Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பில் இப்படியும் நடந்தது...


சென்னை பதிவர் சந்திப்பு என்றதும் நிச்சயம் போக வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் மட்டுமல்ல எங்கள் கோவை நண்பர்களும் வருகின்றேன் என்றனர். பின் எல்லோரும் சென்னை பயணித்தோம்...

சனிக்கிழமை மதியமே சென்று அப்படியே சுத்திவிட்டு மாலை மண்டபத்துக்கு சென்றோம். இரயிலில் வரும்போது அஞ்சா சிங்கமும், ஆரூர் மூனாவும் எங்கே இருக்கின்றீர்கள் என்று கேட்டுகிட்டே இருந்தனர் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியது. மண்டபத்துக்கு வரும் முன் மீண்டும் வெளியே காத்திருந்து காரில் இருந்து இறங்கியதும் வா நண்பா என்று கட்டி அணைத்து வரவேற்ற அஞ்சாசிங்கத்தையும், எப்போதுமே அதிகம் பேசாத ஆனால் அன்று பேசிய பிரபாகரன் அணைத்து வாங்க வாங்க என்று வரவேற்றதும் அத்தனை மகிழ்ச்சி.

நாம் எண்ண சிறுவயதில் இருந்து படித்தவர்களும் இல்லை, சொந்தக்காரனும் இல்லை ஆனால் சொந்தக்காரனை விட பாசம் அதிகம் நண்பனிடம் தான் என்று சொல்வார்கள் அதற்காகத்தான் விழாவிற்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று சென்றேன் அந்த பாசத்தில் மகிழ்ந்தேன்..

உள்ளே அண்ணன் மோகன், பால கணேஷ், பட்டிக்காட்டானை முதலில் அன்று தான் பார்த்தேன் ஆனால் ஏதோ பல வருட நட்பு போல பேசியது மனமகிழ்ச்சியே.. மதுமதி, ஐயா இரமானுஜம் ஆகியோரை சந்திதித்து விட்டு இரவு விடை பெற்று தங்கும் இடம் வந்தோம்...

காலை பரபரப்பு எத்தனை பேர் வரப்போகிறார்கள் யார் யாரை எல்லாம் சந்திக்க இருக்கிறோம் என்று காரில் செல்லும் போதே உள்ளுர மகிழ்ச்சி. வரவேற்று பெயர் பதிந்தார்கள் ஒவ்வொருவரையும் விடியோவில் பேச வைத்து உள்ளே அனுப்பினர் நிகழ்ச்சிநிரல்கள் எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருந்தது. இப்போது தான் வெள்ளை சட்டையும், கலர் கதர் வேட்டியில் ஒருவர் வந்தார் என்னை பார்த்ததும் சிரிப்பு மட்டுமல்ல அன்பான அணைப்போடு வரவேற்று வந்ததில் மகிழ்ச்சி என்றார் அன்பர் ஆரூர் மூனா.

திடீரென நீதான் சங்கவி என்றார் ஆம் என்றேன் நான் தாய்யா சேட்டை என்றார் எதிர்பார்க்கவில்லை அவரை சந்தித்தது ஓர் இன் மகிழ்ச்சியே..

ராஜி வந்து எப்படி இருக்கீங்க என்று அழைத்ததும் அகமகிழ்ச்சி.

வேடந்தாங்கல் கருண் மற்றும் கவிதை வீதி சௌந்தரை முதன் முதலாக அப்போது தான் சந்தித்தேன் ரொம்ப நாள் பழக்கம் அன்று தான் சந்திக்க முடிந்தது. 

அப்போது தான் சரக்கடிக்காத கோபத்தில் வந்தார் மாம்ஸ் நாய் நக்ஸ் ஏன்டா நைட்டு வரல வருவீன்னு எதிர்பாத்தேன் என்று நக்ஸ்க்கு செல்ல கோபம் என் மேல்..

கீழே நின்று கொண்டு இருந்த போது ரஹிம் கசாலி, சிராஜீதீன், இரண்டு பெண் பதிவர்கள் வந்தனர்.. அவர்கள் என்னை பார்த்ததும் சங்கவிதானே நிறைய படித்திருக்கிறேன் என்றார் அந்த அம்மா மிக்க மகிழ்ச்சியாக இருந்தது...

மோகன் அண்ணா அழைத்து மக்கள் டிவியில் பேட்டி பேசுடா என்றார் எங்க குழும நண்பர்களையும் அழைத்துக்கிறேன் என நான் ஜீவா, அகிலா, சரளா என்று பேட்டி கொடுத்தோம் (காத்திருக்கிறேன் வருமா வராதா என்று)

அடுத்து என் தல என்று எப்போதும் நான் அழைக்கும் மணிஜியும், அகநாழிகை வாசு, கேபிள்  அளவாடிக்கொண்டு இருந்தேன்.. இந்நிகழ்வில் என்னையும் அங்கிகரித்து மேடை ஏற்று பதிவர் அறிமுகத்துக்கு தொகுத்து வழங்க வாய்ப்பளித்த விழாக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

இடையில் ரிட்டன் டிக்கெட்டுக்காக வெளியே சென்றிருந்துவிட்டு பின் தான் வந்தேன் வந்ததும் என் முகநூல் நண்பர்கள் அன்பே சிவம், செல்வக்குமார், பிரபாகரன், ஜெயராஜ் பாண்டியன், மகேந்திரன், தீபா வெண்ணிலா, வேலண்டைனா, சிவா போன்றோரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி இதில் எனக்கு புத்தகம் பரிசளித்த சகோதரி தீபா வெண்ணிலாவிற்கு இரட்டிப்பு நன்றி.

அதன் பின் தான் பார்த்தேன் என் அன்பு பங்காளி பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கியை அடிக்கடி பேசினாலும் பார்க்கும் போது உள்ள சந்தோசம் என்றும் கிடைக்காது..

சாப்பாட்டு சாப்பிடும் இடத்திற்கு சென்றதும் பளீரென சினிமா உலகம் ஒரு ஹிரோவை மிஸ் செய்தது போல இருந்தது அவரைப்பார்த்ததும் அவரை எனக்கு தெரியும் என்னை தெரியுமா என்று பார்க்க போய் எதிரில் நின்றேன் பார்த்து சிரித்தவர் சங்கவி தானே என்றார்.. (அனுஷ்கா ரேஞ்சிற்கு எதிர்பார்த்திருப்பார் போல) நிறைய முறை அவர் கோவை வந்தாலும் என்னை சந்தித்ததில்லை இனி சந்திப்பார் என நினைக்கிறேன்...

ரோஸ்விக், ஜாக்கி, சேட்டையுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அதன் பின் தான் வந்தார் உலக சினிமாவை தன் விமர்ச்சனத்தால் பின்னி பெடலெடுத்த அண்ணன் சூர்யா.. அவரை 3 வருடத்திற்கு முன் பார்த்தது மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியே ( அண்ணே மீண்டும் எழுத வாங்க.. முகநூலுக்காவது வாங்க).

கவியரங்கிற்கு உள்ளே செல்ல அங்கே சித்தப்பு எப்படா வந்த ஒரு போன் கூட செய்யமுடியாது என்று கடித்துக்கொண்டார் சித்தப்பு உண்மை தமிழன்.. அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது பின்னூட்டப் புகழ் நட்புடன் ஜமால் அப்ப அப்ப என் கவிதையை நக்கலடிக்கும் நாயகன்.. ரொம்ப எதார்த்த மனிதன்...

பிகேபி பேசி முடித்ததும் நிகழ்ச்சி முடிந்தது நன்றி உரை என்றனர் ரொம்ப வருடங்களுக்கு பிறகு நாட்டுப்பண் முழுவதும் பாடினேன்.

என்னடா இது அதற்குள் மணி 6 ஆகிவிட்டது அவ்வளவு தானா சந்திப்பு இனி மீண்டும் பின்னூட்டத்தில் தான் சந்திப்பா என பிரிய மனம் இல்லாம் பிரிந்தேன் புண்ணியக்கோடி மண்டபத்தில் இருந்து... 

நிகழ்ச்சி அழகாக திட்டமிடப்பட்டு குறித்த நேரத்தில் நடந்தது. வெளியூர் செல்பவர்கள் கால தாமதம் ஆகக்கூடாது என்று 5.30க்கு எல்லாம் நிகழ்ச்சியை முடித்து எந்த சிரமமும் இல்லாமல் செல்ல வழிவகுத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...

ஓர் அருமையான நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு கோவை குழும நண்பர்கள் சார்பில் அன்பான வாழ்த்துக்கள்...

என்றும் உங்கள்
அன்பு நண்பன்
சதீஸ்.... சங்கவி....

Wednesday, August 29, 2012

அஞ்சறைப்பெட்டி 30/08/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது காலை உணவு இரயிலிலேயே சாப்பிடவேண்டிய சூழ்நிலை சரி இரண்டு தோசை மட்டும் சாப்பிடலாம் என்று தோசையை சொன்னேன்.. தோசை பரவாயில்லை ஆனால் இந்த தோசைக்கு கொடுத்த சட்னி சாம்பார் இருக்கே அப்பப்பா வாயிலேயே வைக்க இயலவில்லை அவ்வளவு கேவலமாக இருக்கிறது. பறிமாறும் பையனை கேட்டால் ஒரு சிரிப்புடன் நகர்கிறான் அவன் சிரிப்பின் அர்த்தம் உன் தலை எழுத்து என்று சொல்வது போல் இருந்தது...அதுவும் இல்லாமல் அந்த தோசையை சாப்பிட்டு அன்று இரவு நான் பட்ட பாடு இருக்கே தாங்கள...

இரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது உணவுப் பொருட்கள் எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து வருடம் ஒருவரிடம் கான்ரக்டை மாற்றி கொடுத்தால் தான் ஒரளவிற்கு உண்மையாக இருப்பார்கள்.

..............................................................................................
சென்னை காலை 4 மணிக்கு வாக்கிங் சென்ற அனுபவம் இன்பமாக இருந்தது மாலை சாலை நெருக்கடியில் இருந்த இடத்தில் எந்த வாகனமும் செல்லாத இடத்தில் நடக்கும் போது தனிமை நிறைய நேரம் நடக்க வைக்கிறது.. மனதை அமைதிப்படுத்தியது. என்னைப்பொறுத்தவரை சென்னைக்கு வந்து இரண்டு நாள் இருந்துட்டு போகலாம். இல்லை எனில் அந்த அவசர காலத்திற்கு என்னை மாற்றிக்கொள்வது சுலபம் அல்ல..

கோவையில் கார் எடுத்தால் ஒரு அரை மணி நேரத்தில் ஊரை சுற்றி வரலாம் அங்கு ஒரு சாலையை கடக்கவே அரை மணி நேரம் பிடிக்கிறது.. அதையும் ரசித்து செய்தால் சுகம் தான்...


..........................................................................................
எவ்வளவு தான் விலையை உயர்த்தி விற்றாலும் புட் மால்களில் கூட்டம் அலைமோதத்தான் செய்கிறது. அவர்கள் விளம்பரத்தை விட நம் விளம்பரம் ஓவராக இருப்பதால் தான் இத்தனைக்கூட்டம்... சென்னையை தொடர்ந்து இப்போது கோவையிலும் மால்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது இங்கு புட் கோட்டில் புட்போர்டு அடித்து சாப்பிடும் அளவிற்கு கூட்டம் கல்லாக்கட்டுகிறது...
................................................................................................

 கோவையில் நான் தினமும் செல்லும் பேரூர் ரோடு நன்றாக இருக்கும் 25 நிமிடத்தில் டவுனுக்குள் வர முடியும் பாதாள சாக்கடை அமைக்கிறேன் பேர்வழி சாலையை நாய் நாஸ்ட்டா செய்தது போல செய்துவிட்டார்கள்.. கொஞ்சம் பார்த்து செல்லவில்லை என்றால் குண்டு குழியில் விழுந்து பெண்டு நிமிர்ந்து வர வேண்டி இருக்கும்...
...............................................................................................

இன்று காலை வழக்கம் போல் அலுவலகம் வரும் போது அவிநாசி மேம்பாலத்தில் காந்திபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் டிராவல்ஸ் வண்டிகள் ராங் ரூட்டில் வருவது வழக்கம் அதே போல் இன்று ஒரு வண்டி வர பொதுமக்கள் ஒருவர் பைக்கை அப்படியே நிறுத்தி சரியான ரூட்டில் போ என சொல்ல கிட்டத்தட்ட பயங்கர ட்ராபிக் நான் சைடில் புகுந்து முன்னே வர அந்த ட்ராவல்ஸ் இன்னொரு டிரைவர் முடிஞ்சா பாருங்கடா கேணப்...... என்று திட்ட எனக்கும் கோபம் வந்து வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி இறங்குடா என கத்த அதற்குள் வந்த டிராபிக் போலீசார் வண்டிய பின்னாடி எடுடா காலையில் ஆபிஸ் செல்லும் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்வதே தவறு அதிலும் தேவையில்லாமல் வார்த்தை பேசுகிறாயா என்று திட்ட அவன் பஸ்சில் ஏறி அடைத்துக்கொண்டான் கீழே நாங்கள் கத்த அவன் தெனாவட்டாக இருப்பதையும், பொதுமக்கள் கூட்டம் அதிகமாவதை கண்டு கோபம் அடைந்த ட்ராபிக் போலீசார் அவனை இறக்கி விட்டார் பாருங்க ஒன்னு வாழ்க்கையில் அவன் அந்த மாதிரி வாங்கி இருக்க மாட்டான்...

அவனிடம் நான் கடைசியாக சொன்னது தேவையா இது... மோட்டாரில் செல்லும் போது வாய் நிதானம் தேவை தம்பி இல்லினா வாங்கிக்கட்டிக்கத்தான் வேண்டும்...


...............................................................................................

படித்ததில் மிக பிடித்தது....
வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா

 ..................................................................................................

உடலில் ஏற்படும் காயங்களை மருந்து போட்டு குணப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்பிரே மூலம் மருந்து தெளித்து குணப்படுத்தும் நவீன முறை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரே மருந்து நெகிழும் தன்மை கொண்டது.

இதை காய கட்டின் மீது தெளித்தால் போதும். அது 5 நிமிடங்களில் அதன் மீது செட் ஆகிவிடும். இதன் மூலம் பல் மற்றும் எனாமலில் ஏற்பட்ட காயங்களையும் குணப்படுத்த முடியும். அதில் கால்சியம் இருப்பதால் பல் நோய்களும் குணமாகின்றன.


இந்த ஸ்பிரே மருந்து காயத்துடன் ஒட்டாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவுடன் காய கட்டு பிரிக்கும்போது அதுவும் அத்துடன் அகன்று விடும். இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டதில் 90 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் லோமாலிண்டா பல்கலைக்கழகத்தில் குழந்தகளின் இருதய அறுவை சிகிச்சை காயங்களை குணப்படுத்த ஸ்பிரே மருந்து பரிசோதித்து சோதனை நடத்தப்பட்டது.


அமெரிக்க ராணுவ இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜிகல் ஆராய்ச்சி மையத்தில் தீக்காயங்களுக்கு சிலிகான் ஸ்பிரே மருந்து சிகிச்சை அளித்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.


 ..................................................................................................
 
பதிவர் சந்திப்பில் நிறைய பேரை சந்தித்தேன் நான் எழுதும் அஞ்சறைப்பெட்டியை இன்னும் நன்றாக எழுது என்று ஊக்குவித்தார்..  என் எழுத்து நடையை ரசிச்சவர் நான் கிசு கிசு என அஞ்சறைப்பெட்டியில் சேர்த்து எழுதும்போது நண்பர்களிடம் சொல்லி முதலில் எடுக்கச்சொல் நன்றாக எழுதும் போது எதற்கு இந்த கிசு கிசு இப்பவே நல்லாத்தான் இருக்கு இதையே பின்பற்ற சொல்லுங்க என்று அக்கறையுடன் கூறியவர். மூன்று முறை என்னிடம் அலைபேசியில் பேசினார் பேசிய போதெல்லாம் பொதுத்தொலைபேசியில் பேசினார். அவரை ஒருநாளாவது பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்றார். பதிவர் சந்திப்பு அன்று காலை மண்டபம் சென்றவுடன் ஒருவர் வந்து சங்கவி நீதானா.. நான் பார்த்து பேச விரும்பியவர்களில் நீயும் ஒருவன் நான் யார் என்று தெரிகிறதா என்றார் வியந்து பார்த்தேன்... ஒல்லியான உருவம் இவர் பதிவரா இல்லை வாசகரா என்று சந்தேகத்துடன் பார்த்தேன்.... நான் தான் சேட்டை என்றார் என் அன்பிற்குரிய சேட்டைக்காரன்..

நிச்சயம் என் அஞ்சறைப்பெட்டியை அண்ணன் படிப்பார் என்பதால் இங்கு பதிவு செய்கிறேன் என் மகிழ்ச்சியை.... மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களை சந்தித்ததும் அதன் பின் பேசிக்கொண்டு இருந்ததும்.. அன்று பேசியது எல்லாம் குறைவான நேரம் அண்ணா அது பத்தாது அடுத்தமுறை சென்னை வரும்போது எனக்காக நிறைய நேரத்தை ஒதுக்குங்கள் உங்களிடம் நிறைய பேசவேண்டும்...

நன்றி என்னை சந்தித்ததற்கு...

பிகேபியிடம் புத்தகத்தை பெறும் சேட்டைக்காரன்...

தகவல்



 
அதற்கான புதிய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நானோ டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் கரோல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய கார்பன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து ஆப் ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும் சார்ஜ் செய்ய மின் வசதி இருக்கும் இடத்தை தேடி ஓடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கையில் பிடித்தபடியே சார்ஜ் செய்ய முடியும்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர்  ஆரிப் மோட்டார் வாகனங்களைப்பற்றி தம் அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். வாகனங்களை பயன்படுத்துவது எப்படி, ஆவணங்கள் பெறுவது எப்படி ஒவ்வொன்றையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்....

http://motorstar180.blogspot.com/

தத்துவம்
கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

Tuesday, August 28, 2012

மீண்டும் உயிர்த்தெழுந்த பதிவுலகம்...


2009களில் பதிவுலகம் நிறைய புது பதிவர்களையும், புதுக்கட்டுரைகளையும் தினம் தினம் ஒரு எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. அவ்வளவு பதிவுகள் நம் மனதில் பிடித்தவற்றை நாம் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் இது வெளிவருவதற்குள் நமக்கு வயதாகிவிடும் என்ற காலம் இருந்தது உண்மை. கூகுள் நமக்களித்த வரப்பிரசாதமான BLOGG க்கு பின் நாம் எதை எழுதுகிறோமோ அதை உடனடியாக வெளியிட முடியும் அதைப்படிப்பவர்கள் நம்மை ஊக்கப்படுத்தி வந்தனர். பதிவுலகமும் ஆரோக்கியமாக இருந்தது..

2012 ஆரம்பத்தில் இருந்து நிறைய மூத்த பதிவர்கள் பதிவுலகில் இருந்து ஒதுங்கினர் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பதிவையே மறந்துவிட்டனர் என்றும் கூட சொல்லலாம். புதியவர்களின் வருகை அதிகமாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெளியில் வர ஆரம்பித்தனர் மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை. பல அற்புதமாக எழுத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லாம் வெளியில் தெரிவதில்லை.

இது வரை நடைபெற்ற சந்திப்புகளின் போது இருந்ததை விட இந்த முறை நடைபெற்ற சென்னை சந்திப்பு 10 நாட்களுக்கு முன் பதிவுலகை கலக்க ஆரம்பித்தது அப்போது மீண்டும் வாசகர்களின் வட்டம் அதிகமானது எல்லாருடைய பதிவும் நன்றாக வெளிக்கொண்டு வரப்பட்டது இதனால் பதிவர் சந்திப்பும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இது அப்படியே தொடரவேண்டும் மீண்டும் பதிவர்கள் எழுச்சி பெறவேண்டும் தங்களின் எழுத்துக்கள் மூலம் அனைவரையும் கட்டிப்போட வேண்டும் தங்களுக்கு பிடித்தவற்றை எழுதுங்கள் அது சரியோ தவறோ கருத்து மோதல் தான் நமக்கு வேண்டும்.

இன்று மீடியாக்கள் எழுத தயங்கும் தலைப்புக்களை நாம் பகீரங்கமாக எழுதுகிறோம் நம் எழுத்துக்களை படித்தபின் அந்த பிரச்சனைகளை பெரிதாக்குகிறார்கள் மீடியாக்கள் அந்த அளவிற்கு நாம் மாற்று ஊடகமாக செயல் படுகிறோம் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.

இன்று பத்திரிக்கைகளில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் அவர்களுக்கு நிச்சயம் இந்த பதிவுலகம் உதவுகிறது நமது எழுத்துக்களை அவர்களுக்கு பயன்படுகிறது..

முகநூலுக்கும், டுவிட்டருக்கம், பதிவுக்கும் இன்று பத்திரிக்கைகள் குறைந்த பட்சம் 3 பக்கங்களை நமக்காக பிரசுரிக்கும் அளவிற்கு இருக்கிறது நம் முன்னேற்றம். அந்த அளவிற்கு எழுத்தின் தாக்கம் இன்று அனைவராலும் அறியப்படுகிறது. இன்று விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ததற்கு பதிவர்களும் ஒரு காரணம் என்றால் யாரும் மறுக்க இயலாது.

நம்மால் பகிரங்கமாக எழுதுவதற்கு காரணம் நாம் மக்களோடு மக்களாக இருக்கிறோம். சமூக அவலங்களை அங்கு தட்டி கேட்கும் தைரியம் தவறு நடக்கும் இடத்தில் இல்லை என்றாலும் நம் எழுத்தில் தட்டி கேட்கும் தைரியம் இந்த பதிவிலகில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு அரசாங்க அதிகாரியை திட்டி பதிவுலகில் எழுதினால் அவரின் காதுகளுக்கு போகது என்று நினைக்க வேண்டாம் இன்று நிச்சயம் போகும் அளவிற்கு வளர்ந்துள்ளது நமது வளர்ச்சி.

நம் எழுத்தின் வலிமையை உணர்ந்து தவறுகளை தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டி எழுதலாம் நான் இங்கே சென்றேன் இந்த தவறு நடந்தது அந்த இடத்திற்கு போகுபவர்கள் பார்த்து பத்திரமாக இருங்கள் என்று முன் எச்சரிக்கை செய்யலாம்.

நமக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் நம் பதிவுலகில் கிடைக்கிறது. நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்களா உடனே எந்த ஊர் என்று கேட்டு தேடினால் அங்கே எங்கே தங்கலாம் எவ்வளவு செலவு எதாவது ஏமாற்றுகிறார்களா என அங்கம் அங்கமா அந்த ஊரைப்பற்றி இங்கு நம்மால் படிக்க இயலுகிறது.

நம் ஊரில் இயற்கையான பல அழகான இடங்கள் உள்ளன அதை எல்லாம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை இதை நாம் வெளிக்கொண்டு வரும்போது இப்படி எல்லாம் இருக்கிறதா ஏன் இதை சுற்றுலா மையமாக மாற்றக்கூடாது என்று அரசாங்கத்துக்கு ஒரு பதிவு எழுதலாம்.

இப்போதுல்ல எழுச்சி நம்மிடையே மாறமல் இருக்க வேண்டும் தினமும் அனைவரும் பதிவு எழுதுங்கள் என்று சொல்லவில்லை வாரத்திற்கு இரண்டு பதிவாவது எழுதுங்கள் பதிவுகளை படிக்கும் போது புது பதிவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஒரு பின்னூட்டமிடுங்கள் இப்படி எழுது அப்படி எழுது என்று அறிவுரை கூறுங்கள் தவறுகளை தட்டிக்கேளுங்கள்.

எங்கு சென்றாலும் அங்கு நடக்கும் தவறுகளை மறக்காமல் எழுதுங்கள் அப்போது தான் அனைவரும் அறிய இயலும். சமூக அவலங்களை படித்த நாம் தான் தட்டி கேக்கவேண்டும் வாங்க நம் எழுத்தின் மூலம் தட்டிக் கேட்போம்..

நிறைய ஆக்கப்பூர்வமாக எழுதுவோம்... சமூகத்திற்கு நம்மாள் ஆன உதவிகளை செய்வோம்.. பதிவர்களே மீண்டும் உயிர்த்தெழுந்து பதிவுகள் எழுதுங்கள்... நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும்...

Monday, August 27, 2012

பதிவர் சந்திப்பால் சங்கவியிடம் சண்டை போட்ட பெண் பதிவர்???


வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் சந்திப்பில் இம்முறை நிறைய புதிய பதிவர்கள் வந்து இருந்தனர் அதில் முடிந்தவரை அனைவருடனும் பேசினேன் அவர்களின் வலைப்பதிவு முன்னரே படித்துள்ளதால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. பதிவர் சந்திப்பு பதிவு என்றால் அந்த வாரம் நமக்கு அல்வா சாப்பிட்டது போலத்தான் பதிவ போட்டுத்தள்ளிகிட்டே இருப்பேன். ஆனால் இந்த சந்திப்பில் ஓர் வித்தியாசமான அனுபவம்..

பதிவர் சந்திப்புக்கு பின் ஊர் வந்து சேர்ந்ததும் ஒரு போன் வந்தது எடுத்து பேசிய போது சங்கவியா என்று கேட்டார்கள் ஆமாங்க என்றேன்

அதன்பின் நடந்த உரையாடல்

சங்கவி: எப்படி இருக்கீங்க சாப்பிட்டாச்சா? ஆமா நீங்க ?

பெண் பதிவர்: நல்லா இருக்கேன், சாப்பிட்டாச்சு., அதற்குள் மொக்கை பதிவு ரெண்டு போட்டுட்டீங்க போல..

சங்கவி: நீங்க யாருங்க ?

பெண்பதிவர்: நான் யாருன்னாதான் பேசுவீங்களோ இல்லனா பேச மாட்டீங்களா? எந்த பெண் பேசினாலும் சும்மா பேசிட்டே இருப்பீங்கன்னு சொன்னாங்க, உங்க தொல்லைய அனுபவிச்சவங்க, இப்ப என்னடான்னு நடிக்கறீங்க..

சங்கவி: நீங்க யாருன்னு சொல்லுங்க இல்லை என்றால் போனை கட் செய்திடுவேன்

பெண் பதிவர்: சொல்ல முடியாதுங்க..

போனை துண்டித்து விட்டேன்

மீண்டும் அழைப்பு

சங்கவி வணக்கம் சங்கவி

பெண் பதிவர்: அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும் பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களே எங்க கிட்டை எல்லாம் பேச மாட்டீங்களா? 2 முறை போன் செய்தேன் போனை பிக் பண்டவே இல்லை

சங்கவி :  ஏங்க நான் எப்பவும் அட்டன் செய்யாமல் விட மாட்டேங்க.. இல்லை என்றால் நெருங்கிய நண்பர்களிடம் அட்டன் செய்யாமல் விளையாடுவேன் கொஞ்சம் கோபப்படுத்தி சண்டை போட்டு விளையாடுவேன்

பெண் பதிவர்: அப்ப என் நெம்பர் தெரியுமுள்ள ஏன் அட்டன் செய்யல?

சங்கவி ஏங்க உங்க குரலையும் உங்க எண்ணையும் இப்பத்தாங்க பார்க்கிறேன்

பெண் பதிவர்: குரலை பாத்தீங்களா ?

சங்கவி இல்லீங்க., கேட்டேன் ஆனா நான் இதுவரை கேட்டதில்லை

பெண் பதிவர்: அது கிடக்கட்டும் ஏன் போனை அட்டன் பண்ணல.. உங்கள நம்பி ஒருத்தர் அதுவும் பெண் போன் செய்கிறேன் அட்டன் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்.

சங்கவி அம்மா தாய்குலமே நான் அலுவலகத்தில் இருக்கேன் சாயங்காலம் கூப்பிடுகிறீர்களா?

பெண் பதிவர்: ஏன் நீங்க உங்க அலுவலக நேரத்தில் எந்த பெண்ணிடமும் பேசியதில்லையா

சங்கவி இன்னிக்கு வேலை இருக்குங்க

பெண் பதிவர்: அப்புறம் எப்படி 2 பதிவு போட்டீங்க

சங்கவி நீங்க பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களா?

பெண் பதிவர்: வரல ஆனா கலந்துகிட்டேன்

சங்கவி:  ஏங்க இப்படி 

பெண் பதிவர்: ஆமாப்பா நேரலை ஒளிபரப்பு மூலம் நானும் கலந்துகிட்டேன்.. அத விடுங்க ஏன் அட்டன் பண்ணல..

சங்கவி நீங்க யாருங்க?

பெண் பதிவர்: முதல்ல ஏன் போனை அட்டன் பண்ணல அத சொல்லுங்க

சங்கவி திரும்பவும் முதல்ல இருந்தா?

பெண் பதிவர்: என்ன முதல்ல இருந்தா எழுதுவது பெண் பேரை வைத்து இதுல பெண்களுக்கே பதில் சொல்ல மாட்டீங்களோ... அது கூட பரவாயில்லை ஏன் போனை.............

சங்கவி அய்யோ எதோ உங்ககிட்ட வம்பிழுக்க வேண்டும் என்று அட்டன் செய்யலீங்க அதுவும் இல்லாம அது புது எண்

பெண் பதிவர்: இல்ல என் எண் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்

சங்கவி: உங்க எண் தெரிஞ்சது மாதிரி இருந்துச்சு அதனால சும்மா வம்பிழுத்து ஒரு சஸ்பென்ஸ்க்காக அட்டன் செய்யலீங்க.. மன்னிச்சுக்குங்க, தெரியாம செய்திட்டேன், இனி ஒழுங்கா அட்டன் செய்து பேசுகிறேன்.. மிகப்பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்குங்க

பெண் பதிவர்: ஹலோ மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா?  ஆவலா போன் செய்த எனக்கு அப்ப எப்படி இருந்திருக்கும் மனசு? இப்படி எல்லாம் பேசுவேன்னு நினைச்சிக்காதீங்க  நான் போனே செய்யல.. இதுல மன்னிப்பு வேறையா... ஒரு பொண்ணு போன் செய்ததால் என்ன என்ன பொய் சொல்றீங்க பாருங்க.... முதல்ல நான் யாருன்னு கண்டுபிடிங்க ... வேனும்னா ஒரு க்ளு தருகிறேன் நானும் பதிவர் தான் நிறைய கமெண்ட் போட்டு இருக்கேன் உங்களுக்கு., நீங்களும் எனக்கு கமெண்ட் எல்லாம் நிறைய போட்டு இருக்கீங்க.... பை பை..... வைச்சிடட்டுமா??

இது யாருன்னு தெரியல மக்களே மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்... போன் செய்த பெண் பதிவரே பின்னூட்டத்திலாவது வந்து சொல்லுங்கம்மா??? இராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்...அதனால தான் பதிவு போட்டேன்..

போன் செய்த பெண் பதிவருக்கு... இந்த பதிவ பார்த்ததும் யாருன்னு போன் செய்து சொல்லிட்டா விட்டு விடுகிறேன்... இல்ல உங்க போன் நெம்பர் என்கிட்ட இருக்கு அதை வெச்சு யாருன்னு கண்டுபிடிச்சு... அப்புறம் மீண்டும் பதிவேற்றி விடுவேன்... தயவு செய்து யாருண்னு சொல்லுங்கோ....

பதிவர் சந்திப்பு வெற்றிக்கு " இது " காரணமா???

பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கிறது என்பதை முடிவு செய்தவுடன் இதற்காக வாரம் வாரம் சந்திப்பு நடத்தி அதற்காக திட்டமிட்டு கொண்டு இருந்தனர் என்றால் அது மிகையாகது.

சந்திப்பை நடத்துபவர்களும் சந்திப்பைப்பற்றி பதிவிட்டு வரவேற்றனர். கடைசியாக பதிவர் சந்திப்பிற்கு வருபவர்கள் என 120 பேர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் வந்தபவர்கள் நிச்சயம் 200 பேரை தாண்டி இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இச்சந்திப்பு.

கடந்த வாரத்திற்கு முன் வரை தமிழ்மணத்தில் பதிவுகளில் பரபரப்பு இல்லை. முதன்முதலாக மனிதாபிமானி தளத்தில் பதிவர் சந்திப்பு குறித்து ஒரு பதிவு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நண்பர் ஆரூர் முனாவும், நாய் நக்ஸ் நக்கீரன் போன்றோர் எதிர் பதிவிட்டு இருந்தனர். இந்த 3 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டம் கிட்டத்தட்ட 500 இருக்கும். அப்போது தான் மீண்டும் பதிவுலக வருகை அதிகரித்தது.

நிறைய பின்னூட்டங்கள் எதிர்ப்பு பின்னூட்டம் ஆதரவு பின்னூட்டம் என ஒவ்வொரு பதிவும் களை கட்டியது இதே சமயத்தில் பதிவர் சந்திப்பை தலைப்பில் கலந்து நான் ஒரு விதமாக ஒரு பதிவும், நண்பர் அஞ்சா சிங்கம் ஒரு பதிவும் போட சந்திப்பு நாட்கள் நெருங்கி வர பதிவிட்ட எனக்கே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது இப்படி சண்டை போடுகிறார்களே பதிவர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட வருமா என்றும் இல்லை அதிகம் வரும் என்று கடைசி நேரத்தில் நண்பர்களுக்குள் கலந்து கொண்டோம்..

எனக்கு எதிர் பதிவாக நண்பர் மெட்ராஸ் பவன் ஒரு பதிவிட நாம் சண்டை போட்டால் இன்னும் வேடிக்கை பார்க கூட்டமும் வரும் ஆனா சந்திப்புக்கு கூட்டம் குறைந்து விட்டால் என்ன செய்வது என்று நாங்கள் இருவரும் நம் விவாதத்தை நிறைவு செய்வோம் நேரில் பேசுவோம் என்று ஒப்புதலோடு அந்த பதிவில் பின்னூட்டத்தை விட்டுவிட்டோம்..

மீண்டும் அடுத்த நாள் வருண் ஒரு பதிவிட்டு இருந்தார் வருணிடம் போய் பேச அங்கு 300 பின்னூட்டத்திற்கு பக்கத்தில் போக அந்த பதிவு மிக அதிகம் பார்வையாளரால் பார்க்கபடுபவராக இருந்தது. அங்கே காரசாரமான விவாதம் நடக்க பீதிவில் இருந்து பேஸ்புக், டிவிட்டர் மூலம் இந்த பதிவுகள் பரவ சந்திப்பு இன்னும் அதிக பேரை சென்றடைந்தது.

நேற்று நண்பர் ஒருவர் எனக்கு சந்திப்பு நடப்பது தெரியாது அதிகமாக திரட்டிகளில் படிப்பதில்லை ஆனால் தீடிரென தமிழ்மணம் பக்கம் போனேன் அங்கே சரக்கு பற்றி அதிக விவாதம் போய்க்கொண்டு இருந்தது அதுவும் சந்திப்பில் என்று போட்டு இருந்தது சென்னை பிரபல பதிவரிடம் போன் செய்து கேட்டேன் ஆமாம் வா என்றார் அப்புறம் தான் வந்தேன் என்றார்.

இந்த சரக்கு விவாதத்தை நேரில் பலர் விசாரித்தனர் என்றால் அது மறுக்கமுடியாத உண்மை...

விவாசதம் முடிந்தது ஆனால் எத்தனை பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து பதிவர்களிடம் பலத்த வரவேற்பாக இருந்தது மண்டபம் நிரம்பி வழிவதை அனைவரும் முகமகிழ்வோடு இருந்தோம் இறுதி வரை...

காலையில் மண்டபத்தில் நண்பர் ஆஷிக் அவர்கள் வந்து நாய் நக்கிடம் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவர் பதிவிட்ட நாம் எல்லாம் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று முடிவு செய்தோம் அப்புறம் அப்புறம் என்று அது நடக்காமலே போனது. பின் என்னிடம் வந்து அமர்ந்த ஆஷிக் மிக விபரங்களாக அனைத்து தகவலுடன் வந்திருந்தார் உங்களை எல்லாம் பார்க்கனும் பேசனும் அந்த பதிவை பற்றி பேசனும் என்று பாண்டியில் இருந்து வந்தேன் என்றார். நான் சொன்னேன் நண்பா அது பதிவு இப்ப நண்பர்கள் நாம் மீண்டும் இதைப்பற்றி பேசவேண்டும் எனில் அது பதிவில் தான் பேசவேண்டிய விசயம் இங்கும் நீயும் நானும் நண்பனே என்றேன் மிக்க மகிழ்ச்சியில் ஆம் என்றார்.

இப்ப சொல்லுங்க இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த சர்ச்சைக்குரிய சரக்கு என்கின்றனர்... நீங்களே சொல்லுங்க ஆமாவா ?? இல்லையா??


சரக்கு பதிவை ஹிட்ஆக்கிய நண்பர்கள்...


ஆஷிக்
 நக்கீரன்
ஆரூர் முனா செந்தில், சங்கவி, அஞ்சா சிங்கம்

Sunday, August 26, 2012

சென்னை பதிவர் சந்திப்பை திட்டி எழுத 10 தலைப்புகள்

சென்னையில் பதிவர் சந்திப்பு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே... பதிவர் சந்திப்பு என்றால் சர்ச்சை இல்லாமல் இருக்குமா? வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு நடந்தாலும் அங்கு எதாவது தவறு நடந்தால் அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருபவன் தானே பதிவன்.

நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் எங்கு எங்கு சில தவறுகள் நடந்து இருக்கும் அதைபதிவாக்க வேண்டும் பல நண்பர்கள் கேமராவும் கையோடுயும் அழைந்தனர் அதில் நானும் ஒருவன். 

ஒன்னும் இல்லா சப்பை மேட்டரை ஊதி பெருக்குபவன் தான் உண்மையான பதிவன் என்று அரங்கில் ஒரு மிகப்பெரிய பதிவர்  கூறியது ஞாபகம் வந்தது.

விழா நடந்த அரங்கில் என் கண்ணில் பட்ட குறைகளை சுட்டிக்காட்டி நீங்களும் அதைப்பற்றி திட்டி அல்லது தகவல் திரட்டி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

திட்டி எழுத பத்து தலைப்புகள்...

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10

மேலே உள்ள பத்து தலைப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்து தேடி கண்டுபிடித்து எடுத்து திட்டி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

திட்டி எழுத 10 தலைப்பு கொடுத்தாலும் நன்றி சொல்வது நம் கடமை இருக்கிறது முதலில் அன்போடும் பாசத்தோடும் கட்டி அணைத்து என்னை வரவேற்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிக்க நன்றி...

மற்றவர்களையும் விழாவை பற்றியும் அடுத்த பதிவில் காணலாம். பதிவர் சந்திப்பை பற்றி நாங்களும் ஒரு வாரத்திற்கு பதிவு எழுதனுமல்ல...

இந்த தலைப்பை எனக்கு கொடுத்த அன்பு நண்பனுக்கு மிக்க நன்றி...

Thursday, August 23, 2012

பதிவர் சந்திப்பிற்கு போகலாமா? வேண்டாமா?


வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் அன்னை... இது உண்மை தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஊரில் இருந்து வேலை தேடி புறப்படும்போது சென்னை போகிறேன் என்ற பெருமையாக பேசுவோம் உண்மையாவா பட்டணத்துக்கு போறியா என்பார்கள்..

இன்று தமிழகத்தில் பல இலட்சம் இளைஞர்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகது.. தமிழில் எழுதும் பதிவர்கள் அநேகம் பேர் சென்னையில் தான் இருக்கின்றனர். சென்னையை பற்றி சொன்னால் பல பதிவுகள் எழுதலாம்.

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு அற்புதமான பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் மிக வரவேற்கத்தக்க செய்து இந்த சந்திப்பில் நமக்கும் நிச்சயம் பங்கு உண்டு. சென்னை பதிவர் சந்திப்பிற்காக நிறைய நண்பர்கள் வாங்க என்று தொலைபேசியில் அழைத்தனர் நிச்சயம் வருகிறேன் என்றேன். அதை விட முக்கியம் நிறைய பதிவர்களை இதுவரை பார்த்ததே இல்லை அவர்கள் வருகிறார்கள் என்றதும் மிக்க மகிழ்ச்சி..

நான் எழுதும் எழுத்தை படித்து பாராட்டும் ஊக்கமும், ஆக்கமும் தரும் நம் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது நாம் போகமல் இருக்கலாமா? அது தவறு அல்லாவா? அதனால் போகலாமா வேண்டாமா என்ற பேச்சிற்கே இடமில்லாமல் எல்லாரும் வாங்க சந்திப்போம்... சந்தோசமாக இருப்போம்...

வாங்க பழகலாம்... சென்னை சந்திப்புக்கு வாங்க மக்களே பழகலாம்...

இதுவரை வர முயலுகிறேன் என்று சொல்பவர்கள் கூட முயலாதீங்க புறப்பட்டு வந்திடுங்க.. நம்மை வரவேற்க காத்திருக்கிறது சென்னை, காத்திருக்கிறார்கள் சென்னை நண்பர்கள்.....

Tuesday, August 21, 2012

பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா??? தேவையே !! தேவையே !!


பதிவர் சந்திப்பிற்கு செல்லும் போது சரக்கு அடிக்கலாமா என்றால் நிச்சயம் அடிக்கக்கூடாது... ஆம் காலை 9 மணிக்கு பதிவர் சந்திபிற்கு செல்லும் போது அடிக்கக்கூடாது... காலை 9 மணி சந்திப்பிற்கு முந்தைய நாள் இரவு வந்து விட்டால் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்தே ஆக வேண்டும் இது தான் பதிவுலகில் எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன். அப்புறம் சந்திப்பு முடிஞ்சு வீட்டுக்கு செல்லும் போது நிச்சயம் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடனும் இல்லை என்றால் அது தப்பு...

இது வரை நான் சென்ற பதிவர் சந்திப்பிற்கு எல்லாம் இப்படித்தான் நடந்தது. ஆனாலும் இதை எந்த பதிவரும் தவறாக நினைத்ததாக தெரியவில்லை. குடியின் வேதனையை அறிந்தவர்கள்  இதைப்பற்றி எழுதி இருக்கலாம் அதை நாங்கள் கண்டு கொள்வதில்லை..

முதலில் குடிகாரன் என்பவன் தினமும் தான் சம்பாரிப்பதை குடித்து அழித்து வீட்டுக்கு ஒன்னும் கொடுக்காதவன் தான் குடிகாரன்.. ஆனால் என்னைப்போல் மாதம் ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை 4 பேக் அடிப்பவர்கள் எல்லாம் குடிகாரன் இல்லை என்பது என் கருத்து..

குடிக்கும் போது பாதியில் பொஞ்சாதி போன் செய்தால் அடிச்ச மப்பும் இறங்கிவிடுகிறது இப்படி பயந்து பயந்து குடிப்பவன் பதிவர் சந்திப்பிற்கு சென்றால் வீட்டில் அனுமதி வாங்கி நண்பர்களோடு அன்று தான் குடிக்க முடிகிறது இதப் போய் தப்பு என்கிறார்களே.

பதிவர் சந்திப்பிற்கு செல்கிறோம் என்றால் நீ வருகிறாய நீ வருகிறாய என்று ஒவ்வொருவரையும் கேட்டு சந்தோசமாக இரவே சென்று எல்லோரும் ஒன்று கூடி ஆளுக்கு ரெண்டு பெக் போட்டு விட்டு மனம் விட்டு பேசிட்டு அடுத்த நாள் சந்திப்பில் நண்பர்களை சந்தித்து விட்டு தேவையானதை பேசிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அரக்க பறக்க ஓடுகிறோம்...

இத விட்டுட்டு பதிவர் சந்திப்பிற்கு செல்கிறேன் என்று 4 நாள் ரூம் போட்டு வேலைக்கும் செல்லாமல் குடித்துக்கொண்டே இருந்தால் தப்பு என்று சொன்னால் ஒரு நியாயம் உண்டு...( எதிலும் நேர்மை இருக்கனும்...)

ஈரோடு சந்திப்பிற்கு தல மணிஜி வந்தார் அவரோடு சரக்கு சாப்பிட்டோம் இப்ப சென்னைக்கு நான் போகிறேன் மீண்டும் தலயோடு சரக்கு சாப்பிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. போகிற போக்கில் சந்திப்பதை விட இப்ப ரெண்டு பெக் விட்டுட்டு மனம் விட்டு பேசுவது தான் நிறைய மனதில் நிற்கிறது ( அப்படியே நாலு பதிவும் தேத்த முடியுது)

குடிக்கு ஆதராவ எழுதும் நான் குடிகாரனா என்று என் கதையை படிச்சிட்டு சொல்லுங்க மக்களே...

நான் முதன் முதலில் குடித்தது 10 வது படிக்கும் போது Black Knight BEER ரொம்ப கசப்பு 2 முழுங்கு தான் குடிச்சேன் அப்புறம் 5 நிமிடம் கழித்து மீதி பீரை குடிச்சேன் ஒன்னும் நடக்கல.. எப்பவும் போலத்தான் இருந்தேன் அப்பவே முடியு செய்தேன் ஒன்னும் நடக்காத இந்த பீரை காசு போட்டு குடிச்சு என்ன பிரயோசனம் என்று விட்டு விட்டேன்..

11ம் வகுப்பு படிக்கும் போது கோபியில் SKC Meridian Bar திறந்திருந்தாங்க வீட்டில் விடுதி மெஸ்பில்லில் பிட்டை போட்டு வாங்கி வந்து இங்கு குடிப்பது தான் பழக்கம் அங்க முதன் முதலாக குடிச்ச சரக்கு BP Gold (இப்ப இந்த சரக்கு வருவதில்லை ) அப்பவே 6 பெக் அடிச்சாலும் ஸ்டடியா இருப்பேன் இந்த பாரில் தான் மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நான் சைட் அடிச்ச பெண்ணின் தந்தை மிலிட்டரி மேன் என்பது மட்டும் தெரியும் (அந்த பெண் எண்ணை சைட் அடிக்கல அது தனிக்கதை) அவர் அந்த பாரில் குடித்துக்கொண்டு இருந்தார் நான் பள்ளி உடையிலேயே குடிக்க சென்றேன். அப்பவெல்லாம் மிக்ஸிங் கம்மியா போட்டுத்தான் குடிப்பேன் அதைப்பார்த்த அவர் எங்களுக்கு இப்படி குடிக்க கூடாது இப்படி மிக்ஸிங் போடனும் என்று சொல்லி கொடுத்தார்..

நான் மிலிட்ரியில் இருக்கேன் தம்பி குடிப்பது தவறல்ல ஆனால் அதிகம் குடிக்காதே குடிக்கு அடிமையாதே உனக்கு அது அடிமையாக பார்த்துக்கொள் வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று இருந்து கொள் என்றால் அப்புறம் மிலிட்டரியில் சரக்கு கொடுக்கறாங்களே என்று எதிர் கேள்வி கேட்டான் என் நண்பன் சிவா. அதற்கு அவர் சொன்னார்

மிலிட்டரியில் கொடுப்பது XXX RUM அதன் அர்த்தம் தெரியுமா என்றார் தெரியாது என்றதும் X இது என்ன என்றார் எக்ஸ் என்றேன் ரோமன் லட்டரில் என்றார் பத்து என்றேன்.. அப்ப XXX இது 30 என்றார்... அதாவது சரக்கை பெக் பெக்காக அடித்தால் Thirty Days Regular Useful Mediation இது தான் மீனிங். இத ஓவரா குடிச்சா அது பாய்சன். என்று அவர் சொன்னது இன்று வரை காதில் ஒலிக்கிறது.

அதற்கு பின் அப்ப அப்ப குடிப்பது கும்மாளம் அடிப்பது சென்னையில் இருக்கும் போது தான் கொஞ்சம் ஓவர் அப்புறம் கோவையில் ஆரம்பத்தில் ரொம்ப குடிச்சோம் முதலில் பார், அப்புறம் சாக்கனாக் கடை, அதன்பின் அறையில் சமைத்து குடிப்பது அதன் பின் ஊறுகாய் மைட்டும் வைத்து குடிப்பது, இருக்கும் பழ வகைகள் எல்லாம் வைத்து குடிப்பது என வித விதமாக குடிச்சு மகிழ்ந்தோம்.

திருமணத்திற்கு 5 நாள்க்கு முன் ஒரு செம பேச்சுலர் பார்ட்டி எங்க செட்டில் எனக்கு தான் முதல் திருமணம் அதனால் கலக்கலா இருந்தது அன்றில் இருந்து என் மகன் பிறக்கும் வரை சுமார் 2 வருடம் குடிக்கவில்லை அதன் பின் அப்ப நண்பர்களோடு சேரும் போது எப்படியும் 3 அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பீர் அல்லது ரெண்டு பெக் அவ்வளவு தான். என்னை மாதிரி தான் பல பேர் இருப்பாங்க இப்ப சொல்லுங்க நான் குடிகாரனா???

இப்ப நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன் ஆனா இன்னும் டிக்கெட் கன்பார்ம் ஆகல. ரொம்ப கஷ்டப்பட்டு பொஞ்சாதியிடம் அனுமதி வாங்கி இருக்கேன் அங்க வந்து தான் 4 பெக் போடனும் அதற்காகவாவது டிக்கெட் கன்பார்ம் ஆகுதான்னு பார்ப்போம்...

டிஸ்கி ரொம்பநாள் ஆச்சு பதிவு எல்லாம் ஹிட் ஆகி இது ஹிட் ஆகுதான்னு பார்ப்போம்....

Monday, August 20, 2012

குதிரை சந்தையும் படங்களும்...

 
6 இலட்சத்திற்கு வாங்கி நிறுத்தி உள்ளனர்.. இராஜஸ்தான் குதிரை
 
3 இலட்சம் பெறுமான குதிரை., ரேசுக்கு பயன்படுத்துகிறார்கள் 

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது

 
2 இலட்சம் பெறுமான குதிரை ஈரோடு லக்காபுரத்தில் இருந்து வந்தது...

 
6 இலட்சம் ரூபாய் பெறுமான இந்த குதிரை கர்நாடக மாநிலத்தில்


இருந்து வந்தது
 
ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் 4 இலட்ச ரூபாய்

 3 மாத குட்டியுடன் தாய் ஈரோடு அத்தாணியை சேர்ந்த குதிரை





4 இலட்ச ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர் புது முதலாளி என்பதால் அடங்காமல் செல்கிறது
6 இலட்சம் பெறுமான குதிரை திருச்சியை சேர்ந்தது


 
வெள்ளைக் குதிரை 8 இலட்சமாம்

 
இந்த குதிரை கிராசுக்காக கொண்டுவரப்பட்ட குதிரை..
ஒரு முறை கிராசுக்கு 7 ஆயிரம் ருபாய்




 
பின்னாடி நிற்கும் இரண்டு குதிரையும் தலா பத்து இலட்ச ரூபாய் மதிப்பு ஈரோட்டை சேர்ந்த குதிரைகள்...

முன்னாள் நிற்பது பவானியைச் சேர்ந்த குட்டி சிங்கங்கள்...

Thursday, August 16, 2012

சுதந்திர நாடு சோத்துக்கு கேடு


நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். சும்மா கிடைக்கவில்லை இந்த சுதந்திரம் இதற்குபின் எத்தனை உயிர் சேதங்கள் இருக்கின்றன எத்தனை வீரர்கள் இறந்துள்ளனர் எத்தனை பெண்கள் உயிர் இழந்துள்ளனர் என ஒவ்வொன்றையும் விரிவாக எழுதலாம், படிக்கலாம், அறியலாம்.
 
சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் பேசலாம் திட்டலாம் அதில் உண்மை இல்லை என்றாலும் பேசமுடியும் அவர்கள் வழக்கு தொடர்ந்தால் மன்னிப்பு கேட்டு எளிதாக அதில் இருந்து வெளிவரமுடியும். அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். 
 
 
வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.
 
அவர்கள் வாங்கித்தந்த இந்த சுதந்திரத்தால் தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாட முடிகிறது. சுதந்திரமாக ஈமு கோழி போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ளையடித்து பின் தலைமறைவாக முடிகிறது.
 
புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டுமா நமக்கு பிடிச்ச இடத்தில் வாடகைக்கு எடுத்தாவது நிறுவனத்தை நடத்தலாம்.

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.
 
ஊரில் திருவிழா என்றால் மைக் செட் கட்டி அனைவரது காது அடைக்கும் படி சத்தமாக விரும்பிய பாட்டு கேக்கலாம், நடனம் நாட்டியம் என விழா நடத்தலாம்.
 
புதிதாக வாகனம் மற்றும் எதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் யாருடைய உதவியுமின்றி சுதந்திரமாக வாங்க முடியும்.

சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத்தான் அதற்குபின் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் தான் இருக்கப்போகிறோம். இன்று உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்து சம்பாரிக்கும் நாம் இனி இறக்குமதி தான் செய்வோம் அல்லது அதற்காக ஒரு மாத்திரையை கண்டுபிடித்து சாப்பிடவேண்டியது தான். இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நமக்கு சோத்துக்கு கேடு தான். 
 

நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். 
 
ஆனால் இன்று நகர்புறங்களாகட்டும் கிராமங்களாகட்டும் இங்கு எல்லாம் காலியாக உள்ள இடத்தை மனை நிலங்களாக மாற்றி வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம்.இந்த மனைகளும் ஒரு நல்ல அமைப்பான மனையாக நிச்சயம் இருக்காது. வீட்டிற்கு முன் செடி கொடிகள் வளர்த்துவது போல் இருக்காது வீடுகட்டினால் வீட்டில் இருந்து எடுத்து வைக்கும் கால் ரோட்டில் தான் இருக்கும்.

காலி இடங்களை வீட்டு மனைகளாக்கினால் பரவாயில்லை விவசாய நிலம் முப்போகம் விளையும் நிலம் ( முப்போகம் என்பது ஆண்டு முழுவதும் விளையும் விளை நிலம்) இன்று மனைகளாக்கி இடத்தை கூறு போட்டு விற்கின்றனர். இது தான் கொடுமையான விசயமும் கூட.. நாம் சோத்துக்கு சிங்கி அடிக்க வைப்பதும் இது தான்..

விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...
 
இப்போது சாப்பிடு அரிசி இன்னும் 10 வருடங்கள் கழித்து இறக்குமதி செய்து தான் சாப்பிட வேண்டி இருக்கும்...

அஞ்சறைப்பெட்டி 16/08/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
கடந்த வாரம் திருவிழாவிற்காக ஊர் சுற்றும் போது காலையில் ஊர் தள்ளி இருக்கும் கோயிலுக்கு சென்றேன் செல்லும் வழியில் கார் பாஸ் கொடுத்து 20 ரூபாய் வசூல் செய்து கொண்டு இருந்தனர் என்னடா இது இங்க ஸ்டேண்டும் இல்ல கோயிலுக்கு போற வழி இது ரோடு பழையரோடு இதற்கு எதுக்கு பணம் என்று என்னிடம் வந்ததும் எதுக்கு பணம் நாங்க கோயிலுக்குத்தானே போகிறோம் என்றதும் டெண்டர் எடுத்து இருக்கிறோம் என்றார். நான் லோக்கல் தான் பணம் தரமுடியாது என்றதும் அண்ணே நீங்க போங்க போங்க டேய் அடுத்த வண்டியை பாரு என்றனர் அன்று கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் கிடா பொங்கலுக்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் தான் கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட கார்கள் இருந்திருக்கும் செம்ம வசூல் ஓசியிலேயே செய்துவிட்டர்கள் அதுவும் அவர்களின் வசூல் நேரத்தி பாருங்க காலை 5 மணி முதல் 8 மணி வரை தான் வசூல்.

ஏற்கனவே சென்னையில் இதே அனுபவம் பெற்று இருக்கிறாத் நம்ம ஆரூர் முனா செந்தில் அவர்கள்... மக்களே எங்க போனாலும் வண்டிக்கு பாஸ் போடும் போது நிதானமாக ஏன் வாங்குகிறான் என்று பார்த்து வாங்குங்க..

10 ரூபாய் தான் என்றாலும் முடியாத பெரியவர்களுக்கு போட்டால் நிச்சயம் கோடி புண்ணியம்... இவர்களுக்கு கொடுத்தால் யாருக்கும் புண்ணியமில்லை TASMAC க்கு தான் புண்ணியம்...
...............................................................................................

இப்போது ரொம்ப கிளி அடைந்தவர்கள் கிரானைட் அதிபர்கள் தான் தினமும் ஒரு அரைப்பக்கத்துக்கு இவர்களைப்பற்றியான செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றது. 16 ஆயிரம் கோடி ஊழல் என்கின்றனர். இதுக்கு எத்தனை சைபர் என்று எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

..........................................................................................

கேப்டன் தினமும் ஒவ்வொரு ஊராக சென்று தினமும் செய்திகளில் அடிபடுகிற மாதிரி நிறைய பேசுகிறார். விருத்தாச்சலத்துக்கு என்ன செய்தார் என்று தான் புரியலை.
................................................................................................

  இந்த வருடம் சுதந்திர தினம் வார நாட்களில் வந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சி தான் வார நாட்களில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் மாதிரி ரொம்ப சந்தோசமாக இருக்கு.. குடும்பத்தினருடன் இந்த நாளை செலவிட்டதில் மிக்க மகிழ்ச்சியே...
...............................................................................................

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார்.

பின்னர், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் செயற்கை கருவூட்டல் (டெஸ்ட்டியூப்) செய்து கொண்டார். அதை தொடர்ந்து கர்ப்பம் ஆன அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இக்குழந்தை பாலஸ்தீனத்தில் நப்லஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. இதை அறிந்த அம்மர் அல்ஷபன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சந்தோஷப்பட்டார்.

பலமுறை உயிரணுவை கடத்தி செயற்கை கருவூட்டல் தோல்வி அடைந்ததாகவும் பின்னர் வெற்றிபெற்று தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து, பாலஸ்தீன சிறை கைதிகள் நலத்துறை துணை மந்திரி ஷியாத்அபுகன் கூறும்போது, பாலஸ்தீன சிறை கைதிகளுடன் அவர்களது மனைவிகள் செக்ஸ் உறவு கொள்ள இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
...............................................................................................

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.

இவற்றில் இருந்து விடுபட தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள மாஸ்டிரிச்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் தலைவலி பிரச்சினையால் அவதிப்படும் 100 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினர். தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நன்றாக தூங்க வேண்டும். காபி குடிப்பதை பாதி அளவாக குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இவை அனைத்தையும்விட தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்வதை விட 1 1/2 லிட்டர் தண்ணீரை கூடுதலாக குடிக்க வேண்டும். இதை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

இவற்றை பின்பற்றிய நோயாளிகளுக்கு தலைவலி குணமாகியது. அதன் மூலம் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிப்பதே சிறந்த மருந்து என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 ..................................................................................................

மனைவி உங்களிடம் அன்பாக இருக்கிறாரா? என்பதை அறிய வேண்டுமா? அதற்கு மிக எளிய வழி உள்ளது. அதாவது மனைவி தனது கணவரிடம் எப்போதும் ஏதாவது சிறு குறை கண்டுபிடித்து வாக்குவாதம் மற்றும் சண்டை போட்டு கொண்டிருக்கக்கூடாது மாறாக தனது கணவரை அரவணைத்து அடிக்கடி முத்தமிடுபவராக இருக்க வேண்டும். இவர்தான் அன்பான மனைவி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 168 ஜோடிகளிடம் மேற்கண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் அன்பை வெளிப்படுத்த பல வழிகளை கையாள்கின்றனர். ஆனால் பெண்களோ கணவன் மார்களை கட்டியணைத்து முத்தமழை பொழிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 ..................................................................................................

சென்னையில் நடைபெறும் பதிவர் சந்திப்புக்கு இந்த முறை வரலாம் என்று இருக்கிறேன்.. 25ம் தேதி சனிக்கிழமை இரவில் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்... வருபவர் தகவல் தெரிவிக்கவும் சந்திப்போம்...

தகவல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும் நிபுணர்கள் சூரியவெளிச்சம் படாமல் ஏ.சி ரூமிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்கு முதுகுவலி வரும் என்கின்றனர்.

அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மசாஜ் செய்வதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என்று கூறும் நிபுணர்கள். வெள்ளைப் பூண்டு எண்ணெயை வைத்து முதுகுப்புறங்களில் மசாஜ் செய்யலாம் என்கின்றனர். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி குடிப்பதன் மூலம் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.

வைட்டமின் ‘டி சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனுக்கு சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு வைட்டமின் `டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் `டி' முக்கியத் தேவை.


வைட்டமின் `டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி `சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான். இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே வைட்டமின் `டி' சத்து நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே!. எனவே உடலில் குறிப்பிட்ட அளவு சூரிய வெளிச்சம் படாமல் வாழ்பவர்கள் முதுகுவலியினால் அவஸ்தைப் படவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரியவெளிச்சம் உடலில் படவேண்டும் என்பதற்காகவே அதிக தூரம் நடந்தே பயணம் செய்வார்கள். கடற்கரையில் சூரியக்குளியல் நடத்துவார்கள். ஆனால் நம் ஊரில் எளிதாக மிக மலிவாக காசு செலவில்லாமல் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை நாம் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர்  புதுக்கோட்டை ஞானாலயா என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதி வருகிறார். இவர் பல அறிய நூல்களை பாதுகாத்து வருகிறார் அதைப்பற்றியான பதிவுகளை பதிவுகளில் பதிந்து வருகிறார். அவரைப்பற்றி, அவரது நூர்களைப்பற்றி காண...

http://www.gnanalaya-tamil.com/
 
தத்துவம்
 
நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது.

அறிவு மவுனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும்

Monday, August 13, 2012

2000 குதிரைகளுடன் கோலாகலமாக நடந்த குதிரை சந்தை...

 
குருநாதசுவாமி கோயில் இந்த இடம் அந்தியூரில் இருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
 
 குதிரைகள் விற்பனைக்காக போடப்பட்ட ஸ்டால் இதே போல் 5 வரிசையில் குதிரைகள் விற்பனைக்கா கொண்டுவரப்பட்டு இருந்தது..
 
ஸ்டாலில் இடம் இல்லாத குதிரைகள் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது...
 
குதிரைக்கான கடிவாளங்கள், சாட்டைகளும், மாடுகளுக்கான சாட்டைகளும்

3 சுழி கொண்ட 1 மற்றும் 2 இலட்சம் விலையுள்ள குதிரைகள்
 
 4 சுழி கொண்ட 4 இலட்சம் விலையுள்ள குதிரைகள்

4 சுழி மற்றும் ஓட்டத்துக்கு பலக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் 4 இலட்சம் முதல்


2 முதல் 5 இலட்சம் வரை தரத்திற்கு தகுந்த குதிரைகள்


சாரட் வண்டிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட வண்டிகள்


 குதிரைகளை வாங்கலாமா என்று யோசிக்கும் பிரசன்னா...

 இந்த குதிரை விற்பனைக்கு அல்ல

அடுத்த பதிவில்
தரம் வாரியான குதிரைகளும் அதன் விலைகளும்...
காங்கேயம் காளைகளும் அதன் விலைகளும்...........
திருவிழா மற்றும் கிடாவிருந்து புகைப்படங்கள்...... விரைவில்...