Tuesday, February 8, 2011

புகழ் என்னும் போதையில் பதிவுலகம்..


பதிவுலகம் ஒரு மாற்று ஊடகம் என்று சொன்னால் அது மிகையாகது அந்த அளவிற்கு இன்று பல உண்மைகள் வெளிவர காரணமாக இருப்பது பதிவுலகம். இந்த 20ஆம் நூற்றாண்டில் தனி மனித சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பதிவுலகம்.

இன்று தமிழில் பதிவுலகில் எழுதுபவர்களின் எண்ணிக்கை ஏராளம் தமது எண்ணங்கள், கவிதைகள், கதைகள் என்று தன் மனதில் தோன்றுபவற்றை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் வரும் வராது என்ற வாரம் வாரம் புத்தகத்தை வாங்கி படிப்பது தான் மேல் ஆனால் இவை அனைத்தையும் யாருடைய கெடுபிடியும் இல்லாமல் எந்த நிர்பந்தமும் இல்லாமல் வலைப்பூக்களின் மூலம் வெளியிடலாம் இது தான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி.

நிறைய பேர் பதிவுகள் எழுதுகின்றனர் எழுதும் அனைத்து பதிவுகளும் அனைவரும் படிப்பதில்லை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திரட்டிகள் நிறைய வந்தன. திரட்டிகளில் பதிவை பதிவு செய்வதன் மூலம் நிறைய வாசகர்களை தமது வலைப்பூக்களுக்கு எதிர்பார்க்கலாம்.


நிறைய வாசகர்கள் வர வர நம் எழுத்துமேல் மேலும் காதல் வந்து புகழ் என்னும் போதைக்கு தள்ளப்படுகின்றோம். புகழ் சேர சேர தினமும் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதனால் அலுவலகம் மற்றும் நமது வீட்டை விட்டு கொஞ்சம் விலகுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பதிவர்கள் வீட்டில் இரவு 10 மணிக்கு மேல் தான் கணினி கதறும்.

இதில் புகழ் பெறுவதற்கு என்ன வழி என்று நிறைய பதிவுகள் இருக்கின்றன முதலில் அனைத்துப் பதிவிற்கும் சென்று பின்னூட்டமிட்டு அவர்கள் பதிவில் பளோயராவது அப்புறம் அவர்களை நம் வலைப்பதிவிற்கு வரவேற்பது இதை தினமும் செய்வதால் நமக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், பளோயர்ஸ் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

இதனால் புகழ் மேலும் அதிகமாகிறது புகழ் அதிகமாக அதிகமாக தினமும் எதாவது எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம் எழுதும் அகைத்து பதிவுகளும் தரமானதா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் தலைப்பை மட்டும் அனைவரையும் ஈர்க்குமாறு வைத்துவிட்டு உள்ளே சேதிகள் என்ன தருவது என்று தெரியாமல் எழுத வேண்டியதாகிறது.

பதிவு எழுதுபவர்களில் பல ரகம் சிலர் அழகான நையாண்டியுடன் சிரிப்பு பதிவுகள் எழுதுகின்றனர் அனைத்து தரப்பும் ரசிக்கும் வகையில் அற்புதமாக இருக்கும் இப்படி எல்லாரும் எழுத முடியாது ஒரு சிலர் தான் எழுத முடியும் இவர்கள் வாரத்திற்கு சில பதிவுகள் எழுதினாலும் படித்து விட்டு 10 நிமிடம் சிரிப்பது போல் இருக்கும்.

பதிவுலகம் இப்படி அழகாக சென்று கொண்டு இருக்கும் போது தமிழ்மணம் இந்தவார சிறந்த 20 பதிவர்கள் என்று தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது இந்த தமிழ்மணம் டாப் 20க்குள் வந்து விட வேண்டும் என்று அதற்காகவே பதிவுகள் வந்தன என்றால் அது மிகையாகது. ஒரு வாரம் டாப் 20க்குள் வந்து விட்டால் அடுத்த வாரம் அதே இடம் அல்லது அதற்கு மேல் வர வேண்டும் என்ன செய்ய புகழ் என்னும் போதை இழுக்கிறது அதற்காகவே பதிவு போட வேண்டி உள்ளது.

கடந்த வாரம் வந்த பெயர் இந்த வாரம் வரவில்லை என்றால் மனது பதைபதைக்கிறது. இந்த போதையைப் பற்றி நண்பரிடம் பேசிய போது உண்மைதான் இது போதைதான் நானும் பல மகுடத்தையும், புகழ்ச்சியையும் பார்த்து விட்டேன் ஆனால் இப்போதையில் விழாமல் இருக்கிறேன் வாரத்திற்கு இரண்டு பதிவு தான் போடுகிறேன் மன திருப்திக்காக என்றார்.

பதிவுலகம் என்னும் போதை என்று தலைப்பு வைத்ததற்கு காரணம் என் நண்பன் என்னடா எப்ப பார்த்தாலும் பதிவு பதிவு ஒரு போன் கூட பேச மாட்டிங்கற இந்த போதைக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்று நினைக்கிறேன் என்றான் அப்போது தான் எப்படி பதிவு எழுதி புகழ் பெற்று இந்த போதைக்கு அமையா என்று தோணியது எழுதினேன்...

புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை...

இப்பதிவு என் மனதிற்கு தோன்றிய பதிவு இதை எழுதி ரொம்பநாள் ஆகிவிட்டது இதற்கு நிறைய எதிர்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் வரவேற்கிறேன்....

65 comments:

  1. நிஜம் தான் சங்கவி

    புகழ்ச்சி தான் மனிதனை அடிமையாக்கும் மிகப்பெரும் வஸ்து

    நிஜமாகவே இது என் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணம் ...

    ReplyDelete
  2. முழுக்க முழுக்க உங்களது கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  3. சரியா எழுதியிருக்கீங்க நண்பா.

    உங்களின் சில பதிவுகளைப் பார்த்த பொழுது, 'ஏன் இவன் இப்படி எழுதுகிறார்... புகழில் மயங்கிவிட்டாரோ' என்று நினைத்திருக்கிறேன்.

    இருந்தாலும் பயனுள்ள பதிவுகளை எழுதுவதால் உங்களைத் தொடர்ந்து வருகிறேன்.

    தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. புகழ் என்னும் போதை தவிர்க்கப்படவேண்டியதே ,,,
    அதிலும் உண்மையா சொன்ன பதிவுலகத்துல நீங்க எவ்ளோ பெரிய புகழ் இருந்தாலும் கடைல போய் நான் ஒரு பிரபல பதிவர் 50 காசுக்கு ஒரு மிட்டாய் குடு நான் அப்புறம் வந்து காசு குடுக்கிறேன்னு கேட்டு பாருங்க ,, கண்டிப்பா அடி வாங்கிட்டு தான் வருவீங்க .. அதனால உண்மைலேயே பதிவுலகம் என்பது நண்பர்களைப் பெறுவதற்கான இடம்தானே ஒழிய கண்டிப்பா புகழ் அப்படிங்கிறது இங்க சும்மாதான் .. பிரபலம் அப்படின்கிறதும் சும்மாதான் ..

    ReplyDelete
  5. /////புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை...///////

    உண்மையான வரிகள்...
    இன்னும் எதிர் காலத்தில் உன் பதி வை நான் படிச்சிட்டேன்.. என் பதிவை நீ ஏன் இன்னும் படிக்கல.. என்று அடித்து கொள்கிற காலம் கூட வரலாம்...

    ReplyDelete
  6. ப‌திவுலகில் புகழ் என்பது பிரபலமான பிறகு வரும் ஆசை. அதற்கு முன்பே, அதிலியே மூழ்கி கிடப்பது என்ற நிலையில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் நம்முடைய முழுக்கவனமும் இருக்கிறது. பதிவுலகத்தை தாண்டிய மற்ற நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.

    சிலபேர் சீரியலில், சினிமாவில், விளையாட்டில் மூழ்கிவிடுவது போல் பதிவுலகத்திலும் இந்த நிலைக்கு நம்மையுமறியாமல் தள்ளப்படுகிறோம்.

    பதிவுலகத்தின் மூலம் கிடைக்கும் நல்ல விஷயம் நன்றாக எழுத வேண்டும் என்று நினைத்து நிறையப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறோம்.

    ReplyDelete
  7. உண்மை தான்.. இதுவும் ஒரு வகை போல தான்.
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  8. தலைக்கு ஏறாதவரை பிரச்னை இல்லை....

    ReplyDelete
  9. @ செல்வா
    பதிவுலகம் என்பது நண்பர்களைப் பெறுவதற்கான இடம்///

    நண்பன்டா நீ...... செல்வா சொன்ன மாதிரி புகழ் பிரபலம் எல்லாம் வெச்சு ஒன்னும் பண்ண முடியாது..... :)

    ReplyDelete
  10. எதை இழந்து, எதை பெறுகிறோம் என்பது தான் இங்கே கவனிக்கப்படக்கூடியது.


    பதிவுகளால் உண்டாகும் புகழை தக்கவைத்துக்கொள்ள நீண்ட நேரம் ஆன் லைனில் இருக்க வேண்டியது இருப்பது வருத்தமே.


    அதிகம் வாசித்தலிலும், தரம் வாய்ந்த பதிவுகளை தரும் பதிவர் என்பதில் நிலைப்புத்தன்மை பெறுவதற்காக புகழ் போதையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இதைப்பற்றி இன்னும் ஒரு பதிவு நாங்களும் எழுதலாமா?

    ReplyDelete
  11. ஆரம்பக்கட்ட அங்கீகாரம் பெற்ற பின், பதிவுலகில் சின்னதொரு சலிப்பும் வரும் எனபதும் உண்மையே..
    பெரும்பாலான புதிய பதிவர்கள் ஓராண்டிற்கு மேல் நிலைக்காமல் விலகி விடுவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

    ReplyDelete
  12. நல்ல பதிவு, நிறைய மாற்றிக்கொள்ள வேண்டிய சங்கவியால் அடையாளம் காணப்பட வாய்ப்பு..

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு. நானும் இது பற்றி எழுத இருக்கிறேன். என்றைக்கும் நம்மை எதுவும் அடிமைப் படுத்தவிடக்கூடாது. பதிவுக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  14. பதிவுலகம் பற்றி யதார்த்தமான உண்மை. ஆனால் பொதுவாக எல்லோரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துவிட முடியாது.
    புகழ் பற்றி சிந்திக்காமல், சொந்த வாழ்க்கையையும் பதிவுலகையும் தனித்துப் பார்க்கத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  15. நூற்றுக்கு நூறு உண்மை. உணராமல் இல்லை. ஆனால் ஆசையே ஜெயிக்கிறது..!

    ReplyDelete
  16. yes you are correct

    ReplyDelete
  17. உண்மையான பதிவு .
    நானும் எனது முக நூல் பதிவில் இது போன்ற போக்கு குறித்து ஐயம் எழுபினேன்.
    உண்மை சுடும் .

    ReplyDelete
  18. நானும் உங்களது கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  19. கணிணி/வலையுலகம் பற்றி பாலகுமாரனின் கருத்துக்களை நான் கதம்பம்-3ல் பதிவிட்டிருக்கிறேன், பாருங்கள்.

    ReplyDelete
  20. இதுக்கு மேல் உள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் உண்மை என்று வழிமொழிந்து போதையை ஊட்டுகின்றன.(அப்படியா?)

    ReplyDelete
  21. நல்லதொரு படைப்பு சங்கவி. அதற்கு வாழ்த்துக்கள். எனக்குத் தெரிந்து நமது எழுதும் ஆசையை தீர்க்கும் ஒரு வழி பதிவு. அவ்வளவே. இங்கு கிடைக்கும் புகழ், நட்பு எல்லாம் மாயை தான். நமது எல்லை எது என்பதில் சரியாக இருக்க வேண்டும். திரட்டிகளுக்கு ஹிட்ஸ் இருந்தால் தான் விளம்பரம் கிடைக்கும் அதனால் இந்த ஹிட்ஸ் மாயைகளை உண்டாகுகின்றன . அவற்றின் வலையில் விழாமல் இருப்பது நல்லது

    ReplyDelete
  22. இதில் புகழ் பெறுவதற்கு என்ன வழி என்று நிறைய பதிவுகள் இருக்கின்றன முதலில் அனைத்துப் பதிவிற்கும் சென்று பின்னூட்டமிட்டு அவர்கள் பதிவில் பளோயராவது அப்புறம் அவர்களை நம் வலைப்பதிவிற்கு வரவேற்பது இதை தினமும் செய்வதால் நமக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், பளோயர்ஸ் எண்ணிக்கையும் அதிகமாகிறது.--///


    இந்த வேலையை நான் ஒரு நாளும் செஞ்சது இல்லை....

    ReplyDelete
  23. எனது ப்ளாக்கை காணவில்லை காணவில்லை என்று புலம்பிய சங்கவியா இதை இப்போது சொல்வது? :)

    ReplyDelete
  24. நீங்கள் சொல்வது உண்மையென்றாலும் எல்லோருக்கும் பொருந்துமா சங்கவி.மனப்பாரங்கள்,
    வேதனைகள்,தனிமை கரைக்கிறது எழுத்து.எல்லாத்துக்கும் கடைசியாய் புகழ் என்று சொல்வேன் நான் !

    ReplyDelete
  25. இந்த பதிவு மூணு புள்ளி முனுசாமிக்குன்னு எழுதுன மாதிரி இருக்கு.

    ஏற்கனவே அந்த மனுஷன் தமிழ்மண ரேங்க் மேல காண்டா இருக்கான்.

    இந்த பதிவை படித்து திருந்தினால் சரி :(

    ReplyDelete
  26. இவ்வளவு இருக்கா. நான் எதையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை. நேரம் கிடைக்கும் போது மற்றவர்களின் பக்கம் போய் கமன்ட் போடுவேன். அவ்வளவு தான்.

    ReplyDelete
  27. நல்ல வேளை எந்த வலையிலும் மாட்டவில்லை. என் மனத்திருப்திக்காக எழுதுகிறேன்.ஆனால் என் வலை என்னை அடிக்கடி கட்டிப் போடுகிறது:)

    ReplyDelete
  28. ம்ம்ம்ம்.... உங்கள் கருத்துக்கள் யோசிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  29. // இரவு 10 மணிக்கு மேல் தான் கணினி கதறும். இதனால் நமது வீட்டை விட்டு கொஞ்சம் விலகுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை //

    தலைக்கு ஏறாதவரை பிரச்னை இல்லை....இதுவும் உண்மை தான்.

    ReplyDelete
  30. இந்த புகழ் போதையை அனுபவிப்பதா? அல்லது முயற்சி செய்து தவிர்ப்பதா?
    பிளாக்கரை பிறர்க்கும் நமக்கும் பயனுள்ள வகையில் எவ்வாறு நடத்துவது என்று நீங்கள் பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  31. எதுவுமே அளவோடு இருந்தால் நல்லதுதான்.
    இல்லத்தில் இருந்தபடி,எழுதிய விஷயங்கள் எழுதிய அடுத்த நொடியில் பல நாட்டு வாசக்ர்களைப் போய் சேருகிறதென்றால்...நாம் கொஞ்சம் மயங்கித்தான் போவோம்.
    ஒரு கால கட்டம் வரும் போது ,நிதானமாக செயல்படத்தொடங்கி விட்டால் பிரச்சனை இல்லை.
    2000லிருந்து திண்ணையில் எழுதியிருக்கிறேன் ...அங்கே பின்னூட்டம் கிடையாது.அதனால் புகழுக்கு மயங்கும் நிலைக்கு நான் தள்ளப்படவில்லை.
    என் மனதில் வட்டமிடும் கருத்துக்கள்,அது படபடக்கும் பட்டாம் பூச்சியாகட்டும் குடைந்தெடுக்கும் வண்டாகட்டும்,வெளியேற்றி விட வேண்டும்.
    புகழ்வலையில் விழுவது போல் உணர்ந்தால்,சமாளித்து சமநிலைக்கு வந்து விடவேண்டும்
    பிளாக் அற்புதமான ஊடகம் அதை அளவோடும் அழகாககவும் கையில் எடுத்தால் நிறைய சாதிக்கலாம் .
    சங்கவி சொல்வது வருத்தப்படுவது எல்லாமே ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  32. //புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை...//

    சரியான கருத்துதான் என்றாலும் நாம் அனைவருமே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் இது எல்லாமே எலக்ட்ரான் துகள்கள் செய்யும் மாயைதான்.... இதில் புகழ், பிரபலம் என்று ஒன்னுமே கிடையாது

    ReplyDelete
  33. ஆமாங்க நானும் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன் .. நான் நினைத்ததையே எழுதி இருக்கிறீர்கள் .. நன்றி.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  34. உண்மைதான் சங்கவி..:))

    ReplyDelete
  35. >>>>தலைப்பை மட்டும் அனைவரையும் ஈர்க்குமாறு வைத்துவிட்டு உள்ளே சேதிகள் என்ன தருவது என்று தெரியாமல் எழுத வேண்டியதாகிறது.

    hi hi hi

    ReplyDelete
  36. >>
    புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை

    s correct. and also one thing

    this single post make you to come under top 5 of tamilmanam. congrats

    ReplyDelete
  37. நீங்க உண்மையை சொன்னதால உங்க பதிவை நான் படிக்க போறதில்லை.

    ReplyDelete
  38. உண்மைதான் சங்கவி. சில நாட்கள் எழுதாமல் இருந்து வருகையாளர் எண்ணிக்கை குறையத் தொடங்குவது ஒரு பதட்டத்தை உருவாக்குகிறது. படிப்பது என்பது மறந்துவிடும் போல இருக்கிறது. நீங்கள் சொன்னது 100% உண்மைதான். கடைசியில் செந்தில் சார் சொன்னதுதான் டாப்.

    ReplyDelete
  39. அட இது உண்மைதாங்க...இதுக்கு ஏன் எதிர்ப்பை எல்லாம் எதிர் பார்க்கிறீங்க....

    ReplyDelete
  40. நான் இந்தப் பதிவை படிப்பதற்கு முன் கீழேயுள்ள பதிவைப் படித்து விட்டேன், யாரைடா இப்படி வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கார்னு ஒன்னும் புரியல, இங்க வந்து பாத்ததுக்கப்புறம் தான் தெரியுது.

    http://sathish777.blogspot.com/2011/02/blog-post_08.html

    அதுக்குத்தான் நான் இன்னமும் பிளாக் ஆரம்பிக்காம இருக்கேன், ஹி...ஹி.ஹி.....

    ReplyDelete
  41. எனக்கு முதல் படம் தான் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  42. ஒட்டுக்காக எழுதுபவர்கள் மட்டும் இந்த போதைக்கு அடிமை ஆகிறார்கள்.நான் என்னுடைய பொழுது போக்கிற்காகவும் நல்ல விஷயங்கள் தமிழில் நாலு பேரை சென்று அடைய வேண்டும் என்பதும் எல்ல விஷயங்களும் தமிழிலேயே படிப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எனது பதிவுகளை வந்து படித்து பாருங்கள் நன்றாக இருந்தால் மற்றவர்களுக்கும் நன்றாக இல்லை என்றால் எனக்கு தெரியபடுத்துங்கள். ஒட்டு எல்லாம் போடவேண்டாம்

    ReplyDelete
  43. போதை ஏறியவன் மட்டுமே தன்னையறியாமல் ஆட முடியும்னு சொல்றீங்க.......correct தான்

    ReplyDelete
  44. புகழுக்கு துறைகள் இல்லை சங்கவி..எதார்த்ததை படு எதார்த்தமாய் சொல்லியிருக்கீங்க..சிறந்த பகிர்வு..தரம் நிரந்தரம்..

    ReplyDelete
  45. //வால்பையன் said...

    எனக்கு முதல் படம் தான் பிடிச்சிருக்கு!//

    பயபுள்ள திருந்தவே மாட்டியா?

    ReplyDelete
  46. தனால் புகழ் மேலும் அதிகமாகிறது புகழ் அதிகமாக அதிகமாக தினமும் எதாவது எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்........///////

    ஆமா சார் இப்போ எல்லாம் பதிவு எழுதலைன்னா கை ஒதறுது ........

    ReplyDelete
  47. விதிவிலக்கில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  48. //புகழ் என்னும் போதையில் பதிவர்களாகிய நிறைய பேர் இருக்கின்றோம் அது மறுக்க முடியாத உண்மை...//

    yes 100% Correct.

    ReplyDelete
  49. //////{ உண்மைத்தமிழன் } at: February 8, 2011 2:49 AM said...
    நூற்றுக்கு நூறு உண்மை. உணராமல் இல்லை. ஆனால் ஆசையே ஜெயிக்கிறது..!//////


    இதுவே எனது கருத்தும்!

    ReplyDelete
  50. யதார்த்தம்...

    ReplyDelete
  51. சங்கவி,

    போதையேறிப் போச்சி...!

    ReplyDelete
  52. நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.. போதையில் இருக்கும் சில பதிவர்களை இது சென்று சேர்ந்தால் சரி .

    ReplyDelete
  53. போதைதான். ஆனாலும் நான் நேரம் அதிகம் செலவழிப்பதில்லை. தமிழ்மணம் இன்டலி இதிலெல்லாம் இணைப்பதில்லை. டாப் 20 க்குள் வர வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. போட்டி போடுவதுமில்லை. என் மனதுக்குப் பட்டதை கவிதைகளாய் எழுதுகிறேன். படிப்பவர் படிக்கட்டும்

    ReplyDelete
  54. I agree with most part of this article. In my opinion, most of the time you are wasting your precious time for nothing. (I thank you all for this FREE service.) We, anonymous members enjoy reading these Tamil blogs written at the expense of your efforts and time, posting occasional comments where allowed.

    All bloggers will realize this at one some point of time. Thats the time they start to drift away from blogging, to pursue worldly life. In fact all bloggers know this, and they know its coming, sooner or later.

    This part is for fun : Namakku vaaitha adimaikal mikavum thiramaisaaligal. rest eduthathu pothum. poi pathivu elutha utkaarungal. We need entertainment. :)

    ReplyDelete
  55. சங்கவி உண்மைதான்.. நான் அதிலிருந்து மீண்டுவிட்டேன்

    ReplyDelete
  56. நமது நேரத்தை பெருமளவு ஆக்கிரமித்துக் கொள்ளும் இந்த நடவடிக்கைகள் எத்துனையளவு மற்றவர்க்கோ அல்லது நமக்கோ பயனுள்ளதாக உள்ளது என்பது கேள்விக்குறியே..

    ReplyDelete
  57. இதை பற்றி மேலும் எழுதி இருக்கலாம் சங்கவி.

    ReplyDelete
  58. நான் பதிவை நிறுத்தி ரொம்ப காலம் ஆச்சு

    ஹி ஹி ஹி

    ReplyDelete