Tuesday, July 31, 2012

TASMAC மூடினால் என்ன நடக்கும் நம்ம ஊரில்???


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து மது இல்லாத மாநிலமாக மாற்றினால் எப்படி இருக்கும் நம்ம ஊர்....???

பூரண மது விலக்கு கொண்டு வருகிறார்கள் என்று பத்திரிக்கையில் சூசகமாக தகவல்கள் வெளியாகுகின்றன. அவ்வாறு பூரண மதுவிலக்கு வந்தால் நிச்சயம் நம் ஆதரவு மது விலக்குக்குத்தான். மது விலக்கினால் பல குடும்பங்கள் நன்றாக வாழும். மது விலக்கு கொண்டு வரும் போது கிடைக்கும் என்ன நடக்கும் என்பதை பற்றி இப்பதிவில்...

1. 20 சதவீத குடிகாரர்களுக்கு கை நடுங்கும்
2. சாக்கனாக் கடையில் அதிக விலை என்று புலம்பத்தேவையில்லை
3. சிக்னலில் போலீசார் வாயை ஊத சொல்ல மாட்டாங்க
4. பொஞ்சாதிக்கு பம்பீட்டு வீட்டுக்குள் போகத்தேவையில்லை
5. பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டைக்கு போவது குறையும்
6. மப்புல மனைவியிடம் அடி வாங்கியவர்கள் இனி தப்பித்துக்கொள்ளலாம்
7. ஞாயிற்றுக்கிழமை போலீசார் அரசு மருத்துவமனை டாக்டர்ஸ் நிம்மதியாக இருப்பார்
8. எப்ப வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக இரத்தம் வாங்கலாம்...
9. ஓவராக்குடிச்சு ரோட்டோரம் மட்டையாவது இருக்காது..
10. பேருந்தில் பயணம் செய்யும் போது சரக்கடித்தவர் நாற்றம் தாங்கமுடியாமல் தவிர்த்து நிற்போம் இனி அது இருக்காது...
11. பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா சுற்றுலா செல்வது அதிகரிக்கும்...
12. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்.
13. காதல் தோல்வியில் சிக்கியவர்கள் மாற்று வழி இன்றி அலைவார்கள்
14. அரசு நிதிப்பற்றாக்குறையில், மீண்டும் ஒரு முறை பால், பேருந்து, மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி விட்டு, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுக் காட்டும்.
15. பதினெட்டு வயதுக்கு கிழ் உள்ளவர்களின் எதிர்காலம் சிறக்கும்
16. பிள்ளைகள் தப்பித்துக்கொள்வார்கள் .
17. மீண்டும் குடிசைத்தொழிலாக சாராயம் காய்ச்ச வாய்ப்பிருக்கிறது
18. டாஸ்மார்க் பணியாளர்கள் எங்க குடும்பம் நடுத்தெருவில் நிற்கின்றது என்று போராட்டம் நடத்துவார்கள்
19. ஐடியில் வேலை செய்பவர்கள் வார இறுதியில் கமுந்தடிச்சு தூங்க வேண்டியது தான்
20 நிறைய பேர் இதனாலயே மன உளைச்சளுக்கு ஆளுகுவர்..

எனக்கு தோன்றியது இவ்வளவு தாங்க.. எதாவது விட்டு இருந்தா நீங்க சொல்லுங்க...

நேற்று எனது முகநூலில் இதை பதிந்தேன் நிறைய நண்பர்களுக்கு இது பிடித்திருந்ததால் இப்போது பதிவில் பதிவிடுகிறேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...