Sunday, February 20, 2011

சுரேசை தேடி வந்த தேவகி... (சிறுகதை)


ஏய் நித்யா எப்படி இருக்க?

தேவகி நீ எப்படி இருக்க?

பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ எப்படி இருக்க என இருவரும் பாச மழை பொழிந்தார்கள்..

சரி எங்க வீட்டுக்கு வா என்று இருவரும் மாறி மாறி விலாசத்தை கொடுத்து விட்டு விடை பெற்றனர் விடை பெறும் போது ஏய் தேவகி சுரேஷ் இங்க தான் இருக்கிறான் நான் அடிக்கடி பார்ப்பேன்.

என்னடி சொல்ற சுரேஷ் சென்னையிலா இருக்கிறான்!

ஆமாம் அவள் மனைவி என் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள்

அப்படியா ! ஏய் எனக்கு அவன் நெம்பர் வேணும்?

சரிடி நான் நம்பர் வாங்கி உனக்கு சொல்றேன்.

வீட்டுக்கு வந்ததும் தேவகிக்கு எனோ மனது சரியில்லை எத்தனைவருடம் அவன் கூட சிரித்து பேசி இருப்போம், திருவிழா என்றால் அவன் கூட சுத்தாத இடம் இல்லை என சுரேசின் நினைவுகளை சுற்றியே இரண்டு நாட்கள் போயிற்று.

சுரேசிடம் பேசவேண்டும் அனைப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு அதிகமாகியது. மாலை நித்யாவிற்கு போன் செய்து நெம்பர் கேக்கும் போது ஏய் சுரேஷ் மனைவியிடம் நெம்பர் கேட்டேன் இது வரை தரலடி.. ஆனான் நான் ஆலுவலகத்தில் அவள் பைல் பார்த்து வீட்டு விலாசம் குறித்து வைத்திருக்கிறேன் குறித்துக்கொள் என்றதும் வேளச்சேரியில் வீடு என்று விலசாத்தை வாங்கிக்கொண்டு எப்படி அவன் வீட்டுக்கு செல்வது என்று யோசித்தாள்..

கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற மிகுந்த மனப்போராட்டத்திற்குப்பின் சரி வரும் சனிக்கிழமை அவனுக்கு விடுமுறையாகத்தான் இருக்கும்  நித்யா வீட்டுக்கு செல்கின்றேன் என்று கணவனிடம் கூறியது அவனும் சரி என்றான். பக்கத்து வீட்டு அத்தையிடம் எப்படி செல்ல வேண்டும் என்று விசாரித்து விட்டு சனிக்கிழமை காலை பரபரப்போடு சென்றாள்.

வேளச்சேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து அவன் வீட்டு வாசல் முன் நின்றதும் கை, கால் உதறியது அவனைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற எண்ணமும் பார்த்ததும் வெளியே போ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தைரியத்தை வரவழித்துக்கொண்டு வீட்டு மணியை அமுத்தினாள் உள் இருந்து சுரேசின் மனைவி வாங்க யார் நீங்க யாரைப்பார்க்க வேண்டும் என்று கூற நான் சுரேசைப் பார்க்க வேண்டும் நான் தேவகி என்று சொல்லுங்கள் என்றதும் சுரேசின் மனைவிக்கு இவள் அந்த தேவகியாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடன் உட்காருங்க அவர் துணி காயப்போட்டுட்டு இருக்கார் கூப்பிடுகிறேன் என்ற சுரேசை அழைத்தாள் சுரேஷ் உள்ளே வந்து தேவகியைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்..

பின் எப்படி இருக்க ஏனக்கா இப்படி செய்த எங்கிட்ட சொல்லியிருந்தா நான் உனக்கு திருமணத் செய்து வைத்திருப்பேனே இப்படி வீட்டை விட்டு வந்து தான் திருமணம் செய்ய வேண்டுமா கதறிய சுரேஷ் எங்கக்கா மாமா வரலியா என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

32 comments:

  1. ஒரு சிறுகதைன்னா மனதை ஓரு மணிநேரமாவது பிழியனும்.. அந்த ஃபீல் உங்க கதையில இருக்கு... பதிவிற்கு ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  2. நல்ல சிறுகதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. கதையை அப்பாலிக்கா படிச்சுக்கிறேன். முதால்லே ஸ்ரேயா படத்துக்காக ஒரு ஆஜர் போட்டுக்கிட்டு போயிடரேன். :-)))

    ReplyDelete
  4. சிறப்பான சிறுகதை பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. நல்ல ட்விஸ்ட் கடைசியில்

    நல்லாயிருக்கு சங்கவி

    ReplyDelete
  6. நல்ல சிறுகதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு சிறுகதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. >>>>சுரேஷ் எங்கக்கா மாமா வரலியா என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

    >சுரேஷ் ,”எங்கக்கா? மாமா வரலியா ?”என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

    என்பதே சரி.. அங்கங்கே எழுத்துப்பிழை இருக்கு பாருங்க. கதை ஓக்கே

    ReplyDelete
  9. அருமையான சிறு கதை மனதை என்னமோ செய்கிறது...

    ReplyDelete
  10. //இவள் அந்த தேவகியாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடன் உட்காருங்க அவர் துணி காயப்போட்டுட்டு இருக்கார் கூப்பிடுகிறேன்//

    கதை ஓகே அண்ணா .. ஆனா இவுங்களுக்கு எதுக்கு சந்தேகம் வரணும் ? அதாவது எங்கள குழப்பனும் அப்படின்னு எதாச்சும் ஐடியா வ ? ஹி ஹி

    ReplyDelete
  11. http://powrnamy.blogspot.com/

    ReplyDelete
  12. //{ வேடந்தாங்கல் - கருன் } at: February 20, 2011 11:02 PM said...

    ஒரு சிறுகதைன்னா மனதை ஓரு மணிநேரமாவது பிழியனும்.. அந்த ஃபீல் உங்க கதையில இருக்கு... பதிவிற்கு ரொம்ப நன்றிங்க..
    //

    நன்றி வேடந்தாங்கல் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

    ReplyDelete
  13. # கவிதை வீதி # சௌந்தர் said...

    நல்ல சிறுகதை வாழ்த்துக்கள்..

    நன்றி...

    ReplyDelete
  14. ..சேட்டைக்காரன் said...

    கதையை அப்பாலிக்கா படிச்சுக்கிறேன். முதால்லே ஸ்ரேயா படத்துக்காக ஒரு ஆஜர் போட்டுக்கிட்டு போயிடரேன். :-)))..


    சேட்டைங்கரத நிருபிக்கறீங்க...

    ReplyDelete
  15. மாணவன் said...

    சிறப்பான சிறுகதை பகிர்வுக்கு நன்றி நண்பரே


    நன்றி...

    ReplyDelete
  16. ஆர்.கே.சதீஷ்குமார் said...

    -;))

    நன்றி...

    ReplyDelete
  17. ..sakthi said...

    நல்ல ட்விஸ்ட் கடைசியில்

    நல்லாயிருக்கு சங்கவி..


    நன்றி...

    ReplyDelete
  18. சே.குமார் said...

    நல்ல சிறுகதை வாழ்த்துக்கள்.

    r.v.saravanan said...

    நல்லாயிருக்கு சிறுகதை வாழ்த்துக்கள்.

    நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  19. ..சி.பி.செந்தில்குமார் said...

    >>>>சுரேஷ் எங்கக்கா மாமா வரலியா என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

    >சுரேஷ் ,”எங்கக்கா? மாமா வரலியா ?”என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..

    என்பதே சரி.. அங்கங்கே எழுத்துப்பிழை இருக்கு பாருங்க. கதை ஓக்கே,,

    அடுத்த முறை சரி செய்துவிடுவோம்...

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said...

    அருமையான சிறு கதை மனதை என்னமோ செய்கிறது...


    நன்றி...

    ReplyDelete
  21. கோமாளி செல்வா said...

    //இவள் அந்த தேவகியாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடன் உட்காருங்க அவர் துணி காயப்போட்டுட்டு இருக்கார் கூப்பிடுகிறேன்//

    கதை ஓகே அண்ணா .. ஆனா இவுங்களுக்கு எதுக்கு சந்தேகம் வரணும் ? அதாவது எங்கள குழப்பனும் அப்படின்னு எதாச்சும் ஐடியா வ ? ஹி ஹி

    குழப்பம் வேண்டும் என்றெல்லாம் இல்லை செல்வா... எங்க அக்கா காதல் திருமணம் செய்து விட்டார்கள் அவர்கள் என் சாயலில் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல வாய்ப்பிருக்கல்லவா?

    ReplyDelete
  22. எல்லோரையும் போல நானும்
    அப்படித்தான் சிந்தித்தேன்
    முடிவு அற்புதம்.நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. எப்பிடி உங்களால மட்டும் ?
    நல்லா இருக்கு பாஸ்.

    ReplyDelete
  24. சங்கவி....

    கதையை அழகாக எடுத்து வரும் போதே இந்த மாதிரி ட்விஸ்ட் வைக்க போறீங்கன்னு தெரிஞ்சுடுச்சு...

    இருந்தாலும், நல்ல முடிவு...

    வாழ்த்துக்கள்...

    அப்படியே சேட்டைக்காரனுக்கு என் சார்பாவும் ஒரு குட்டு வைங்க...

    ReplyDelete
  25. நல்லாத்தான் வச்சீங்க ட்விஸ்ட்

    ReplyDelete
  26. நைஸ் டச்சிங். கதை.

    ReplyDelete
  27. நல்ல சிறுகதை நண்பரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  28. நச்சென்று முடித்திருக்கிறீர்கள் நண்பரே! நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  29. //{ R.Gopi } at: February 21, 2011 3:05 AM said...

    அப்படியே சேட்டைக்காரனுக்கு என் சார்பாவும் ஒரு குட்டு வைங்க.//

    என்னே நல்லெண்ணம் உங்களுக்கு!!!
    இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க! :-)))

    ReplyDelete
  30. அருமையான கதைங்க... பாராட்டுக்கள்!

    ReplyDelete