Tuesday, March 2, 2010

மாரடைப்பை விரட்டும் "விரதம்"

இந்த ஒரு வார காலமாக வேலை பளு காரணமாக பதிவையும் படிக்கவில்லை பின்னூட்டமும் இடவில்லை. இன்று பதிவிற்கு வந்து ஒவ்வொரு நண்பர்களையும் படித்த உடன் தான் மனது நிம்மதி அளிக்கிறது. கடந்த வாரம் இரவு நண்பர் பிரபாகர் சிங்கையில் இருந்து அழைத்தார்.அவருடன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது விரதத்தை பற்றி எழுதுங்கள் அதில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கின்றது என்றார் அதற்குப்பின் இதற்கான தகவல்களை சேகரித்து இப்பதிவை இடுகிறேன்.
நம்ம ஊரில் பெண்கள் இன்று அதிகமாக விரதம் இருப்பதில்லை காரணம் அலுவல் பணிகாரணமாக விரதம் இருப்பதை தவிர்க்க முடியாமல் தவிர்க்கின்றனர். விரதம் இருந்தால் நல்லது என்ற காரணத்தினால் தான் அக்காலத்தில் நிறைய விரதங்கள் இருப்பதை பலர் இன்றும் பின்றபற்றுகின்றனர்.

விரதம் இருப்பது எப்படி

விரதம் ஒவ்வொருவ மதத்தினருக்கும் மாறுபடும் இந்துக்களில் விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த ஆகாரமும் சாப்பிடமாட்டார்கள் பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் முஸ்லீம் மதத்தினர் நோன்பு என்ற பெயரில் உண்ணா நோன்பை கடைபிடிக்கின்றனர். இவர்கள் காலையில் இருந்து மாலை வரை எச்சில் கூட முழுங்காமல் கடுமையான உண்ணாநோன்பை கடை பிடிக்கின்றனர். இதனால் உடல் நலத்தின் பயன் மிக அதிகம்.
மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப் படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன் என்பவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, லேட்டர் டே இயேசு கிறிஸ்து துறவிகள் சபையைச் சேர்ந்தவர் களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

இந்த சபையைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை விரதம் இருப்பது வழக்கம்.இவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயம் சம்பந்தமான நோய்களும் இவர்களுக்குக் குறைவாகவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால் 50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்கு இணையானது.நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்பு போதுமானது.
உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல் சில நாட்கள் மிகக் கடுமையானவை.  இந்த நாட்களில் பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்து வாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல் இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால்
உண்ணா நோன்பு தொடரும்போது இந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும் அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும்.  இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும். 
கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும்.இதற்குக் காரணம் இருக்கிறது. உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.  இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

விரதம் இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.
2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது.  இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.
3.  சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.
4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.
5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.  அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.
6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது.  குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப் படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது மூளை.
மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பது அந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள் இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.

29 comments:

  1. //3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்//

    அதைச்சொல்லுங்க :)

    ReplyDelete
  2. //மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது//

    நல்லாச்சொன்னீங்க சங்கவி, இல்லைன்னா எடுக்கப்போய், கொடுத்து வந்த கதையாகிவிடும். :-)

    ReplyDelete
  3. //இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன்//
    தகவலுக்காக: சால்ட்லேக் சிடி அமெரிக்காவில் உள்ளது.

    ஆய்வு அறிக்கை:
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2572991/

    பெஞ்சமின் ’ஓர்ன்:
    http://www.bmi.utah.edu/?module=facultyDetails&personId=15223&orgId=382


    என் தந்தையார் கடுமையான விரதம் இருந்தவர். ஆனாலும் சிறிய மாரடைப்பு ஏற்பட்டது. பின் நாளில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்தார்.
    //உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது.//
    இந்த அறிவுரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  4. //மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.//

    நிஜம்தான்.

    ஆனா, இதைக்கூட ஒரு அமெரிக்காக்காரரோ,இங்கிலாந்துக்காரரோ சொன்னாதான் நம்ம மக்கள் உடனே ஏத்துக்குவாங்க :)

    ReplyDelete
  5. இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன்



    .......he is from USA.

    .......However, fasting has fewer advantages than disadvantages and most people don’t know how dangerous fasting is.
    http://www.healthmedicalarticles.com/the-dangers-of-fasting/
    read this article to see the pros and cons.

    ReplyDelete
  6. எல்லா விரதமும் பட்டியிருப்பதில்லை. சில விரதங்களில் இனிப்பு மட்டும், சிலவற்றில் உப்பு மட்டும், சில இரவு வேளைகளில் மற்று உணவு என்று பலவகை. பொதுவில் விரதம் என்பது காஸ்ட்ரிக், அல்சர் போன்ற நோயற்றவர்கள் மருத்துவர் ஆலோசனையுடனிருப்பது மிகவும் நல்லதுதான். பகிர்வுக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு...
    நன்றி சங்கவி...

    ReplyDelete
  8. கொழுப்புச்சத்து குறையுமா அப்ப விரதம் இருந்துவிட வேண்டியதுதான் சங்கவி

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள இடுகை.
    ஆனால் நீரழிவு, அல்சர் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையுடன் இருப்பதே நல்லது. உண்மைதான்.

    ReplyDelete
  10. அடேங்கப்பா, இவ்ளோ பயன் இருக்கா!!
    நன்றி நண்பரே தகவல்களுக்கு.

    ReplyDelete
  11. இப்போதுள்ள விலைவாசி ஏற்றத்தின் காரணமாக உண்ணாவிரதம் இருந்தால் மூன்று பயன்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு.. நன்றி.. உங்களை "பதின்மம்" தொடருக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்கள் நண்பா..

    ReplyDelete
  13. விரதம் பற்றித்தெரிந்திருந்தாலும் மாரடைப்பைகுறைக்கும் என்பது எனக்குப் புதிய தகவல்...நல்ல பதிவு..

    ReplyDelete
  14. அரைத்துக்கொண்டே இருக்கும் குடலுக்கு ஒரு ஓய்வாக விரதம் நல்லதுதான்..:)

    ReplyDelete
  15. வாங்க சின்ன அம்மிணி...

    வாங்க அமைதிச்சாரல்...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. வாங்க குலவுசனப்பிரியன்....


    நான் படித்த புத்தகத்தில் இப்படித்தான் இருந்தது... தவறான தகவலுக்கு வருத்தப்படுகிறேன்.
    தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

    ReplyDelete
  17. வாங்க சுந்தரா...

    சரியாச் சொன்னீங்க நம்ம ஊர்க்காரன் சொன்னா எங்க நம்புறாங்க...

    ReplyDelete
  18. வாங்க சித்ரா வாங்க...

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  19. வாங்க அப்துல்லா...

    ரொம்ப நாளைக்கு அப்புறம் வலைப்பூவிற்கு வருகிறீர்கள் போல...

    ReplyDelete
  20. வாங்க வானம்பாடி சார்...

    உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  21. வாங்க அம்பிகா...

    வாங்க சைவகொத்துப்பரோட்டா...

    வாங்க ஜெயந்தி....

    வாங்க மணிப்பக்கம்

    வாங்க திவ்யா...

    வாங்க ஸ்ரீ

    வாங்க அண்ணாமலையான்...

    வாங்க கண்ணகி...

    வாங்க சங்கர்...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. நான் 20 வருடங்களாக வாரத்திற்கு ஒரு நாள் உண்ணாவிரதம இருந்து வருகிறேன்.

    என் உடல் எடை தொடர்ந்து ஒரே சீராக இருந்து வ்வருகிறட்து. என் இடுப்பு அளளவும் அப்படியே.

    ReplyDelete
  23. நல்ல பகிர்வு.

    வலைச்சரத்தில் எழுதுகிறேன். கருத்து கூறவும் சங்கவி.

    ReplyDelete