உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தை முடிந்து மாசி தொடக்கத்தில் கோடை வெய்யில் காய்ச்சும் ஆனால் இந்த வருடம் கோடை காலம் குளு குளு என்று தொடங்கி உள்ளது. கோடையை குளு குளு என்று வரவேற்போம்..
உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 100 கோடி பேரை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி வரும் ஆட்டங்களிலம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
............................................................ .............................. .....
உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 100 கோடி பேரை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி வரும் ஆட்டங்களிலம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
............................................................ .............................. .....
ஒரு வழியாக பாரளுமன்றத்தில் பிரதமர் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கூட்டுக்குழு அறிவித்துள்ளார் இதை கடந்த பாராளுமன்ற கூட்டத்தின் போதே அறிவித்திருந்தால் கொஞ்சம் நல்லபேராவது கிடைத்திருக்கும் பார்ப்போம் இக்கூட்டுக்குழு என்ன கேள்வி கேட்கப்போகின்றது என்று..
............................................................ .............................. ..............
எகிப்து, பஹ்ரைனை தொடர்ந்து இப்ப லிபியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது எங்கு புரட்சி ஏற்படலாம் இதில் நம்மாளுக பாதிக்கப்படுகின்றனர். ஏன் இந்த மக்கள் புரட்சி என்று அனைவரும் யோசிக்க வேண்டும். மக்களை காப்பற்றவும் அவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரத்தான் அரசாங்கம் இதை சரிவர செய்யாத காரணத்தால் ஏற்பட்டது புரட்சி அங்கெல்லாம் புரட்சி நம்ம ஊரில் ஆட்சிமாற்றம் ...
............................................................ .............................. ................
நெதர்லாந்து இங்கிலாந்து ஆட்டம் விறுவிறுப்பாக இருந்து சமீபத்தில் வந்து கத்துக்குட்டி அணிகளில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்ததாக தெரிகிறது. அவர்களின் நேத்தியான பந்து வீச்சு, சிறப்பான பேட்டிங் நல்ல பீல்டிங் என சிறப்பாக செயல்பட்டனர் வரும் காலங்களில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் என்பது உறுதி.
மத்திய அரசு 150 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்தியாவில் வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியாகிறது.மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படும். இது தவிர, சிறப்பு 5 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசு 150 ரூபாய் நாணயம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான அறிவிக்கையை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை சமீபத்தில் வெளியிட்டது.வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாக இந்த நாணயம் இருக்கும். இதில் "சத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். சாணக்கியர் மற்றும் தாமரை பூ ஆகியன இதில் இடம்பெற்றிருக்கும்.
................................................................................................
மத்திய அரசு 150 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்தியாவில் வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியாகிறது.மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படும். இது தவிர, சிறப்பு 5 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசு 150 ரூபாய் நாணயம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான அறிவிக்கையை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை சமீபத்தில் வெளியிட்டது.வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாக இந்த நாணயம் இருக்கும். இதில் "சத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். சாணக்கியர் மற்றும் தாமரை பூ ஆகியன இதில் இடம்பெற்றிருக்கும்.
நாட்டு நடப்பு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிறைய கேட்கிறார்கள் திமுகவும் சுமுகமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அதிமுகவில் தேமுதிக இன்னும் கூட்டணிக்கு இன்னும் இறுதி வடிவம் கிடைக்கவில்லை அவர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு வேளை திமுகவில் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஆனதற்குப்பின் தேமுதிக உடன்பாடு ஆகவும் வாய்ப்பிருக்கிறது. எனது மற்றொரு பார்வையில் காங்கிரஸ் திமுகவைவிட்டு வெளியே வந்து தேமுதிகவுடன் 3 அணி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது அப்படி ஒரு அரசியல் நிகழ்வு நடந்தாலம் நடக்கலாம் அப்படி நடந்தால் அதிமுக + மதிமுக+ கம்யூனிஸ்டுகள் ஒரு அணியாகவும், திமுக+பாமக+விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் + தேமுதிக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தான் அமையும்..
தகவல்
அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழக்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்ட்புட் உணவுவகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர்.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரளிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எழும்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உணவு உண்பதில்லை. என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்பதால் இரண்டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் முனைவர், எழுத்தாளர், கவிஞர் என பல சொற்களுக்கு சொந்தக்காரர் முனைவர் பரமேசுவரி இவர் காஞ்சியில் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் பல பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன இவர் "அன்பென்று கொட்டு முரசே" என்ற பெயரில் ஓர் வலைப்பூ வில் எழுதி வருகிறார்...
http://tparameshwari.blogspot.com/
http://tparameshwari.blogspot.
தத்துவம்
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
கும்தலக்கா
சமீபத்தில் இலங்கை தமிழக மீனவர்களை கைது செய்த விவகாரத்தில் நிறைய உள்குத்து இருப்பது போல் இருக்கிறது. இப்பிரச்சனையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப்பார்த்தால் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் போக வேண்டும்...
மீனவர் பிரச்சனையை பற்றி வெளியுறத்துறை அமைச்சர் நேற்று பாரளுமன்றத்தில் பேசும் போது விரைவில் இப்பிரச்சனையை பேசி தீர்ப்போம் என்கிறார் எப்பதான் பேசித் தீர்ப்பாங்களோ. இதுவே தமிழனைத் தவிர வேறு மாநிலத்தினர் யாராவது இதே போல் பிரச்சனையில் சிக்கி இருந்தால் வடநாட்டு அரசியல் வாதிகளும், மீடியாக்களும் இதை பெரிய விசயமாக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பனர்.
ஆந்திராவில் இது உண்ணாவிரத வருடம் போல முன்னே சந்திரபாபு நாயுடு இருந்தார் இப்ப ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார் ஆக இவர்கள் உண்ணாவிரதம் தினமும் தலைப்புச் செய்திதான் மாற்றங்கள் வருமா என்று ஆந்திர மக்கள் வேடிக்கை பார்ப்பது மட்டுமே நிஜம்.
தனித்து போட்டியிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசி உள்ளார் என்ன ஒரு அற்புதமான பேச்சு இவர்களை யார் தனித்து போட்டியிட வேண்டாம் என்கிறார்கள் பேசாம திமுக கூட்டணி விட்டு வந்து தனித்து நின்று வெற்றி பெற வேண்டியது தானே.
அஞ்சறைப்பெட்டி
ReplyDeleteஅருமையான தொகுப்பு மஞ்சரி.
//திமுகவைவிட்டு வெளியே வந்து தேமுதிகவுடன் 3 அணி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது//
ReplyDeleteNo chance in this election.
இன்றைய மசாலாக்கள் அருமை..
ReplyDeleteசும்மா நச்சினு இருக்கு..
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html
என்னது? அண்ணனுக்கு விளம்பரங்கள் வர ஆரம்பிச்சுடுச்சு போல...
ReplyDeleteகலக்கலான தொகுப்புகளுடன் அஞ்சறைப்பெட்டி அசத்தல்
ReplyDeleteஃஃஃஃதன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்ஃஃஃஃ
ReplyDeleteநல்ல தத்துவம் ஒன்றுங்க
அஞ்சறைப்பெட்டி
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
கிரிக்கேட் நல்ல சுவாரசியமாக போகிறது... போட்டிகள் அருமையாக இருக்கிறது...
ReplyDeleteஅறிமுகத்திற்க நன்றி.. அரசியல் இப்ப வேண்டாம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
அஞ்சரைப்பெட்டி அறுவகை சுவையுடன் வாழ்த்துக்கள்..
ReplyDeleteமற்றும் வாக்குகளும்..
வழக்கம்போலவே அஞ்சறைப்பெட்டி கம கம....
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றிகள் பல... :)
தொகுப்பு அருமை
ReplyDeleteதனித்து நின்னா டெபாசிட் அல்ல போஸ்டருக்கு கூட காசு கிடைக்காது
ReplyDeleteநல்ல தகவல்கள்...நன்றி..
ReplyDeleteசெய்திகளைச் சுவைபடத் தொகுத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அசத்தல்...
ReplyDeleteநன்றாக இருக்கு உங்கள் தொகுப்புகள் அனைத்துமே..வாழ்த்துக்களும் ஓட்டுகளும்
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteதங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <==
..
நல்ல தகவல்கள் சங்கவி
ReplyDeleteவழக்கம்போல, அஞ்சரைப்பெட்டி சுவராசியம்........
ReplyDelete//இந்த வருடம் கோடை காலம் குளு குளு என்று தொடங்கி உள்ளது//
ReplyDeleteஇதுவும் உலகவெப்பமயமாதலின் ஒரு முக்கிய அறிகுறி என்பதுதான் அச்சுறுத்துகிற விஷயம்! :-(
//இக்கூட்டுக்குழு என்ன கேள்வி கேட்கப்போகின்றது என்று..//
ReplyDeleteஇக்கூட்டுப்’புழு’ என்று வாசித்துப் பார்த்தேன். :-)))
//அங்கெல்லாம் புரட்சி நம்ம ஊரில் ஆட்சிமாற்றம் ...//
ReplyDeleteநம்மூருலே இல்லாத புர்ச்சியா? ஆளாளுக்கு பேருக்கு முன்னாடி புர்ச்சி சேர்த்துக்கிறாய்ங்களே...? :-)
//மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். //
ReplyDeleteஊஹும்! மெக்டொனால்ட் தமிழ்நாட்டுலே எத்தனை புதுக்கிளைகள் ஆரம்பிக்கப்போறாய்ங்க தெரியுமா நண்பரே? பயமாயிருக்குது...!
//நாகையில் மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் ஏன் இந்த தேவை இல்லாத வேலை //
ReplyDeleteஇதுக்கு முன்னாடி அவரோட படத்துக்கு சிக்கல் வரலே..! அதுனாலே தேவை ஏற்படலை! :-))
அகன்ற கவரேஜ்; படிக்க தூண்டும் நடை. மேலே தூக்கி வைங்க!
ReplyDeleteதொகுப்பு அருமை !!!
ReplyDeleteநல்ல தகவல்கள்.
ReplyDelete//நாகையில் மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் ஏன் இந்த தேவை இல்லாத வேலை
ReplyDeleteஅவரால நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள முதல்ல காப்பாத்தட்டும் அப்புறம் இந்த தேசாத காப்பாத்தலாம்
தை முடிந்து மாசி தொடக்கத்தில் கோடை வெய்யில் காய்ச்சும் ஆனால் இந்த வருடம் கோடை காலம் குளு குளு என்று தொடங்கி உள்ளது. கோடையை குளு குளு என்று வரவேற்போம்..
ReplyDelete..... Thats a cool news! :-)
நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...
ReplyDeleteதெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html
அஞ்சறைப்பெட்டி நல்ல குளுகுளு வென தொடங்கி, அனைத்து வித சுவையையும் தந்தது...
ReplyDeleteதே.மு.தி.க. பேச்சு வார்த்தையை அதிமுக வுடன் தொடங்கி விட்டது..
டாக்குடரு கேப்டன் தள்ளாடாம பேச்சு வார்த்தைக்கு போனா நல்லா இருக்கும்..
அன்பு சங்கவி,
ReplyDeleteவணக்கம். இப்போதுதான் தங்கள் வலைக்கு வர முடிந்தது. என்னை அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு நன்றி. உங்கள் பதிவு சூடும் காரமுமாக அஞ்சறைப்பெட்டியின் மணத்தோடே உள்ளது.