Thursday, August 16, 2012

அஞ்சறைப்பெட்டி 16/08/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
கடந்த வாரம் திருவிழாவிற்காக ஊர் சுற்றும் போது காலையில் ஊர் தள்ளி இருக்கும் கோயிலுக்கு சென்றேன் செல்லும் வழியில் கார் பாஸ் கொடுத்து 20 ரூபாய் வசூல் செய்து கொண்டு இருந்தனர் என்னடா இது இங்க ஸ்டேண்டும் இல்ல கோயிலுக்கு போற வழி இது ரோடு பழையரோடு இதற்கு எதுக்கு பணம் என்று என்னிடம் வந்ததும் எதுக்கு பணம் நாங்க கோயிலுக்குத்தானே போகிறோம் என்றதும் டெண்டர் எடுத்து இருக்கிறோம் என்றார். நான் லோக்கல் தான் பணம் தரமுடியாது என்றதும் அண்ணே நீங்க போங்க போங்க டேய் அடுத்த வண்டியை பாரு என்றனர் அன்று கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் கிடா பொங்கலுக்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் தான் கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட கார்கள் இருந்திருக்கும் செம்ம வசூல் ஓசியிலேயே செய்துவிட்டர்கள் அதுவும் அவர்களின் வசூல் நேரத்தி பாருங்க காலை 5 மணி முதல் 8 மணி வரை தான் வசூல்.

ஏற்கனவே சென்னையில் இதே அனுபவம் பெற்று இருக்கிறாத் நம்ம ஆரூர் முனா செந்தில் அவர்கள்... மக்களே எங்க போனாலும் வண்டிக்கு பாஸ் போடும் போது நிதானமாக ஏன் வாங்குகிறான் என்று பார்த்து வாங்குங்க..

10 ரூபாய் தான் என்றாலும் முடியாத பெரியவர்களுக்கு போட்டால் நிச்சயம் கோடி புண்ணியம்... இவர்களுக்கு கொடுத்தால் யாருக்கும் புண்ணியமில்லை TASMAC க்கு தான் புண்ணியம்...
...............................................................................................

இப்போது ரொம்ப கிளி அடைந்தவர்கள் கிரானைட் அதிபர்கள் தான் தினமும் ஒரு அரைப்பக்கத்துக்கு இவர்களைப்பற்றியான செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றது. 16 ஆயிரம் கோடி ஊழல் என்கின்றனர். இதுக்கு எத்தனை சைபர் என்று எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

..........................................................................................

கேப்டன் தினமும் ஒவ்வொரு ஊராக சென்று தினமும் செய்திகளில் அடிபடுகிற மாதிரி நிறைய பேசுகிறார். விருத்தாச்சலத்துக்கு என்ன செய்தார் என்று தான் புரியலை.
................................................................................................

  இந்த வருடம் சுதந்திர தினம் வார நாட்களில் வந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சி தான் வார நாட்களில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் மாதிரி ரொம்ப சந்தோசமாக இருக்கு.. குடும்பத்தினருடன் இந்த நாளை செலவிட்டதில் மிக்க மகிழ்ச்சியே...
...............................................................................................

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார்.

பின்னர், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் செயற்கை கருவூட்டல் (டெஸ்ட்டியூப்) செய்து கொண்டார். அதை தொடர்ந்து கர்ப்பம் ஆன அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இக்குழந்தை பாலஸ்தீனத்தில் நப்லஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. இதை அறிந்த அம்மர் அல்ஷபன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சந்தோஷப்பட்டார்.

பலமுறை உயிரணுவை கடத்தி செயற்கை கருவூட்டல் தோல்வி அடைந்ததாகவும் பின்னர் வெற்றிபெற்று தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து, பாலஸ்தீன சிறை கைதிகள் நலத்துறை துணை மந்திரி ஷியாத்அபுகன் கூறும்போது, பாலஸ்தீன சிறை கைதிகளுடன் அவர்களது மனைவிகள் செக்ஸ் உறவு கொள்ள இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
...............................................................................................

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.

இவற்றில் இருந்து விடுபட தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள மாஸ்டிரிச்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் தலைவலி பிரச்சினையால் அவதிப்படும் 100 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினர். தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நன்றாக தூங்க வேண்டும். காபி குடிப்பதை பாதி அளவாக குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இவை அனைத்தையும்விட தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்வதை விட 1 1/2 லிட்டர் தண்ணீரை கூடுதலாக குடிக்க வேண்டும். இதை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

இவற்றை பின்பற்றிய நோயாளிகளுக்கு தலைவலி குணமாகியது. அதன் மூலம் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிப்பதே சிறந்த மருந்து என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 ..................................................................................................

மனைவி உங்களிடம் அன்பாக இருக்கிறாரா? என்பதை அறிய வேண்டுமா? அதற்கு மிக எளிய வழி உள்ளது. அதாவது மனைவி தனது கணவரிடம் எப்போதும் ஏதாவது சிறு குறை கண்டுபிடித்து வாக்குவாதம் மற்றும் சண்டை போட்டு கொண்டிருக்கக்கூடாது மாறாக தனது கணவரை அரவணைத்து அடிக்கடி முத்தமிடுபவராக இருக்க வேண்டும். இவர்தான் அன்பான மனைவி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 168 ஜோடிகளிடம் மேற்கண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் அன்பை வெளிப்படுத்த பல வழிகளை கையாள்கின்றனர். ஆனால் பெண்களோ கணவன் மார்களை கட்டியணைத்து முத்தமழை பொழிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 ..................................................................................................

சென்னையில் நடைபெறும் பதிவர் சந்திப்புக்கு இந்த முறை வரலாம் என்று இருக்கிறேன்.. 25ம் தேதி சனிக்கிழமை இரவில் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்... வருபவர் தகவல் தெரிவிக்கவும் சந்திப்போம்...

தகவல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும் நிபுணர்கள் சூரியவெளிச்சம் படாமல் ஏ.சி ரூமிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்கு முதுகுவலி வரும் என்கின்றனர்.

அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மசாஜ் செய்வதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என்று கூறும் நிபுணர்கள். வெள்ளைப் பூண்டு எண்ணெயை வைத்து முதுகுப்புறங்களில் மசாஜ் செய்யலாம் என்கின்றனர். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி குடிப்பதன் மூலம் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.

வைட்டமின் ‘டி சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனுக்கு சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு வைட்டமின் `டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் `டி' முக்கியத் தேவை.


வைட்டமின் `டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி `சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான். இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே வைட்டமின் `டி' சத்து நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே!. எனவே உடலில் குறிப்பிட்ட அளவு சூரிய வெளிச்சம் படாமல் வாழ்பவர்கள் முதுகுவலியினால் அவஸ்தைப் படவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரியவெளிச்சம் உடலில் படவேண்டும் என்பதற்காகவே அதிக தூரம் நடந்தே பயணம் செய்வார்கள். கடற்கரையில் சூரியக்குளியல் நடத்துவார்கள். ஆனால் நம் ஊரில் எளிதாக மிக மலிவாக காசு செலவில்லாமல் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை நாம் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர்  புதுக்கோட்டை ஞானாலயா என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதி வருகிறார். இவர் பல அறிய நூல்களை பாதுகாத்து வருகிறார் அதைப்பற்றியான பதிவுகளை பதிவுகளில் பதிந்து வருகிறார். அவரைப்பற்றி, அவரது நூர்களைப்பற்றி காண...

http://www.gnanalaya-tamil.com/
 
தத்துவம்
 
நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது.

அறிவு மவுனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும்

11 comments:

  1. சிறப்பான கருத்துக்கள்.. தகவல்கள்...

    அறிமுக பதிவர் அறிந்தது தான்...

    நல்ல தத்துவங்கள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. ///
    நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
    //

    செமையா இருக்கு தல!

    ReplyDelete
  3. சிறப்பானதகவல்கள்! அருமையான தொகுப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
  4. திருவிழாக் காலங்களில் நிறைய செக் போஸ்டுகள் திடீரென முளைத்து விடுகின்றது. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சிறப்பான பயனுள்ள தகவல்க்ளுடன்
    அஞ்சறைப்பெட்டி அருமை
    குறிப்பாக தலைவலி போக்க எளிய வழியும்
    சூரிய ஒளி குறித்த அருமையும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அங்சறைப் பெட்டியிலிருந்து பல தகவல்கள் கிடைத்தன.

    ReplyDelete
  8. திரு சதீஷ்!

    ஞானாலயா ஆய்வு நூலகம் குறித்து ஒரு வலைத்தளத்தில் என்னையும்செர்த்து சில நண்பர்கள் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.இந்த வலைத்தளம் மட்டும் தான் புதிது. இதில் எழுதிவரும் கிருஷ்ணமூர்த்தியும், ஞானாலயா ஆய்வு நூலகத்தைத் தொடர்ந்து ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் திரு. பா.கிருஷ்ணமூர்த்தி ஐயாவும் ஒருவரல்ல. கூகிள் சேட்டில் இந்த நூலகத்தைப் பற்றி உங்கள் பதிவு மற்றும் கோவை ஈரோடு பதிவர் குழுமத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வலைப்பூவை அறிமுகம் செய்த வைத்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  9. இந்த வார அறிமுக பதிவர் புதுக்கோட்டை ஞானாலயா என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதி வருகிறார். இவர் பல அறிய நூல்களை பாதுகாத்து வருகிறார் அதைப்பற்றியான பதிவுகளை பதிவுகளில் பதிந்து வருகிறார். அவரைப்பற்றி, அவரது நூர்களைப்பற்றி காண...

    http://www.gnanalaya-tamil.com/

    நன்றி சங்கவி., இவர் பாதுகாத்து வருகின்ற 90000 நூல்களில் பெரும்பான்மை முதல்பதிப்பு நூல்களே., காலத்தால் இவைகள் சேதாரம் ஆகிவிடாமல் தடுக்க ஒரே வழி மின்னாக்கம் செய்தல்தான். அதாவது பிடிஎஃப் பிரதிகளாக மாற்றாமல் தமிழ் ஓசிஆர் மூலம் மின்னாக்கம் செய்ய முயற்சிகளை சில நண்பர்கள் சேர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். இன்னும் உதவிகள் தேவைப்படுகிறது.

    நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல...

    கோவை நண்பர்களை இதில் ஆர்வம் காட்ட செய்ய உங்கள் அறிமுகம் உதவும்.

    நன்றி

    ReplyDelete
  10. இருக்கிறேன்//

    தவறுதலான வார்த்தை.,, இருக்கிறோம். என வாசிக்கவும்

    மதுரை கிருஷ்ணமூர்த்தி அய்யா முன்னெடுத்து செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் பலநண்பர்களும் இணைந்து இருக்கின்றனர்.

    ReplyDelete