Thursday, August 16, 2012

சுதந்திர நாடு சோத்துக்கு கேடு


நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். சும்மா கிடைக்கவில்லை இந்த சுதந்திரம் இதற்குபின் எத்தனை உயிர் சேதங்கள் இருக்கின்றன எத்தனை வீரர்கள் இறந்துள்ளனர் எத்தனை பெண்கள் உயிர் இழந்துள்ளனர் என ஒவ்வொன்றையும் விரிவாக எழுதலாம், படிக்கலாம், அறியலாம்.
 
சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் பேசலாம் திட்டலாம் அதில் உண்மை இல்லை என்றாலும் பேசமுடியும் அவர்கள் வழக்கு தொடர்ந்தால் மன்னிப்பு கேட்டு எளிதாக அதில் இருந்து வெளிவரமுடியும். அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். 
 
 
வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.
 
அவர்கள் வாங்கித்தந்த இந்த சுதந்திரத்தால் தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாட முடிகிறது. சுதந்திரமாக ஈமு கோழி போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ளையடித்து பின் தலைமறைவாக முடிகிறது.
 
புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டுமா நமக்கு பிடிச்ச இடத்தில் வாடகைக்கு எடுத்தாவது நிறுவனத்தை நடத்தலாம்.

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.
 
ஊரில் திருவிழா என்றால் மைக் செட் கட்டி அனைவரது காது அடைக்கும் படி சத்தமாக விரும்பிய பாட்டு கேக்கலாம், நடனம் நாட்டியம் என விழா நடத்தலாம்.
 
புதிதாக வாகனம் மற்றும் எதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் யாருடைய உதவியுமின்றி சுதந்திரமாக வாங்க முடியும்.

சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத்தான் அதற்குபின் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் தான் இருக்கப்போகிறோம். இன்று உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்து சம்பாரிக்கும் நாம் இனி இறக்குமதி தான் செய்வோம் அல்லது அதற்காக ஒரு மாத்திரையை கண்டுபிடித்து சாப்பிடவேண்டியது தான். இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நமக்கு சோத்துக்கு கேடு தான். 
 

நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். 
 
ஆனால் இன்று நகர்புறங்களாகட்டும் கிராமங்களாகட்டும் இங்கு எல்லாம் காலியாக உள்ள இடத்தை மனை நிலங்களாக மாற்றி வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம்.இந்த மனைகளும் ஒரு நல்ல அமைப்பான மனையாக நிச்சயம் இருக்காது. வீட்டிற்கு முன் செடி கொடிகள் வளர்த்துவது போல் இருக்காது வீடுகட்டினால் வீட்டில் இருந்து எடுத்து வைக்கும் கால் ரோட்டில் தான் இருக்கும்.

காலி இடங்களை வீட்டு மனைகளாக்கினால் பரவாயில்லை விவசாய நிலம் முப்போகம் விளையும் நிலம் ( முப்போகம் என்பது ஆண்டு முழுவதும் விளையும் விளை நிலம்) இன்று மனைகளாக்கி இடத்தை கூறு போட்டு விற்கின்றனர். இது தான் கொடுமையான விசயமும் கூட.. நாம் சோத்துக்கு சிங்கி அடிக்க வைப்பதும் இது தான்..

விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...
 
இப்போது சாப்பிடு அரிசி இன்னும் 10 வருடங்கள் கழித்து இறக்குமதி செய்து தான் சாப்பிட வேண்டி இருக்கும்...

11 comments:

  1. விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லையெனில்
    நாம் சோற்றில் கை வைக்க இயலாது ......

    உண்மை சுதந்திரத்தை பற்றி இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது .........
    அருமை சங்கவி

    ReplyDelete
  2. கோவில்களில் மேடமின் அன்னதான திட்டம் உள்ளவரை கவலை இல்லை!!

    ReplyDelete
  3. பொறுப்பில்லாம தான் தோன்றித்தனமாக இருத்தலே
    சுதந்திரம் என்கிற மனப்பானமை மக்களிடம்
    பெருத்துப்போனதால்தான் இந்த அவல நிலை
    பயனுள்ள்ள பொறுப்பினை உணர்த்திப்போகும்
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தெளிவு படுத்தும் பதிவு எனினும் திருந்தாத மக்கள் விளை நிலங்களை வீடுகளாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டத்தான் செய்வார்கள்.

    ReplyDelete
  5. அப்பட்டமான உண்மைகள்... நன்றி... (TM 4)

    ReplyDelete
  6. நம் கதி விதை நெல்லை உண்டவன் கதியே!!!!

    ReplyDelete
  7. என்ன செய்வது? அரிசியை புழுத்து போக விட்டாலும் விடுவார்களே தவிர பசியாற கொடுக்க மாட்டார்கள் நம் தலைவர்கள்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  8. நிஜத்தைச் சொல்லும் செயல்!ம்ம்

    ReplyDelete
  9. \\விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர்.\\

    இந்தக்கொடுமை நிறையவே நடக்கிறது.அதுவும் தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகளில் ...
    நல்ல சிந்தனை..

    ReplyDelete