Tuesday, March 9, 2010

முதலுதவி


முதலுதவி ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ஒரு பத்திரிக்கையில் படித்துக்கொண்டு இருக்கும் போது வெளிநாட்டில் பள்ளியிலேயே முதலுதவி பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்களாம். நம்ம ஊரிலும் சொல்லித் தருகிறார்கள் ஆனால் முறையாக அதை சொல்லித்தருவ தில்லை முதலுதவி ஒவ்வொரு விபத்திற்கும் வித்தியாசப்படும் தீக்காயத்திற்கு ஒரு மாதிரியும், பாம்பு கடித்தால் ஒரு மாதிரியும், வலிப்பு வந்தால் ஒரு மாதிரியும் வித்தியாசப்படும் எல்லாமே எல்லாருக்கும் நிச்சியம் தெரிய வாய்ப்பு குறைவு. முதலுதவியைப் பற்றி நான் படித்து அறிந்தவற்றை விட என் வீட்டு பெரியவர்களிடமும், பக்கத்து வீட்டு நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டது தான் அதிகம்.

நாம் இருக்கும் இடத்தில் எந்த மாதிரியான நோய்கள் வரும் அவ்வாறு வந்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் நாம் செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்று நாம் அறிந்திருந்தால் இழப்புகளை தவிர்க்கலாம். அதற்கு முன் நாம் செய்யும் முதலுதவி சரியா என்றும் அறிந்திருக்க வேண்டும்.

நான் 7ம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் நான் எனது நண்பர்களுடன் கில்லி விளையாடிக்கொண்டு இருக்கும் போது கில்லி என் தலையில் பட்டு நெத்தியில் ஆழமாக காயம் ஏற்பட்டது நான் அழுது கொண்டே வீட்டிற்கு வரும் போது பக்கத்து வீட்டு அக்கா காபித்தூளை கொண்டு வந்து என் நெற்றியில் அமுத்திவிட்டார் அப்போதைக்கு ரத்தம் நின்றது பின்பு மருத்துவரிடம் சென்றபோது இது தவறு இதனால் புண் பெரிதாகத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று காபித்தூளை சுத்தம் செய்து 3 தையல் போட்டு அனுப்பி வைத்தார். அப்போது இருந்து எங்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதை அப்படியே ஒரு ஈரத் துணி வைத்து கட்டினால் ரத்தம் நிற்கும் பின்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறவேண்டும் என இன்று வரை செய்து வருகிறேன்.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

  1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
  2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
  4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

  1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
  2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி 

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

தீக்காயங்களுக்கான முதலுதவி
  1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
  2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
  3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
  4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
  5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்
மின்சாரபாதிப்புக்கான முதலுதவி
  1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
  2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறலுக்கான முதலுதவி
  1. பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
  2. அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,
  3. பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு
  4. தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
  5. பெரிய குழந்தைகளுக்கு
  6. உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
தண்ணீரில் முழ்கினால்...

ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும் அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும் வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

18 comments:

  1. தெரிந்து கொள்ள விஷயம் இருக்கிறது உங்கள் பதிவுகளில்,வாழ்த்துகள்.நண்பா..

    ReplyDelete
  2. அருமை, நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. //தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும்//

    உண்மைதான்.. இல்லேன்னா காப்பாத்தபோனவங்களையே,காப்பாத்த இன்னொருவர் வர வேண்டியிருக்கும்.

    நெறய டிப்ஸ் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்.

    ReplyDelete
  4. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்....தொடருங்கள்..

    ReplyDelete
  5. மீண்டும் ஓர் பயனுள்ள தகவல். நன்றி சங்கவி

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உதவிகரமான பதிவு..

    ReplyDelete
  8. மிக அவசியமான பதிவு. தேடினாலும் சில நேரம், இம்மாதிரியான தகவல் கிடைக்காது. இப்போது எங்களை தேடி வந்த தகவலை பத்திரப்படுத்தி கொள்கிறோம்.

    ReplyDelete
  9. மிகத் தேவையான செய்திகளை அருமையாக கூறுகிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  10. //அமைதிச்சாரல் said...

    //தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும்//

    உண்மைதான்.. இல்லேன்னா காப்பாத்தபோனவங்களையே,காப்பாத்த இன்னொருவர் வர வேண்டியிருக்கும்.//

    சரியாச் சொன்னீங்க.. அனுபவிச்சி இருக்கேன்..

    நன்றி சங்கவி.. எங்க கொஞ்ச நாளா என் பதிவுக்கு உங்களின் பின்னூட்டமே காணும்?

    ReplyDelete
  11. சங்கவி,

    உண்மைதான். “முதலுதவி” பற்றிய அறிதல் மிகமிக முக்கியம்.

    நானும் முறையான முதலுதவி பயிற்சி பெற்றிருக்கிறேன். (பயிற்சிக்கு எனது நிறுவனத்திலிருந்து அனுப்பினார்கள்.)

    இதுவும் கூட மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுபயிற்சிக்குச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  12. Very good and needed post Sangavi...

    Thank you...

    ReplyDelete
  13. மிக உபயோகமான இடுகை சங்கவி நன்றி

    ReplyDelete
  14. மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete