Wednesday, February 16, 2011

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 17.02.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
வீட்டு வசதி வாரியத்தில் வீடுவாங்கியவர்களுக்க வட்டி தள்ளுபடி தேர்தலுக்காக வரும் அறிவிப்புகள் பலமாக உள்ளது. இப்படி எல்லாத்தையும் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் வாங்கதவர்களுக்கு?
...............................................................................................

ராசா விவகாரத்தில் இப்பதான் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார் ஆகமொத்தம் எங்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை எல்லாத்துக்கும் காரணம் ராசாதான் என்று கூறியது போல் உள்ளது.

...............................................................................................

அனைவரின் தூக்கத்தை கெடுக்க வருகிறது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை நாடுகள் விளையாடினாலும் நமக்கு இந்தியா தான் ஜெயிக்கனும் என்ற எண்ணம் இருக்கும். பார்ப்போம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கோப்பையை வெல்லுமா என்று.. என் எண்ணப்படி இந்த உலககோப்பையில் நிச்சயம் சச்சின் அதிக ரன்களை எடுப்பார் என்பது என் கருத்து சமீபத்தில் அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது ஒவ்வொரு அடியும் நேர்த்தியாக உள்ளது. எந்த பந்து வீச்சாளரையும் கலங்கடிக்கும் ஒரே வீரர் சச்சின்தான்.
...............................................................................................

பழங்களில் அதிக சத்து இருப்பதால் அது உடலுக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பழங்களை விட சாக்லேட்டுகளில்தான் அதிக அளவு சத்து உள்ளது.
 
எனவே, அதுதான் சிறந்த உணவு, ஆகவே பழங்களை விட சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிடலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. 
 
பொதுவாக சாக்லேட்டுகள் தயாரிக்க அதிக அளவில் “கோ-கோ” பவுடர் சேர்க்கப்படுகிறது. இது சத்துமிக்கது. அவை தவிர மற்ற மூலப்பொருள் பவுடர்கள் மாதுளம் பழம் உள்ளிட்ட பல பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
இவை பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகும். இருந்தும் சாக்லேட்டுகளை அளவாக சாப்பிட வேண்டும். அதில் கொழுப்பு, சர்க்கரை சத்துக்கள் அதிகம் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்பு
 
இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து கனிமொழி ஆர்ப்பாட்டம் 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்படனர் அப்ப இல்லா அக்கறை இப்ப ஏன்? தேர்தல் நேரம் நெருங்க நெருங்க காட்சிகள் நிறைய மாறும்.

காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலம் வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று திமுகவை நெருக்குவார்கள் காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் திமுக தயவு இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு ஏற்பட்ட நிலை இந்த முறை காங்கிரசுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பீகார் போல தான் தமிழ்நாடும் என்று போக போக புரிந்து கொள்வார்கள்.

தகவல்
 
 
சி​றிய வவ்வால்​க​ளால் பார்க்க முடி​யாது.​ அவற்​றிற்கு வெளிச்​ச​மும் அவ​சி​ய​மில்லை.​ அவை வாயாலோ,​​ மூக்​காலோ ஒரு​வித ஓசையை எழுப்​பு​கின்​றன.​ இதை "அல்ட்​ரா​சா​னிக் ஓசை' என்று சொல்​வார்​கள்.​ மனி​தர்​க​ளால் இந்த ஓசை​யைக் கேட்க முடி​யாது.​ இந்த ஓசை,​​ முன்​னால் உள்ள பொருட்​க​ளின் மீது பட்​டுத் திரும்பி வரும்.​ இப்​ப​டித் திரும்பி வரும் எதி​ரொ​லி​யின் தன்​மை​யைப் புரிந்​து​கொண்டு,​​ இந்​தப் பொருட்​க​ளின் பரு​ம​னை​யும்,​​ வடி​வத்​தை​யும்,​​ அது இருக்​கின்ற தூரத்​தை​யும்,​​ அதன் அசை​வை​யும் வவ்வால்கள் தெரிந்​து​கொள்​ளும்.​ ​

வ​ளர்ந்த பெரிய வவ்வால்​கள் பார்​வைத் திற​னைப் பயன்​ப​டுத்​தி​தான் இரவு நேரங்​க​ளில் பறக்​கின்​றன.​ வவ்வால்​கள் பொது​வாக பழங்​க​ளையே விரும்பி உண்​ணும்.​ வெளி​நா​டு​க​ளில்,​​ மற்ற பாலூட்​டி​க​ளின் உதி​ரத்​தைக் குடிக்​கின்ற வவ்வால்​க​ளும் உண்டு.​
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் குணலட்சுமி மனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம் என்று பெயரிட்டு கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார் அம்மா என்ற பெயரில் இவர் எழுதிய கவிதை ஆழமாக இருந்தது..
http://senthildl.blogspot.com/2010/12/blog-post_31.html

தத்துவம்
 
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினை அறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினை அறு‌ப்பா‌ன்.

கும்தலக்கா

சமீபத்தில் ஒரு 200 கிலோ மீட்டருக்க ஊரைச்சுற்றினேன் சில இடங்களிலில் சாலைவசதிகள் பரவாயில்லை பல இடங்களில் சாலைகள் தரம் ரொம்ப மோசமாக உள்ளது இப்படி இருந்தால் எப்படித்தான் வாக்கு கேக்க போவார்களோ?
பெரம்பலூரில் ஒரு திருமண மண்டபத்திற்கு செல்ல ஆட்டோ பிடித்தேன் ஆட்டோவில் செல்லும் போது இரவு 10மணி இருக்கும் ஆட்டோ சென்ற சாலை வெறும் குண்டும், குழியுமாக  இருந்தது 10 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு 20 நிமிடம் ஆகியது, மீண்டும் விடியற்காலை 6 மணிக்கு திரும்ப ஆட்டோவில் வந்தேன் வரும் போது எந்த குண்டு, குழியையும் காணவில்லை என்னடா இது 8 மணி நேரத்தில் இவ்வளவு மாற்றமா என்று ஆட்டோ ஓட்டுநரை கேட்டால் காலை11மணிக்கு துணை முதல்வர் வருகிறார் அதுதான் அவர் வரும் பாதை எல்லாம் விடிவதற்குள் போட்டுட்டாங்க என்றார். இப்படி தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வர் வந்தால் எல்லா சாலைகளையும் சரி செஞ்சுடுவாங்க இதுக்காகவாவது துணை முதல்வர் தமிழ்நாடு முழுவதும் வரனம் அப்பதான் நாளைக்கு ஓட்டு கேட்க போகும் போது சரியில்லாத சாலைகளை செப்பனிட்டோம் என்று சொல்ல முடியும். இல்ல எனில் ஓட்டு கேட்க போகும் சாலை குண்டும், குழியுமாகத்தான் இருக்கும் எதிர்கட்சிகள் பொழந்து கட்டுவார்கள்...

புறநகரில் செல்லும் தொலை தூர  பேருந்துகள் எல்லாம் குறிப்பிட்ட சில மோட்டலில் நிறுத்தி பயணிகளை உணவு அருந்த சொல்வது கண்டிக்கத்தக்கது சுகாதாரமான உணவகமாக இருந்தால் நிச்சயம் வரவேற்கலாம் ஆனால் இவர்கள் நிறுத்தும் இடமெல்லாம் சுகாதாரமற்ற இடங்களாகவே இருக்கின்றது.
தேர்தல் வந்ததும் தான் பொதுமக்கள் மேல் நிறைய அக்கறை வருகின்றது அரசுக்கு கோவையில் செம்மொழி மாநாடு நடந்த போது பல புதிய பேருந்துகள் விட்டார்கள் இவை அனைத்தும் மிதவைப்பேருந்து என கட்டணம் அதிகமான பேருந்துகள் மட்டுமே இயங்கியது ஆனால் இப்ப பல புதிய பேருந்துகள் வலம் வருகின்றன முக்கியமாக அனைத்தும் சாதராண கட்டணம் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. இது தேர்தல் பயத்தைக் காட்டுகிறது.

32 comments:

  1. கும்தலக்கான்னு டைட்டில்லைப்பார்த்ததுமே நினைச்சேன்.. ஆட்டோ கன்ஃபர்ம்.. கோவைக்கா? சித்தாரா?

    ReplyDelete
  2. //ராசா விவகாரத்தில் இப்பதான் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார் ஆகமொத்தம் எங்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை எல்லாத்துக்கும் காரணம் ராசாதான் என்று கூறியது போல் உள்ளது.//

    அப்படி சொல்லி விட்டால் மட்டும் இங்கே விட்டு விடுவார்களா...? :-))

    இன்னும் என்னென்ன சாக்கு போக்கு பாக்கி இருக்கிறதோ...?

    ReplyDelete
  3. ஆளுங்கட்சியை போட்டு இந்த தாக்கு தாக்கறீங்களே...

    ReplyDelete
  4. //புறநகரில் செல்லும் தொலை தூர பேருந்துகள் எல்லாம் குறிப்பிட்ட சில மோட்டலில் நிறுத்தி பயணிகளை உணவு அருந்த சொல்வது கண்டிக்கத்தக்கது சுகாதாரமான உணவகமாக இருந்தால் நிச்சயம் வரவேற்கலாம் ஆனால் இவர்கள் நிறுத்தும் இடமெல்லாம் சுகாதாரமற்ற இடங்களாகவே இருக்கின்றது.//

    கொள்ளை விலைக்கு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், இன்னும் கழிப்பறை செல்ல காசு வசூலிக்கிற அடாவடி மட்டும் தொடர்கிறது. இவனுகளை என்ன பண்ணினா தேவலாம்..?

    ReplyDelete
  5. இந்த வாரம் தேர்தல் ஸ்பெஷல்லா

    ReplyDelete
  6. வழக்கம்போல அஞ்சறைப்பெட்டி அருமை. அதிலும், கிசுகிசு இல்லாமல் இருந்தது எனக்கு "இன்னும்" பிடித்திருந்தது.

    ReplyDelete
  7. நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே

    ReplyDelete
  8. வாங்க சிபி

    இன்னிக்கு முத வெட்டு, வடை, சுடுசோறு எல்லாம் உங்களுக்குத்தான்...

    ReplyDelete
  9. //கும்தலக்கான்னு டைட்டில்லைப்பார்த்ததுமே நினைச்சேன்.. ஆட்டோ கன்ஃபர்ம்.. கோவைக்கா? சித்தாரா?//

    எல்லாருக்குந்தான்...

    ReplyDelete
  10. வாங்க சேட்டை...

    ..அப்படி சொல்லி விட்டால் மட்டும் இங்கே விட்டு விடுவார்களா...? :-))

    இன்னும் என்னென்ன சாக்கு போக்கு பாக்கி இருக்கிறதோ...?...

    நாட்கள் நெருங்க நெருங்க எல்லாம் வரும்...

    ReplyDelete
  11. { சி.பி.செந்தில்குமார் } at: February 17, 2011 12:00 AM said...

    ஆளுங்கட்சியை போட்டு இந்த தாக்கு தாக்கறீங்களே...

    ஏங்க சிபி உங்கள விட கொஞ்சம் குறைவுதான்...

    ReplyDelete
  12. //கொள்ளை விலைக்கு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், இன்னும் கழிப்பறை செல்ல காசு வசூலிக்கிற அடாவடி மட்டும் தொடர்கிறது. இவனுகளை என்ன பண்ணினா தேவலாம்..?//

    இவர்களைப்பற்றி காரம்சாரமாக அனைவரும் அறியும் படி பதிவிடலாம்..

    ReplyDelete
  13. { Arun Prasath } at: February 17, 2011 12:03 AM said...

    இந்த வாரம் தேர்தல் ஸ்பெஷல்லா


    இனி தேர்தல் வரை ஸ்பெஷல்தான்...

    ReplyDelete
  14. //{ சேட்டைக்காரன் } at: February 17, 2011 12:03 AM said...

    வழக்கம்போல அஞ்சறைப்பெட்டி அருமை. அதிலும், கிசுகிசு இல்லாமல் இருந்தது எனக்கு "இன்னும்" பிடித்திருந்தது.//

    உங்களைப்போல் என் நலம் விரும்பிகளின் அறிவுரையால் கிசுகிசுவைத் தூக்கி நல்ல அஞ்சறைபெட்டியாக தர முயன்றிருக்கிறேன் சேட்டை சார்...

    ReplyDelete
  15. நல்லா எழுதி இருக்கீங்க sangavi

    ReplyDelete
  16. நல்லா எழுதுறீங்க. படைப்புக்கள் எல்லாம் அனைத்தும் நிறைந்து "கதம்பமாக " மணக்கிறது. பேருக்கு பொருத்தமாக :))

    ReplyDelete
  17. தேர்தல் ஸ்பெஷல் அருமை.. நிஐமாகவே இது நல்ல அஞ்சறைபெட்டி.

    ReplyDelete
  18. தகவல் பகுதி சரியா டிஸ்ப்ளே ஆகலையே !! நம்ம சிஸ்டம் பிரச்சனையா?

    ReplyDelete
  19. //சமீபத்தில் ஒரு 200 கிலோ மீட்டருக்க ஊரைச்சுற்றினேன் சில இடங்களிலில் சாலைவசதிகள் பரவாயில்லை பல இடங்களில் சாலைகள் தரம் ரொம்ப மோசமாக உள்ளது இப்படி இருந்தால் எப்படித்தான் வாக்கு கேக்க போவார்களோ?//
    ஹிஹி அது தானே..
    ஆமா நீங்க ஏன் பாஸ் சுத்தினீங்க அம்புட்டு தூரம்?

    ReplyDelete
  20. அஞ்சறைப்பெட்டி தகவல்கள் அருமை :)

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. அஞ்சரைப்பெட்டி தகவல்களால் நிரம்பி அழகாய் இருக்கிறது பங்காளி... கலக்குங்கள்.

    பிரபாகர்...

    ReplyDelete
  22. அறிவுப்பெட்டி

    ReplyDelete
  23. கதம்ப தகவல் நல்லாயிருக்குங்க.... எங்க ஊருபக்கமாதான் வந்திருக்கிங்க..... பார்ப்போம் ஒரு நாளைக்கு.

    ReplyDelete
  24. அனைத்த தகவல்களும் அருமை..
    அஞ்சரைப்பெட்டி அமரக்களப்படுத்துகிறது..

    நானும் வந்துட்டேன்..

    ReplyDelete
  25. நான் வந்தாலே ஓட்டு இருக்குன்னு அர்த்தம்

    ReplyDelete
  26. இப்படி எல்லாத்தையும் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் வாங்கதவர்களுக்கு?/////


    அது எங்கள் தலைவரின் தவறு அல்ல!

    ReplyDelete
  27. அஞ்சறைப்பெட்டி அருமை.

    ReplyDelete
  28. I heard that, only DARK chocolates (which has light bitter taste, made with more than 60% cocoa) has more anti-oxidants than fruits. Not just any chocolates.
    http://www.fitsugar.com/New-Study-Shows-Chocolate-Has-More-Antioxidants-Than-Fruit-13791861

    ReplyDelete
  29. வௌவால் - புதுமை !
    சாக்லேட் - இனிப்பு !
    தத்துவம் - பொய் !

    ReplyDelete
  30. தத்துவமும் தகவலும் பிரமாதம்...

    ReplyDelete
  31. ஹா...ஹா...ஹா...

    நல்லா போட்டான்யா டைட்டிலு கும்தலக்கான்னு...

    அஞ்சறைப்பெட்டி தூள்ள்ள்ள்ள்...

    எல்லாரும் இந்தியா தான் உலகக்கோப்பை வாங்கணும்னு விரும்பறாங்க... பார்ப்போம்...

    ReplyDelete