Sunday, August 26, 2012

சென்னை பதிவர் சந்திப்பை திட்டி எழுத 10 தலைப்புகள்

சென்னையில் பதிவர் சந்திப்பு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே... பதிவர் சந்திப்பு என்றால் சர்ச்சை இல்லாமல் இருக்குமா? வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு நடந்தாலும் அங்கு எதாவது தவறு நடந்தால் அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருபவன் தானே பதிவன்.

நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் எங்கு எங்கு சில தவறுகள் நடந்து இருக்கும் அதைபதிவாக்க வேண்டும் பல நண்பர்கள் கேமராவும் கையோடுயும் அழைந்தனர் அதில் நானும் ஒருவன். 

ஒன்னும் இல்லா சப்பை மேட்டரை ஊதி பெருக்குபவன் தான் உண்மையான பதிவன் என்று அரங்கில் ஒரு மிகப்பெரிய பதிவர்  கூறியது ஞாபகம் வந்தது.

விழா நடந்த அரங்கில் என் கண்ணில் பட்ட குறைகளை சுட்டிக்காட்டி நீங்களும் அதைப்பற்றி திட்டி அல்லது தகவல் திரட்டி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

திட்டி எழுத பத்து தலைப்புகள்...

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10

மேலே உள்ள பத்து தலைப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்து தேடி கண்டுபிடித்து எடுத்து திட்டி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

திட்டி எழுத 10 தலைப்பு கொடுத்தாலும் நன்றி சொல்வது நம் கடமை இருக்கிறது முதலில் அன்போடும் பாசத்தோடும் கட்டி அணைத்து என்னை வரவேற்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிக்க நன்றி...

மற்றவர்களையும் விழாவை பற்றியும் அடுத்த பதிவில் காணலாம். பதிவர் சந்திப்பை பற்றி நாங்களும் ஒரு வாரத்திற்கு பதிவு எழுதனுமல்ல...

இந்த தலைப்பை எனக்கு கொடுத்த அன்பு நண்பனுக்கு மிக்க நன்றி...

37 comments:

  1. பூதக்கண்ணாடி, பேய் கணணாடி,வேதாளக் கண்ணாடி வச்சும் பார்த்தேன் தெரியலை...?

    ReplyDelete
  2. //பூதக்கண்ணாடி, பேய் கணணாடி,வேதாளக் கண்ணாடி வச்சும் பார்த்தேன் தெரியலை...?//

    எனக்கு நல்லா தெரியுதுய்யா தெரியுது.... ஆள் ஆளுக்கு பீதிய கிளம்பிட்டாங்கன்னு நல்லா தெரியுது :-))

    ---------

    சங்கவி,

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைப்பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.


    சரி ஓட்டல் கடைக்காரருடன் பஞ்சாயத்து நடந்தது என்ன ? ஒருப்பதிவு போடுறது ,நாங்களும் கைத்தட்டுவோம்ல :-))


    ReplyDelete
  3. சுரேஷ்...

    நல்லாப்பாருமய்யா... கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்....

    ReplyDelete
  4. சந்திப்புல நா கலந்துக்கல.. அதுனால என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். யாராவது இந்தத் தலைப்புகள்ல எழுதுங்கப்பா. கும்மிய வேடிக்கை பார்க்க வரேன்.
    (தூண்டிவிடும் சங்கவி வாழ்க.. ஏதோ என்னால முடிங்சது)

    ReplyDelete
  5. அண்ணே வவ்வால் அண்ணே

    ..
    சரி ஓட்டல் கடைக்காரருடன் பஞ்சாயத்து நடந்தது என்ன ? ஒருப்பதிவு போடுறது ,நாங்களும் கைத்தட்டுவோம்ல :-))..


    நான் ஓட்டல் பக்கமே போகலைன்னே...

    ReplyDelete
  6. ///சந்திப்புல நா கலந்துக்கல.. அதுனால என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். யாராவது இந்தத் தலைப்புகள்ல எழுதுங்கப்பா. கும்மிய வேடிக்கை பார்க்க வரேன்.
    (தூண்டிவிடும் சங்கவி வாழ்க.. ஏதோ என்னால முடிங்சது)//

    அடப்பாவி இந்திரா...

    இதற்கு விளக்கம் அடுத்த பதிவில் தருகிறேன்...

    ReplyDelete
  7. முகநூல் உபயோகிச்சு உபயோகிச்சு அதே பழக்கத்துக்கு கமெண்ட்டை லைக் பண்றதுக்கு ஆப்ஷனைத் தேடுறேன்..
    அடக் கொடுமையே..

    ReplyDelete
  8. ஆரம்பிச்சாச்ச நடத்துங்க
    நீங்க நல்ல வருவீங்க

    ReplyDelete
  9. ஒரு சின்னக்குழந்தை ஆனா ரொம்ப சூட்டிகையான குழந்தை என்ன செய்யுமாம்... தன் வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் உறவுகளையும் நட்புகளையும் தன் பக்கம் ஈர்க்க அழகாய் சிரிக்குமாம்.. மழலை மொழியில் பேசுமாம்.. எப்படியாவது தன்னை பார்க்கமாட்டார்களா என்று என்னென்னவோ செய்யுமாம்.. நான் எங்க வீட்டு வாண்டுவை தாம்பா சொல்கிறேன். சின்னக்குழந்தையா இருக்கிறச்சே... அது இத்தனை சேஷ்டை செய்யும்.. பார்க்க எத்தனை அழகாக இருக்கும் தெரியுமா?

    ரசிக்க ரசிக்க சலிக்காத காட்சி அது...

    இப்ப நீங்க எழுதினதை பார்த்தப்ப இது தான் நினைவுக்கு வந்தது...

    இந்திரா சொன்னது போல ரொம்ப ரசித்து படித்தேன்... லைக் ஆப்ஷன் இருந்தால் கண்டிப்பா உடனே நானும் தட்டி இருந்திருப்பேன்...

    ம்ம் தொடருங்க தொடருங்க....

    ரொம்ப மிஸ் பண்ணிட்டேனேப்பா பதிவர் மாநாட்டை....



    ReplyDelete
  10. தெரிஞ்சிசடுச்சு....1- 10தான உங்சளுக்கு 10 வரைதான் தெரியும்னூ,....

    ReplyDelete
  11. தெரிஞ்சிசடுச்சு....1- 10தான உங்களுக்கு 10 வரைதான் தெரியும்னூ,....

    ReplyDelete
  12. ஈரோடு சந்திப்பு எப்பன்னு சொல்லுங்க!இங்கே விட்டதை அங்கே புடிச்சிடலாம்!

    ReplyDelete
  13. //வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு நடந்தாலும் அங்கு எதாவது தவறு நடந்தால் அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருபவன் தானே பதிவன்.
    நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் எங்கு எங்கு சில தவறுகள் நடந்து இருக்கும் அதைபதிவாக்க வேண்டும் //

    வெற்று உரல்களுக்கு இடிக்க இதோ சரக்கு

    >>>> >>>>
    பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)
    <<<<<

    // வவ்வால் said...

    //இதில் என்ன சொல்ல வறீங்கன்னு புரியலை..! அவர் 'சாப்பாடு வேண்டாம்னு' புறக்கணிச்சிட்டாரா..? அப்புறம், எதுக்கு ஐஸ் கிரீம் மட்டும் சாபிடுறாராம்..? அதுக்கு மட்டும் நாக்கு ஊறுதோ..? :-)))
    //

    வெங்காயம் அரேபியக்காரனுக்கு பொறந்த மாதியே பேசுறான் :-))

    யோவ் எலையை எதிர்பக்கமா சாப்டு மடிச்சா மீண்டும் இந்த விருந்து/ சாப்பாடு / உறவு வேண்டாம்னு நினைப்பதாக தமிழக கலாச்சாரம்.

    அதைத்தான் எலையை மடிச்ச விதம் வச்சு கலாய்ச்சு இருக்கார் பிரபா?

    தமிழ் நாட்டுல பொண்ணு பார்க்கப்போனால் சாப்பாடு போட்டு சாபிடும் போது எலையை எதிர்பக்கம மடக்கினால் பொண்ணு பிடிக்கலைனு சொன்னதா அர்த்தம், அப்புறம் கருமாதி எனப்படும் 16 ஆம் நாளுக்கு அப்புறம் போடும் சாப்பாட்டில் எல்லாரும் எலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பது.

    இதன் அடிப்படையில் போட்டோவில் அம்புக்குறியிட்டு இருக்கார், ஆனால் அதுக்கூட தெரியாமல் பினாதிக்கிட்டு :-))


    வவ்வாலுக்கு பதில் >>>>
    பதிவர் சந்திப்பில் சாப்பிட்டு விட்டு எதிர்புறமாக இலையை மடித்த டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?
    <<<< வவ்வாலுக்கு பதில்



    .
    .

    ReplyDelete
  14. தலைப்பு அருமை சங்கவி!

    நன்றி!

    ReplyDelete

  15. எங்கங்க ஒன்னையும் காணமே
    ஓ ..இது தான் கோயம்பத்தூர் குசும்பா ..ஹ ஹ

    நேற்று நிகழ்ச்சியை இங்கிருந்தபடி நேரலையில் ரசித்தேன்

    ReplyDelete
  16. பத்து தலைப்பு பிரமாதம்

    ReplyDelete
  17. புலவர் சா இராமாநுசம்

    தலைப்பு அருமை சங்கவி

    //தலைப்பு அருமை சங்கவி!

    நன்றி!//

    ஐயா தலைப்பு அருமை என்று சொல்வது புரிகிறது.. அதனால் தான் உள்ளே 10 எண்கள் மட்டும் போட்டேன்.. ஏனெனில் அங்கே குறை என்று சொல்லுக்கு இடமே இல்லாமல் நடந்தது சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் நிறைவு பெற்றது... இதைப்பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்...

    ReplyDelete
  18. நல்லா விபரமா யோசிக்கிறாங்க பா.

    ReplyDelete
  19. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. வருந்துகிறேன். இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு.. அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

    ReplyDelete
  20. 2 டிக்கெட் எடுக்கனும் இதோ வறேனு சொல்லிட்டு மேடியில இருந்து போன ஆளு..அதுக்கப்புறம் கணலையே???... கேமராவத் தூக்கிட்டுதான் திரிஞ்சீகளா...,(பயபுள்ல நம்மகிட்ட பொய் சொல்லிடுச்சி போல...)

    ReplyDelete
  21. // UNMAIKAL .//

    அண்ணே நீங்க நூறு வருசம் வாழ்ந்து இதே மாதிரி நாட்டுக்கு சேவை செய்யனும்ணே...

    ReplyDelete
  22. சங்கவி உங்களுடன் அதிகம் பேச முடியலை என்கிற வருத்தம் இருக்கு. அடுத்த முறை நிறைய பேசுவோம் ; வீடுதிரும்பல் நாலஞ்சு நாளா பதிவர் சந்திப்பை வச்சு எழுதுறார் அவருக்கு போட்டியா அடுத்த நாலு நாள் எழுத போறீங்களா? எழுதுங்க அப்ப தான் களை கட்டும்

    ReplyDelete
  23. தலைப்பு வைப்பதில் கில்லாடியாயிட்டு வர்றீங்க!

    ReplyDelete
  24. மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete
  25. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. மேட்டரே இல்லாமல் ஒரு பதிவை போட்டு ஹிட்டும் அடிக்கிறது சூப்பர் தல...

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. ஹி ஹி ஹி ரைட்டு! :)

    ReplyDelete
  29. :))) தொடரட்டும் விழாக்கள்.

    ReplyDelete
  30. இந்த மாதிரி தலைப்ப கொடுத்து ஹிட் ஆக்கின ஆளு யாருங்க...?

    ReplyDelete
  31. யாருமே தப்பை எழுதலைன்னு சந்தோசப் படாதீங்க அண்ணே...
    நான் எழுதரேன்...
    1.பதிவர் சந்திப்புக்குப் போய் வந்த சங்கவி இப்படி தலைப்பிட்டு பதிவிட்டது முதல் தப்பு.
    2.இதுவே மிகப்பெரிய தப்பு.
    3. இதை விட தப்பு உலகில் வேறு இல்லை.
    4. போன இடத்தில் எங்கே தப்பு கிடைக்கும் என்று கேமராவுடன் அலைந்தது மகாமகா தப்பு.
    5. இலை - பதிவர்கள் சேர்ந்து காசு போட்டு வாங்கியது. அதையும் சாப்பிடாமல் மடித்து கீழே போடுவதைப் பற்றி பேசியதும் மிகப்பெரிய தப்பு. (யார் எழுதியது...?)
    6. இப்படியெல்லாம் ஏமாற்றி ஹிட் ஆகினால் இது நிரந்தரம் கிடையாது என்று சொல்பவர்களின் வாயிக்கு அவல் கொடுத்தது்ம் தப்பு தான்.
    7. தலைப்பைப் பார்த்து புலவர் ஐயாவைக் கூட வரவழித்து ஏமாற்றி விட்டதும் தப்பு.
    8. அதைவிட என்ன குறையாக இருக்கும் என்று ஆவலுடன் ஓடிவந்த என்னை ஏமாற்றியதும் மிகப் பெரிய தப்பு.
    9. குறை குறைன்னு சொல்லிவிட்டு நிறைய நிறைவுகளை இன்னும் அதிகமாக சொல்லாமல் விட்டதும் தப்பு.
    10. ஐயோ இன்னும் இருக்கா.... ஆமாம் ஆமாம்... இதே மாதிறி தலைப்பிடாமல் நல்ல புள்ளைபோல் தலைப்பிட்டு எங்களை வரவிடாமல் தடுப்பதும் தப்பு தப்பு தப்பு....

    நாளை வந்து மீதி தப்புகளைச் சுட்டிக் காட்டுகிறேன். ஹா ஹா ஹா...

    ReplyDelete
  32. நான் சொவதற்கு முன்னாள் அருணா செல்வம் சொல்லிவிட்டார் அதானால் அவர் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  33. வெற்றிகரமாக பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  34. ஒன்றும் இல்லை என்று சொல்ல கூட நிறைய வேண்டும் போல

    ReplyDelete