Sunday, July 29, 2012

கையை ஏன் கழுவ வேண்டும்??


நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள்...நிறைய நேரங்களில் சில விஷயங்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. நிறைய இடங்களில் நாம் எப்படி சுத்தமாக இருக்கவேண்டும் என்கிற விசயம் இன்னும் அறிந்தும் அறியாமல் நடந்து கொள்கிறோம்..

பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்.  வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள்.  ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.  நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம்.  

நம் உடல் உறுப்புகளில் அதிக கிருமிகள் நடமாட வாய்ப்பு அதிகம் உள்ள இடம் நம் கை தான். இந்த கையை நாம் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று பார்க்கவேண்டும்..



நாம் தினமும் சாப்பிடச் செல்லும் போது  கைய மட்டும் நனைச்சா போதுமா?..... இல்லை.. இல்லவே இல்லை.. சுத்தமாக இரு விரல்களின் இடுக்குகள் முதற் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

நமக்கு தெரிந்தவர்களை ஆஸ்பத்திரியில் பார்க்க செல்லும் முன் நம் கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும்.  அது போல அங்கிருந்து புறப்படும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 

ஆஸ்பத்திரிகளில் அதெற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று கைகளை சுத்தமாக கழுவுங்கள். ஏனெனில், அதிகமான கிருமிகள் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றன. அல்லது நோயாளியின் பக்கத்தில் வைத்திருக்கும் sanitizers(கிருமி நாசினிகள்) உபயோகியுங்கள். 

கைகளைக் கழுவிய பின் , அங்கு வைத்திருக்கும் டிஷ்யூவால் கையை துடைத்துவிட்டு அதற்குறிய குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். அது போல குழாயை மூடுவதற்கும் டிஷ்யுகளைத்தான் உபயோகிக்க வேண்டும். கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது. இப்பொழுதெல்லாம் elbow tap உபயோகிக்கிறார்கள். அல்லது காலால் அழுத்தி திறக்கும் குழாய்களை வைக்கின்றனர்.

இது மாதிரி நாம் செய்தால், நமக்கு மட்டும் அல்ல, நாம் சந்திக்க சென்ற நோயாளிகளுக்கும் நல்லது. குடும்பத்தோடு செல்வதை தவிர்க்க வேண்டும்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. அது போல் பூங் கொத்துக்கள், பழங்கள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவைகளின் மூலம்தான் அதிக கிருமிகள் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



நோயாளியின் கட்டிலில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்... வெள்ளை அணுக்கள் குறைந்து அவதிப்படும் நோயாளிகளை பார்க்க செல்லும்போது நிச்சயமாக மாஸ்க் போட்டுத்தான் அவர்களை பார்க்க செல்ல வேண்டும். செறுப்பு, ஷூக்களை வெளியில் கழட்டி வைத்துவிட்டு செல்வது நல்லது. அல்லது அறையின் வெளியில் வைத்திருக்கும் ஷூ கவர்களை மாட்டிக் கொள்ள வேண்டும். 

நாம் நமது கைகளை பயன்படுத்திய பின் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விரல்களில் உள்ள நகக்கண்களை கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டும். கிருமிகள் அதனுள் இருந்து குடலுக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அலுவலகத்தில் கம்யூட்டர் பயப்டுத்துதல், அடுத்தவர் போனை வாங்கி பேசுதல், அடுத்தவர் பேனாவை பயன்படுத்துதல் இந்த மாதிரி பயன்படுத்தி பின் எதாவது சாப்பிட நேரும் போது கைகளை கழுவுவது அவசியம் ஆகிறது.

சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு இப்பழக்கத்தை நாம் கொண்டு வர வேண்டும் அதன் மூலம் அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது கைகளை சுத்தமாக அவர்களே வைத்திருப்பர்கள்...

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.

13 comments:

  1. சின்னச் சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம்தான் பெரிய பெரிய வியாதிகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது சங்கவி ஸார். அந்த வகையில் கை கழுவுவது பற்றி நீங்கள் அழகாக விரிவாகச் சொல்லியிருப்பது மிகமிகப் பயனுள்ள ஒன்று. இதை அலட்சியம் செய்யாமல் எல்லோரும் கடைப்பிடிப்போமாக. நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. கையை கழுவிட்டேன்

    ReplyDelete
  3. சுத்தம் சுகாதாரம் தரும் என்பது முக்கியம் தான் சிந்திக்க வேண்டிய பதிவு சங்கவி சார்.

    ReplyDelete
  4. நல்ல விளக்கமான பதிவு நண்பரே..
    இதுவரை இல்லையெனினும் இனிமேலாவது
    பழகிக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  5. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மட்டுமல்ல...

    தங்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

    நன்றி.
    (த.ம. 4)

    ReplyDelete
  6. இப்பிடியெல்லாம் சொன்னா நாங்க திருந்திருவோமா? நாங்கெல்லாம் பல்லே வருசத்துக்கு ஒரு தடவை தான் விளக்குறோம்! நாங்க போய் தினமும் கையை அதுவும் இவ்ளோ கஷ்டப்பட்டு கழுவுறது நடக்குற காரியமா?

    BTW அருமையான விளக்கமான பதிவு நண்பரே!

    ReplyDelete
  7. உபயோகமான பதிவு எல்லோருக்கும் அரைகுறையாய் தெரிந்திருந்தாலும் .........

    இனி முழுமையாய் ஒரு விழிப்புணர்வோடு செயல்படுவார்கள் .......

    பதிவுக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  8. ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!//

    !!நிச்ச்யமாக

    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல தகவல்.. சில நேரங்களில் கை கழுவ மறந்து விடுகிறேன்.. ஞாபக மறதி போல...அப்டியே நம்ம வலைபூ பக்கம் வந்து பாருங்க..http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

    ReplyDelete
  10. கை சுத்தம் சுகம் தரும் !!!!!!!!

    ReplyDelete
  11. மிகவும் அவசியமான நல்லதொரு பதிவு! நன்றி!

    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  12. கை கழுவுதலும் நன்றே....ஆபீசரும் இதை அடிக்கடி நமக்கு அறிவுறுத்துவது உண்டு...!

    ReplyDelete