Tuesday, February 1, 2011

தலைக்கவசமும் குளறுபடியான சட்டமும்

 தலைக்கவசம் நம் உயிர்கவசம் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். அரசும் அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் கொண்டு வந்தது வாகனம் ஓட்டுபவரும் அவருக்கு பின் அமர்ந்திருப்பவரும் இருவரும் கட்டாயம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டிய நாளும் வந்தது அன்று 95 சதவீத இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்திருந்தனர். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மட்டும் அதிகம் அணியவில்லை.

பின்பு பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அணிய வேண்டியதில்லை வாகன ஓட்டிகள் கட்டாயம் அணியவேண்டும் என்று மீண்டும் அரசு அறிவித்தது இது முதல் குளறுபடி. அன்று தலைக்கவசம் அணிந்தவர்கள் எல்லாரும் தலைக்கவசம் அணிந்தது அவர்கள் உயிர்கவசத்திற்காகவா என்றால் நிச்சயம் இல்லை சிக்கினா போலீசுக்கு 100 அழ வேண்டி இருக்கும் அதனால் தலைக்கவசம் அணிந்தவர்கள் தான் 60 சதவீதம் பேர். அப்புறம் கொஞ்ச நாளில் இச்சட்டம் மக்களுக்கு மறந்துவிட்டது.

தலைக்கவசம் அனைவரும் அணிய வேண்டிய ஒன்று அரசு சொல்லியோ போலீசுக்கு பயந்தோ அணிய வேண்டிய ஒன்று அல்ல இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் உசுரு வேணும்னா தலைக்கு கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணிந்தால் கட்டாயம் பிழைத்துக்கொள்ளலாம் என்று கேள்வி கேட்பவர்களும் இருப்பார்கள் அதற்கு பதில் நீங்கள் இடிப்பதைப் பொறுத்தும், செல்லும் வேகத்தைப் பொறுத்தும் அமையும். தலைக்கவசம் நமக்காக அணிய வேண்டிய ஒன்று யாருடைய கட்டாயத்திற்காகவும் அல்ல.


அரசின் குளறுபடிகள் இந்த தலைகவசத்தில் நிறைய இன்று கட்டாயம் என்கிறார்கள் நாளை கட்டாயமில்லை என்கிறார்கள் நம் மக்கள் தானாக திருந்தமாட்டர்கள் இது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்களுக்கு காட்டாயம் என்று சட்டம் இயற்றி தலைக்கவசம் அணி என்று கட்டாயப்படுத்த வேண்டும். அப்பவாது போலீசுக்கு தண்டம் அழனுமே என்று அணிவார்கள்.

இரு சக்கர வாகனம் வாங்கும் போது கட்டாயம் அந்த வாகனத்தின் நிறுவனம் வாடிக்கையாருக்கு இரண்டு தலைக்கவசம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றலாம் அப்போது தலைக்கவசம் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். தலைக்கவசம் எல்லா ஊரிலும் கட்டாயம் என்று சட்டம் இருக்க வேண்டும் சமீபத்தில் கோவையில் கட்டாய தலைக்கவசம் கட்டாயம் என்று போலீசார் அனைத்து வாகனத்தையும் பிடித்து அபராதம் விதித்தார்கள் ஆனால் மற்ற ஊர்களில் தலைக்கவசம் இல்லாமல் தான் செல்கின்றனர்.

தலைக்கவசம் அணிபவர்கள் அதிக தூரம் செல்லும் போது மட்டும் தலைக்கவசம் அணிவதும் பக்கத்தில் செல்லும் போது அணிவதில்லை இது மிக தவறு. பக்கத்தில் சென்று வரும் போதுதான் வேகமாக சென்று வருவோம் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உண்டு. இப்படியான விபத்துக்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

தலைக்கவச விசயத்தில் அரசு அக்கறை எடுத்து ஒரு கமிட்டி அமைத்து எப்படி இவ்விதியை பின்பற்றலாம் என்று கருத்து கேட்டு அதற்கு ஏற்றாற் போல் கடுமையான சட்டம் இயற்றினால் பல உயிர்களை காப்பாற்றலாம்.

அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள் உங்கள் நண்பர்களையும் கட்டாயம் அணியச்சொல்லுங்கள்...

"தலைக்கவசம் உயிர்கவசம்"




22 comments:

  1. வழக்கம் போல நாட்டுக்குத் தேவையான பதிவு. தன் நலனில், தன் குடும்ப நலனில் அக்கறையுள்ள எவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

    அருமையான பதிவு!

    ReplyDelete
  2. விளிப்புணரிவான பதிவு

    ReplyDelete
  3. வழக்கம் போல் நல்ல பதிவு.. அந்த ஃபோட்டோவைப்பார்த்தா யாரும் ஸ்பீடா போக மாட்டாங்க

    ReplyDelete
  4. சமூக அக்கறையுள்ள ஒரு விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  5. தேவையான விழிப்புணர்வு!

    ReplyDelete
  6. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. சமூக அக்கறையோடு எழுதி இருக்கீங்க நண்பரே. நிறைய பேருக்கு “இது வேற எதுக்கு” என்ற நினைப்புதான் இருக்கிறது என்பதுதான் சோகம்.

    ReplyDelete
  8. விபத்துல பாதுகாக்குறதுக்கு இந்த தலைக்கவசத்த யார் உபயோகிக்கிறாங்களோ இல்லையோ.. திருட்டுத்தனமா பைக்ல பின்னாடி உக்காந்து போற பொண்ணுங்க நல்லாவே யூஸ் பண்றாங்க..

    ReplyDelete
  9. Very Important and necessary Blogpost. Thanks for giving such thought.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  10. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல் துறையினரே இந்த விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கின்றனர். :(

    ReplyDelete
  11. தேவையான விழிப்புணர்வு பதிவு நண்பரே!

    ReplyDelete
  12. விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  13. தலைக்கவசம் அணிவது தற்காப்புக்கு என்று மக்கள் புரிந்து கொள்வது எப்போதோ அப்போதுதான் விபத்துக்கள் குறையும். ஊதுகிற சங்கை ஊதியிருக்கீங்க நண்பரே! விரைவில் விடியட்டும்.

    ReplyDelete
  14. அக்கறையோடு எழுதப்பட்ட நல்ல பதிவு.

    ReplyDelete
  15. நல்ல உரக்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  16. மிகவும் அவசியமான மற்றும் விழிப்புணர்வுமிக்க பதிவு.

    ReplyDelete
  17. இந்த விஷயத்தில் அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் முதலில் பொதுமக்களுக்கு தான் இந்த அறிவு இருக்க வேண்டும்.

    நல்ல விழிப்புணர்வு பதிவு!

    ReplyDelete
  18. பகிர்வுக்கு சல்யூட் ...

    ReplyDelete
  19. தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க நண்பரே என்ன செய்வது நண்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது..

    நன்றி

    ReplyDelete
  20. நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க! திருந்துதுங்களானு பாப்போம்!

    ReplyDelete
  21. தலை கவசம் அணிந்தால் முடி உதிரும் என்று நினைக்கிறார்கள் ஆனால் தலை கவசம் அணியவில்லை என்றால் தலையே இருக்காது என்பதை யோசிக்காமல் போவது ஏன்?

    ReplyDelete