Monday, August 20, 2012

குதிரை சந்தையும் படங்களும்...

 
6 இலட்சத்திற்கு வாங்கி நிறுத்தி உள்ளனர்.. இராஜஸ்தான் குதிரை
 
3 இலட்சம் பெறுமான குதிரை., ரேசுக்கு பயன்படுத்துகிறார்கள் 

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது

 
2 இலட்சம் பெறுமான குதிரை ஈரோடு லக்காபுரத்தில் இருந்து வந்தது...

 
6 இலட்சம் ரூபாய் பெறுமான இந்த குதிரை கர்நாடக மாநிலத்தில்


இருந்து வந்தது
 
ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் 4 இலட்ச ரூபாய்

 3 மாத குட்டியுடன் தாய் ஈரோடு அத்தாணியை சேர்ந்த குதிரை





4 இலட்ச ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர் புது முதலாளி என்பதால் அடங்காமல் செல்கிறது
6 இலட்சம் பெறுமான குதிரை திருச்சியை சேர்ந்தது


 
வெள்ளைக் குதிரை 8 இலட்சமாம்

 
இந்த குதிரை கிராசுக்காக கொண்டுவரப்பட்ட குதிரை..
ஒரு முறை கிராசுக்கு 7 ஆயிரம் ருபாய்




 
பின்னாடி நிற்கும் இரண்டு குதிரையும் தலா பத்து இலட்ச ரூபாய் மதிப்பு ஈரோட்டை சேர்ந்த குதிரைகள்...

முன்னாள் நிற்பது பவானியைச் சேர்ந்த குட்டி சிங்கங்கள்...

18 comments:

  1. குட்டி சிங்கம் ஓகே

    சிங்கத்த தூக்கி வைச்சிருக்கிறது
    குட்டி யானை தானே !!!!!!
    just joke sir

    very nice post

    ReplyDelete
  2. அந்த கருப்பு குதிரை பட்டையை கிளப்புது

    (சத்தியமா இதுல உள் குத்து இல்லைன்னே, நான் சொன்னது மூணாவது படத்துல இருக்குற குதிரையை :)

    ReplyDelete
  3. அந்தியூரில் குதிரை சந்தை நடக்குதுன்னு செய்தித்தாளில் படித்ததுண்டு, ஒரு முறையாவது அப்பக்கம் வரும் போது பார்க்க வேண்டும் என நினைப்பேன், நீங்கள் நேராக பார்த்தது போல் அனுபத்தினை கொடுத்துவிட்டீர்கள்.

    இன்னும் கொஞ்சம் குதிரைகளை பற்றிய விவரம் கொடுத்திருக்கலாம், எதன் அடிப்படையில் விலை நிர்ணயம், வயசு என்ன இருக்கும், குதிரையில் என்ன வகைகள் இருக்கு என.
    -------------

    ஹி...ஹி கிராசுக்கு கொண்டு வந்த குதிரைன்னு பார்த்தாலே தெரியுது :-))

    ----------

    குதிரைகள் இவ்வளவு விலை இருக்கிறதே ,எல்லோருமே வாங்கி ரேஸ் விடுவார்களா?

    கம்மியான விலையில் எல்லாம் குதிரை கிடைக்கிறதா?

    ஈமு கோழிக்கு குதிரைவியாபாரம் செய்தால் நல்ல வருமானம் வரும் போல இருக்கு.

    ReplyDelete
  4. வருங்காலம் பெட்ரோல் இல்லாமப் போகப் போவுது, இந்த மாதிரி ஜீவன்கள் தான் நம்மைக் காப்பாத்தும், அதனால அவற்றை காப்பாத்தி வைக்கிறது நல்லது.

    ReplyDelete
  5. வாங்க வவ்வால்...

    //இன்னும் கொஞ்சம் குதிரைகளை பற்றிய விவரம் கொடுத்திருக்கலாம், எதன் அடிப்படையில் விலை நிர்ணயம், வயசு என்ன இருக்கும், குதிரையில் என்ன வகைகள் இருக்கு என//

    நிச்சயம் அடுத்த பதிவில் கொடுக்கிறேன்...

    //குதிரைகள் இவ்வளவு விலை இருக்கிறதே ,எல்லோருமே வாங்கி ரேஸ் விடுவார்களா? //

    இல்லீங்க விலை கொடுத்து வாங்கி பொழுது போக்குக்காவும், கெத்துக்காவும் வளர்ப்பவர்கள் தான் அதிகம்....

    நாங்க பரம்பறையாக குதிரை வைத்திருக்கிறோம் என்று மார்தட்டுபவர்கள் தான் இங்கு அதிகம்...

    //கம்மியான விலையில் எல்லாம் குதிரை கிடைக்கிறதா?//

    கிடைக்கும் ஆனால் அதன் ஆதாரமும் பணத்திற்கு ஏற்றாற் போல் தான் இருக்கும்...

    //ஈமு கோழிக்கு குதிரைவியாபாரம் செய்தால் நல்ல வருமானம் வரும் போல இருக்கு.//

    ஆனால் குதிரைக்கு பயிற்சி அளிக்க நிறைய செலவு செய்ய வேண்டும் சார்...

    ReplyDelete
  6. முன்னாள் நிற்பது பவானியைச் சேர்ந்த குட்டி சிங்கங்கள்-சிறப்பு

    ReplyDelete
  7. குதிரைகளின் பல வகைகளை தெரிந்து கொள்ள முடிந்தது... (விலை உட்பட)

    நன்றி... (TM 4)

    ReplyDelete
  8. குதிரைப் படங்கள் அழகு.

    ReplyDelete
  9. //முன்னாள் நிற்பது பவானியைச் சேர்ந்த குட்டி சிங்கங்கள்//
    குதிரை விக்குற சந்தையில சிங்கங்களுக்கு என்ன வேலை?

    ReplyDelete
  10. சிறப்பான பகிர்வு! எங்கள் பக்கத்திலும் ஒரு குதிரை பண்ணை உள்ளது. உள்ளே சென்று பார்க்க அனுமதி கிடையாது! உங்கள் பதிவு மூலம் சிலவற்றை அறிந்து கொண்டேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  11. சங்கவி,

    விரிவான விளக்கத்திற்கு நன்றி!

    அப்போ உங்க பக்கம் எல்லாம் ஜமிந்தார்கள் தான் அதிகம் போல ,கெத்துக்காக 10 லட்சத்தில குதிரை வாங்குவதுன்னா சும்மாவா?

    குதிரைக்கு பயிற்சி வேறவா? ஆனாலும் 10 லட்சம் விலை போகும்னா கொடுக்க வேண்டியது தான்.


    ஒரு மட்டக்குதிரை 50,000 ரூக்கு கிடைச்சால் வாங்கி நானும் கெத்து காட்டிப்பேன் :-))

    பொன்னியின் செல்வன் படிக்கிற காலத்தில இருந்தே குதிரை மேல ஒரு ஆர்வம் :-))

    ReplyDelete
  12. உங்க வீட்டுக் குதிரைகளா சங்கவி.உங்களை அடிக்கடி குதைரைகளோடு காண்கிறேனே.விருப்பமான வளர்ப்புக் குதிரையாரா !

    ReplyDelete
  13. ஈழத்தில் எங்கள் பகுதிகளில் நான் நல்லினக் குதிரைகளைக் கண்டதில்லை.ஆனால் இளமைமுதல் என் அபிமான மிருகம் குதிரை. நெடுந்தீவில் அரேபிய வியாபாரிகள் விட்டுச் சென்ற குதிரைகள் உண்டு. ஆனால் இவ்வளவு கம்பீரமில்லை.
    இவ்வளவு நல்ல குதிரைகள் இருக்கவா? மாணிக்கவாசகர் அரபு நாட்டுக்குக் குதிரை வாங்கச் சென்றார்.
    அல்லது இக்குதிரைகள் அவற்றின் வம்சாவழியா??
    அழகான விபரமான படங்களுக்கு நன்றி! அங்கு 4 லட்சத்துக்கு வாங்கிச் செல்லும் அந்த முகவெள்ளைக் கறுப்புக் குதிரை, இங்கு குறைந்தது 1.5 லட்சம் யூரோவுக்கு விலை போகும். இந்தியாவில் மிக மலிவாக உள்ளது.
    கிராசுக்காக என்பதிலும் சினைப்படுத்தும் குதிரை எனக் கூறலாமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. tamilnadil engalum kuthirai vangalm...pls reply sir

    ReplyDelete
    Replies
    1. அந்தியூரில் ஆடி மாதம் வாங்கலாம், மற்றபடி குதிரை விற்பனைக்கு என்று புரோக்கர்கள் நிறைய இருப்பார்கள் அவர்களைத்தான் தேடிப்பிடிக்கனும் சார்... அந்தியூரில் ஆடி மாதம் சந்தை நடக்கும்...

      Delete
  15. tamilnadil engalum kuthirai vangalm...pls reply sir

    ReplyDelete