Thursday, August 9, 2012

பணம் என்னும் பேய்யும் ஈமு கோழியும்....

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பார்கள் மீண்டும் அது உண்மையாகிவிட்டது.. கலைமகள் சபாவின் மரம் வளர்ப்பு, தேக்குமரம் வளர்ப்பு, காந்தப்படுக்கை, பியர்லஸ் போன்ற நிறைய ஏமாற்று தொழில்கள் ஆரம்பிக்கும் போது அதிக பரபரப்பாக பேசப்படும், கொஞ்ச நாட்கள் கழித்து அதைப்பற்றியான முறைகேடுகள் அதிகமாகி அந்த தொழில் செய்தவர்கள் ஊரைக்காலி செய்திருப்பர் இல்லை எனில் மஞ்சள் நோட்டீஸ் வாங்கி என்னிடம் ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிடுவர்..

கடந்த 6 வருடத்திற்கு முன் ஈரோட்டில் கம்ப்யூட்டரில் 5 ஆயிரம் கொடுத்தால் 4 ஆயிரத்துக்கு டேட்டா தருகிறேன் நீங்கள் சரியாக முடித்துக்கொடுத்தால் மாதம் 4 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி 100 கோடிக்கு மேல் ஏமாறினர். அதில் என் ஒருவர் 25 இலட்சம் கட்டி ஏமாந்தார் இது நடந்ததும் ஈரோட்டு அருகே தான்.


முதலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டிய விசயம் நம்மிடம் பணம் வாங்கி அந்த பணத்தை முதலீடாக பயன்படுத்தி அதற்கு ஆசைக்கும் அதிகமான வட்டி கொடுக்கிறேன் என்று நம்பவைத்து செய்யும் தொழில்கள் இன்று வரை வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.


யார் சொந்தமாக தொழில் செய்து அதை விற்பனைக்கு கொண்டு சென்று வியாபார உத்தியில் விற்பனையை பெருக்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.


கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு பகுதியில் அதிக மக்களை கவர்ந்து இழுத்தது ஈமு கோழி விளம்பரம் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் நாங்கள் மாதம் 10000 தருகிறோம் ஊதியமாக என்று கவர்ச்சியான வார்த்தைகள், கவர்ச்சியான விளம்பரங்கள், பிரபல நடிகர்கள் பலரின் பேச்சு, ஊரெங்கும் பேனர், தட்டிகள், திருவிழா என்றால் ப்ளக்ஸ் பேனர்கள், திருவிழாவிற்கு நன்கொடைகள் போன்றவைகளை நம்பி சிறுக சிறுக குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்தவர்கள் எல்லாம் முதலீடு செய்ய ஆரம்பித்தனர் ஈமு கோழியில்.

ஈமு வின் பயன்கள் என அதற்காக தனி பட்டியலிட்டு ஈமுவில் இருந்து என்ன தயாரிக்கலாம் அதன் பயன்பாடு என்ன வென்று விளாவாரியாக சொல்லி ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் போன்ற பொன்மொழிகள் மட்டுமல்லாமல் ஒரு ஈமு கோழி 30000க்கு விற்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற ஆரம்பித்தனர்.


நம் மக்களும் 1 இலட்சம் முதலீடு செய்கிறோம் அதற்கு 6 ஈமு கோழிகள் தருகின்றனர் ஒரு கோழி 30000 என்று கணக்கிட்டால் 6 ஈமுவுக்கு 1,80,000 கிடைக்கும் அதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று பகல் கனவு கண்டு முதலீடு செய்கிதுள்னர். இவர்கள் முதலீடு செய்தது மட்டுமின்றி பக்த்து வீடு, எதிர்த்த வீடு, மாமன், மச்சான், பங்காளி என கேன்வாஸ் செய்கின்றனர் அதற்கு தனி ஊக்கத் தொகை பெற்று அதில் அக மகிழ்ந்தனர்.


ஈமு கோழி ஆஸ்த்திரேலிய பறவை என்கின்றனர் ஆனால் அங்கு இருக்கும் கோழியை விட ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் கோழிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகம் இருக்கும். சேலம் பைபாசில் செல்லும் போது ஈமு பண்ணைகளை பார்த்ததும் பெருந்துறை வந்துவிட்டோம் என்று சொல்லும் அளவிற்கு பண்ணைகள் பெருகி இருக்கின்றன.


இந்த பண்ணை நிறுவனர்கள் இடத்தையும் முதலீடை மற்றும் கொடுங்கள் நாங்களே செட் அமைத்து கொள்கிறோம், கோழி தருகிறோம், அதற்கு தீவனம் மற்றும் மருத்துவ செலவுகளை பார்த்து கொள்கிறோம் என்று ஈர்க்கும் வசனத்தை பேசி மூதலீட்டை பெறுகின்றனர்.


தினசரி நாளிதழ், வார இதழ், விவசாய இதழ் மற்றும் லோக்கல் தொலைக்காட்சி கடைசியில் உலகம் முழுவதும் தெரியும் தொலைக்காட்சி என்று விளம்பரமாக கொடுத்து காசுக்கு ஆசைபட்ட நம்மக்களை ஈர்க்கின்றனர். விளம்பரங்களில் ஊக்கத்தொகை, மாதசம்பளம், வருட ஊக்கத்தொகை என ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி நம் மனதில் ஆசையை கிளப்பி பணத்தை பிடுங்குகின்றனர்.


1 இலட்சத்திற்கு 3 ரூபாய் வட்டி என்றால் 3 ஆயிரம் தான் ஆகிறது இவர்கள் 10000 தருகிறார்கள் என்றால் மனதில் ஆசை அசைபோடத்தானே செய்யும் ஆசை அதிகமானதன் விளைவுதான் தான் சம்பாரித்த பணத்தை அடுத்தவனுக்கு முதலாக கொடுத்து இப்போது ஐயோ பணம் போச்சே என்று ஒப்பாரி வைப்பது தொடங்கி உள்ளது.


தினமும் நிறைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது இதன் மூலம் பாதளத்துக்கு செல்லும் மக்களின் மனநிலையை என்ன வென்று சொல்வது
மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையிலே, ஒருவரிடம் பணம் வாங்கி, அதன் அடுத்தவருக்கு (பொருளாக) கொடுத்து பெருக்கிகொண்டிருந்த இந்த திட்டம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று எத்தனையோ நல்லுள்ளங்கள் எச்சரித்தும், சீக்கிரம் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆகிவிட வேண்டும் என்ற ஆசைதான் இதற்கு காரணம்.

இந்த மாதிரி முதலீடுகளை அரசு கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் அதற்கு முன் நாம் பணத்தை முதலுடு செய்யும் போது ஆசை வார்த்தைகளை நம்பாமல் நல்ல வகையில் முதலீடு செய்யவேண்டும். இன்று ஈமு கோழி அதி விரைவில் நாட்டுக்கோழி என்ற அடுத்த முதலீடாகவும் இருக்கலாம்....
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ என்ற வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது....

11 comments:

  1. ஏமாறுபர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கும் இருக்கத்தானே செய்வார்கள்..
    சரி சரி.. ஈமு போய்டுச்சு. அடுத்து ஏதாவது வருதானு பார்த்து பணத்தைப் போடணும்ல..
    நா கிளம்புறேனுங்க.

    ReplyDelete
  2. தற்போது அந்த விளம்பரங்களில் நடித்தவர்கள் மீது "கேஸ்" போடப் போவதாக தகவல்.... பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் (சில) நடிக நடிகைகள்...

    சட்டையோ, பனியனையோ கிழிந்து விட்டால், அதில் நடித்தவர்கள் மீது "கேஸ்" போடுவார்களா ? கேட்டால், "அது உடை தானே... இது தொழில்" என்று பலவற்றை கூறுவார்கள்...

    மக்களின் பேராசை ... இல்லை... இல்லை... அறியாமையை நினைத்து அழுவதா ? சிரிப்பதா ? தெரியவில்லை...

    நன்றி… (TM 2)

    ReplyDelete
  3. சரியான பாடலுடன் விளக்கிய விதம் அருமை என்ன பட்டாலும் யார் சொன்னாலும் திருந்த மாட்டாங்க மனுசங்க.

    ReplyDelete
  4. நாட்டுக் கோழியை அடுத்து, தலச்சேரி வெள்ளாட்டுக்குப் போய்ட்டாங்க!

    ReplyDelete
  5. பகிர்தலுக்கு நன்றி!!!

    ஈரோடு மாவட்டத்துக்காரன் என்றாலே ஏமாளின்னு எழுத்து ஒட்டு இருக்கும் போல!!!

    ஒப்பந்தமுறை பண்ணைன்னு சொல்லிட்டு காசு கேட்டு எவனாவது வந்தா, செருப்ப கழட்டி அடிக்கனும்னு நம்ம ஊருக்கரங்களுக்கு புத்தி மதி சொல்லணும். என்னதான் சொன்னாலும், நம்ம ஆளுங்க 3 வட்டிக்கு மேல கிடக்குதுனா... தாலிய வித்துட்டு காச போடறதுக்கு ரெடியா இருக்கங்களே??

    இத்தனை நடந்தும், இப்பவும் நாட்டு கோழி பண்ணைல காசு போடா ஒரு கூட்டம் ரெடியா இருக்குது. என்னத்த சொல்ல...

    இதைப்பற்றி நானும் கொஞ்சம் எழுதி உள்ளேன். கீழே உள்ள சுட்டியில் பார்க்கவும்.

    http://kalakalappu.blogspot.com/2012/08/15-5.html

    ReplyDelete
  6. ஆசையே துன்பத்திற்கு காரணம்! சரியான அலசல்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  7. நல்ல விழிப்புணர்வு பதிவு!

    ReplyDelete
  8. அனைவரும் அவசியம்
    மனதில் இருத்திக் கொள்ளவேண்டிய
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எப்படி அவர்களால் அதிக வட்டி கொடுக்க முடியும் என்று யோசித்தாலே போதும். எப்படியோ கொடுக்கிறார்கள் என்ற எண்ணத்தால் தான் உள்ளதும் போய் விடுகிறது

    ReplyDelete
  10. i appreciate your social consciousness mr.sankavi satish..

    ReplyDelete