Wednesday, August 8, 2012

அஞ்சறைப்பெட்டி 09/08/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
ஒலிம்பிக்கில் சாய்னாவிற்கு கிடைத்தது வெங்கலப்பதக்கம் மிக மகிழ்ச்சிக்குரியது ஆனால் நம் நாட்டினர் தங்கப்பதக்கம் வாங்கவில்லை என்ற வருத்தம் மிக இருக்கிறது..

100 கோடி பேரில் ஒருவர் கூட தங்கம் வாங்க ஆள் இல்லையா என்று மனது ஏக்கம் அளித்தாலும் இதற்கு நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது.. ஏன் எனில் இன்று அரசாங்க பள்ளியைத் தவிர ஏனைய தனியார் பள்ளிகளில் 80 சதவீத பள்ளிகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெற்றோர்களும் விளையாட்டை ஊக்குவிப்பதில்லை தன் குழந்தை இன்ஜினியர் ஆகனும் டாக்டர் ஆகனும் என்று சொல்வார்களே தவிர என்பிள்ளை ஒலிப்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் நிச்சயம் சொல்வதில்லை.

இந்நிலை என்று மாறுகிறதோ அன்று பதக்க பட்டியலில் முதல் 10 இடத்தில் நிச்சயம் நம் இந்தியாவிற்கு இடம் உண்டு.


..............................


 
ஈமு கோழி வளருங்க கோடீஸ்வரன் ஆகுங்க என்று பணத்தை கொட்டி விளம்பரம் கொடுத்தனர் இதையும் நம்பி நம்மக்கள் குருவி சேர்த்தாற்போல் சேர்த்த பணத்தை எல்லாம் கொண்டு போய் ஈமு என்னும் ஏமாற்றுக்காரர்களிடம் பணத்தை கொட்டிக்கொடுக்க கோடிகளில் புரண்ட அவர்கள் நடிகைகளை கூட்டுவந்து நடிகர்களை கூட்டிவந்து விளம்பரப்படுத்தினர் இன்று கொட்டிக்கொடுத்தவர்கள் எல்லாம் காவல்நிலையத்தில் என்பணத்தை வாங்கிக்கொடுங்க என்று வரிசையில் நிற்கின்றனர் இது தேவையா.

முதலில் இந்த மாதிரி திட்டமே தவறு இவர் கோழிவளர்ப்பதற்கு நாம் முதலீடு செய்ய வேண்டுமாம் அதில் வரும் இலாபத்தில் இவர்கள் நமக்கு மாத மாதம் பங்களிப்பார்களும் இதையும் நம்பி நம் மக்கள் முதலீடு செய்தனர் இன்று எல்லாம் அம்போ சிவ சிவ...


..............................

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தற்போது கொஞ்சம் சூடுபிடித்துள்ளாதல் கபினியில் இருந்து மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது ஆனால் போதிய அளவில் அதிகரிக்கவில்லை... கர்நாடகாவில் கொட்டினால் தான் இங்கு விவசயாம்...வருண பகவான் கடைக்கண் காட்டுவாரா...
..............................




பூமியில் இருந்து 57 கோடி கி.மீட்டர் தூரத்தில் உள்ள சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அங்கு மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா? என ஆராய சில விண்கலன்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.

எனவே, மேலும் தீவிரமாக ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பினர். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரூ.12 ஆயிரம் கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன விண்கலம் சுமார் ஒரு டன் எடை கொண்டது.

மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்ற இந்த விண்கலம், நேற்று செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப்பகுதியில் கேலே பள்ளத்தாக்கில் தரை இறக்கப்பட்டது. அங்கு 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்திய விஞ்ஞானி அமிதாப் கோஷ் என்பவரும் உள்ளார். இவர்தான் கியூரியாசிட்டி விண்கலத்தை கேலே பள்ளத்தாக்கில் இறக்குவதற்கான இடத்தை தேர்வு செய்தார்.

இந்த விண்கலம் இறக்க தகுதியான இடம் இதுதான். இறங்கும்போது செவ்வாய் கிரகத்தின் தரையில் மோதி நொறுங்காது என முடிவெடுத்து அவர் இந்த இடத்தை தேர்வு செய்தார்.

இதற்கிடையே கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது. அதில், கியூரியாசிட்டி விண்கலத்தின் நிழல் இருப்பது தெரிகிறது. எனவே, அந்த விண்கலம் பத்திரமாக உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

அணுசக்தியில் இயங்கும் அந்த விண்கலத்தில் நவீன ஆய்வு கூடம் உள்ளது. லேசர் கதிர் கருவி, பாறையை துளை போடும் கருவி உள்ளிட்ட 10 முக்கிய கருவிகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய்க்கிரகத்தில் கல், மண் போன்வற்றை வெட்டி எடுத்து ஆய்வு செய்து இதுபற்றிய விவரங்களை பூமிக்கு அனுப்பும். மேலும் 2 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து ஆய்வு நடத்தும்.
 
..............................


கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும் போது முககவசம் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்ற இருக்க வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் வரும் போது சீட் பெல்ட் அணிந்திருக்கவேண்டும் இல்லையேல் உள்ளே அனுமதி இல்லையாம். இதைக்கேள்விப்பட்டதும் மிக்க மகிழ்ச்சியே இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பத்தான் நம்ம பசங்க கொஞ்சம் வேகமாக சென்றாலும் தலைக்கவசம் உயிர்கவசம் போல் காப்பாற்ற வாய்ப்பிருக்கல்லவா..

இதோ போல் எங்கள் அலுவலகத்திலும் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என்று சொல்லி உள்ளனர் இதுவும் மிக வரவேற்கத்தக்க செய்தியே...


..............................

அடுத்த ஊழல் ஒன்று நம் அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்க இருக்கிறது அது மதுரை கிரானைட் வழக்கு. இந்த வழக்கின் செய்திகளை தினமும் படிக்கும் போது இது ஒரு சின்ன ஸ்பெக்ரம் போல் உள்ளது.. அத்தனை மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. சமீபத்தில் நடக்கும் ஊழல்கள் எல்லாம் குறைந்த பட்சம் 1000 கோடிக்கு மேல் தான் உள்ளது... இலட்சத்தை எல்லாம் இப்போது மறந்துவிட்டோம்....

 .............................

நம் ஊரில் எதாவது தவறு செய்து விட்டால் உனக்கெல்லாம் யாருடா வாத்தி என்பார்கள். பெற்றோர்களை திட்டுவதை விட பள்ளி ஆசிரியர்களைத்தான் முதலில் திட்டுவார்கள். உனக்கு பள்ளியில் இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாங்களா என்று பள்ளியைப்பற்றியான திட்டுக்கள் தான் அதிகம் இருக்கம். குழந்தைகளுக்கு பெற்றோரை விட சொல்லித்தருவதில் பெரும் பங்கு ஆசிரியர்களுக்குத்தான் உண்டு.. 
அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அதுவும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வரும் கல்வி உதவி தொகையை கையால் செய்துள்ளார்கள் அதுவும் 77 பேர். இவர்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்து எந்த தொகையும் கைக்கு கிடைக்காதபடி உள்ளே தள்ளவேண்டும்.. அப்போது தான் மற்ற ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மேல் அக்கறை வரும்... குரு என்ற பெயரை கேவலப்படுத்தி விட்டனர் படுபாவிகள்...

..............................

சமீபத்தில் நடக்கும் விபத்துக்கள் எல்லாம் கட்டுமானப்பணிகளில்தான் அதிகம் நடைபெறுகிறது இதுபற்றி ஒரு கட்டுமான உரிமையாளரிடம் பேசும் போது அவர் கூறியது இப்போது வேலை செய்பவர்கள் எல்லாம் பீகார், ஒரிசா, மேற்கு வங்க ஆட்கள் தான் அதிகமாம் அவர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள் எனவும், பின் சோர்ந்து போய் வேலை பார்ப்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது என்றார். 


வெளிமாநிலத்து ஆட்கள் என்றாலும் அவர்களையும் மனிதர்களாக நினைத்து கொஞ்சம் ஓய்வு கொடுத்து வேலை வாங்குங்க சார்...

..............................




 
புகழ் பெற்ற அந்தியூர் குதிரை சந்தை நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான குதிரையை காண இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு உள்ளனர். இத்திருவிழா மற்றும் புகைபடங்களுடன் வரலாற்றை விரைவில் பதிவு செய்ய இருக்கிறேன்.. வர இயலாதவர்களுக்கு இந்த பதிவுகள் நேரில் திருவிழாவை கண்டது போல் இருக்கும்.... காத்திருங்கள்....


தகவல்

அது அல்ட்ரா ஒலியுடன் கூடியது. இந்த ஒளி 6 மைல் தூரத்தில் இருக்கும். ஆண் மற்றும் பெண் யானைக்கு கேட்குமாம். அதை வைத்து தங்கள் இணை (ஜோடி) இருக்கும் இடத்துக்கு வருகின்றன. இவ்வாறு யானைகள் எழுப்பும் சத்தம் மிகவும் குறைந்த ஒலி அளவாக அதாவது “20 ஹெர்ட்ஷ்” அளவில் உள்ளன.

அவை யானைகளுக்கு மட்டுமே கேட்கும். மனிதர்களால் கேட்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குரல் வலையின் மேல் பகுதியில் இருந்து எழுப்பும் இந்த ஒலியை பதிவு செய்து அதன் ஆராய்ச்சியின் மூலம் யானைகள் பாடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர்  அனைவரும் அறிய வேண்டிய தகவலை பதிவு செய்பவர் பதிவுலகில் ஒவ்வொருவரும் ஒரு இலட்சிய பதிவுகள் இருக்கும் இவருடைய இலட்சியம் அனைவருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கிறது. பதிவுலகில் இவர் ஒரு காஸ்ட்லி பதிவர்  மற்றும் உலகம் சுற்றும் வாலிபர் போல இவர் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா என சுற்றி சுற்றி பதிவெழுதுவார். நாம் எதாவது ஊருக்கு செல்லபோகிறோம் என்றால் அங்கு எந்த சரக்கு நல்லாயிருக்கும், எங்கு சைடு டிஸ் நன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு இடமாக பதிவிட்டு உள்ளார். நாம் கேள்விப்படாத பல அருவிகளை போய் பார்த்து அதைப்பற்றி பதிவெழுதி உள்ளார். பாண்டிச்சேரியில் உள்ளவர்களுக்கு கூட தெரியதாத சாரயம் உற்பத்தி பற்றி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆக சரக்கு, சைடு டிஸ், சாப்பாடு, டீ, போண்டா, பஜ்ஜி என யூத்துக்ளுக்கான பல பதிவுகளை எழுதி வருகிறார் நண்பர் ஜீவா அவர்கள்...

http://www.kovaineram.com/

தத்துவம்
விசாரித்து அறிவது நஷ்டமும் அல்ல கேவலமும் அல்ல.

ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்; ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..

18 comments:

  1. ஹையா...நான் தான் முதல்ல...அப்புறம் என்னையும் அறிமுக படுத்தினதுக்கு நன்றி..

    ReplyDelete
  2. ஒலிம்பிக் ..உங்களோட ஆதங்கம் தான் எனக்கும்..இவ்ளோ பேரு இருந்தும் என்ன பிரயோஜனம்...வெறும் 81 பேருதான் போட்டியில் பங்கெடுத்து இருக்காங்க.வெறும் 4 பதக்கம் மட்டுமே...இதயே ரொம்ப பெருமையா பீத்திகிறானுங்க இந்த பேப்பர் காரனுங்க.,..

    ReplyDelete
  3. 'நாடோடி மன்னன்' ஜீவா வயிற்றில் டிஸ்கவரி சேனல் விலங்குகள் எல்லாம் ஜீரணிக்கப்பட்டு விட்டன.

    ReplyDelete
  4. ஈமு கறி டேஸ்ட விட இப்போ நடக்கிற பஞ்சாயத்து ரொம்ப டேஸ்ட்..இப்போ லேட்டஸ்டா நாட்டுக்கோழி, கறவை மாடு இறங்கிட்டாங்க...

    ReplyDelete
  5. ///'நாடோடி மன்னன்' ஜீவா வயிற்றில் டிஸ்கவரி சேனல் விலங்குகள் எல்லாம் ஜீரணிக்கப்பட்டு விட்டன.///
    இன்னும் சிங்கம் புலி லாம் சாப்பிடல..

    ReplyDelete
  6. தேவேந்த்ரோ சிங், விகாஸ் கவுடா, கஷ்யப் உள்ளிட்ட சிலரின் சிறப்பான ஆட்டம் முந்தைய ஒலிம்பிக் போட்டிகளை விட இந்தியா சிறப்பாக இம்முறை ஆடியதற்கு சான்று. சென்றமுறை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் இன்னும் மிச்சம் உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெறுவது அவ்வளவு எளிதல்ல. கிரிக்கெட் போல நேரடியாக பங்கேற்க இயலாது. பல்வேறு தகுதி சுற்றுகளை தாண்டித்தான் பிரதான போட்டியினுள் நுழைய முடியும்.

    பேட்மிண்டன், மகளிர் குத்துச்சண்டை போன்றவற்றில் முதன் முறை பதக்கம் வந்துள்ளது முன்னேற்றமே.

    ReplyDelete
  7. //உலகம் சுற்றும் வாலிபர் போல இவர் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா என சுற்றி சுற்றி பதிவெழுதுவார். ///
    நான் வெளிநாடு போறது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா...

    ReplyDelete
  8. தகவல்கள் அருமை..

    ReplyDelete
  9. குதிரை சந்தை பதிவை எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete
  10. பல தகவல்கள்... பாராட்டுக்கள்... நன்றி… (TM 4)

    ReplyDelete
  11. ஈமு மற்றும் யானை பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பு .

    ReplyDelete
  12. குதிரை சந்தை பதிவை எதிர் பார்க்கிறோம்

    Yes Sir. Me too.

    ReplyDelete
  13. அஞ்சறை பெட்டி செம, குறிப்பா ஒலிம்பிக்ஸ்!

    ReplyDelete
  14. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஹாக்கியில் ஒரு ஆட்டம் கூட வெல்லவில்லையே?என்ன அவலம்?

    நல்ல தொகுப்பு.

    சந்திப்போம் சென்னையில்

    ReplyDelete
  15. அஞ்சறைப்பெட்டியின் அலசல்கள் அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  16. அஞ்சறைப் பெட்டி பல தகவல்களுடன்.

    ஈமு கோழி :(

    ReplyDelete
  17. தத்துவங்கள் அருமை

    ReplyDelete