Tuesday, August 7, 2012

செவ்வந்தி


12ம் வகுப்பு படிக்கும் பருவ மங்கை செவ்வந்தி சேவானூர் மிராசுதாரின் செல்ல மகள் சேவானூரைச் பற்றி சொல்ல வேண்டுமானால் பேருந்தை பார்க்காத குக்கிராமம் பேருந்துக்கு செல்ல 3 கிலோ மீட்டர் வந்து தான் செல்லவேண்டும். அந்த ஊரில் இரண்டு கடைகள் தான் உண்டு ஒன்று பாப்பாத்தியின் பெட்டிக்கடையும், சொக்கனின் சைக்கிள் கடையும் தான். பாப்பாத்தி ஓலைக்குடிசையிலும், சொக்கன் ஓட்டை பெட்டியிலும் கடை வைத்திருந்தனர்.

மற்றபடி இந்த ஊரில் வசிக்கும் மக்கள் எல்லாம் ஒரே இனம் தான் எல்லாரும் பங்காளி முறையில் உள்ள உறவுக்காரர்கள். தண்ணிர் டேங்க், பஞ்சாயத்து டிவி ரூம், மோட்டார் ரூம், பால் சொசைட்டி திண்டு என இருக்கும் இந்த ஊர் ஏழு மணிக்கே உறங்கிடும்.

செவ்வந்தியின் அப்பா மிராசு என்றாலும் எந்த வம்பு தும்புக்கும் போகதவர் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். ஊரில் இருப்பவர்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்றும் அவர்கள் கடன் கேட்டு வந்தால் படிப்புக்கு என்றால் உடனே கொடுத்து திருப்பி வாங்கும் போது பாதி தான் வாங்குவார்.

அவரும் செவ்வந்தியை நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே படி படி என்று படிப்பு மேல் அக்கறை கொண்டு படிக்க வைப்பார்.

செவ்வந்தி குறும்புக்காரி அந்த ஊரில் எல்லாரிடமும் சகஜமாக பழகுவாள் கிண்டல் கேலி என தன்வயதை ஒத்த தோழிகளோடு சுற்றுவாள். செவ்வந்தி மேல்நிலை முடித்ததும் கல்லூரி செல்ல வேண்டும் என முடிவில் இருந்தால் அதே ஊரில் இருக்கும் விஜியும் அவளுடன் தான் படித்தான் இவன் சொக்கனின் மகன். இவன் நன்றாக படிப்பதால் செவ்வந்தியும் அவனுடன் படிப்பில் சந்தேகம் கேட்பாள்.

இருவரும் கல்லூரி செல்ல ஒரே இடத்தில் இடம் கிடைத்தது சொக்கனின் மகனுக்கும் செவ்வந்தியின் அப்பா தான் பணம் கட்டி படிக்க வைத்தார். கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த இருவரும். முதல் இருவருடம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது கூட இருக்கம் நண்பர்களின் உசுப்பேத்தி உசுப்பேத்தி விஜியை காதலிக்க வைத்தனர். ஆனால் இவனுக்கோ செவ்வந்தியிடம் காதலை சொல்ல பயம் அவள் அப்பதான் நம்மை படிக்க வைக்க உதவுகிறார் உண்ட வீட்டுக்கு எப்படி தூரோகம் செய்யலாம் என்று அதைப்பற்றியே யோசிக்கும் போது 4 வருடம் கல்லூரி முடியப்போகிறது அவன் அப்போதும் சொல்லவில்லை.

அவன் காதலை சொல்லவில்லை  ஆனாலும் இவனை உசுப்பிவிட்ட நண்பர்கள் அப்படியே பத்தி போட அது செவ்வந்தியின் சித்தப்பா மகன் காதில் விழுந்தது அப்படியே வீட்டில் செய்தி பரவ விஜியை தனியாக வரச்சொல்லி விசாரித்தனர் விஜி இல்லவே இல்லை என்று எப்படி உங்களுக்கு துரோகம் செய்வேன் என்று கதற அவனை மிரட்டி இனி அதிகம் உன்னை ஊர்பக்கம் பார்க்க கூடாது என்று மிரசுதாரரை விட அவர்கள் பங்காளிகள் மிரட்டி அனுப்பினர்.

வீட்டில் ஒரிருநாட்களுக்கு பின் செவ்ந்தியை அன்பாக அவள் அப்பா விசாரிக்கும் போது அவள் தன் மனதில் இருந்ததை சொல்லிவிடலாம் என்று ஆமாப்பா எனக்கு அவனை பிடிச்சிருக்கு எனக்கு சமமாக படித்துள்ளான் என்று அவள் கூற மிராசு மிரண்டார். விஜிக்கு இதில் சம்மதமா என்று அவர் கேட்க ( அவனும் காதலிக்கிறேன் என்று சொன்னாள் தான் நம் அப்பா இத்தனை நாள் நாம் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தவர் இதையும் கொடுத்திடுவார் என்று எண்ணி அவனும் என்னை காதலிக்கிறான் என்று பொய் சொன்னாள்) இதைக் கேட்ட மிராசு கவனமாக இதை யாரிடமும் சொல்லாதே நேரம் வரும் போது நானே பேசுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.

செவ்வந்திக்கு சந்தோசத்திலும் சந்தோசம் அப்பா இது வரை நம் பேச்சை மீறியதில்லை என்று ஆனால் மிராசுவே என்ன செய்யலாம் பையன் நல்ல பையன் தான் நாம் ஒத்துகிட்டாலும் நம் சாதி சனம் ஒத்துக்காது இதை எப்படி தீர்ப்பது என்று மனதில் அசை போட்டுக்கொண்டே இருந்தார். அடுத்த நாள் அவர் பங்காளிகளிடம் விசயத்தை கூற அவர்களும் இப்போதைக்கு ஆறப்போடு நாம் அவ்வளவு கேட்டும் அன்று அவன் இல்லை என்று சொல்லிவிட்டான் நம் பொண்ணு இருக்கு என்கிறாள் இதில் எங்கியோ தவறு நடக்கிறது என்று இனி ஆகவேண்டியதை பார்க்கலாம் என்றனர்.

செவ்வந்திக்கு வேலை கிடைத்து பெங்களுர் செல்ல விஜிக்கு வேலை சென்னையில் இருவரும் எப்போதும் போல சொல்லிவிட்டு அவர் அவர் வேலைக்கு சென்றனர் விஜி அவங்க வீட்டில் அவனை மிரைட்டியதை சொல்லலாமா என்று யோசித்துவிட்டு வேலைக்கு சென்று முதலில் செல்போன் வாங்கிய பின் இதை அவளிடம் சொல்லாம் என்று செவ்வந்தியை வழி அனுப்பிவிட்டு திரும்பினான். திரும்பி வரும் போது எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரேக்டர் அவன் மீது மோதி தூக்கி வீச அங்கேயே பரிதாபமாக இறந்தான்.
இந்த வண்டியை ஓட்டிவந்தவர் மிராசுவின் பங்காளிகளின் ஒன்னு விட்ட மச்சான்.

இந்த விபத்தை எதிர்பாராத விபத்து என்று கேசை மூடினர்.

விஜி சென்னை சென்று முதல் மாத சம்பளத்தில் செல்போன் வாங்கி நம்மிடம் நிச்சயம் காதலை சொல்வான் என்று எண்ணி காத்திருந்தாள் செவ்வந்தி. முதல் போனிலேயே அவனிடம் காதலை சொல்லிடவேண்டும் என்று காத்திருந்தாள்...

ஒரு மாதம் கழித்து ஊருக்கு வந்தாள் ஊர் எப்போதும் போலத்தான் இருந்தது இந்த வாரம் விஜி வந்திருப்பான என்று அவன் வீட்டை பார்த்தவாரே அவள் வீடு சென்றாள். அடுத்த நாள் காலை தான் அவள் அம்மா விசயத்தை சொன்னாள். நெஞ்சடைத்து திக் என்று இருந்தது அவளுக்கு என்ன அம்மா சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியாமல் எல்லாம் கேட்டு உள்ளே சென்று கண்ணீர் விட்டாள் அவள் அப்பா வந்ததும் அவரை என்ன நடந்தது என்று கேட்க இவர் நடந்ததை சொன்னார் நீங்க தானே மாமவை கொல்ல சொன்னீங்க என்று கேட் இவர் இல்லை என்று மறுத்து அன்று முழுவதும் அவளுடன் மன்றாடி சமாதானப்படுத்தினார்.

இரண்டு நாள் விடுமுறை கழித்து செல்கையில் அந்த விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது அவளையும் அறியாமல் கண்ணீருடன் ரெயில் நிலையம் சென்றாள். ரெயில் வரும்போது அவள் அப்பாவிடம் போய் வருகிறேன் என்று சொல்லி ஒடும ரயிலின் முன் பாய்ந்து அப்பாவின் கண் முன்னே கரைந்தாள் செவ்வந்தி....

11 comments:

  1. எதிர்பாராத விபத்தா...?

    முன்னே நடந்தது கொலை...
    பின்னே நடந்தது கொடுமை...

    ReplyDelete
  2. ம்ம்ம் சோகமான காதல் கதை :(

    ReplyDelete
  3. அநியாயத்துக்கு ரெண்டு உயிர் போயிருச்சே:(

    ReplyDelete
  4. கற்பனை கலவாத இயற்கைச் சம்பவம் போன்றது கதை.
    ரசித்துப் படிக்க முடிகிறது.
    சிறுகதைக்குரிய வடிவமைப்பில் கவனம் செலுத்தினால் கதை மேலும் சிறக்கும்.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  5. கதையை சோகமாய் முடிக்க வேண்டுமா?

    கதை நன்றாக இருக்கிறது ஆனால் முடிவு !

    உண்மையில் நடக்காத முடிவை கதையிலாவது கொடுத்தால் என்ன?
    செவ்வந்தியின் அப்பா பரந்த மனம் உடையவராய் இருந்து இருக்கலாம்.

    ReplyDelete
  6. ஜாதி பிரித்தகாதல் கதை சோகம்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  7. அடடா.. முடிவு பரிதாபமா இருக்கு..

    ReplyDelete
  8. சோகமோ சோகம் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

    ReplyDelete
  9. பெரும்பாலான காதல் விவகாரங்க்கள்
    இப்படித்தான் முடிக்கப்படுகின்றன என்பதுதான் நிஜம்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. காதல் - அன்பு வைக்கிறதே பாவமா என்கிறமாதிரி ஆகுது.கதைமாதிரியே இல்லை சங்கவி !

    ReplyDelete
  11. இப்போதும் நடக்கும் சாதி ,அந்தஸ்து பேத காதல் பிரிப்பு கொலைகளை கண் முன்னே காட்டியது இந்தக் கதை ...இல்லை உண்மை நிகழ்வு.

    ReplyDelete