Friday, February 25, 2011

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி



நாம் தினமும் பல உடற்பயிற்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறோம் இன்னும் சில பேர் செய்து கொண்டு இருக்கிறோம் எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும். உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது.

நீச்சல் கலையை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் நகர்புரத்து இளைஞர்கள் நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள் நீச்சல் கற்க காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு இருக்கும் இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது.

நீச்சலில் பல வகை உண்டு கிணற்று நீச்சல், ஆற்று நீச்சல், கடல் நீச்சல் என மூன்று வகையாக சொல்லலாம். கைகளையும் கால்களையும் இடத்திற்கு தகுந்தவாறு அதன் அசைவுகளை மாற்றுவதால் நீச்சலை பிரித்துச் சொல்கிறோம்.

முக்கியமான விசயம் நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.


நீச்சல் கற்பது எப்படி?

கிணற்று நீச்சல்

நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். 

தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்க வேண்டும். தற்போது லாரி டியூப்பில் காற்றை நிரப்பி நடுவில் உட்கார்ந்து கொண்டு காலை மட்டும் அசைக்கலாம். 

ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் நன்கு நீச்சல் அறிந்தவருடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொள்ள வேண்டும் அப்போது கையையும் காலையும் ஒன்றாக அசைக்க வேண்டும். 
ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது நல்ல பழக்கம் ஏற்படும் கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.


ஆற்று நீச்சல்

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும்  எளிதாக தப்பிக்கலாம்.
நீச்சலின் பயன்கள் :

1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்
நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
 
எனது வேண்டுகோள் :

குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.

19 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவு சார்.....நாங்களெல்லாம் கிராமத்துக்காரர்கள் நன்றாக நீந்த வரும். ஆனால், நகரத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் உங்களின் பதிவு பயனுள்ளதாக அமையும்.
    நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

    ReplyDelete
  2. நீச்சல் போல சிறந்த் உடற்பயிற்ச்சி வேறெதுவும் இல்லை..

    ReplyDelete
  3. நீச்சல், ஜாக்கிங்க் இந்த 2 இருந்துட்டா போதும்...

    ReplyDelete
  4. நீச்சல் பயிற்சியில் தான உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் இயங்குகிறதாம்..

    உண்மையில் அறிய தகவனுடன் பதிவு அருமை..
    வாழ்த்துகளும் வாக்குகளும்..

    ReplyDelete
  5. உண்மைதான் நீச்சல் பயிற்சி தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கும்

    ReplyDelete
  6. நீச்சல் சிறந்த உடற்பயிற்ச்சி என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஊரில் இருந்தால் நாள்தோறும் காலையில் குளத்துக்கு குளிக்க போயிருவேன்....

    ReplyDelete
  8. கால் தடுக்கனா கடல்ல தான் விழனும். ஆனாலும், நீச்சல் அடிக்க முடியல சங்கவி.

    ReplyDelete
  9. Arumai. Swimming is a very good relaxation also.

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு
    என்ன ஆத்துல தண்ணியும் இல்ல

    மணலும் இல்ல

    ReplyDelete
  11. //நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்//

    ஹிஹி! இதுக்கு மேலே எடையைக் குறைச்சா அப்புறம் நடக்கும்போதும் ஹெல்மெட் போட்டுக்கிட்டுத்தான் நான் போகணும். இல்லாட்டா, பலமா காத்தடிச்சுத் தொலைச்சா என்னாகிறது? :-))

    ReplyDelete
  12. பத்து மணி நேரம் ஓடுவதும் ஒரு மணி நேரம் நீச்சலடிப்பது சமமானது பாஸ்..அம்புட்டு களைப்பு வரும்

    ReplyDelete
  13. The water is your friend...you don't have to fight with water, just share the same spirit as the water, and it will help you move :-)

    ReplyDelete
  14. உண்மையிலேயே நிச்சல்தான் சிறப்பான உடற்பயிற்சி. மனப்பயிற்சியும் கூட!! நன்றிகள்.

    ReplyDelete
  15. நீச்சல் என்பது மிக நல்ல உடற்பயிற்சி.. நீங்கள் பதிவின் முடிவில் சொன்னது போல், குழந்தைகள் அனைவருக்கும் நீச்சல் பழக வேண்டும்...

    ReplyDelete
  16. ரஜினியின் இளமை ரகசியமும் நீச்சல்தானாம்....நீச்சல்தான் உடலை கட்டுக்கோப்பாக இளமையாக வைத்திருக்குமாம்...அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  17. அது சரி, நீச்சலடிச்சா உடல் எடை குறையுதுன்னா, திமிங்கலம் சதா நீச்சலடிச்சுகிட்டேன் இருக்கு, ஒன்னும் இளைச்ச மாதிரியே தெரியலையே!!
    [தமாசு, தமாசு..]

    ReplyDelete
  18. சொல்லிட்டீங்க சங்கவி செய்யணுமே...இங்கயும் நீச்சலுக்கு ஊக்கம் குடுக்கிறாங்க.
    ஆனா...முடியலையே !

    ReplyDelete
  19. நானும் கேள்வி பட்டிருக்கிறேன். அஜித் கூட ரொம்ப குண்டா இருந்து இளைத்த காரணம் நீச்சல் தானாம். நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete