Thursday, August 2, 2012

அஞ்சறைப்பெட்டி 02/08/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு ஒரு திடீர் விசிட் அடித்தோம். அழகான ஒரு ஏரி நடுவில் இரண்டு மரங்கள் அதில் கிட்டத்தட்ட ஒரு 9 விதமான 500 பறவைகளைப்பார்த்தோம் அமைதியாக இருந்த அந்த இடத்தில் தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால் பறவைகளின் வருகையும் குறைவாக இருக்கின்றது என்றனர். ஒரு ஒ மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து பறவைகளை ரசித்தோமானால் இது 2 மணி நேரம் ஆனாலும் நேரம் போவதே தெரியவில்லை. ஈரோட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தான் ஈரோடு செல்பவர்கள் 2 மணி நேரம் கிடைத்தால் ஒரு எட்டு போய் வரவும்... கண்ணுக்கும், மனதுக்கும் இனிமையான இடமாக காட்சி அளிக்கிறது...


...............................................................................................

ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று வலைத்தளங்களில் கழுவி ஊத்திக்கொண்டு இருந்த நிலையில் நம் நாட்டைச்சேர்ந்த கதக் நரங் வெங்கலப்பதக்கம் வென்றது திருப்தி அளிக்கிறது.

100 கோடி பேர் வாழும் நம்ம நாட்டில் ஒரு பதக்கத்துக்கு தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்... இன்னும் நிறைய அள்ளினால்??? நமது மனமும் துள்ளும்...

...............................................................................................

இந்த வாரம் மிக சோக வாரம் தில்லியில் இருந்து வந்த இரயிலில் தீப்பிடித்து 40க்கு மேற்பட்டவர்கள் இறந்தது மிக வருந்ததக்கது. எத்தனை கனவுகளுடன் பயணித்திருப்பர். சிறு தீக்குச்சியை கண்டால் பயந்தவர்க கூட பயந்திருப்பர். நினைத்துப்பாருங்கள் அந்த உடலில் தீப்பட்டவுடன் அவர்களின் மரண ஒலத்தை கேட்பதற்கே நம் மனதில் வலிமை இல்லை அதை பார்த்தவர்களும், அந்த தீ பட்டு இறந்தவர்களையும் நினைத்தாலே கண்ணீர் வருகிறது...

................................................................................................

 மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்து உள்ளார். இவரை எல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொன்றாலும் தவறில்லை.
...............................................................................................

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் மின்சாரம் இல்லை என்று வடநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் கூப்பாடு போடுகின்றன. இங்கு கடந்த 3 வருடங்களாக சரியாக மின்சாரம் இல்லை ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஊர் எல்லாம் இருக்கின்றது அப்போது கூவாத மீடியாக்கள் எல்லாம் இப்போது கூவுகின்றன..
...............................................................................................

சீனாவில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதாற்காக சிறுவயதில் இருந்து கடுமையான கட்டாயமான பயிற்சி அளிக்கிறார்களாம் இதனால் தான் அவர்கள் போட்டியில் வெல்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சிறுவயதில் இருந்து பயிற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் சிறுவயதிலேயே அழைத்து சென்று ராணுவத்தில் கூட இல்லாத பயிற்சியை தந்து சிறுவர்களை வதைக்கிறார்களாம்...

கொடுமையான விசயம் பதக்கம் வாங்குவதற்காக விரும்பம் இல்லாதாவனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி பரிசு வாங்கி என்ன லாபம்...
 ..................................................................................................
அடுத்த ஊழல் குற்றச்சாட்டு கிராணைட் கல் மீது அதுவும் மதுரையில் இருந்து கிளம்பி உள்ளது இதில் யார் யார் எல்லாம் சிக்கப்போறாங்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம் யார் என்று...
..................................................................................................


சமீபகாலமாக இங்கிலாந்தில் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான காணரம் குறித்து அரசு சார்பில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இன்ப உலகில் மிதப்பதற்காக அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழக்கம் 7 வயதில் இருந்தே தொடங்கி விடுகிறது. அப்போது கேன்னபிஸ் எனப்படும் ஒரு வகை போதை செடியை சிகரெட் போன்று வடிவமைத்து அவற்றை புகைக்கின்றனர்.

அதில் இருந்து படிப்படியாக முன்னேறி 9 வயதில் கோகைன், எஸ்டாசி போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் அளவு முன்னேறுகின்றனர். 7 வயதில் தொடங்கும் இந்த பழக்கம் 56 வயது வரை தொடர்கிறது.

கோகைன், எஸ்டசி, கேன்ன பிஸ் போன்ற போதைப் பொருட்கள் சமூக விரோதிகளிடம் இருந்து பள்ளிகளிலேயே தாராளமாக கிடைக்கிறது. அதனால்தான் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணித்து போதைப் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


..................................................................................................

எங்கள் ஊரின் மிக பிரபலமான திருவிழாவான குருநாதசுவாமி தேர்த்திருவிழா வருகிற 8 ம்தேதி தொடங்கி 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவோடு ஆசியாவின் மிகப்பெரிய குதிரை மற்றும் மாட்டுச்சந்தையும் நடை பெற உள்ளது. இத்திருவிழாவைப்பற்றி கடந்த இரண்டு வருடங்களாக பதிவிட்டு வருகிறேன் அப்போது நிறைய நண்பர்கள் அடுத்த வருடம் சொல்லுங்க வர முயற்சிக்கிறேன் என்றனர் அவர்களுக்காகத்தான் இவ்வரிகள்...

நண்பர்களே கிட்டத்தட்ட 1000 குதிரைகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு இருக்கும் யாராவது பார்க்க விரும்பினால் சனி, ஞாயிறுகளில் நான் அந்தியூரில் தான் இருப்பேன் என்
னைத் தொடர்பு கொள்ளுங்கள் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான திருவிழாவை காணலாம்... 


தகவல்
மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அகழ் வாராய்ச்சி துறை நிபுணர்கள் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, நார்வே மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கவாசுலு நட்டால் என்ற இடத்தில் உள்ள லெமாம்போ மலையின் அடிவாரத்தில் பார்டர் கேவ் என்ற இடத்தில் நடத்திய ஆராய்ச்சியின் போது சில ஆயுதங்கள், அணிகலன்கள் கிடைத்தன. அவை மரத்தினால் செய்யப்பட்டிருந்தது.

குழி தோண்ட பயன்படுத்தப்படும் குச்சிகள், கற்களால் ஆன ஆயுதங்கள், விஷம் தேய்க்கப்பட்ட ஆயுதங்கள், போன்றவை ஆகும். மேலும் அணிகலன்கள், நெருப்பு கோழி முட்டையின் தோடுகள் மற்றும கடல் சிப்பிகளில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தன.

இவை, சுமார் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆயுதங்கள் மற்றும் நகைகள் அனைத்தும் கிட்டத்தட்ட தற்போதைய நாகரீக கால மனிதர்கள் பயன்படுத்துவது போன்று உள்ளது.

அந்த ஆபரணங்களும் நகைகளும் தற்போதைய மனிதர்களின் கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒத்து போகிறது. எனவே நாகரீக மனிதன் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  மழை கழுவிய பூக்கள் என்ற பெயரில் எழுதி வருகிறார் அதிசயா. இவரின் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் வார்த்தை கோர்வை பலமாக பயன்படுத்தி இருப்பார். கவிதையில் காதலை அற்புதமாக சொல்லியிருக்கிறார்....

http://athisaya.blogspot.in


தத்துவம்

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.

அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.

எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.

12 comments:

  1. ஒலிம்பிக்கில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ...

    நமது இந்தியர்கள் சாதிப்பார்கள் என்று...

    தாங்கள் சொன்னதுபோல் இவ்வளவு மக்கள் தொகையை வைத்துக்கொண்டு நாம் மற்ற நாடுகளை வேடிக்கைப்பார்பதுதான் வேதனை...

    ReplyDelete
  2. இந்தியாவில் இந்த வாரம் மிக மோசமானதாக இருக்கிறது...

    பெரிய ரயில் விபத்து..
    உலகின் மிகப்பெரிய மின்தடை..

    இவற்றை அரசு மிகவும் அக்கறையுடன் கவனித்து இதுபோன்று மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  3. //////
    தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.

    /////////


    இந்த சமூகத்திடம் இதைத்தான் நானும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...

    மற்றவருக்கும் நடக்கும் போது நாம் தட்டிக்கேட்டால் நமக்கும் வரும்போது நாமும் பாதுகாப்பாக இருக்கலாம்...

    நல்லது...

    ReplyDelete
  4. உள்ளுர் முதல் உலகம் வரை
    இந்தவாரம் நடந்த விஷயங்களை
    வழக்கம்போல நேர்த்தியாகப்பதிவு செய்து தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தெரிந்த சில விவரங்கள் தெரியாத பல விவரங்கள். பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  6. அஞ்சறைப்பெட்டி விவரங்கள் அருமை. நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு முறை நண்பன் அழைப்பின்பேரில் குருநாத சுவாமி கோயில் திருவிழாவிற்கு அந்தியூர் வந்துள்ளேன். சிறப்பான விழா.

    ReplyDelete
  7. தங்க பதக்க விசயம் அதிகமாகவே அழுத்துகிறது...

    அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியா ஏதாவது பெரிய மாற்றம் கொண்டு வர விரும்புகிறேன்...

    ReplyDelete
  8. நம்ம அதிசயா குட்டி இங்கும் கலக்குறாளா... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ...

    ReplyDelete
  9. விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?

    உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது.

    இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

    ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.

    முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள ”பட் ஆஃப்” என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது.

    அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும்,

    மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

    The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?

    Athletes will receive 15 condoms each for the 17-day festival

    'I've seen athletes having sex out in the open, getting down and dirty on grass between buildings,' says U.S. women's goalie
    Victoria Pendleton among the glamorous female stars offered condoms

    Read more:CLICK >>>>>> The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever? <<<<<< TO READ


    இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,

    அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம்.

    அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,

    2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

    கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

    விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

    இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

    தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

    இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

    இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

    வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

    ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

    ReplyDelete
  10. விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?
    PART 2


    சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

    அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

    மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

    கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

    பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

    சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

    ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

    ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

    இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

    தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

    இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

    இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

    கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

    இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

    வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

    எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

    பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

    -நௌஷாத் அலி

    ReplyDelete
  11. ஒலிம்பிக்ஸ் பத்தி நினைச்சாலே கடுப்பா இருக்கு! 125 கோடி பேரால இன்னும் ஒரு தங்கம் கூட ஜெயிக்க முடியலை :(

    ReplyDelete