Thursday, February 24, 2011

பழமொழியும் விளக்கமும்


பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன்.

பழமொழி என்றால் என்ன?
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

"திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்" 

இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.

"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" .

உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது. 

"ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்"

முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.
"தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்"

தனித்தனியாய் உள்ள தேங்காய் நாரைத் தொடையில் வைத்துத் திரித்தால் அது ஒன்றாகச் சேர்ந்து கயிறு ஆகும். தரையில் அமர்ந்து வலக்காலை நீட்டிக் கொண்டு வெற்றுத் தொடை மேல் நாரை வைத்து இடுப்புப் பக்கமிருந்து முழங்கால் பக்கமாகக் கையால் உருட்டவேண்டும். அதற்குப் பெயர்தான் திரித்தல். திரிக்கும்போது நார் உறுத்தும், சிராய்ப்பு உண்டாகலாம். கஷ்டந்தான். பக்கத்தில் ஒருவன் காலை நீட்டித் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனுடைய தொடையில் திரிக்கலாம் அல்லவா? விழித்துக்கொண்டான் என்றால் எதிர்ப்பான், திட்டுவான், மொத்தவும் கூடும். இருப்பினும் திரித்தவரை லாபந்தானே? முடிந்தவரைக்கும் பிறரை ஏமாற்றிக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிற எத்தர்கள் பயன்படுத்தும் பழமொழியிது!

“சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை”
இஞ்சியைக் காயவைத்து அதனை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவர். பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்வருவதில்லை. இந்நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிற நோய்கள் உடலில் ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு.

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்”

ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்


‘வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி’

முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது.

"பாவிக்குப் பாம்பு கண்"

யாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும். பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது 

"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. 

"புல் தடுக்கிப் பயில்வான் போல"

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான் .. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி – கரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி "

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும் . 

  
எட்டாப் பூ தேவருக்கு எட்டும் பூ தங்களுக்கு

கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

ஆ வேறுருவினதாயினும் பால் வேறுருவினதாமோ? 

பகுத்தறிவில்லாத அறிவு பாரமில்லாத கப்பல் 

இலையின் வீழ்ச்சி வாழ்க்கையின் இரகசியம்

29 comments:

  1. பழமொழி விளக்கங்கள் அருமை. அதிலும்
    "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" . - இதன் வேறு அர்த்தம் இன்றுதான் தெரிந்தது.
    நன்றி

    ReplyDelete
  2. பழமொழியும் விளக்கங்கள் அருமையான தொகுப்பு.

    இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  4. வாவ்... \\"புல் தடுக்கிப் பயில்வான் போல"\\ யிலுள்ள தகவல் எனக்கு புதியது. தொடருங்கள். இன்னொரு முருகைப்பாண்டியனோ?!!!!

    ReplyDelete
  5. விளக்கங்கள் அனைத்தும் அருமை அண்ணா...

    ReplyDelete
  6. அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நண்பரே இன்றுதான் நிறைய பழமொழிகளுக்கு உண்மையான விளக்கங்கள் தெரிந்துகொண்டேன்

    தொடருங்கள்... :)

    ReplyDelete
  7. நல்ல முயற்சி..
    வாழ்த்துக்கள் தொடருங்கள்..

    ReplyDelete
  8. நல்ல முயற்சி..
    வாழ்த்துக்கள் தொடருங்கள்..

    ReplyDelete
  9. //பழமொழி விளக்கங்கள் அருமை. அதிலும்
    "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" . - இதன் வேறு அர்த்தம் இன்றுதான் தெரிந்தது.
    நன்றி//

    Repeatteey......! :-))

    ReplyDelete
  10. அருமையான மற்றும் எளிமையான விளக்கங்கள்...

    ReplyDelete
  11. நல்ல முயற்சி நண்பரே

    ReplyDelete
  12. அருமையான விளக்கங்கள்!

    ReplyDelete
  13. //"புல் தடுக்கிப் பயில்வான் போல"//
    இதற்கான விளக்கம் பளீச்...

    ReplyDelete
  14. தெரிந்த பழமொழிகள்.. தெரியாத விளக்கங்கள்..பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. அருமையான பதிவு....மேலும் பழமொழிகளுக்கு விளக்கம் அறிய....இங்கே வாங்க.....
    மாறிவிட்ட பழமொழிகள்

    ReplyDelete
  16. அருமையான பதிவு....மேலும் பழமொழிகளுக்கு விளக்கம் அறிய....இங்கே வாங்க.....
    மாறிவிட்ட பழமொழிகள்
    http://ragariz.blogspot.com/2010/11/blog-post_14.html

    ReplyDelete
  17. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி "

    ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும் . .........................................//////////////////



    நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடியாரும் திருக்குறளும் படித்து வந்தால் மொழி புலமை தானாக வரும் ....................

    ReplyDelete
  18. //தெரிந்த பழமொழிகள்.. தெரியாத விளக்கங்கள்..//

    True,.

    //சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்//

    குக்கர் வந்தபின் என்னத்த நீராகாரம்,..??

    //ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
    மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை//

    எல்லாத்துக்கும் சந்தோசம் தர்ற மாதிரி செயல் ஏதும் இல்லையா ???

    //எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.//

    நிகழ்வுலக சாணக்கியார் கலைஞர்தானே ?

    நிறைய பழமொழிகளுக்கு விளக்கம் இப்போதுதான் தெரிகிறது,.. நன்றி சங்கவி,..?

    ReplyDelete
  19. சிறப்பான பதிவு

    ReplyDelete
  20. நல்ல விளக்கங்கள் பல பழமொழிகளுக்கு..
    பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  21. பழமொழி சொல்லி.....
    சூப்பர் மக்கா...

    ReplyDelete
  22. பழமொழிகள் மருவி, அர்த்தத்தையே மாற்றி விடுகிறதே... நல்ல தொகுப்பும் விளக்கமும். நன்றி.

    ReplyDelete
  23. கண்ணடிச்சா வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போறா...

    இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லுங்க அண்ணே...

    ReplyDelete
  24. பழமொழிகளில் இவ்வளவு விளக்கங்கள் இருக்கா?

    ReplyDelete
  25. சங்கவி இந்த ஆராய்ச்சிலயும் இறங்கீட்டாரா?

    ReplyDelete
  26. /////மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே//////

    விளக்கம் யோசிக்க வைக்கிறது.......

    ReplyDelete
  27. //////Philosophy Prabhakaran said...
    கண்ணடிச்சா வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போறா...

    இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லுங்க அண்ணே...//////

    விளக்கமாத்தானே இருக்கு?

    ReplyDelete
  28. முதல் இரண்டைத் தவிர மற்றவற்றிற்கு நேரிடையானா அர்த்தம், இது வரை நினைத்தது சரி என்பதில் சந்தோசம். ஆனால் பல பழமொழிகளுக்கு தப்பான அர்த்தத்தை நம்மாட்கள் கர்ப்பித்து உள்ளார்கள். ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கலயானத்தைப் பண்ணு- இதன் பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்ல வேண்டுமேன்பதல்லா, ஆயிரம் தடவை இரண்டுபக்கமும் போய்ச் சொல்லி, திருமணத்தை நடத்து என்பதாகும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.- இதில் பேரை என்ற வார்த்தை தவறு, ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.அந்த வைத்தியனுக்கு ஆயிரம் மூலிகைச் செடிகளின் வேர்கலாவது அத்துபடியாகத் தெரிந்திருக்க வேண்டும். \\வேல் என்பது வேப்பமரம்.\\ வேல மரம் என்றே மரமிருக்கிறது. கிராம மக்கள் இதன் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கப் பயன் படுத்துவோம். இதை வெட்டி 50 குச்சி கட்டுகளாக நகர்ப் புறங்களில் விற்ப்பதுண்டு.

    ReplyDelete