Tuesday, March 16, 2010

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...


இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. கோவையில் வெப்பத்தின் தாகம் இந்த வருடம் அதிகரித்து உள்ளது கோவையிலே இப்படி என்றால் சென்னையை கேட்கவேண்டியதே இல்லை. உடல் சூட்டைத் தணிக்க இன்று எத்தனையோ குளிர்பானங்களும் மருந்துகளும், மாத்திரைகளும் வந்து விட்டன ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இத்தனை பானங்கள் எல்லாம் இல்லை அவர்கள் சூட்டைத்தனிக்க குடித்தது கம்மங்கூழ் தான்.

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ் என்று சொல்வதில் பல பெருமைகள் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் கம்மஞ்சோறு இருந்திருக்கும். ஆனால் இன்று வீடுகளில் கம்மஞ்சோறு செய்வது மிகவும் குறைந்து விட்டது. இன்று விற்பனை பொருளாகிவிட்டது. இன்று நகர்புறமாகட்டும், கிராமப்புறமாகட்டடு ஒரு தள்ளு வண்டியில் இரண்டு பானைகளுடன் இருக்கும் அங்கு கம்மங்கூழ் விற்பனை தூள் பறக்கின்றது. கம்மங்கூழ்க்கு தொட்டுக்க மாங்காய், குடல், வத்தல், அன்னாசிப்பழம், மோர் மிளகாய் இன்னும் ஏரியாவிற்குத் தகுந்த மாதிரி நிறைய இருக்கும் இதை சாப்பிடும் போதே உடல் குளுமையாக இருக்கும்.

என் நினைவில் சிறு வயதில் வீட்டில் பாட்டி ஊருக்கு வந்தார்கள் எனில் கம்பு இடித்து கம்மஞ்சோறு செய்து அதை பானையில் வைத்து அடுத்த நாள் காலை கொஞ்சம் தயிர் சேர்த்து கரைத்துக் கடித்தால் அதன் சுகமே தனிதான். நிறைய பேர் இதை அனுபவித்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

  • கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்
  • குடல் நோய்களுக்கு வராமல் பாதுகாக்கும்
  • உடல் வலிமை சேர்க்கும்
கம்மஞ்சோறு

கம்மஞ்சோறு செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து குடிக்க வேண்டும்.

நண்பர்களே இப்போது கம்மங்கூழ் விற்கும் இடத்தில் சுகாதாரக்கேடு நிறைய இருக்கும் அதனால் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் இது உடல் நலத்திற்கான அருமையான உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை.
    இன்னும் பல நன்மைகள் இருக்கும் என நினைக்கிறேன். இக்கோடையில் கம்மங்கூழ் சாப்பிட்டு வெப்பத்தை தணியுங்கள்....

    53 comments:

    1. அருமையான பதிவு! கம்மங்கூழ் குடித்தது போல இருப்பதோடு, நாளை கம்மங்கூழ் குடித்தே ஆக வேண்டும் என்ற ஆசையும் ஏற்படுத்தி விட்டது!

      ReplyDelete
    2. ஆஹா அருமை நண்பா...

      சமயத்திற்கு ஏற்றாற்போல் இடுகை, நல்ல பல தகவல்களோடு...

      எனது மிகப்பிடித்த உணவுபற்றி அருமையாய் எழுதிய உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்...

      பிரபாகர்.

      ReplyDelete
    3. ///கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து குடிக்க வேண்டும்.///

      missing now:((

      ReplyDelete
    4. போட்டீங்க பாருங்க சீசனுக்கேத்த பதிவு..:)) ஜில்லுனு இருக்கு சங்கவி:)

      ReplyDelete
    5. பகிர்வுக்கு நன்றி.

      ஆனால் கம்மங்கூழுக்கு நான் எங்கே போவேன்.

      ReplyDelete
    6. நானும் சின்ன வயதில் குடித்திருக்கிறேன்.

      ReplyDelete
    7. கூல்(ழ்) பதிவு.

      ReplyDelete
    8. வாங்க சேட்டைக்காரன்...

      கம்மங்கூழ் சாப்பிட்டிங்களா.........

      ReplyDelete
    9. வாங்க பிரபாகர் நண்பா...

      உங்களுக்கு மட்டுமல்ல நண்பா ஒவ்வொரு தமிழனுக்கும் நிச்சயம் பிடித்த உணவாகத்தான் இருக்கும்...

      ReplyDelete
    10. வாங்க செல்வநாயகி...

      சாப்பிட்டு பாருங்க....

      ReplyDelete
    11. வாங்க ஷங்கர்...

      சீசனுக்கேத்த பதிவு போடுவதுதானே நம் தனித்துவமே....

      ReplyDelete
    12. வாங்க அக்பர்...

      தமிழ்நாட்டுக்கு வாங்க உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்... இல்லனா சொல்லுங்க கம்பு வாங்கி பார்சல் செய்யறேன் நீங்க கூழ் வெச்சுக்குங்க...

      ReplyDelete
    13. வாங்க சின்னஅம்மிணி...

      இப்புவும் குடிங்க....

      ReplyDelete
    14. வாங்க சித்ரா வாங்க....

      நலமா? இங்க சூடு அதிகம் அதுதான் கூழ் பதிவு... அங்க எப்படி....?

      ReplyDelete
    15. கூழ் குடிக்கும் ஆசையை தூண்டி விட்டீர்களே!!

      ReplyDelete
    16. நல்ல குளிர்ச்சியான பதிவு....அதை எல்லாம் சாப்பிட்டு ரெம்ப நாள் ஆகுது..

      ReplyDelete
    17. பருவத்துக்கேற்ற பதிவு போட்டுள்ளீர்கள். அதனால்தான் ஆடி மாதங்களில் கோவிலில் கூழ் ஊற்றுகிறார்கள். இதை செய்யாதவர்கள் அருந்தட்டுமே என்று. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

      ReplyDelete
    18. இதுவரை கம்மங்கூழோ கம்மஞ்சோறோ சாப்பிட்டதில்லை. சாப்பிடும் ஆவலை கிளப்பிவிட்டீர்கள்

      ReplyDelete
    19. சூப்பர்...பின்னூட்டமிட்டா கம்பங்கூள் ப்ரீ

      ReplyDelete
    20. சூப்பர்...பின்னூட்டமிட்டா கம்பங்கூள் ப்ரீ

      ReplyDelete
    21. நல்ல பகிர்வு நண்பரே .
      மீண்டும் வருவான் பனித்துளி !

      ReplyDelete
    22. ``கம்ப மா என்றேன்;
      நற்களியாம், என்றாள்’’

      இரட்டுற மொழிதலில் கூட சொல்லியிருக்காங்க.
      தமிழர்களின் பண்டைய உண்வு மட்டுமல்ல; சத்தும் சுவையும் நிறைந்தது

      ReplyDelete
    23. பதிவு படிக்கும் போதே கம்மங்கூழ் குடிக்கணும் போல இருக்கு. ஆனா இங்கே கம்பும் கிடைக்காது, முருங்கைக் கீரையும் கிடைக்காது. ஆனாலும் பதிவு பார்த்திட்டு சும்மா இருக்க முடியல. இப்போவே வேறென்ன கூழெல்லாம் பண்ண முடியும்னு கூகிளாண்டவரைக் கேக்க வேண்டியது தான்.

      நல்ல பதிவு சங்கவி.

      ReplyDelete
    24. //அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். //

      முருங்கைகீரை க்ருவாட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.... :P

      கருவாட்டு குழம்பு heattu தான், அதனால தவிர்த்திட்டீங்கன்னு தெரியுது :)

      ஜில்லுன்னு ஒரு ஞாபகபடுத்தல்

      ReplyDelete
    25. இடுகை மணக்கிறது..

      கம்மஞ்சோறு போலவே

      ReplyDelete
    26. இது வரை சாப்பிட்டதில்லை...பதிவு சாப்பிடத் தூண்டுகிறது...

      ReplyDelete
    27. சென்னையிலும் இப்ப கம்பங்கூழ் கிடைக்குது. பெரும்பாலும் 10 மணிக்குள்ளேயே விற்றுத் தீர்ந்துவிடும் போல. ஓரளவு சுத்தமாகவே விற்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

      ReplyDelete
    28. அருமை வாழ்த்துக்கள்

      ReplyDelete
    29. அதெல்லாம் இப்ப எங்கப்பா கிடைக்குது பர்கர் இன்றான் பீசா இன்றான் ஒண்ணுமே புரியல, உங்கள் பதிவில் கிராமத்து வாசம் வீசுது

      ReplyDelete
    30. சங்கவி சொன்னவிதம் குடிக்கணும் போலவே இருக்கு.. ஆனா எப்படி செய்வதுன்னு தெரியலையே

      ReplyDelete
    31. ஞாயித்துக்கெழம எனக்கு காலை சாப்பாடே இதுதான். மத்த நாள்ல முடியறதில்ல... ஆனாலும் சாப்பிடணும்... நல்ல இடுகை.... நன்றி....

      ReplyDelete
    32. மதுரேல கிடைக்குமுங்க.

      ReplyDelete
    33. கோடைக்குத் தேவையான குளிர்ச்சியான பதிவு. நன்றி!

      ReplyDelete
    34. சீசனுக்கு தகுந்த மாதிரி இருக்கு சங்கவி உங்க பதிவு.. நன்றி..

      ReplyDelete
    35. பிரேக் பாஸ்ட் கம்பங்கூழ் ஓகே , டின்னருக்கு ஒரு ப்ளேட் கேப்ப களி ஆடர்............

      ReplyDelete
    36. கம்மங்கூழ் பற்றிய இந்த இடுகை, பல பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.. மிக்க நன்றி

      ReplyDelete
    37. சம்மர் ஸ்பெஷல்:)

      ReplyDelete
    38. அன்பின் சங்கவி

      அருமை அருமை கம்மங்கூழ் குடித்த திருப்தி - இன்றைய வெப்பத்திற்குத் தேவையான ஒன்று இக்கூழ் - அடடா அதன் மணம் என்ன = சுவை என்ன - குள்ர்நிலை என்ன ?

      அய்யொ உடனே குடிக்கனூம் போல இருக்கே

      ReplyDelete
    39. This comment has been removed by a blog administrator.

      ReplyDelete
    40. வாங்க சைவகொத்துப்பரோட்டா...

      கூழ் குடிச்சீங்களா?


      வாங்க நாடோடி....

      இப்ப சாப்பிட முயற்சி செய்யுங்க....


      வாங்க வடிவேலன்...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      ReplyDelete
    41. வாங்க வரதராஜலு...

      கம்மஞ்சோறு சாப்பிட்டதில்லையா... சாப்பிட்டு பாருங்க அப்புறம் தெரியும் இதன் அருமை...

      வாங்க ஜீவன்சிவம்...

      நீங்க எங்க ஊருக்கு வாங்க உங்களுக்கு நிச்சயம் ப்ரீ தான்...

      வாங்க பனித்துளி சங்கர்...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      ReplyDelete
    42. வாங்க அம்பிகா...

      புதிய தகவலை சொல்லியிருக்கறீங்க நன்றி...

      வாங்க விக்னேஷ்வரி...

      டெல்லில கம்மங்கூழ் கிடைக்காதா...?

      வாங்க அசோக்...

      நிச்சயம் ஜில்லுனு ஒரு ஞாபகமே...

      ReplyDelete
    43. வாங்க கதிர்...

      என்ன இருந்தாலும் என் மண் ஈரோட்டு மண் தானே... நிச்சயம் மணக்கும்...

      வாங்க ஸ்ரீராம்...

      சாப்பிடுங்க அப்பதான் இதன் அருமை புரியும்...

      வாங்க சசிகுமார்...

      கிராமத்துக்காரனுக்கு கிராம்த்து மண் தானே வீசும் நண்பா...

      ReplyDelete
    44. வாங்க thenammailakshmanan...

      உங்களுக்காக செய்முறையையும் பதிவேற்றிவிடலாம்...

      வாங்க பாலாசி...

      ஈரோட்ல நிறைய சைடு டிஸ் உடன் கிடைக்கும்.. அதுவும் பார்க் செல்லும் வழியில் நிறைய கடை இருக்கும் எனக்கும் ஒரு காலத்தில் மதிய உணவே இதுதான்...

      ReplyDelete
    45. வாங்க ஸ்ரீ...

      மதுரையில் கிடைக்காமல் இருக்குமா...?

      வாங்க ராமலஷ்மி...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      வாங்க திவ்யா...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      ReplyDelete
    46. வாங்க மங்குனி அமைச்சர்...

      நிச்சயம் களியும், கருவாட்டுக் குழம்பும் போதுமா?

      வாங்க உழவன்

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      வாங்க வித்யா...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      ReplyDelete
    47. வாங்க சீனா சார்...

      உங்க மதுரையில் சந்து பொந்துல எல்லாம் தள்ளுவண்டியில் இருக்கும் என கேள்விப்பட்டேன் சார்...

      ReplyDelete
    48. கம்மஞ்சோறு அனுபவம் இல்லை. ஆனா நீங்க சொன்னா விதத்துல சாப்பிடனும்னு ஆசை வந்துடுச்சு. அடுத்த முறை (கோவை) போறப்ப கண்டிப்பா கெடைக்குதான்னு பாக்கறேன். அழகான காலத்திற்கேற்ற பதிவு

      ReplyDelete
    49. மன்னிக்கனும், நான் கேழ்வரகு கூழ் சாப்பிட்டிருக்கிறேன். கம்பங்கூழ் பற்றி இப்போது தான் கேள்விபடுகிறேன். உண்மையாகவே நல்லா இருக்குமா?

      ReplyDelete
    50. சிறு வயது காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தது.

      ReplyDelete
    51. Mathiyam unavaga eudkkalama?

      ReplyDelete
    52. Kammangoozhlai Mathiyam unavaga edukkalama?

      ReplyDelete