உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில்
சென்னை சென்றிருந்தபோது காலை உணவு இரயிலிலேயே சாப்பிடவேண்டிய சூழ்நிலை சரி
இரண்டு தோசை மட்டும் சாப்பிடலாம் என்று தோசையை சொன்னேன்.. தோசை பரவாயில்லை
ஆனால் இந்த தோசைக்கு கொடுத்த சட்னி சாம்பார் இருக்கே அப்பப்பா வாயிலேயே
வைக்க இயலவில்லை அவ்வளவு கேவலமாக இருக்கிறது. பறிமாறும் பையனை கேட்டால் ஒரு
சிரிப்புடன் நகர்கிறான் அவன் சிரிப்பின் அர்த்தம் உன் தலை எழுத்து என்று
சொல்வது போல் இருந்தது...அதுவும் இல்லாமல் அந்த தோசையை சாப்பிட்டு அன்று இரவு நான் பட்ட பாடு இருக்கே தாங்கள...
இரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது உணவுப் பொருட்கள் எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து வருடம் ஒருவரிடம் கான்ரக்டை மாற்றி கொடுத்தால் தான் ஒரளவிற்கு உண்மையாக இருப்பார்கள்.
இரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது உணவுப் பொருட்கள் எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து வருடம் ஒருவரிடம் கான்ரக்டை மாற்றி கொடுத்தால் தான் ஒரளவிற்கு உண்மையாக இருப்பார்கள்.
........................................................... .............................. .....
சென்னை காலை 4 மணிக்கு வாக்கிங் சென்ற அனுபவம் இன்பமாக இருந்தது மாலை
சாலை நெருக்கடியில் இருந்த இடத்தில் எந்த வாகனமும் செல்லாத இடத்தில்
நடக்கும் போது தனிமை நிறைய நேரம் நடக்க வைக்கிறது.. மனதை
அமைதிப்படுத்தியது. என்னைப்பொறுத்தவரை சென்னைக்கு வந்து இரண்டு நாள்
இருந்துட்டு போகலாம். இல்லை எனில் அந்த அவசர காலத்திற்கு என்னை
மாற்றிக்கொள்வது சுலபம் அல்ல..
கோவையில் கார் எடுத்தால் ஒரு அரை மணி நேரத்தில் ஊரை சுற்றி வரலாம் அங்கு ஒரு சாலையை கடக்கவே அரை மணி நேரம் பிடிக்கிறது.. அதையும் ரசித்து செய்தால் சுகம் தான்...
கோவையில் கார் எடுத்தால் ஒரு அரை மணி நேரத்தில் ஊரை சுற்றி வரலாம் அங்கு ஒரு சாலையை கடக்கவே அரை மணி நேரம் பிடிக்கிறது.. அதையும் ரசித்து செய்தால் சுகம் தான்...
............................................................ ..............................
எவ்வளவு
தான் விலையை உயர்த்தி விற்றாலும் புட் மால்களில் கூட்டம் அலைமோதத்தான்
செய்கிறது. அவர்கள் விளம்பரத்தை விட நம் விளம்பரம் ஓவராக இருப்பதால் தான்
இத்தனைக்கூட்டம்... சென்னையை தொடர்ந்து இப்போது கோவையிலும் மால்களின்
எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது இங்கு புட் கோட்டில் புட்போர்டு அடித்து
சாப்பிடும் அளவிற்கு கூட்டம் கல்லாக்கட்டுகிறது...
............................................................ .............................. ......
கோவையில் நான் தினமும் செல்லும் பேரூர் ரோடு நன்றாக இருக்கும் 25 நிமிடத்தில் டவுனுக்குள் வர முடியும் பாதாள சாக்கடை அமைக்கிறேன் பேர்வழி சாலையை நாய் நாஸ்ட்டா செய்தது போல செய்துவிட்டார்கள்.. கொஞ்சம் பார்த்து செல்லவில்லை என்றால் குண்டு குழியில் விழுந்து பெண்டு நிமிர்ந்து வர வேண்டி இருக்கும்...
........................................................... .............................. ......
இன்று காலை வழக்கம் போல் அலுவலகம் வரும் போது
அவிநாசி மேம்பாலத்தில் காந்திபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் டிராவல்ஸ்
வண்டிகள் ராங் ரூட்டில் வருவது வழக்கம் அதே போல் இன்று ஒரு வண்டி வர
பொதுமக்கள் ஒருவர் பைக்கை அப்படியே நிறுத்தி சரியான ரூட்டில் போ என சொல்ல
கிட்டத்தட்ட பயங்கர ட்ராபிக் நான் சைடில் புகுந்து முன்னே வர அந்த
ட்ராவல்ஸ் இன்னொரு டிரைவர் முடிஞ்சா பாருங்கடா கேணப்...... என்று திட்ட
எனக்கும் கோபம் வந்து வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி இறங்குடா என கத்த
அதற்குள் வந்த டிராபிக் போலீசார் வண்டிய பின்னாடி எடுடா காலையில் ஆபிஸ்
செல்லும் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்வதே தவறு அதிலும் தேவையில்லாமல்
வார்த்தை பேசுகிறாயா என்று திட்ட அவன் பஸ்சில் ஏறி அடைத்துக்கொண்டான் கீழே
நாங்கள் கத்த அவன் தெனாவட்டாக இருப்பதையும், பொதுமக்கள் கூட்டம் அதிகமாவதை
கண்டு கோபம் அடைந்த ட்ராபிக் போலீசார் அவனை இறக்கி விட்டார் பாருங்க ஒன்னு
வாழ்க்கையில் அவன் அந்த மாதிரி வாங்கி இருக்க மாட்டான்...
அவனிடம் நான் கடைசியாக சொன்னது தேவையா இது... மோட்டாரில் செல்லும் போது வாய் நிதானம் தேவை தம்பி இல்லினா வாங்கிக்கட்டிக்கத்தான் வேண்டும்...
அவனிடம் நான் கடைசியாக சொன்னது தேவையா இது... மோட்டாரில் செல்லும் போது வாய் நிதானம் தேவை தம்பி இல்லினா வாங்கிக்கட்டிக்கத்தான் வேண்டும்...
......................................................... .............................. ........
படித்ததில் மிக பிடித்தது....
வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா,
அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி,
பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது
பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!
உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.
இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா
.............................. .............................. .............................. ........
உடலில் ஏற்படும் காயங்களை மருந்து போட்டு குணப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஸ்பிரே மூலம் மருந்து தெளித்து குணப்படுத்தும் நவீன முறை
தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஸ்பிரே மருந்து நெகிழும் தன்மை கொண்டது.
இதை காய கட்டின் மீது தெளித்தால் போதும். அது 5 நிமிடங்களில் அதன் மீது செட் ஆகிவிடும். இதன் மூலம் பல் மற்றும் எனாமலில் ஏற்பட்ட காயங்களையும் குணப்படுத்த முடியும். அதில் கால்சியம் இருப்பதால் பல் நோய்களும் குணமாகின்றன.
இந்த ஸ்பிரே மருந்து காயத்துடன் ஒட்டாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவுடன் காய கட்டு பிரிக்கும்போது அதுவும் அத்துடன் அகன்று விடும். இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டதில் 90 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் லோமாலிண்டா பல்கலைக்கழகத்தில் குழந்தகளின் இருதய அறுவை சிகிச்சை காயங்களை குணப்படுத்த ஸ்பிரே மருந்து பரிசோதித்து சோதனை நடத்தப்பட்டது.
அமெரிக்க ராணுவ இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜிகல் ஆராய்ச்சி மையத்தில் தீக்காயங்களுக்கு சிலிகான் ஸ்பிரே மருந்து சிகிச்சை அளித்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
இதை காய கட்டின் மீது தெளித்தால் போதும். அது 5 நிமிடங்களில் அதன் மீது செட் ஆகிவிடும். இதன் மூலம் பல் மற்றும் எனாமலில் ஏற்பட்ட காயங்களையும் குணப்படுத்த முடியும். அதில் கால்சியம் இருப்பதால் பல் நோய்களும் குணமாகின்றன.
இந்த ஸ்பிரே மருந்து காயத்துடன் ஒட்டாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவுடன் காய கட்டு பிரிக்கும்போது அதுவும் அத்துடன் அகன்று விடும். இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டதில் 90 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் லோமாலிண்டா பல்கலைக்கழகத்தில் குழந்தகளின் இருதய அறுவை சிகிச்சை காயங்களை குணப்படுத்த ஸ்பிரே மருந்து பரிசோதித்து சோதனை நடத்தப்பட்டது.
அமெரிக்க ராணுவ இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜிகல் ஆராய்ச்சி மையத்தில் தீக்காயங்களுக்கு சிலிகான் ஸ்பிரே மருந்து சிகிச்சை அளித்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
.............................. .............................. .............................. ........
பதிவர் சந்திப்பில் நிறைய பேரை சந்தித்தேன் நான் எழுதும் அஞ்சறைப்பெட்டியை
இன்னும் நன்றாக எழுது என்று ஊக்குவித்தார்.. என் எழுத்து நடையை ரசிச்சவர்
நான் கிசு கிசு என அஞ்சறைப்பெட்டியில் சேர்த்து எழுதும்போது நண்பர்களிடம்
சொல்லி முதலில் எடுக்கச்சொல் நன்றாக எழுதும் போது எதற்கு இந்த கிசு கிசு
இப்பவே நல்லாத்தான் இருக்கு இதையே பின்பற்ற சொல்லுங்க என்று அக்கறையுடன்
கூறியவர். மூன்று முறை என்னிடம் அலைபேசியில் பேசினார் பேசிய போதெல்லாம்
பொதுத்தொலைபேசியில் பேசினார். அவரை ஒருநாளாவது பார்க்க வேண்டும் என்று
எண்ணி இருந்தேன்.
ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்றார். பதிவர் சந்திப்பு அன்று காலை மண்டபம் சென்றவுடன் ஒருவர் வந்து சங்கவி நீதானா.. நான் பார்த்து பேச விரும்பியவர்களில் நீயும் ஒருவன் நான் யார் என்று தெரிகிறதா என்றார் வியந்து பார்த்தேன்... ஒல்லியான உருவம் இவர் பதிவரா இல்லை வாசகரா என்று சந்தேகத்துடன் பார்த்தேன்.... நான் தான் சேட்டை என்றார் என் அன்பிற்குரிய சேட்டைக்காரன்..
நிச்சயம் என் அஞ்சறைப்பெட்டியை அண்ணன் படிப்பார் என்பதால் இங்கு பதிவு செய்கிறேன் என் மகிழ்ச்சியை.... மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களை சந்தித்ததும் அதன் பின் பேசிக்கொண்டு இருந்ததும்.. அன்று பேசியது எல்லாம் குறைவான நேரம் அண்ணா அது பத்தாது அடுத்தமுறை சென்னை வரும்போது எனக்காக நிறைய நேரத்தை ஒதுக்குங்கள் உங்களிடம் நிறைய பேசவேண்டும்...
நன்றி என்னை சந்தித்ததற்கு...

பிகேபியிடம் புத்தகத்தை பெறும் சேட்டைக்காரன்...
தகவல்
அதற்கான புதிய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அமெரிக்காவின் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நானோ
டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் கரோல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய கார்பன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் ஆரிப் மோட்டார் வாகனங்களைப்பற்றி தம் அனுபவத்தை
நம்முடன் பகிர்கிறார். வாகனங்களை பயன்படுத்துவது எப்படி, ஆவணங்கள் பெறுவது
எப்படி ஒவ்வொன்றையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்....
http://motorstar180.blogspot.com/
http://motorstar180.blogspot.
தத்துவம்
கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
அஞ்சரைபெட்டி வழக்கம் போல் கலக்கல்!
ReplyDeleteசங்கவி, ரெண்டு நாள் சென்னையே இப்படியா?...
ReplyDeleteஅழகா எழுதிட்டிங்க....
அருமை நண்பா உண்மையில் கலக்கல் தான் பல்சுவை கலக்கல்
ReplyDeleteஎப்பவும் போல கலக்கல்
ReplyDelete்ம்
ReplyDelete்ம்
ReplyDelete/*சென்னை காலை 4 மணிக்கு வாக்கிங் சென்ற அனுபவம் இன்பமாக இருந்தது */
ReplyDeleteநள்ளிரவு மணிக்கு சென்னைல வாக்கிங் ஆ அண்ணா சூப்பர்
இந்த மாதிரி நடு ரோட்டில் குழிவெட்டி வேலை செய்கிறார்கள் ஒழுங்கானபடி செய்வதில்லை கஷ்டப்படுபவர்கள் மக்களே அதிலும் மழையில் சத சதத்த அந்த மாதிரியான சாலையில் டூவீலரில் மற்றும் நடந்து செல்பவர்களின் பாடு திண்டாட்டமே கொஞ்சம் சருக்கினாலும் 7 அடி பள்ளத்தில் விழவேண்டியது தான். பாது காப்புக்காக சைடில் தடுப்பு கிடையாது அறிவுறுத்தும் போர்டும் கிடையாது. முக்கியமாக இரவில் தெரு விளக்கும் இருக்காது.
ReplyDeleteசங்கவி,
ReplyDeleteநல்ல கலவை!
வாழை இலை :-))
------
பாதாள சாக்கடை கொத்து ரோடு எங்க ஊரில் 7 வருஷமா இருக்கு.7 ஆண்டுகளாக மாத்தி மாத்தி குழி வெட்டிக்கிட்டு இர்க்காங்க :-))
மழைக்காலத்தில் நிறையப்பேரு மண்ப்போட்டு மூடிய குழியில் புதைக்குழியில் சிக்குவது போல சிக்கிடுறாங்க.
நானே சிலமுறை சிக்கி ,அவஸ்தைப்பட்டச்சு.
அஞ்சரை பெட்டிகுள்ளே சூப்பர் மார்க்கெட்.
ReplyDeleteசென்னை அனுபவம், படித்ததில் பிடித்தது, தகவல், தத்துவம் என அனைத்தும் அருமை... நன்றி...
ReplyDeleteநண்பர்களின் எல்லா இடுகைகளையும் வாசிப்பது, எழுதுவதை விட மகிழ்ச்சியானது மட்டுமல்ல; எளிதானதுமல்லவா? அவ்வகையில் நான் வாசிக்க வருவேன் என்ற உங்களது எதிர்பார்ப்பு மிகச்சரியானது.
ReplyDeleteஅடுத்த முறை சென்னை வரும்போது, இன்னும் நிறைய உரையாடலாம்; கருத்துக்களைப் பரிமாறலாம். என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி! வாழ்க! :-)
அண்ணா மேட்டர் சூப்பர்
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி எப்பவும்போல வாசனைதான் !
ReplyDeleteஇனிய பகிர்வு.
ReplyDelete