Sunday, August 12, 2012

கல்யாணமாகும் கன்னிப்பையன்களுக்காக...


கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை களை முகத்தில் வந்துவிடும். நம்மாளுகளில் உடலை கட்டுக்கோப்பா வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் எல்லோரும் ஜிம்முக்கு போவதில்லை தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என எதுவும் மேற்கொள்வதில்லை. 

திருமணம் என்ற பேச்சை எடுக்கும் முன் நம் கன்னிப்பையன்கள் எல்லாம் தினமும் நல்லா மூக்கு பிடிக்க தின்று விட்டு கவுந்தடிச்சு தூங்குவது தான் வேலை. தூங்கி எழுந்ததும் விழிப்பது சிகரெட்டில் தான் அப்படியே ஒரு தேநீர் அருந்தி விட்டு குளிச்சு ஆயா கடையில் 2 இட்லி சாப்பிட்டுட்டு அரக்க பறக்க அலுவலகம் செல்வார்கள் அங்கு மதியம் கிடைப்பதை சாப்பிட்டு விட்டு மாலை வேலை முடிந்ததும் நேராக செல்லும் இடம் மது அருந்த தான் அதுவும் வசதிக்கு  தகுந்தாற்போல் மாறும்.

பல நேரம் தங்கும் அறையிலும், அப்புறம் விதவிதமான பார் கடைசியில் சாக்கனாக்கடை என்று ஒவ்வொரு இடமும் ஓர் அனுபவமாக இருக்கும். வெளியூரில் தங்கி வேலைக்கு செல்லும் போது இப்படித்தான் இருந்தது என் அனுபவம்.

திருமணம் என்ற பேச்சை எடுத்ததும் எப்படி தொப்பையை குறைப்பது பீரும், கள்ளும் சாப்பிட்டதால் வந்த பரிசு அது. என்று நினைக்கையில் அனுபவமே சிறந்த அரு மருந்து என என் நண்பரைக் கேட்டேன் அவர் சிலது சொன்னார் நான் சிலது செய்தேன் நினைத்தை அடைந்தேன் அந்த டிப்ஸ் உங்களுக்கு சொல்றேன் முயற்சி செய்யுங்க...

தினசரி செய்யவேண்டியவை

தினமும் காலை தூங்கி எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் பின் குடிக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கொஞ்சம் வேகமான நடைபயணம்.
வீட்டிற்கு வந்ததும் ஒரு அரை மணி நேரம் தசைப்பயிற்சி.

காலை உணவாக 4 இட்லி அல்லது 2 தோசை.
11 மணிக்கு 1 கப் கீரை உடன் வேகவைத்த முட்டையின் வெள்ளைபகுதி 2.
மதியம் 1 கப் சாப்பாடு, சாப்பாடு அளவிற்கு கீரை உடன் ஏதாவது ஒரு காய்கறிகள்.
பச்சை தேநீர் 1 கப் உடன் கோதுமை ரொட்டி 2 துண்டு
இரவு 7 மணிக்கு 3 சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும்.
படுக்கும் போது பசித்தால் 2 கோதுமை ரொட்டி துண்டுகள் மட்டும்.
இதற்கு இடையில் பசித்தால் வெள்ளரிபிஞ்சு, கேரட், பீட்ரூட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

6 முதல் 7 மணி நேர தூக்கம் போதுமானது

எண்ணெய்யில் பொறித்த பண்டங்கள் சாப்பிடக்கூடாது முக்கியமாக போண்டா, பஜ்ஜி மற்றும் வறுத்த பண்டங்கள்..

காலை எழுந்து ஒரு 10 நிமிடம் ஓட முயற்சி செய்யலாம். அப்போது தான் தொடை எல்லாம் இறுகும் இது கட்டாயம் இல்லை முயற்சி செய்யலாம்..

இந்த முறையை திருமணத்துக்கு முன் 4 மாதங்களாக கடைபிடித்தேன் 76 கிலோ இருந்த நான் 68 கிலோவாக மாறிவிட்டேன். தொப்பையும் கொஞ்சம் உள்ள போக அப்போது தான் மாப்பிள்ளை களை வந்தது போல் இருந்தது...

கல்யாணம் ஆனவுடன் கவலைப்படவேண்டாம்  சில ஆண்டுகளுக்கு இதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு கட்டு கட்டுன்னு கட்டவும். இது புதுமாப்பிள்ளைகளுக்கான அனுபவ பதிவுங்க. முயற்சி செய்யுங்க முடியாதது இல்லை...

19 comments:

  1. மாப்பிள்ளை மட்டும் இல்லங்க எல்லோருமே செய்ய வேண்டிய பயிற்சிகள் ஆரோக்கிய குறிப்பு அருமை.

    ReplyDelete
  2. வேலைக்கு தேர்வாகணும்னா கூட இந்தளவுக்கு டிப்ஸ் இருக்காது.. ஆனாலும் ரொம்ப கெடுபிடியா இருக்கே..

    ReplyDelete
  3. நான் ஏதோ பொண்ணு பாத்து குடுக்கரிங்கனு பாத்தா........போங்க சார்....

    ReplyDelete
  4. நல்லதொரு அனுபவ பகிர்வு... ஆனால், அனைத்தும் உண்மை... நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 3)

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. இது மட்டும் சக்ஸஸ் ஆனாஉங்களுக்கு கோயில் கட்டலாம்

    ReplyDelete
  6. நல்ல வேளை,,,இது நமக்கான பதிவு இல்லை...

    ReplyDelete
  7. நமக்கு இது தேவையில்லை ஏன்னா நாங்கெல்லாம் டெய்லி வாக்கிங் போற குரூப்!

    ReplyDelete
  8. அனுபவப் பதிவு என்பதால்
    நானும் கடைபிடிக்கலாம் எனப் பார்க்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நல்ல பதிவு. நிறைய உண்மைகளை சொல்லி இருக்கிறீர்கள். நடைபயிற்சி என்றது, பலர் மெதுவாக பேசிக்கொண்டு நடப்பதை பார்த்து இருக்கிறேன். அது எதற்கும் உதவாது.

    நீங்கள் தெளிவாக, வேகமான நடைபயணம் (Brisk Walking ) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். வேகமான நடைபயணம் செய்வதால் மட்டுமே, பலன் உண்டு. நன்றி.

    ReplyDelete
  10. அருமையான உபயோகமான இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான கருத்து ........உங்களின் அனுபவங்கள் ஊருக்கே பயன்படுகிறது

    ReplyDelete
  11. அருமையான உபயோகமான இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான கருத்து ........உங்களின் அனுபவங்கள் ஊருக்கே பயன்படுகிறது

    ReplyDelete
  12. ரெண்டாவது கலியானதுக்கும் இந்த முறை பயன்படுமோ

    ReplyDelete
  13. உபயோகமான தகவல்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

    ReplyDelete
  14. ம்ம் நல்ல டிப்ஸ் தான் போங்க

    ReplyDelete
  15. பெண்களுக்கும் டிப்ஸ் கிடைக்குமோ சங்கவி !

    ReplyDelete
  16. அனைவருக்குமான அருமையான டிப்ஸ்

    ReplyDelete