Saturday, February 5, 2011

நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...


ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம். அதிகம் பேர் உண்ணுவது ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களைத்தான் அதிகம் உண்ணுகின்றனர். ஆடு, மாடு, கோழிகள் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இன்று பலர் சர்க்கரை, இருதய, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் எந்த நோயால் தாக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீன் சாப்பிடலாம்.

மீன் இன்று நமது நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களில் மீனுக்கு தனி இடம் உண்டு. மீனை பல வகை உணவுகளாக சாப்பிடுகிறார்கள். ஆனல் அநேகம் பேர் முந்திய நாள் வைத்த மீன் குழம்பில் தான் அதிக சுவை என்பர். அசைவ உணவுகளில் மற்ற எந்ந உணவை விட மீனை மட்டுமே அடுத்த நாள் வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
மீனில் பல வகைகள் உண்டு. ஆற்று மீன் கடல் மீன் என்று இன்று தனித்தனியாக மீனை பிரித்து ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர். கடலோர மாவட்டங்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஐஸ்ல் வைக்கப்பட்ட மீன்தான் கிடைக்கின்றது.


மீன் எல்லா வகையிலும் மனிதனுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது மீன், கருவாடு, மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணை என்ற அனைத்தும் மனிதனின் உணவுப்பொருளாகவே இருக்கின்றது.

மீனைப்பற்றியான ஆராய்ச்சி முடிவுகள்:

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். 


 மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: 

மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.

23 comments:

  1. Article is useful. Photos are nice too.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு

    எங்கள் வீட்டில் இருவாரத்துக்கு ஒரு முறை தான்
    இனி வாரம் இரு முறை


    //மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
    //

    இதை பற்றி விளக்கவும்
    நம் ஏரியாவில் கிடைக்கும் மீன்களில் எது சிறந்தது என கூறவும்

    ReplyDelete
  3. எங்க வீட்டில் மீன் தான் பிரதான உணவு.ஆராய்ச்சி மகிழ்வை தருது.

    ReplyDelete
  4. பாஸ் நான் சைவங்க

    ReplyDelete
  5. யூ மீன் நல்லா மீன் சாப்பிட சொல்றீங்க..!! நல்ல பதிவு..!! :)

    ReplyDelete
  6. நல்ல ஆய்வு...
    ஆனா பாஸ் எனக்கு சுட்ட மீன்தான் ரொம்ப பிடிக்கும்..
    அதாங்க யாருக்கும் தெரியாத சுட்டுசாப்பிடறது..ஹி .ஹி...

    ReplyDelete
  7. நானும் சைவங்க.....

    ReplyDelete
  8. சாப்பிடுவோம்...

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள தொகுப்பு. நான் நல்ல அறிவாளின்னு வேற சொல்லிட்டிங்க, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. மீன்குழம்பு சாப்பிட ஆசையா இருக்கு..

    ReplyDelete
  11. நல்ல பதிவு. மீன் விரும்பி சாப்பிடும் நான் இன்னும் அதிகமாக சேர்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  12. மீன்ல இவ்ளோ விசயம் இருக்கா

    ReplyDelete
  13. நல்ல தகவல்கள். நீங்க சமைச்சதா மீன் குழம்பு?? சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  14. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்புவது மீனைத்தான்..bad luck கிடைப்பதோ ஜஸ் மீன் தான்.முன்னைய நாள் மீன் குழம்பை வற்ற வைத்து அதனை தோசை,இட்லியுடன் சேர்த்து சாப்பிடும் சுவைக்கு நிகர் இருக்காங்க? உங்கள் தகவலும் படங்களும் நாக்கை குளிப்பாட்டுதுங்க.

    ReplyDelete
  15. எனக்கும் கடலுணவுகள்தான் விருப்பம் !

    ReplyDelete
  16. மீன் மிக பிடித்த உணவு. அதில் இவ்வளவு பயன் இருக்கிறது என்பது மகிழ்வை தருகிறது. படங்கள் பசியை தூண்டுகிறது சதீஷ்.

    ReplyDelete
  17. nalla pathivu

    miin uNavu onRu thaan wait poodatha uNavu

    athu sari miin kuzampa en viiddil iruwthu eduththu vawthuddiingka athu epppadi,. en pathivin link aavathu koduththu irukkaalaamee...


    http://samaiyalattakaasam.blogspot.com

    ReplyDelete
  18. munpu pooda comment poossaa ilaliyaannu theriyala

    miin kuzampa en viiddil irunthu ingku kondu vawthu irukkiinkgalee
    oru link aavathu koduththu irukakalaamee

    http://samaiyalattakaasam.blogspot.com

    ReplyDelete