Tuesday, August 21, 2012

பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா??? தேவையே !! தேவையே !!


பதிவர் சந்திப்பிற்கு செல்லும் போது சரக்கு அடிக்கலாமா என்றால் நிச்சயம் அடிக்கக்கூடாது... ஆம் காலை 9 மணிக்கு பதிவர் சந்திபிற்கு செல்லும் போது அடிக்கக்கூடாது... காலை 9 மணி சந்திப்பிற்கு முந்தைய நாள் இரவு வந்து விட்டால் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்தே ஆக வேண்டும் இது தான் பதிவுலகில் எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன். அப்புறம் சந்திப்பு முடிஞ்சு வீட்டுக்கு செல்லும் போது நிச்சயம் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடனும் இல்லை என்றால் அது தப்பு...

இது வரை நான் சென்ற பதிவர் சந்திப்பிற்கு எல்லாம் இப்படித்தான் நடந்தது. ஆனாலும் இதை எந்த பதிவரும் தவறாக நினைத்ததாக தெரியவில்லை. குடியின் வேதனையை அறிந்தவர்கள்  இதைப்பற்றி எழுதி இருக்கலாம் அதை நாங்கள் கண்டு கொள்வதில்லை..

முதலில் குடிகாரன் என்பவன் தினமும் தான் சம்பாரிப்பதை குடித்து அழித்து வீட்டுக்கு ஒன்னும் கொடுக்காதவன் தான் குடிகாரன்.. ஆனால் என்னைப்போல் மாதம் ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை 4 பேக் அடிப்பவர்கள் எல்லாம் குடிகாரன் இல்லை என்பது என் கருத்து..

குடிக்கும் போது பாதியில் பொஞ்சாதி போன் செய்தால் அடிச்ச மப்பும் இறங்கிவிடுகிறது இப்படி பயந்து பயந்து குடிப்பவன் பதிவர் சந்திப்பிற்கு சென்றால் வீட்டில் அனுமதி வாங்கி நண்பர்களோடு அன்று தான் குடிக்க முடிகிறது இதப் போய் தப்பு என்கிறார்களே.

பதிவர் சந்திப்பிற்கு செல்கிறோம் என்றால் நீ வருகிறாய நீ வருகிறாய என்று ஒவ்வொருவரையும் கேட்டு சந்தோசமாக இரவே சென்று எல்லோரும் ஒன்று கூடி ஆளுக்கு ரெண்டு பெக் போட்டு விட்டு மனம் விட்டு பேசிட்டு அடுத்த நாள் சந்திப்பில் நண்பர்களை சந்தித்து விட்டு தேவையானதை பேசிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அரக்க பறக்க ஓடுகிறோம்...

இத விட்டுட்டு பதிவர் சந்திப்பிற்கு செல்கிறேன் என்று 4 நாள் ரூம் போட்டு வேலைக்கும் செல்லாமல் குடித்துக்கொண்டே இருந்தால் தப்பு என்று சொன்னால் ஒரு நியாயம் உண்டு...( எதிலும் நேர்மை இருக்கனும்...)

ஈரோடு சந்திப்பிற்கு தல மணிஜி வந்தார் அவரோடு சரக்கு சாப்பிட்டோம் இப்ப சென்னைக்கு நான் போகிறேன் மீண்டும் தலயோடு சரக்கு சாப்பிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. போகிற போக்கில் சந்திப்பதை விட இப்ப ரெண்டு பெக் விட்டுட்டு மனம் விட்டு பேசுவது தான் நிறைய மனதில் நிற்கிறது ( அப்படியே நாலு பதிவும் தேத்த முடியுது)

குடிக்கு ஆதராவ எழுதும் நான் குடிகாரனா என்று என் கதையை படிச்சிட்டு சொல்லுங்க மக்களே...

நான் முதன் முதலில் குடித்தது 10 வது படிக்கும் போது Black Knight BEER ரொம்ப கசப்பு 2 முழுங்கு தான் குடிச்சேன் அப்புறம் 5 நிமிடம் கழித்து மீதி பீரை குடிச்சேன் ஒன்னும் நடக்கல.. எப்பவும் போலத்தான் இருந்தேன் அப்பவே முடியு செய்தேன் ஒன்னும் நடக்காத இந்த பீரை காசு போட்டு குடிச்சு என்ன பிரயோசனம் என்று விட்டு விட்டேன்..

11ம் வகுப்பு படிக்கும் போது கோபியில் SKC Meridian Bar திறந்திருந்தாங்க வீட்டில் விடுதி மெஸ்பில்லில் பிட்டை போட்டு வாங்கி வந்து இங்கு குடிப்பது தான் பழக்கம் அங்க முதன் முதலாக குடிச்ச சரக்கு BP Gold (இப்ப இந்த சரக்கு வருவதில்லை ) அப்பவே 6 பெக் அடிச்சாலும் ஸ்டடியா இருப்பேன் இந்த பாரில் தான் மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நான் சைட் அடிச்ச பெண்ணின் தந்தை மிலிட்டரி மேன் என்பது மட்டும் தெரியும் (அந்த பெண் எண்ணை சைட் அடிக்கல அது தனிக்கதை) அவர் அந்த பாரில் குடித்துக்கொண்டு இருந்தார் நான் பள்ளி உடையிலேயே குடிக்க சென்றேன். அப்பவெல்லாம் மிக்ஸிங் கம்மியா போட்டுத்தான் குடிப்பேன் அதைப்பார்த்த அவர் எங்களுக்கு இப்படி குடிக்க கூடாது இப்படி மிக்ஸிங் போடனும் என்று சொல்லி கொடுத்தார்..

நான் மிலிட்ரியில் இருக்கேன் தம்பி குடிப்பது தவறல்ல ஆனால் அதிகம் குடிக்காதே குடிக்கு அடிமையாதே உனக்கு அது அடிமையாக பார்த்துக்கொள் வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று இருந்து கொள் என்றால் அப்புறம் மிலிட்டரியில் சரக்கு கொடுக்கறாங்களே என்று எதிர் கேள்வி கேட்டான் என் நண்பன் சிவா. அதற்கு அவர் சொன்னார்

மிலிட்டரியில் கொடுப்பது XXX RUM அதன் அர்த்தம் தெரியுமா என்றார் தெரியாது என்றதும் X இது என்ன என்றார் எக்ஸ் என்றேன் ரோமன் லட்டரில் என்றார் பத்து என்றேன்.. அப்ப XXX இது 30 என்றார்... அதாவது சரக்கை பெக் பெக்காக அடித்தால் Thirty Days Regular Useful Mediation இது தான் மீனிங். இத ஓவரா குடிச்சா அது பாய்சன். என்று அவர் சொன்னது இன்று வரை காதில் ஒலிக்கிறது.

அதற்கு பின் அப்ப அப்ப குடிப்பது கும்மாளம் அடிப்பது சென்னையில் இருக்கும் போது தான் கொஞ்சம் ஓவர் அப்புறம் கோவையில் ஆரம்பத்தில் ரொம்ப குடிச்சோம் முதலில் பார், அப்புறம் சாக்கனாக் கடை, அதன்பின் அறையில் சமைத்து குடிப்பது அதன் பின் ஊறுகாய் மைட்டும் வைத்து குடிப்பது, இருக்கும் பழ வகைகள் எல்லாம் வைத்து குடிப்பது என வித விதமாக குடிச்சு மகிழ்ந்தோம்.

திருமணத்திற்கு 5 நாள்க்கு முன் ஒரு செம பேச்சுலர் பார்ட்டி எங்க செட்டில் எனக்கு தான் முதல் திருமணம் அதனால் கலக்கலா இருந்தது அன்றில் இருந்து என் மகன் பிறக்கும் வரை சுமார் 2 வருடம் குடிக்கவில்லை அதன் பின் அப்ப நண்பர்களோடு சேரும் போது எப்படியும் 3 அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பீர் அல்லது ரெண்டு பெக் அவ்வளவு தான். என்னை மாதிரி தான் பல பேர் இருப்பாங்க இப்ப சொல்லுங்க நான் குடிகாரனா???

இப்ப நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன் ஆனா இன்னும் டிக்கெட் கன்பார்ம் ஆகல. ரொம்ப கஷ்டப்பட்டு பொஞ்சாதியிடம் அனுமதி வாங்கி இருக்கேன் அங்க வந்து தான் 4 பெக் போடனும் அதற்காகவாவது டிக்கெட் கன்பார்ம் ஆகுதான்னு பார்ப்போம்...

டிஸ்கி ரொம்பநாள் ஆச்சு பதிவு எல்லாம் ஹிட் ஆகி இது ஹிட் ஆகுதான்னு பார்ப்போம்....

52 comments:

  1. செம சங்கவி...
    நல்ல விஷயம் தான்...
    ஆனா கதை நாரி போச்சி...

    ReplyDelete
  2. போங்க...!சங்கவி!இப்படி பதிவு போட்டா ஹிட் கிடைக்குமா ஒரு ஸ்கிரீன் ஷாட் கூட இல்லை!

    ReplyDelete
  3. நாங்க எல்லாம் பீருக்கே சோடா கலந்து குடிச்சவங்க....!ஹிஹி! நான் குடிய நிறுத்தி பல மாதங்களாகிவிட்டது!

    ReplyDelete
  4. போயிட்டு வாங்க தல :-)

    ReplyDelete
  5. ரம்முக்கு இப்பிடியும் ஒரு மீனிங் இருக்குதா ? சரக்குக்கு தனி டிக்ஸ்னெரியே இருக்குது போல இருக்குதே..!

    ReplyDelete
  6. sollarthu ellam nalla irukku... anna mayakkam enna appidinu oru puthakam padinga... athula neengalum kudi neyali enruthan solukinrarkal

    ReplyDelete
  7. ஓஹோ... இப்ப தான் விஷயம் தெரியுது... ஹா...ஹா...

    ReplyDelete
  8. //செம சங்கவி...
    நல்ல விஷயம் தான்...
    ஆனா கதை நாரி போச்சி...//

    இருக்கட்டும் இருக்கட்டும்...

    ReplyDelete
  9. //வீடு சுரேஸ்குமார் said...

    போங்க...!சங்கவி!இப்படி பதிவு போட்டா ஹிட் கிடைக்குமா ஒரு ஸ்கிரீன் ஷாட் கூட இல்லை!//

    ஸ்கிரீன் ஷாட் போடுட்டு நண்பர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதுல்லை...

    ReplyDelete
  10. .Karthik Ero said...

    போயிட்டு வாங்க தல :-)..

    நன்றி தல...

    ReplyDelete
  11. ..கலாகுமரன் said...

    ரம்முக்கு இப்பிடியும் ஒரு மீனிங் இருக்குதா ? சரக்குக்கு தனி டிக்ஸ்னெரியே இருக்குது போல இருக்குதே..!..

    சரக்குன்னா சும்மாவா...

    ReplyDelete
  12. ..பித்தனின் வாக்கு said...

    sollarthu ellam nalla irukku... anna mayakkam enna appidinu oru puthakam padinga... athula neengalum kudi neyali enruthan solukinrarkal..

    படிச்சு பார்க்கிறேன்...

    ReplyDelete
  13. ..Cable சங்கர் said...

    Sarukku kidayatha..

    கேபிளை சந்திக்கும் போது சரக்கு இல்லை என்றால் எப்படி.... அதனால் உண்டு உண்டு...

    ReplyDelete
  14. ஐயா முதல்ல நலுமாசத்துக்கு ஒருக்கா சரக்கடிப்பவன் எல்லாம் குடிகாரங்களா? சான்சே இல்ல இந்த பதிவு பிளாப்தான்.. ;-)

    ReplyDelete
  15. என்னது நீ குடிப்பியா:-)

    ReplyDelete
  16. காட்டான்
    //ஐயா முதல்ல நலுமாசத்துக்கு ஒருக்கா சரக்கடிப்பவன் எல்லாம் குடிகாரங்களா? //

    அதத்தான் நானும் கேக்கறேன் காட்டான் அண்ணே... அப்ப நான் குடிகாரன் இல்ல தானே....

    ReplyDelete
  17. யோவ் நாங்கெல்லாம் வாட்டர் பாக்கெட ல இருக்கற தண்ணிய குடிச்சாலே ரவுசு பண்ணுவோம்

    ReplyDelete
  18. //மணி ஜி

    என்னது நீ குடிப்பியா:-)//

    அதானே நான் எங்க குடிக்கிறேன்...


    ReplyDelete
  19. மணி (ஆயிரத்தில் ஒருவன்)

    //யோவ் நாங்கெல்லாம் வாட்டர் பாக்கெட ல இருக்கற தண்ணிய குடிச்சாலே ரவுசு பண்ணுவோம்//

    நீயும் நானும் ஓர் இனமே...

    ReplyDelete
  20. சரக்கு குறித்து ஒரு தெளிவான கருத்துடன்
    நீங்கள் இருப்பது பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர (நான் பதிவைச் சொல்கிறேன்) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. //அங்க வந்து தான் 4 பெக் போடனும் //
    இதுக்கு அனுமதி வாங்கியாச்சா?!

    ReplyDelete
  22. // சென்னை பித்தன்

    //அங்க வந்து தான் 4 பெக் போடனும் //
    இதுக்கு அனுமதி வாங்கியாச்சா?!
    //

    அனுமதி வாங்கியதால் தானே சென்னையே வருகிறேன்...

    ReplyDelete
  23. தல கோபில SKS பார் தானே..??
    வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..!!

    ReplyDelete
  24. சங்கவி,

    இப்படிலாம் உண்மைய சொன்னா கெட்டவன்னு சொல்வாங்க, ஆனால் திருடியாச்சம் குடிச்சுட்டு ,குடியா ,சே சே மோந்து கூடப்பார்க்கமாட்டேன்னு ஊருல பேசிக்கிட்டு திரியறவனை ரொம்ப்ப்ப நல்ல்லவ்வன்னு சொல்லும் உலகம்.

    நீங்க எனக்குலாம் அப்போ ரொம்ப சீனியர் 10 ஆம் வகுப்பிலவே கறுப்புகுதிரையை ஒட்டி இருக்கிங்க,நானெல்லாம் கல்லூரிப்போய் தான் மோந்து பார்த்துட்டு கேர் ஆகி ,அப்புறம் உள்நீச்சல் அடிக்கிற அளவுக்கு தேறினேன்.

    நம்ம ஊரு சரக்கு தான் மோசம்,எல்லாம் பட்ட சாரயம் போல தான் பேரு தான் வேற.

    அயல்நாடு சரக்குலாம் மால்ட்டட் வகை எனவே தீங்கு இல்லை/குறைவு.

    மிக்சிங்கு பழச்சாறு போட்டு குடித்தால் மிகவும் நலம்.

    ச்சியர்ஸ்!

    ReplyDelete
  25. இங்கே பின்னூட்டம் போட்டா தமிழகத்தின் குடிக் கலாச்சாரத்திற்கு ஆதரவு மாதிரியாகி விடும்.இருந்தாலும் உங்க பதிவின் டீலிங்க் எனக்கு பிடிச்சிருக்குது:)

    ReplyDelete
  26. நான் இந்த பதிவர் சந்திப்புல கலந்துகிறதுக்கு ஏதோ சரக்கு தேவையா அப்படின்னு சொல்லி இருக்காரே ன்னு வந்து பார்த்தா நான் மட்டை யாகிட்டேன்..

    ReplyDelete
  27. ///மிக்சிங்கு பழச்சாறு போட்டு குடித்தால் மிகவும் நலம்.///

    கண்டிப்பா...என்னோட பேவரைட் ரம்..இதுல தர்பூசணி கலந்து சாப்பிடுவேன்....இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்..என்ன பண்றது...நமக்கு தான் பிடிக்காதே..இதெல்லாம்...ஹி ஹி ஹி

    ReplyDelete
  28. Thirugnanasampath M

    தல கோபில SKS பார் தானே..??
    வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..!!

    ஆமாங்க வரலாறு மிக மிக முக்கியம்... இதுவும் முதலில் குடிச்ச பார் ஆச்சே...

    ReplyDelete
  29. ..கவி அழகன் said...

    Nenka romba nallavar..


    மிக்க நன்றிங்கோ...

    ReplyDelete
  30. வாங்க வவ்வால்.,

    இதுல சாராயம் குடிச்சத பத்தி எழுதாம விட்டுட்டேன்...

    விரைவில் அதைப்பற்றியும், சாரயம் மற்றும் கள் இதன் அனுபவங்கள் ரொம்ப ரொம்ப.,

    அடுத்த பதிவில் இதைப்பற்றி போட்டு விடலாம்....

    ReplyDelete
  31. ..கோவை நேரம் said...

    ///மிக்சிங்கு பழச்சாறு போட்டு குடித்தால் மிகவும் நலம்.///

    கண்டிப்பா...என்னோட பேவரைட் ரம்..இதுல தர்பூசணி கலந்து சாப்பிடுவேன்....இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்..என்ன பண்றது...நமக்கு தான் பிடிக்காதே..இதெல்லாம்...ஹி ஹி ஹி ..

    யாருக்கு உங்களுக்கு பிடிக்காதா ஜீவா.. நீங்க தான் பாண்டிச்சேர் ஸ்பெசலிஸ்ட் ஆச்சே...

    ReplyDelete
  32. சங்கவி உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  33. ஹிட் கிடைக்குதோ இல்லையோ வீட்ல படிச்சா சங்கவிக்கு குட்டு கிடைக்கும்...

    ReplyDelete
  34. மனம் திறந்த பதிவு! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  35. சங்கவி சார்.... சைடு டிஷ் எல்லாம் வாங்கியாச்சா...? காரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கட்டும்.
    இந்த பதிவுலேயே பல பேருக்கு சரக்கு தலைக்கு ஏறியிருக்கம்ன்னு நினைக்கிறேன்.

    ஹாப்பி டிர்ங்க்ஸ்...

    ReplyDelete
  36. சத்தியமா சொல்கிறேன் நீங்கள் இந்திய குடிமகன்தான் குடிகாரர் இல்லை. பதிவர் சந்திப்பில் அனைவரும் சந்திப்போம்.

    ReplyDelete

  37. சங்கவி... இந்த பதிவை கோவை பதிவர் சந்திப்பு நடக்கும்போது வாசித்து இருந்தால் உங்கள் தில்லை மெச்சி இருக்கலாம். விடுங்க. அட்டகத்தி தானே இப்ப பரபரப்பா ஓடிட்டு இருக்கு. நேர்ல பேசலாம்.

    ReplyDelete

  38. சொர்க்கம் மதுவிலே
    சொக்கும் அழகிலே
    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்

    "காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
    போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
    காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
    போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
    குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
    சொர்க்கம் மதுவிலே
    சொக்கும் அழகிலே
    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்"

    பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
    பள்ளி வரச்சொல்லி இந்த தொகை கெஞ்சுவாள்
    பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
    பள்ளி வரச்சொல்லி இந்த தொகை கெஞ்சுவாள்
    மறந்து நான் மயங்கவா
    இதற்கு நான் இணங்கவா

    திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அனைக்கிறேன்
    செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன்
    நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
    சொர்க்கம் மதுவிலே
    சொக்கும் அழகிலே
    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்

    ReplyDelete
  39. //தாமோதர் சந்துரு

    சங்கவி உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு..
    //

    அண்ணே இது தான் ம் தாரக மந்திரம்..

    ReplyDelete
  40. //சே. குமார் said...

    ஹிட் கிடைக்குதோ இல்லையோ வீட்ல படிச்சா சங்கவிக்கு குட்டு கிடைக்கும்...//

    அதையும் ஒருபதிவாக்கிடுவோம்....

    ReplyDelete
  41. .சிவகுமார் ! said...


    சங்கவி... இந்த பதிவை கோவை பதிவர் சந்திப்பு நடக்கும்போது வாசித்து இருந்தால் உங்கள் தில்லை மெச்சி இருக்கலாம். விடுங்க. அட்டகத்தி தானே இப்ப பரபரப்பா ஓடிட்டு இருக்கு. நேர்ல பேசலாம்...

    சிவா கோவை பதிவர் சந்திப்பில் குடிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை அதே சமயம் நிகழ்ச்சிக்கு ந்தைய இரவு நாங்கள் குடிக்காமலும் இல்லை... நாங்க அட்ட கத்தி இல்ல சார் உண்மைய பகிரங்காக ஒத்துக்கொள்வோம்...

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. கலக்கல் போஸ்ட் சார்...

    உங்க சமூக அக்கறை என்ன மெய் சிலிர்க்க வைக்குது....

    வாழ்க குடி! வளர்க குடிகாரர்கள்!

    ReplyDelete
  45. நண்பர்களே
    ஒரு பெக் அடிச்சா குடிகாரனா?
    இல்லை மாதிரி தோணுது
    வாரத்துக்கு நாலு பெக் அடிச்சா குடிகாரனா?
    கொஞ்சம்
    எப்போ நண்பர்கள் சேருகிறோமோ அப்ப மட்டும் குடிச்சா?
    அப்பவும் குடிதானே ஒழிய மொடாக்குடி இல்லை அவ்வளவுதான்
    ஒரு துளி என்பதால் விஷம்,அமிர்தமாகிடுமா?
    உங்க மனைவி விரும்பி அனுமதி கொடுக்கவில்லை . மாட்டேன்னாலும் அடிக்கத்தான் போறீங்க ஏதோ இந்த் மட்டும் அவங்க மரியாதையை காப்பாற்றிக் கொண்டதாய் நினைப்பு
    அவ்வளவுதான் . பெண் பதிவர்கள் பேசவில்லை என்பதால் அதை அங்கீகரிப்பதாய் எண்ண வேண்டாம். உங்கள் கோயிலைப்(உடல்) பற்றிய அக்கறை உங்களுக்கே இல்லாதபோது?
    ஒரு நண்பர் கூறினாரே அம்மா,அக்கா சொல்லியே கேட்காதவர்கள் என்று. ஆம் உங்கள் வலியை நீங்கள் தான் தாங்க வேண்டும் ஆனால் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் உங்களை மட்டும் தாக்குவதில்லை.ஒரு விவாதத்தில் கேட்டது நினைவிற்கு வருகிறது குடிப்பது என்பதை ஒரு
    சோசியல் ஸ்டேட்டஸ் ஆக நினைக்கிறார்கள் என்று.அது உண்மையா? சாப்பிட எத்தனையோ வகைகள் இருக்கும்போது அப்படி என்னப்பா இருக்கு அந்த த்ண்ணியிலே?

    ReplyDelete
  46. @ ezhil...

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.எழில்..!

    ReplyDelete
  47. நாங்கலாம் ஹலால் குடிகாரர்கள் !!! சந்திப்புக்கு முன்னும், பின்னும், சந்திப்பின் போதும் குடிப்போம் --- ஹலால் சரக்குக்களை மட்டும் !!!

    ஹிஹி !!!

    ReplyDelete
  48. குடியால் அழியுமா பதிவுலகம்?
    பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

    ReplyDelete