Friday, March 5, 2010

உயிர் காக்கும் 108


தமிழக அரசு எத்தனையே இலவச திட்டங்கள் அறிவித்து இருக்கின்றது ஆனால் இலவச ஆம்புலன்ஸ் 108 திட்டம் மிக மிக வரவேற்க கூடிய திட்டம் . இத்திட்டம் கலைஞர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும் அறிவித்து இருக்கவேண்டும் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
எனது அனுபவம்
நான் 8 வருடங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது வாலஜா சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளானார். நானும் எனது நண்பனும் அவரை சென்ரல் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் அந்த நல்ல விசயத்தை செய்ததற்கு பின்பு தான் நான் மிகவும் வேதனைப்பட்டேன். அங்கு வந்த காவல்துறை நண்பர் எப்படி நடந்தது என்ன என்று விசாரித்து விட்டு சென்றுவிட்டார், அடிபட்டவர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் காப்பாற்றி இங்கு கொண்டு வந்தது நாங்கள் தான் என்று கூறினோம் சரி நன்றி என்று சொன்னவர் அவரது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுவிட்டு நான் இரண்டாயிரம் ரூபாய் வைத்து இருந்தேன் இப்போது ஐநூறு தான் இருக்கிறது என்று பிரச்சனையை கிளப்பி விட்டார். முன்பு விசாரித்த காவல் துறை நண்பர் வந்து இவர்கள் தான் உன்னை காப்பாற்றினார்கள் அப்படி எடுத்திருந்தால் முழுவதும் தானே எடுத்து இருப்பார்கள் என்று அவர் எடுத்துக்கூறியும் அடிபட்டவர் இல்லை இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் இவர்கள் மேல் கேஸ் போடுங்கள் என்றார் நன்றி உள்ள அடிபட்டவர் அப்புறம் எங்கள் அலுவலக மேனேஜர் வந்து அவர் சொந்த பணத்தை கொடுத்து எங்களை கூட்டிச்சென்றார் போகும் போது சொன்னார் இது கிராமம் இல்லை சென்னை இங்க இப்படித்தான் என்றார். அப்போது தான் தெரிந்து கொண்டேன் சென்னையில் யார் விபத்துக்குள்ளானாலும் அவர் அவர் அவர்களது வேலையைப்பார்த்துக் கொண்டு கண்டுக்காமல் செல்கிறார்கள் என்று இதற்குப் பெயர் தான் வேலியில் போறதை எடுத்து வேட்டியில் விட்டு குத்துதே குடையுதே என்று கூறுகிறோம்.

கடந்த வாரம் நடந்த சம்பவம்
கடந்த வாரம் நான் எனது மனைவி சகிதமாக ஊரிற்கு சென்று இருந்தேன். ஊரில் இருந்து பாவனி வரும் போது ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பெரிய குழியில் வண்டியை விட்டு நிலை தடுமாறி மரத்தில் மோதி கீழே விழுந்து இருந்தார் இது நடந்து மூன்றாவது நிமிடத்தில் நான் அந்த இடத்தில் காரை விட்டு இறங்கி பக்த்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார் அவரிடம் விசாரித்து விட்டு அவரை தூக்குங்க எனது காரில் மருத்துவமனை கொண்டு செல்லாம் என்றேன் வேண்டாம் சார் நான் 108க்கு சொல்லிட்டேன் அவர்கள் வந்து விடுவார்கள் என்றார் அவர்கள் எப்ப வர்றது ஒரு சிறு கூட்டம் சோந்துவிட்டது இல்ல சார் நாமே கொண்டு போகலாம் என்று அங்கு இருந்த பெரியவரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது 108 வாகனம் சைரனுடன் போன் செய்த 7வது நிமிடத்தில் வந்து சேர்ந்தது, அவ்வாகனத்தில் முதல் உதவிக்கு என ஆட்கள் இருந்தனர். அவர்கள் இவர் யார் எந்த ஊர் என்று கேள்வி எல்லாம் கேட்கவில்லை வந்தார்கள் முதலுதவி செய்தார்கள் வாகனத்தில் ஏற்று மருத்துவமனை கொண்டு சென்றார்கள். நாங்களும் நிம்மதியாக கலைந்து சென்றோம்.
ஒருவர் விபத்தில் அடிபட்டுக்கிடந்தால் இவ்வளவு நாள் நமக்கு ஏன் என்று இருப்பவர்கள் எல்லாம் 108க்கு போன் செய்து அடிபட்ட இடத்தை மட்டும் சரியாகச் சொன்னால் அவர்களை காப்பாற்ற 108 இருக்கிறது. இதுவரை இத்திட்டம் சரியாக செல்கிறது நான் விசாரித்தவரை யாரும் இத்திட்டத்தை குறை கூறவில்லை. அரசின் திட்டங்களுக்கு நிறையபேர் குறை கூறியிருந்தாலும் என்னைப்பொறுத்த வரை மிகவும் பாராட்டப்பட வேண்டிய திட்டம் இத்திட்டம்.
எனது வேண்டுகோள்
1. நண்பர்களே நீங்களும் வாகனத்தில் செல்லும் போது யரேனும் விபத்துக்குள்ளாகியிருந்தால் ஒரு போன் செய்தால் போதும் விபத்துக்குள்ளானவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது..
2. அரசு ஒரு தொகுதிக்கு 5 வாகனங்களை கொடுத்தால் இன்னும் நிறைய விபத்துக்குளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

23 comments:

  1. மிக அவசியமான பகிர்வு.நன்றி

    ReplyDelete
  2. ஆமாம். சங்கவி....108 சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..பாராட்டப்படவேண்டிய விசயம்.

    சென்னை சம்பவம் எங்காவது ஒண்றுதான் நடக்கும்.போகட்டும் விடுங்கள்.ஆனால் அதற்குப்பயந்து நாம் உதவி செய்யாமல் போய்விட்டால் நம் மனச்சாட்சியே நம்மைக் கொன்றுவிடும்.

    ReplyDelete
  3. சரி தான் உருப்படியான திட்டம்..

    ReplyDelete
  4. அவசியமான தவகல் கொடுத்ததற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. கிராமங்களில் கூட 108-ன் சேவை மிகவும் பனுள்ளதாகவும், உயிர் காக்க உதவியாயும் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி சங்கவி...

    பிரபாகர்.

    ReplyDelete
  6. தேவையான பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டு.

    ReplyDelete
  7. ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு...

    ReplyDelete
  8. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான் சங்கவி.

    ReplyDelete
  9. idhil கட்சி வேறுபாடு இல்லை. என் தாயார் நோய்வாய் பட்டபோது சமயத்தில் உதவியது இந்த வண்டி தான். இது ஒன்றிற்காகவே மாற்று கட்சியாக இருந்தாலும் கலைகன்ருக்கு நன்றி.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. உண்மையிலேயே இது மிகவும் நல்ல திட்டம். மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கேள்வி...!

    ReplyDelete
  12. தேவையான பகிர்வு சங்கவி நன்றி

    ReplyDelete
  13. அவசியமான பகிர்வு சங்கவி...

    ReplyDelete
  14. நல்ல தகவல் ... பல நேரத்துலே போலீசுக்கும் கோர்ட்டுக்கும் பதில் சொல்லனுமேன்னு மனச கல்லாக்கிட்டு மக்கள் ஒதுங்கி போய்டுவாங்க . இந்த திட்டத்தாலே 108 க்கு போன் பண்ணிட்டு முடிஞ்ச முதலுதவியை மக்கள் பயப்படாம செய்வாங்க .. நல்ல திட்டம்

    ReplyDelete
  15. பதிவு அருமை சங்கவி. 108 தவிர்க்க முடியாததாக தேர்தல் வாக்கு சக்தியாக ஆகட்டும்.

    ReplyDelete
  16. மிகத்தேவையான அதேசமயத்தில் அவசியமான பதிவு... இது நல்ல திட்டம்...மேலும் சிறப்படைய பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும்....

    ReplyDelete
  17. its also have some mistakes 108 always take the people to the nearest GH only. Even if the accident person request, they never take them to private hospital. Now Kalaigner insurance scheme gives free quality treatment fecility in all hospitals. So if they change the policy it will be helpful to all. Its my suggestion thats all.

    ReplyDelete
  18. நன்றி.... ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு...thanks a lot..... thanks

    ReplyDelete
  19. Visit this Site for More information and Technology in 108:

    http://rammohan1985.wordpress.com/2010/01/30/all-about-108-medical-police-fire/

    ReplyDelete
  20. ப‌ய‌னுள்ள‌ ப‌திவு

    ReplyDelete