உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த இரு வாரங்களாக எனது வலைப்பூவில் கூகுள் பிரச்சனை இருந்ததால் சரியாக எழுதமுடியவில்லை வலைப்பூ காணமல் போது எனக்கு அது 2வது முறை அதனால் நண்பர்கள் அறிவுரைப்படி .com மாறிவிட்டேன். மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே தங்கது வலைப்பூவை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். காணமல் போனாலும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.
............................................................ .............................. .....
தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து செல்போன் கட்டணம் உயரப்போகிறதாம் என்னடா இவர்கள் ஒரு நல்ல திட்டம் போட்டால் மக்களிடம் பணம் பிடுங்க 4 திட்டம் போடுவாங்களே எங்க இது வரைக்கும் ஒண்ணையும் காணம் என்று இருக்கும் போது கொள்கையை மாற்றம் செய்து கொள்ளை அடிக்க தயாராகிவிட்டார்கள்.
............................................................ .............................. ..............
இலங்கை கடற்படை மீனவர்கள் தாக்குவதை ஒரு 5 மாதத்துக்கு நிறுத்தி வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்று பார்த்து அதற்கு அப்புறம் மீண்டும் தாக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
............................................................ .............................. ................
ஸ்பெயின் நாட்டில் ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமம் உள்ளது. இது தலைநகர் மாட்ரிடில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு திரும்பவில்லை.
தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர். அவர்கள் அனைவரும் 65 வயது முதல் 70 வயதுக்கு மேல்தான் உள்ளனர். இதனால் அங்கு 40 வருடங்களாக புதிதாக குழந்தைகளே பிறக்க வில்லை. இப்போது இங்கு இருப்பவர்களில் 65 வயதுக் காரர்களே வயது குறைந்த இளைஞர்களாக உள்ளனர்.
................................................................................................
இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற பெருமையை பெற்றார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது.
இவரது 14 வயது மகள் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறாள். அவள் தன்னுடன் படிக்கும் 15 வயது மாணவனை காதலித்து வருகிறாள். அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். அதன் விளைவாக தலே ரைட்டின் மகள் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறாள்.
அவளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 29 வயதிலேயே அதாவது மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆகும் பெருமையை அவர் பெற்றுள்ளார். படிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார்.
..................................................................................................
மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோ இல்லையோ டிவிட்டரிலும், பதிவுலகிலும் பல எதிர்ப்புக்கள் காட்டிய நம் மக்கள் காட்டிய கண்டனம் வரவேற்புக்குறியது. முக்கியமாக டிவிட்டரில் பின்னிய விதம் அருமை. டிவிட்டரில் அடிச்ச மணி எல்லாருக்கும் எட்டி இருக்கும் என நம்புகிறேன்.
..................................................................................................
ஸ்பெக்ட்ரம் ராசா கைது எதிர்பார்த்த ஒன்று தான் ஆனால் காலம் கடந்த நிகழ்ச்சி. இந்த கைது என்னைப்பொறுத்தவரை தேர்தலுக்காக இருக்கலாம் அநேகமாக இன்றைய பொதுக்குழுவில் ராசாவை கட்சியை விட்டு தூக்க வாய்ப்பிருக்கு
நாட்டு நடப்பு
திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதி என்றாலும் காங்கிரஸ் அதிக சீட் கேட்கின்றனர் ஸ்பெக்ரம் என்று ஒரு பிரச்சனையால் திமுகவிற்கு இந்த நிலை இன்று. இந்தப்பிரச்சனை இல்லை என்றால் கலைஞரின் திட்டம் சரியாக இருக்கும் பார்ப்போம் இந்த அனுபவ அரசியல் வாதி இப்பிரச்சனையை எப்படி சரி செய்கிறார் என்று.
அதிமுக கூட்டணியில் நடிகர் கட்சி கூட்டணியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கிறோம். நடிகர் கட்சி அங்கு கூட்டணியில் இருக்கும் போது பாமக சேருமா என்றால் வாய்ப்பு குறைவு தான்.
கூட்டணி பற்றி கலைஞர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த இராமதாஸ் இப்போது திமுக கூட்டணியில் இல்லை என்கிறார் திடீரென கலைஞர் கவலைப்பட வேண்டாம் என்கிறார். தினமும் ஒரு பேட்டி அளித்து மக்களை குழப்புவதுடன் தன்னை நம்பி உள்ள தொண்டர்களையும் குழ்ப்புகிறார். இவர் அதிமுககூட்டணிக்கு சென்றால் அங்கு அம்மா கொடுக்கும் சீட்தான் இவர் நெருக்கடி கொடுத்து சீட் வாங்க முடியாது. சீக்கிரம் பாமக பொதுக்குழு கூடி வாக்கெடுத்து யாருடன் கூட்டணி என்று அறிவிப்பார்கள்..
அதிமுக கூட்டணியில் நடிகர் கட்சி கூட்டணியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கிறோம். நடிகர் கட்சி அங்கு கூட்டணியில் இருக்கும் போது பாமக சேருமா என்றால் வாய்ப்பு குறைவு தான்.
கூட்டணி பற்றி கலைஞர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த இராமதாஸ் இப்போது திமுக கூட்டணியில் இல்லை என்கிறார் திடீரென கலைஞர் கவலைப்பட வேண்டாம் என்கிறார். தினமும் ஒரு பேட்டி அளித்து மக்களை குழப்புவதுடன் தன்னை நம்பி உள்ள தொண்டர்களையும் குழ்ப்புகிறார். இவர் அதிமுககூட்டணிக்கு சென்றால் அங்கு அம்மா கொடுக்கும் சீட்தான் இவர் நெருக்கடி கொடுத்து சீட் வாங்க முடியாது. சீக்கிரம் பாமக பொதுக்குழு கூடி வாக்கெடுத்து யாருடன் கூட்டணி என்று அறிவிப்பார்கள்..
தகவல்
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.
மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும்போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும்போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் அபிராஜன் இவருடைய பதிவுகளில் நிறைய டெக்னிக்கல் விசயங்கள் இருக்கின்றன அனைத்து தகவலும் அதிக நேரம் நெட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதாக இருக்கும்...
http://abirajan.blogspot.com/
http://abirajan.blogspot.com/
தத்துவம்
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.
குறுஞ்செய்தி
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
பெண் : டாக்டர் வர வர என் கணவருக்கு ஞாபக மறதி கூடிட்டேப் போகுது
டாக்டர் : ஏன் என்ன செய்கிறார்
பெண் : திடீர் என என்னை சமைக்கச் சொல்லி சாப்பாடு போடச்சொல்றாரு
பதிவுலக கிசு கிசு
மேற்குச்சீமையில் உள்ள 9 எழுத்து பிரபலபதிவர் அந்நிய தேசத்தில் இருந்து தன் சொந்த தேசத்து 4 எழுத்து பெண் பதிவருக்கு எப்பவும் எஸ்எம்எஸ், சாட், மெயில் என எல்லா இடத்திலியும் எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் மன்மதன் அம்பு விடுகிறாராம் பாவம் அம்மணி பதிவரின் அம்பை எல்லாம் பதிவா போடலாம் என யோசிக்கறாங்கலாம்...
வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.
ReplyDeleteஅட இன்னைக்கு வியாழனா? அதான் அஞ்சறைப்பெட்டி
ReplyDeleteபதிவுலக கிசு கிசு செம ஹாட் மேட்டர் ஆகப்போவுது.. இந்த ஐடியாவை உங்களுக்கு வழங்கியவர்.?
ReplyDeleteஇந்த அனுபவ அரசியல் வாதி இப்பிரச்சனையை எப்படி சரி செய்கிறார் என்று//
ReplyDeleteநெஞ்சு வலி வர்ற மாதிரி இருக்காம்
பதிவுலக கிசு கிசு....அடிப்படையில் உண்மைதானா? உண்மையென்றால் வெளியிட ஏன் தயக்கம்? அடுத்தவராவது எச்சரிக்கையாய் இருக்க உதவுமே?
ReplyDeleteஎவ்வாறு மாற்றீனீர்கள் எவ்வள்வு செலவாயிற்று என தெரியப்படுத்தவும்
ReplyDeleteபதிவு வழக்கம் போல் நன்று
வழக்கம் போல அஞ்சறைப் பேட்டி நல்லா இருக்கு அண்ணா ..
ReplyDeleteஅப்புறம் பா.ம.க சிரமம்தான் .. அதோட பதிவுலக கிசுகிசு எனக்குப் புரியலை ..
கிசுகிசுவுமா?! ரைட்டு! :)
ReplyDeleteஎன் தளத்தில் வந்து உளறுவதை நிறுத்தலாமே
ReplyDeleteவிவசாய சாரதி
வாங்க ரஹீம் கஸாலி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி...
வாங்க சிபி...
ReplyDeleteகொஞ்சம் கேப் விட்டதால் மறந்துட்டீங்க...
கிசு கிசு மேட்டர் கிசு கிசுவாவே இருக்கட்டும்...
வாங்க சதீஸ்...
ReplyDeleteஏற்கனவே நெஞ்சுவலியோடு தான் இருக்கிறார்...
வாங்க வைகை...
ReplyDeleteகிசு கிசுவில் உண்மையை வெளியிட முடியாது.... வெளியிட்டால் நிறைய வருத்தங்கள் வரும்...
வாங்க ஸ்பீடு மாஸ்டர்...
ReplyDelete441ரூபாய் செலவானது.. டெம்ப்ளேட் டிசைனிங் எல்லாம் நம்முடையது தான்..
வாங்க செல்வா...
ReplyDeleteவருகைக்கு நன்றி...
வாங்க பாலாஜி சரவணன்...
ReplyDeleteஇப்பதான் கிசு கிசு ஆரம்பம்...
//சங்கவி said...
ReplyDeleteவாங்க ஸ்பீடு மாஸ்டர்...
441ரூபாய் செலவானது.. டெம்ப்ளேட் டிசைனிங் எல்லாம் நம்முடையது தான்..
நன்றி
வாய்யா பேர் சொல்ல தைரியமில்லாதா அனானிம்ஸ்...
ReplyDeleteஉங்க தளம் எதுன்னு சொன்னீங்கன்னா வந்து உளறுவதை நிறுத்திக்கிறேன்...
கேவலமா உளறி இருந்தால் கோவிச்சுக்காதீங்க...
அப்புறம் என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி...
வழக்கம் போல எல்லா மேட்டரும் சூப்பர்
ReplyDeleteவழகம்போலவே அஞ்சறைப்பெட்டி அசத்தல்...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க.......
அந்த கிசு கிசுல வர்ற பதிவர்கள் யாருப்பா????
ReplyDeleteஎப்டி யோசிச்சாலும் தெரியலயே..
குறுஞ்செய்தி ரசித்தேன்.
ReplyDeleteபாவம் கடவுள் !
அஞ்சறைப்பெட்டி கலக்கல் அண்ணா...:)
ReplyDeleteபடிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார். //////////////////
ReplyDeleteஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் ......
எல்லாம் வள்ளுவர் வாக்கு .............
29 வயது தாத்தா ஃபோட்டா போட்டிருக்கலாமே.வலைப்பூ பேக்கப் எடுப்பது எப்படி?
ReplyDeleteகாரம், மணத்துடன் அஞ்சறைப்பெட்டி
ReplyDeleteபெட்டி கட்டி!!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க....
29வயது தாத்தா...அவருடையா அப்பாவும்தானே இதே வயதில்தானே ,தாத்தாவாகி இருப்பார்....
ReplyDeleteஅஞ்சரை பெட்டி கலக்கல் .கடைசி கிசு கிசு ..பயங்கரம் ............
ReplyDeleteஉங்க அஞ்சரை பொட்டி ல நல்ல மணமும் குணமும் இருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அஞ்சறைப் பெட்டி அதிக சமாச்சாரங்களோடு நல்லாயிருந்தது சங்கவி..
ReplyDelete@சங்கவி
ReplyDelete//மேற்குச்சீமையில் உள்ள 9 எழுத்து பிரபலபதிவர் //
அவரு இப்படி செய்வாருனு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை..
ராசா பெட்ரோல் மந்திரியாக ஆகியிருந்தால், முந்தைய ஆட்சியில் யிருந்த விலைக்கே பெட்ரோல் கொடுத்திருப்பாரோ....# டவுட்டு என்ற உங்களின் ட்வீட் ஆனந்த விகடன் வலைபாயுதேவில்....வாழ்த்துக்கள் சங்கவி
ReplyDelete@சங்கவி
ReplyDelete//4 எழுத்து பெண் பதிவருக்கு எப்பவும் எஸ்எம்எஸ், சாட், மெயில் //
இவங்களாவது சாட், மெயில்ல Block அப்படினு ஒரு Option இருக்காம். அதை உபயோக படுத்தி இருக்கலாம்... :)
பகிர்வு அருமை.
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி அசத்தல்...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க.......
பகிர்வு அருமை.
ReplyDeleteநல்ல தகவல்கள் .
ReplyDeleteநன்றி பகிர்தலுக்கு.
நல்ல தொகுப்பு..... கிசு கிசு தான் இந்த பயனுள்ள தகவல்களுடன் தேவையான்னு கேட்கணும் போல இருக்குது.
ReplyDeleteஇணைந்துவிட்டேன் உங்கள் தளத்தில்...
ReplyDeleteஇந்த முறை அஞ்சறைபெட்டியில் மணம் அதிகம்.
ReplyDeleteஒருவேளை அந்த நான்கெழுத்து பெண் பதிவர் சங்கவியா இருக்குமோ? (கொஞ்சம் ஓவரா சிந்திச்சுட்டேனோ... ஓகே ஓகே அடக்கி வாசிச்சுக்கறேன்)
கதம்ப செய்தியும்... தகவலும் வழக்கம்போல அருமை.... அந்த பெண்பதிவர் அதை பதிவா போட்டாதான்... இது போன்றவருக்கு உறைக்கும் ,திருந்துவாங்க.
ReplyDelete