Thursday, February 17, 2011

சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்..


நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நிறைய மனிதர்களை சந்திக்கின்றோம் நிச்சயமாக ஒவ்வொருவரும் சுவாரஸ்யமான மனிதர்களாக இருப்பார்கள் சமீபத்தில் நான் பெரம்பலுர் சென்ற போது பேருந்தில் நிறைய சுவாரஸ்யமான மனிதர்களை சந்தித்தேன் அவர்களின் குறும்பும், நக்கலும், சிரிக்க வைத்த சம்பவங்களும் இப்பதிவில்..

பவானியில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் ரைடர் என்னும் பேருந்தில் சென்றேன் ஏறிய 20வது நிமிடத்தில் மோட்டலில் பேருந்தை நிறுத்தி 10 நிமிடம் தான் நிற்கும் என்று பயணிகள் அனைவரும் இறங்கி அந்த மோட்டலில் பொருட்கள் வாங்கும் வரை 25 நிமிடம் பேருந்து நின்றது இதை ஓட்டுநரிடம் கேட்டதற்கு எல்லா வண்டியும் நிக்குங்க என்றார் அங்கு வண்டி நின்றதற்காக ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் சாப்பாடு, டீ. சிகெரெட் இலவசமாம். ஓட்டுனருக்குத்தான் இலவசம் என்றால் பேருந்தில் வந்த கல்லூரி பெண்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே 4 பைவ்ஸ்டார் சாக்லெட் சுட்டுவிட்டார்கள். அந்த கடை ஓனருக்கு என்ன லாபமோ.

பேருந்தில் அந்த பைவ் ஸ்டார் சுட்ட பெண்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியாதது இருக்கையில் முட்டி போட்டு உட்கார்ந்து இந்த பொண்ணுக்கு அந்த பொண்ணு ஊட்டி விட இதை ரசித்த இரண்டு பெண்களும் திடீரென வாயைப்பொத்தி விளையாட பொறுமை இழந்த ஓட்டுநர் வண்டிய ஓட்டாம அவுங்க பார்த்தே ஓட்டினார். நமக்குத்தான் உசிரு பயம் அவருக்கென்ன.. அந்த பெண்கள் லேப்டாப்பை எடுத்து ஒரு நடிகரின் குடும்ப போட்டோவிற்கு முத்த மழை பொழிந்தார்கள் நான்கு பெண்களும் கொடுத்த முத்தத்தால் லேப்டாப்க்கு வாய் இருந்தால் நிச்சயம் கதறி இருக்கும்.

சேலம் தாண்டி ஆத்தூர் செல்லும் வழியில் எங்கள் முன் இருக்கையில் ஒரு 35வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்தார் அயேத்தியா பட்டணம் தாண்டி அந்த பெண்ணுக்கு ஒரு போன் வந்தது அந்தம்மா பேச ஆரம்பித்ததும் அவ அவுங்ககூட போய்ட்டா, இவ இவங்கூட போய்ட்டா அது குடும்பமா என்றும் அந்தம்மா பேசிய வரிகள் அட அட பேருந்தில் இருந்த அனைவரும் சிரி சிரி என்று சிரிக்கும் அளவிற்கு அவுங்க புருஷன் குடும்பத்தை நாறடித்தது. இதுல ஆத்தூர் வந்ததே தெரியல..

அடுத்து ஆத்தூரில் இருந்து பெரம்பூர் செல்லும் போது ஒருவர் செல்லில் பேசிக்கொண்டு வந்தார் நடத்துனர் அவரிடம் எங்க போகனும் என்று சொன்னதும் இவர் பணத்தைக்கொடுத்தார் அவரே பெரம்பலூருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு வந்தார். நடத்துனர் முன்னாடி சென்றதும் போன் செய்த நபர் சார் எங்கிட்ட பணத்த வாங்கிட்டு டிக்கெட்டும் கொடுக்கல சில்லறையும் கொடுக்கல என்று சத்தமிட்டார் நடத்துனர் பொறுமையாக உங்க பாக்கெட்டில் கைய விடுங்க மஞ்சள் கலர், சிகப்பு கலர்ல இரண்டு டிக்கெட் இருக்குங்க பாருங்க என்றதும் தேடி பார்த்துட்டு ஆமா என்றார். நடத்துனர் நீங்க போன் பேசிகிட்டே இருக்கறீங்க கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்றதும் இந்த செல்போன எந்த நாயி கண்டுபிடிச்சுதோ செல்போனை கையில் பிடித்து திட்டுகிட்டே வந்தார். அவரிடம் இன்னொருவர் செல்லைத்திட்டாதே உன்தவறு என்றும் இருவரும் செல்போனில் இருந்து ராசாவில் ஆரம்பித்து அடுத்த ஆட்சி வரைக்கும் பேசி கலகலப்பூட்டினர்...

அடுத்து திருமண ஊரான வெண்பாவூர்  அங்கு இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பெண்களை பாப்பா என்று அன்போடு அழைத்தார்கள் முன்பின் தெரியாத பெண்ணைக்கூட பாப்பா நீங்க பொண்ணு தோழியா என்று அங்கிருந்தவர்கள் எங்களிடம் பேசியவர்கள் அனைவரும் என் மனைவியை மட்டுமில்லால் அவர்கள் தோழிகள் அனைவரையும் பாப்பா பாப்பா என்று பாசமுடன் பழகியது கொஞ்சம் ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பார்க்கும் அனைவரும் பாப்பா என்று பாசத்துடன் அழைப்பது ரொம்ப பிடித்திருந்தது. மீண்டும் ஒரு நாள் அந்த ஊருக்குச் செல்ல வேண்டும் அவர்களின் ஆசை வார்த்தையான பாப்பாவை கேட்க வேண்டும் போல் உள்ளது.

22 comments:

  1. தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

    ReplyDelete
  2. இந்த மாதிரி நிறைய காமெடிகளை நானும் பார்த்திருக்கேன்



    இன்னைக்கு நம்ப பதிவு

    சத்யம் ஓனர் மனைவி எனக்கு எழுதிய கடிதம்

    http://speedsays.blogspot.com/2011/02/blog-post_18.html

    ReplyDelete
  3. :) நல்லா கவனிச்சிருக்கீங்க

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா..... அந்த ரெண்டு போன் மேட்டர் சூப்பர்

    ReplyDelete
  5. Super Anna....

    ninachu paatha sirpu sirpa varuthu...

    ReplyDelete
  6. இந்த கூத்துக்கள் ரசிக்கும்படி இருந்தன.

    ReplyDelete
  7. //நமக்குத்தான் உசிரு பயம் அவருக்கென்ன..//
    //லேப்டாப்க்கு வாய் இருந்தால் நிச்சயம் கதறி இருக்கும்.
    //

    ReplyDelete
  8. சுவாரஸியமான பயணம் தான்.. நீங்க தான் அடுத்த எஸ்.ரா. வா?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நல்ல வேளை ஹிட்சுக்கு ஆசப்பட்டுற மாதிரி "பாப்பா பாப்பா" அப்படினு பதிவுக்கு பேரு வைக்காம பதிவர்களின் பேர காப்பாத்திட்டீங்க..

    ReplyDelete
  11. மொத்ததில் கலகலப்பான பயணம்!

    ReplyDelete
  12. இந்த மாதிரி நிறைய காமடிகள் பிரயாணத்தில் நடக்கும்...........
    நல்ல பதிவு

    ReplyDelete
  13. அருமையாக ஒரு பயணத்தை உங்களுக்கே உரிய பாணியில் படைத்துள்ளீர்கள்...

    ReplyDelete
  14. ஃஃஃஃஃஃதோழிகள் அனைவரையும் பாப்பா பாப்பா என்று பாசமுடன் பழகியது கொஞ்சம் ஆச்சர்யப்பட வைத்தது.ஃஃஃஃ

    உண்மை தான் பலருக்கு எல்லோர் மனதும் புரிவதில்லை தானே அவரைப் போல் பல மனிதர்கள் இருக்கிறார்கள்..

    ReplyDelete
  15. //அனைவரையும் பாப்பா பாப்பா என்று பாசமுடன் பழகியது கொஞ்சம் ஆச்சர்யப்பட வைத்தது//


    பெரும்பாலான தாய்மார்கள், தங்கள் மகனை தம்பி என்று அழைப்பதும் உண்டல்லவா?

    ReplyDelete
  16. ஒவ்வொரு பயணத்தின் போதும் இது போன்று பல விஷயங்கள் நடப்பது கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நல்ல பகிர்வு. நம் ஊரின் நினைவு வந்து விட்டது உங்கள் பதிவு கண்டு.... :)

    ReplyDelete
  17. நல்ல பயணம் சார் :-)

    ReplyDelete
  18. பாப்பா உங்களுக்கு புதிதாய் இருந்திருக்கும்...... எங்க பக்கமும் இப்படி அழைக்கும் பழக்கம் உண்டு.

    ReplyDelete
  19. கலகலப்பான பயணம்

    ReplyDelete
  20. பாரத்... பாரதி... said...
    //அனைவரையும் பாப்பா பாப்பா என்று பாசமுடன் பழகியது கொஞ்சம் ஆச்சர்யப்பட வைத்தது//


    பெரும்பாலான தாய்மார்கள், தங்கள் மகனை தம்பி என்று அழைப்பதும் உண்டல்லவா?////

    உண்மைதான்...என் அம்மா என்னை அப்படித்தான் அழைப்பார்கள்.....

    ReplyDelete
  21. நல்ல பயணம், மீண்டும் அமையட்டும்.

    ReplyDelete
  22. அலுப்பில்லாம பிரயாணம் செய்திருக்கீங்க சங்கவி !

    ReplyDelete