Tuesday, November 2, 2010

வந்திருச்சு தீபாவளி..


தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான் பொங்கலுக்கு துணி எடுக்கறமோ இல்லையே தீபாவளிக்கு நிச்சயம் வீட்டில் புது துணி எடுப்பார்கள். இப்போது எல்லாம் அப்படியே கடைப்பக்கம் போனால் துணி எடுக்க வேண்டும் என்றால் எடுத்துக்கொள்கிறோம் முன்பெல்லாம் தீபாவளிக்குத்தான் வீட்டில் துணி எடுத்துக்கொடுப்பார்கள் தீபாவளி என்றால் புதுத் துணி கிடைக்கும் என்பது ஓர் மிகப்பெரிய சந்தோசம்.


வருடம் தொடங்கியதும் தீபாவளி எப்ப வருது என்றுதான் காலண்டரில் பார்ப்போம் சனி ஞாயிறுகளில் வந்தால் அய்யோ லீவ் போச்சே என்றும் வெள்ளி, திங்கட்கிழமைகளில் வந்தால் மிகவும் சந்தோசமடைவோம்.

தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இருந்து கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும் சிறுவயதில் வீட்டில் கொடுக்கும் சில்லைரைக்கு கொல்லுப்பட்டாசு வாங்கி வெடிக்கத் தொடங்குவோம் அப்புறம் துப்பாக்கி வாங்கி சுருள் கேப் போட்டு திருடன் போலீஸ் விளையாட தொடங்குவோம் அப்போது எல்லாம் பேசிக்கொள்வது தீபாவளியைப் பத்தித்தான் இருக்கும் எங்க வீட்டில் துணி எடுத்தாச்சு துணி எடுக்கும் போது எங்கம்மா கூட நானும் போனேன் என்று பெருமை பீத்திக்கொண்டு இருப்போம்.

நான் சிறுவயதாக இருக்கும் போது போலீஸ் யூனிபார்ம் அப்ப ரொம்ப பேமஸ் எனக்கு அது தான் வேண்டாம் என அழுது அடம் பிடித்து கடைசியாக வாங்காமல் வந்த தெல்லாம் இப்ப ஞாபகம் வருகிறது.

தீபாவளிக்கு துணி அடுத்து பட்டாசு தான் பட்டாசு வெடிக்கிற சுகமே தனி தான் அப்பவெல்லாம் சிந்தாமணியில் தான் பட்டாசு வில் குறைவாக இருக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே பட்டாசு லிஸ்ட் போட்டு வாங்கி வந்து நண்பர்களை எல்லாம் கூட்டிட்டு வந்து அவர் அவர் வீட்டில் உள்ள பட்டாசுகளை காண்பித்து சந்தோசப்பட்டுக்கொள்வோம். சின்னப்பசங்க நாங்க தான் துணி பட்டாசு என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வீட்டுப்பெரியவங்க நாங்க அத்தனை விலைக்கு புடவை எடுத்தோம் பட்டுப்புடவை எடுத்தோம் எங்க வீட்டில் இந்த பலகாரம் சுட்டோம் என்று அவர்கள் ரேஞ்சுக்கு அவர்கள் பெருமையடிப்பார்கள்.


 எங்கள் வீட்டில் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சேர்ந்து பலகாரம் செய்து பிரித்துக்கொள்வோம் இது எங்க ஊரில் இன்றும் இப்பழக்கம் இருக்கிறது. ஒரு வழியாக துணி எடுத்து பட்டாசு வாங்கி, பலகாரம் செய்து தீபாவளிக்கு தயாராக இருப்போம்.

தீபாவளிக்கு முந்தையநாள் இரவு பட்டாசுயை பிரித்து கொஞ்சம் பட்டாசுகளை வெடிப்போம் இரவு நேரத்தில் தூங்கப்போய்விடுவோம் ஊரில் யார் முதலில் பட்டாசுக்களை வெடிக்கிறாங்க என்ற போட்டி இருக்கும் எல்லோரும் தூங்கி 5 மணிக்குதான் முதல் பட்டாசு வெடிக்கும் ஆனால் நான் 4 மணிக்கே வெடிச்சேன், 2 மணிக்கே வெடிச்சேன் என அவன் அவன் பெருமையடித்துக்கொள்வோம்.

தீபாவளி அன்று காலை வீட்டில் எண்ணெய் தேய்த்து  விடுவார்கள் எண்ணெய் குளியல் முடிந்தும் வெது வெதுப்பான சுடு நீரில் குளித்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு பலாகாரம் சாப்பிட்டு விட்டு பட்டாசு வெடிக்க ஆரம்பிப்போம். ஊசி பட்டாசு 2 பாக்கெட் வாங்கி இருப்போம் அன்றைக்கு முழுவதும் ஊசி பட்டாசு தான். முக்கியமாக தீபாவளி அன்று வீட்டில் இட்லி சுடுவார்கள் இன்று தினமும் இட்லி சாப்பிடுகிறோம் ஆனால் அப்பவெல்லாம் பண்டிகை அன்று தான் இட்லி கிடைக்கும்.

ஊரில் கள்ள மார்க்கெட்டில் கல்லு வெடி கிடைக்கும் (அது தாங்க வெங்காய வெடி) இந்த வெடியை கையில் மறைத்துக்கொண்டு எங்க பசங்க வரும் போது அவுங்க கால் பக்கத்தில் அடித்து வெடிக்க வைப்போம். யார் வீட்டு சுவற்றிலாவது அடித்து வெடிக்க வைப்போம் அப்புறம் அவர்கள் வந்து சண்டை போடுவார்கள். இந்த வெடியால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.

தீபாவளி அன்று இரவு தான் கொண்டாட்டமே ஒவ்வொருரும் நண்பர்கள் வீட்டுக்கு சென்று அவர்கள் பட்டாசை வெடிப்போம் எல்லார் வீட்டுக்கும் சென்று வெடிப்போம் இதில் சிலபேர் பட்டாசை ஒளித்து வைத்து அடுத்த நாள் வெடிப்பார்கள். தீபாவளி அன்று மகிழ்ச்சி பொங்க இருப்போம் அன்று.

இன்று தீபாவளி அன்று தொலைக்காட்சி பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது யார் வீட்டிலும் சரியான நேரத்திற்கு சாப்பாடு போடுவதில்லை இருப்பா இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சாப்பாடு போடுகிறேன் என்ற இச்சொல்தான் அதிகம் காணப்படும். சமீபகாலமாக தீபாவளி அன்று வெடிக்கக்கூடிய பட்டாசு வெடிக்காமல் நிகழ்ச்சியை பார்த்து விட்டு கார்த்திகை தீபம் அன்று வெடித்த கதை எல்லாம் உண்டு.

நண்பர்களே தீபாவளி அன்று நாம் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளியை நம் குழந்தைளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை சந்தோசத்தில் கிறங்கடிப்போம். தொலைக்காட்சியை தவிர்த்து திருவிழாவை அனுபவிப்போம்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

17 comments:

  1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    நினைவுகள் இனிமை.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனுபவ பகிர்வு அருமை..!
    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தீப ஒளி பரவ ,
    சந்தோஷம் நிறைய
    வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  7. அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நான் நினைக்குறது மாதிரியே இருக்கு
    அதிலும் இந்த மேட்டர் நான் வருஷ வருஷம் பண்ணுறது தான் அண்ணா ..
    ///வருடம் தொடங்கியதும் தீபாவளி எப்ப வருது என்றுதான் காலண்டரில் பார்ப்போம் சனி ஞாயிறுகளில் வந்தால் அய்யோ லீவ் போச்சே என்றும் வெள்ளி, திங்கட்கிழமைகளில் வந்தால் மிகவும் சந்தோசமடைவோம்.
    ///

    தீபாவளி வாழ்த்துக்கள் ..!!

    ReplyDelete
  11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இப்போல்லாம் டீ(வி)பாவளிதான்... தீபாவளி கிடையாது...
    தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி.

    ReplyDelete
  14. அட நானும் கூட தீபாவளி பற்றி இப்போ தான் எழுதினேன். Happy Diwali Sangavi!

    ReplyDelete
  15. நீங்க எழுதியிருப்பது போல சிறு வயதில் கொண்டாடிய தீபாவளிகள் இப்போது மனதில் மட்டுமே..ஊரைவிட்டு வந்தபிறகு,இங்கே ஒவ்வொரு தீபாவளியும் வாரத்தில் மற்றுமொரு நாளாகக் கழிகிறது.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சங்கவி!

    ReplyDelete
  16. நண்பர்களே தீபாவளி அன்று நாம் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளியை நம் குழந்தைளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை சந்தோசத்தில் கிறங்கடிப்போம். தொலைக்காட்சியை தவிர்த்து திருவிழாவை அனுபவிப்போம்.

    ...Good message.

    HAPPY DEEPAVALI!

    ReplyDelete