பதிவிற்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி.. இனி ஒரு புது முயற்சியாக வாரம் வாரம் அஞ்சறைப்பெட்டி என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும், அந்த வாரத்தில் எனக்கு பிடிச்ச பதிவுகள், பிடித்த ஜோக்குகள் மற்றும் நான் ரசித்த விசயங்கள் என வாரம் வாரம் ஒரு கலவையாக  பதிவை  கொடுக்க உள்ளேன் உங்கள் ஆதரவோடு..... நன்றி....


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சிறுநீரில் அளவுக்கு அதிகமான நைட்ரேட்ஸ், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இதனால் இதில் தரமான உரம் தயாரிக்கலாமாம். இதற்காக 90 ஆயிரம் கழிப்றைகள் அமைத்து அதில் சிறுநீரைப் பிடிக்க கேன் பொருத்தி விடுகிறார்களாம். இதன் மூலம் வாரத்திற்கு 200 ரூபாய் சம்பாரிக்கிறார்களாம் இது நம்ம ஊர்ல இல்லிங்க தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில். 
நினைச்சுபாருங்க நம்ம ஊர்ல சிறுநீரை காசு கொடுத்து வாங்கிக்கிறன்னு விளம்பரம் கொடுத்தா போதும் அடுத்த நாள் விளம்பரம் கொடுத்த வீட்டு முன்பு டேங்கர் லாரி வரிசையாக சிறுநீரோடு நிற்கும்.

..........................................................................................................
ஒபமா இந்தியா வந்து இங்கு நம் பாராளுமன்றத்தில் உரையாடும் போது இந்தியா வளரும் நாடல்ல வளர்ந்த நாடு என்று கூறி நம் வளர்ச்சியை பார்த்து கொஞ்சம் அசந்து விட்டார் என்று தோன்றுகிறது.
ஒபாமாவும் அவரது மனைவியும் நம் இந்திய மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடியது வரவேற்கத்தக்கது.
நம் நாட்டு தலைவர்கள் இது போல் இல்லையே என்ற மனவருத்தமும் அவர்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.

..........................................................................................................

ஜல் புயல் ஐஸ் போல் கரைந்து விட்டது. தமிழகத்தை முழுமையாக தாக்கி நம்ம மக்கள் நட்டுள்ள நெற்பயிரெல்லாம் தண்ணீரில் மூழ்கி விடுமோ என்ற பயத்துடன் இருந்தேன் பராவயில்லை புயல் ஜில் என்று முடிந்து விட்டது.

..........................................................................................................

காவிரியில் நாம் தண்ணீர் வேண்டும் என வேண்டுகோள் வைக்கவும் கடிதம் எழுதுவதும் கர்நாடகாவிடம் கேட்பது பிடிக்கவில்லை போலும் வருண பகவானுக்கு கர்நாடகாவில் கொட்டு கொட்டு என்று கொட்டி கிருஸ்ண ராஜசாகர் அனை நிரம்பி வரும் உபரி நீரால் ஒகேனக்கல்லில் பல பாறைகள் மூழ்கி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறதாம் சீக்கிரம் மேட்டூர் அணை நிரம்பி டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைத்து விடும் என்று சந்தோசம்...
..........................................................................................................

சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் தமிழக அரசால் மின்அஞ்சல் கொடுக்கப்பட்டுள்ளது ரொம்ப வரவேற்கத்தக்க விசயம். ஆனால் இந்த மின் அஞ்சலை தினமும் அவர்கள் படிப்பார்களா என்றால் சந்தேகத்திற்குரியது தான். அரசு அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ஓர் உத்தரவு போட வேண்டும் உங்களுக்க வந்த மின்அஞ்சல் எத்தனை அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது எத்தனை என்று ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

நீங்களும் உங்க சட்டமன்ற உறுப்பினர்களின் மின்அஞ்சலைப் பார்க்க இங்க போங்க http://www.tn.gov.in/telephone/email-MLA.html

நாட்டு நடப்பு
இந்த வருட தீபாவளிக்கு பட்டாசு விற்பனை இருந்ததோ இல்லையோ சரக்கு விற்பனை படுஜோராக நடைபெற்றது அனைத்து ஊர்களிலும். 
தமிழ் நாட்டில் மட்டும் 7434 கடைகளின் மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. இந்த தீபாவளிக்கு அரசு நிர்ணயித்த இலக்கு 300 கோடி ஆனால் சரக்கு விற்றதோ 345 கோடி.. அரசு சொல்வதை தட்டாமல் நிறை வேற்றுகிறார்கள் நம் குடிமக்கள்... 
வாழ்க குடிமக்கள்.....

தகவல்

மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு.

மொக்கை ஜோக்

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கனும்னா என்ன செய்யனும் 

வேற ஒன்னும் இல்ல

கொசு தூங்குனதுக்கு அப்புறம் நீங்க தூங்குங்க...

அறிமுக பதிவர்

குழலும் யாலும் என்ற பெயரில் முரளி என்பவர் எழுதி வருகிறார்   "மரபின் இசை குழல்; நவீனத்தின் இசை யாழ். எனது கவிதையின் திசைகள் இரண்டுமே. என கவிதையாக எழுதி வருகிறார்.
இவர் ஒரு பத்திரிக்கையாளர் தனது கருத்துக்களை  கவிதையாக தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய கவிதைகள் சமூகம் சார்ந்த விசயமாகவும் அரசியல் கலந்தும் இருக்கும்.
இவரது கவிதைகளை நிறைய ரசித்துள்ளேன் நீங்களும் ரசியுங்களேன்.... http://kuzhalumyazhum.blogspot.com/

தத்துவம்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.... பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்..


62 comments:

  1. நல்ல முயற்சி ..! தொகுப்பு அருமை..! தொடருங்கள்..!

    ReplyDelete
  2. அஞ்சறைப்பெட்டி பிரபலமாக வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. புதிய முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எல்லாருக்கும் தெரிஞ்ச தகவல் சொல்லாம, புது தகவல் சிலவற்றை சொல்லி இருக்கீங்க.... கலக்குங்க....

    ReplyDelete
  5. அழகாய் தொகுத்த செய்திகள் அஞ்சறைப் பெட்டியில் சுவாரஸ்யமாகவும் தகவல்களாகவும் இருந்தது சங்கவி..தொடருங்கள்

    ReplyDelete
  6. அஞ்சரை பெட்டி பிரபலமாக வாழ்த்துக்கள் .........நல்லா இருக்குங்க ............குட்டி குட்டி செய்திகளாக இருந்தாலும் நல்லா இருக்கு

    ReplyDelete
  7. மிக அருமை ...நன்றாக தொகுத்திருகீர்கள் !!!

    ReplyDelete
  8. அஞ்சறை பெட்டி மணக்கிறது - பலவித தகவல்களோடு. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மிகவும் நன்று. தொடருங்கள்

    ReplyDelete
  10. புதிய தகவல்கள் அருமை.

    //நினைச்சுபாருங்க நம்ம ஊர்ல சிறுநீரை காசு கொடுத்து வாங்கிக்கிறன்னு விளம்பரம் கொடுத்தா போதும் அடுத்த நாள் விளம்பரம் கொடுத்த வீட்டு முன்பு டேங்கர் லாரி வரிசையாக சிறுநீரோடு நிற்கும்//

    பாதிக்குப் பாதி கலப்படம் செஞ்சிருப்பானுங்க :)

    ReplyDelete
  11. இனிமே வாராவாரம் மசாலா ( அஞ்சறைப் பெட்டி ) மணக்கும்.. :)
    இந்த வார வாசனை அருமை....

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான தொகுப்பு..

    ReplyDelete
  13. முதல் நியூஸ் புதுசு..நல்லாயிருக்கு தொடருங்கள்..

    ReplyDelete
  14. நல்ல தொகுப்பு! தொடரட்டும்!

    ReplyDelete
  15. நல்லதொரு முயற்சி....பகிர்வுக்கு நன்றி...அஞ்சரை பெட்டி அசத்தல். தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அண்ணா.. உங்கள் புதிய முயற்சி பிரபலமாக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. topics are good. keep it up... All the best

    ReplyDelete
  18. //தமிழரசி said...
    அழகாய் தொகுத்த செய்திகள் அஞ்சறைப் பெட்டியில் சுவாரஸ்யமாகவும் தகவல்களாகவும் இருந்தது சங்கவி..தொடருங்கள்//

    **********

    பயங்கர பிசி.... எந்த வலையின் பக்கம் கூட போவதில்லை. அதனாலேயே நண்பர்களின் வலைகளுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை... இப்படியெல்லாம் சொன்ன தமிழரசி தானா இது??

    யப்பா...... இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல...

    அஞ்சறைப்பெட்டிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. நிறைய செய்திகளைக் கொடுத்திருக்கீங்க.. நல்லாயிருக்கு..

    ReplyDelete
  20. பிரபலமாக வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. வாசனையான ஆரம்பம்.. தொடருங்கள்!!

    ReplyDelete
  22. வாங்க தமிழ்அமுதன்

    வாங்க கே.ஆர்.பி. செந்தில்

    வாங்க எல்.கே.

    வாங்க அருண்

    வாங்க தமிழ்அரசி

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. வாங்க மோகன்...

    வாங்க இம்சை அரசன் பாபு...

    வாங்க ரமேஸ்...

    வாங்க வெங்கட் நாகராஜ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. வாங்க கவிசிவா...

    உண்மைதாங்க நம்மாளுகள கலப்படத்துல மிஞ்ச முடியுமா...

    ReplyDelete
  25. வாங்க பாலாஜி சரவணன்...

    வாங்க வித்யா....

    வாங்க அமுதா கிருஸ்ணன்...

    வாங்க எஸ்.கே...

    வாங்க கவுசல்யா

    தங்கள் வருகைக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  26. வாங்க வெறும்பய...

    வாங்க வெட்டிபேச்சு...

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  27. வாங்க கோபி...

    உங்க அடுத்த பதிவிற்கு நிச்சயம் கருத்து சொல்லுவாங்க...

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  28. வாங்க பாபு...

    வாங்க ஜாக்கி...

    வாங்க அமைதிச்சாரல்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  29. தொகுப்பு அருமை..! தொடருங்கள்..

    ReplyDelete
  30. அஞ்சறைப் பெட்டியை வரவேற்கிறேன்....

    ReplyDelete
  31. கலவைப்பதிவு சுப்பரா இருக்கு நல்ல திருப்தி

    ReplyDelete
  32. நல்ல கலவை..
    அறிமுகப் பதிவர் பக்கம் நல்ல முயற்சி.
    இனி ஒவ்வொரு அஞ்சறைப்பெட்டி பதிவிலும் ஒரு பதிவர் அறிமுகத்தை எதிர்பார்க்கலாமா?
    நாட்டு நடப்பும் கடைசி தத்துவமும் அமர்க்களம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. // நான் ரசித்த விசயங்கள் என வாரம் வாரம் ஒரு கலவையாக பதிவை கொடுக்க உள்ளேன் உங்கள் ஆதரவோடு..... நன்றி....
    //

    போடுங்க போடுங்க ., எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ..

    ReplyDelete
  34. உண்மைலேயே அஞ்சறைப்பெட்டிஅருமை ., எல்லா விசயங்களையும் தொகுத்தது நல்லா இருக்கு அண்ணா .. ஒபாமா வந்த விசயத்துல இருந்து நம்ம ஊர் விவசாயம் வரைக்கும் கலந்து சொன்னது புதுமை .. மொக்கையும் அருமை ..

    ReplyDelete
  35. புதிய முயற்சி சங்கவி. வாழ்த்துகள். அமர்க்களமான ஆரம்பம்.

    ReplyDelete
  36. நல்ல முயற்சி தொடருங்கள்

    ReplyDelete
  37. சங்கவி....நீண்ட நாடக்ளுப்புறம் என் பக்கம் கண்டேன்.சந்தோஷம்.

    அஞ்சறைப்பெட்டி அருமை.புதிய அறிமுகமும் தத்துவமும் ரசித்தேன்.தொடருங்கள்!

    ReplyDelete
  38. இதுவும் நல்லா இருக்கே!

    ReplyDelete
  39. இதைப் போலவே தொடர வேண்டும். திருப்பூர் நண்பரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  40. அசத்துங்கப்பு..

    ReplyDelete
  41. :) வலைப்பதிவருக்கான அடையாளம். நல்ல முயற்சி. சிறப்பாகவே இருக்கிறது.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள்...தொடருங்கள்!!

    ReplyDelete
  43. ஒபாமாவும் அவரது மனைவியும் நம் இந்திய மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடியது வரவேற்கத்தக்கது.
    நம் நாட்டு தலைவர்கள் இது போல் இல்லையே என்ற மனவருத்தமும் அவர்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.
    //

    உங்களுக்கு பொறாமையாக இருந்தது.. எனக்கு வருத்தமாக இருந்தது..

    மன்மோகன் சிங் ஆடனும்.. அதை நாங்க பார்க்கனும்.. அப்பத்தான் எங்களுக்கு சந்தோசம்.. ஹி..ஹி

    ReplyDelete
  44. சூப்பரா இருக்கு பங்காளி... தொடர்ந்து எழுதிக் கலக்குங்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  45. நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள்...
    ஃஃஃஃஃஃதமிழ் நாட்டில் மட்டும் 7434 கடைகளின் மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஃஃஃஃஃ இவ்வளவு வரவாய அடடா பெரும் குடிமகன்கள் தான் போல இருக்கு...

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள்...தொடருங்கள்!

    ReplyDelete
  47. அருமை அருமை !! யோசிச்சு யோசிச்சு அடிச்சு நொறுக்கராங்கப்பா !!

    ReplyDelete
  48. ரொம்ப நல்லா இருக்குது!!!

    ReplyDelete
  49. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர என் ஆசிகளும் பாராட்டுக் களும்

    ReplyDelete
  50. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. பெயருக்க்த் தகுந்தாற்போல இருக்கிறது. மேன்மேலும் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  52. நல்ல முயற்சி நண்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சேவை . பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  53. கலக்குங்க பங்காளி

    ReplyDelete
  54. அன்புள்ள நண்பருக்கு
    உங்கள் தளத்தில் எனது வலைப்பூ குறித்த அறிமுகத்திற்கு நன்றி.
    - வமுமுரளி

    ReplyDelete