Monday, August 13, 2012

2000 குதிரைகளுடன் கோலாகலமாக நடந்த குதிரை சந்தை...

 
குருநாதசுவாமி கோயில் இந்த இடம் அந்தியூரில் இருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
 
 குதிரைகள் விற்பனைக்காக போடப்பட்ட ஸ்டால் இதே போல் 5 வரிசையில் குதிரைகள் விற்பனைக்கா கொண்டுவரப்பட்டு இருந்தது..
 
ஸ்டாலில் இடம் இல்லாத குதிரைகள் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது...
 
குதிரைக்கான கடிவாளங்கள், சாட்டைகளும், மாடுகளுக்கான சாட்டைகளும்

3 சுழி கொண்ட 1 மற்றும் 2 இலட்சம் விலையுள்ள குதிரைகள்
 
 4 சுழி கொண்ட 4 இலட்சம் விலையுள்ள குதிரைகள்

4 சுழி மற்றும் ஓட்டத்துக்கு பலக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் 4 இலட்சம் முதல்


2 முதல் 5 இலட்சம் வரை தரத்திற்கு தகுந்த குதிரைகள்


சாரட் வண்டிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட வண்டிகள்


 குதிரைகளை வாங்கலாமா என்று யோசிக்கும் பிரசன்னா...

 இந்த குதிரை விற்பனைக்கு அல்ல

அடுத்த பதிவில்
தரம் வாரியான குதிரைகளும் அதன் விலைகளும்...
காங்கேயம் காளைகளும் அதன் விலைகளும்...........
திருவிழா மற்றும் கிடாவிருந்து புகைப்படங்கள்...... விரைவில்...

11 comments:

  1. குதிரை பற்றிய தகவல்கள் அருமை கூடுதல் தகவல் //
    இந்த குதிரை விற்பனைக்கு அல்ல// அருமையோ அருமை

    எப்படி இப்படியெல்லாம் யோசிகிரீர்கள் ?

    ReplyDelete
  2. குதிரைகள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதே பெரிது.

    படங்களுக்கும் தகவல்களுக்கும் பாராட்டுகள்

    ReplyDelete
  3. எப்போ குதிரை சந்தை பற்றி பதிவு போடிவிங்கன்னு காத்துட்டு இருந்தேன்... நல்ல பதிவு. இன்னும் நிறைய விஷயங்களோட அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. //இந்த குதிரை விற்பனைக்கு அல்ல//

    இந்த சிங்கம் விற்பனைக்கு அல்ல-ன்னு தானே போட்டிருக்கணும் அவ்வ்வ்வ்வ்! :)

    ReplyDelete
  5. குதிரைகள் அழகாகத்தான் இருக்கின்றன. அடுத்த சட்டம் குதிரை வதை தடுப்பு சட்டமாக இருக்கலாம்.

    ReplyDelete
  6. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    சிறு வயதில் குதிரை வண்டியில் பயணம் செய்த ஞாபகம் வந்தது... இப்போ எங்கே குதிரை...?


    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 4)

    ReplyDelete
  7. I also want to see/ attend this Santhai once.

    ReplyDelete
  8. சுழியைப் பற்றி விரிவாக எழுதுங்களேன்

    ReplyDelete
  9. சிறப்பான தகவல்கள்! அழகிய படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete