Wednesday, July 18, 2012

அஞ்சறைப்பெட்டி 19/07/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
நமது ஊரில் தற்போது இந்தி வாலாக்களை அதிகம் காண முடிகிறது. நான் மருத்துவமனைக்கு சென்று இருக்கையில் அங்குள்ள செவிலியர் ஒரு இந்திக்காரணிடம் போராடிக்கொண்டிருந்தார் விசாரிக்கையில் அவனுக்கு தமிழ் தெரியாதாம் குத்தகை அடிபப்படையில் வந்து கட்டிட கான்ட்ராக்ட் செய்து வருகிறானாம் காலை முதல் மாலை வரை வேலை செய்தால் 150 ரூபாயும் மூன்று வேளை சாப்பாடும் போடுகிறார்களாம். அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் நடக்கு கூட முடியாமல்  இருந்தும் இரண்டு நாள்  வேலை செய்துட்டு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு வ்ந்தானாம்..

இன்னும் கொஞ்சம் அதிகமா உடல்நிலை சரியில்லை எனில் அவர்களை ஊருக்கு அனுப்பி விடுவார்காம். ஒரு காலத்தில் தமிழன் அடிமையாக மற்றவர்களிடம் இருந்தது போல் இன்று அவர்கள் நமக்கு வாய்த்த அடிமையாகிவிட்டனர்...

...............................................................................................
 
கோவை VOC சிக்னலில் காவல் துணை ஆய்வாளர்கள் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து மறக்காமல் தினமும் அணியுங்கள் என்று சொல்லி துண்டு சீட்டை கையில் திணித்தனர்... தலைக்கவசம் அணியாதவர்களை மறக்காமல் அணியுங்கள் உங்கள் பாதுகாப்புக்காகத்தான் சொல்கிறோம் என்று இன்முகத்தோடு கூறினர்...

காலையில் சிக்னலில் பாராட்டியும், முன் எச்சரிக்கை செய்த காவல் துணையினருக்கு நமது பாரட்டுக்கள்...

இது போன்ற செயல் மிக பாராட்டத்தக்கது... என்றால் அது பிழையாகாது.....

...............................................................................................
மம்தாவின் இந்த அந்தர் பல்டி யாரும் எதிர்பார்க்காதது தான்.. என்ன செய்வது மாநில அரசுக்கு போதிய நிதி வேண்டுமெனில் மத்திய அரசின் சொல்படிதான் கேட்க வேண்டும் என்பது இப்போது உண்மையாகிவிட்டது.

................................................................................................

 ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பின் வெற்றி பிரகாசமாக உள்ளது இதற்கு மிக முக்கிய காரணம் பல மாநில கட்சிகளின் அந்தர் பல்டி தான். துணை ஜனாதிபதி கொஞ்சம் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு தான் தற்போது காற்று வீசுகிறது...

...............................................................................................

இந்த முறை பருவ மழை பொய்த்தது மிக வருந்தத்தக்கது தற்போது போதிய அளவு உணவுகள் கைவசம் இருந்தாலும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்றவை தண்ணீர் குறைவால் அவதிப்பட வைக்கின்றது. இந்த முறை டெல்டா மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் எல்லா பகுதிகளும் விவசாயம் மிக பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு தண்ணீரையும் மின்சாரத்தையும் காரணமாக சொல்லாம்.
...............................................................................................

ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
இதுவரை அறிவு வளர்ச்சியில் ஆண்களை விட 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பதற்கு பெண்களின் இந்த வளர்ச்சியே உதாரணம் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
 
மேலும் இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
..................................................................................................
சமூக வலைதளமான ஃபேஸ்புக் ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியில் சேர்த்துள்ளது. அந்த மாணவர் அலஹாபாத்திலுள்ள தொழில்நுட்ப கழகத்தில் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதை ஃபேஸ்புக் அதிகாரியும் உறுதி செய்துள்ளார். மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார். 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார்.
..................................................................................................

சாப்பாடு பழமொழி.... ( படித்ததில் பிடித்தது, ரசித்தது மற்றும் அனைவரும் அறிய வேண்டியதும் கூட)

நொறுங்கச் சாப்பிட்டா நூறு ஆயுசு

அள்ள அமுக்குன்னா அற்ப ஆயுசு

குறைச்சி சாப்பிட்டா கூட ஆயுசு

வயிறுமுட்ட சாப்பிட்டா வயித்தலையும் போகும் சீக்கிரம் போகும் ஆயுசு

பசித்துப்புசி

நொறுக்குத்தீனி ஆயுள் குறுக்கி

வாயைக்கட்டினால் நோயைக்கட்டலாம்
 
..................................................................................................

யாரும் நினைத்துகூட பார்த்து இருக்கமாட்டார்கள்  அம்மாவின் அதிரடியை கட்சியில் மூன்றாம் நிலையில் உள்ளவர் அம்மாவின் சுற்றுப்பயணங்களை கையாள்பவர் என அதிமுகவில் பல முகம் உண்டு செங்கோட்டையனுக்கு. கோடநாடில் இருந்து வந்தவர் அதிரடியாக தூக்கிவிட்டார் ஆட்சி மற்றும் கட்சிப்பதவிகளை.. இந்த தைரியம் தான் அம்மாவிடம் மிக பிடித்த ஒன்று..

செங்கோட்டையனுக்கு இது புதிதல்ல ஏற்கனவே இரண்டு மூன்று முறை எல்லா பதவிகளையும் விட்டு அனுப்பப்பட்டவர் தான் அவரின் விசுவாசத்தால் மீண்டும் கட்சியில் பழைய நிலைக்கு அடைந்தவர்களில் இவரை மட்டும் தான் சொல்ல முடியும்.. கோபிசெட்டிபாளையத்தின் செல்லப்பிள்ளை என்பர்.


தகவல்

அழகுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் அதிகம் பயன்படுத்துவது தெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் உள்ள பாஸ்டன் என்பவர் ப்தலேட்ஸ் (phthalates) கெமிக்கல் மற்றும் மெட்டபாலிக் நோய்களுக்கும் இடையே மேற்கொண்ட ஆய்வில், அது தெரியவந்துள்ளது. அப்போது உடலில் குறைந்த அளவு அழகில் ஆர்வம் காட்டி அழகுப் பொருட்கள் பயன்படுத்துபவர்களை விட அழகுக்காக அதிக அளவு கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றும் நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் பெண்களிடம், ப்தலேட்ஸ் மற்றும் இன்சுலின் குறைவுக்கும் ஒரு இணைப்பு உள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளனர். அதில் ப்தலேட்ஸ் கலந்துள்ள அழகுப் பொருட்களான நெயில் பாலிஷ், ஷாம்பு மற்றும் சோப்புகள் அதிகமாக பெண்கள் உபயோகிப்பதால் அவர்களுக்கு, உடலில் சுரக்கும் ஹார்மோனின் சுரப்பியில் வித்தியாசமானது பிரதிபலிக்கிறது.

அதற்காக அவர்கள் அமெரிக்காவில் 20 முதல் 80 வயது நிரம்பிய பெண்களை பரிசோதித்தனர். அதில் அவர்களது சிறுநீரைப் பரிசோதித்ததில் 217 பேருக்கு நீரிழிவு வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களது உடலில் இரண்டு கெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. அது மோனோ-ஐசோபியூடைல் ப்தலேட் மற்றும் மோனோ-பென்சைல் ப்தலேட். இந்த கெமிக்கல்கள் சிறுநீரில் சாதாரணமாக குறைந்த அளவு அழகுப் பொருட்களை பயன்படுத்தியவர்களை விட இரு மடங்கு அதிகமாக அதிக அளவு பயன்படுத்துபவர்களுக்கு நீரிழிவு ஏற்படுத்துகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பெண்கள் சிறுநீரை பரிசோதிப்பது போல இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அதிக அளவு மோனோ-n-பியூட்டைல் ப்தலேட் மற்றும் டை-2-எத்தில்ஹெக்சைல் ப்தலேட் இருந்தால் 70% நீரிழிவு வரும் என்றும் ஏற்படும் என்றும் கூறுகிறார்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  சிந்தனைச்சிதறல்கள்  என்று பெயரிட்டு அற்புதமான பல கவிதைகள் கொடுத்துள்ளார்... இவரின் கவிதை வரிகள் அருவி போல கொட்டுகின்றன...

http://sindanaisiragugal.blogspot.in/

 
தத்துவம்
 
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சிந்திப்பதானால் நிதானமாக சிந்தியுங்கள், செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள், விட்டுக்கொடுப்பதானால் மன நிறைவோடு விட்டு கொடுங்கள்...!

“எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!”

19 comments:

  1. மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  2. பல்சுவை தகவல்கள்...
    அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்...
    தத்துவங்கள் - மிகவும் ரசித்தேன்..

    பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்... (த.ம. 2)

    ReplyDelete
  3. ஹிந்தி கற்று கொண்டால் குபேரனாகிவிடலாம் என்று சோ வகையறாக்கள் பிரசாரமெல்லாம் வெறும் டுபாக்கூர்தானா?

    ReplyDelete
  4. அடிமை வாழ்வு குறித்த தகவலும்
    பழமொழியும் அடுத்து வந்த ஆரோக்கிய குறிப்பும் சிறப்பு.

    ReplyDelete
  5. கலக்கல் பதிவு..அதுவும் பிளட் செக்கப் மேட்டரு டாப்பு!

    ReplyDelete
  6. அஞ்சறைப் பெட்டி என் பெயரிட்டது
    மிக மிக பொருத்தம்
    அனைத்தும் பயனுள்ள அவசியம்
    அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளாகவே உள்ளது
    இறுதியில் பதிவு செய்துள்ள பழமொழிகள்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அஞ்சறைப் பெட்டியின் அனைத்துப் பகுதிகளையும் வழக்கம் போலவே மிக ரசித்துப் படிக்க முடிந்தது. அருமை.

    ReplyDelete
  8. அனைத்துத் தகவல்களுமே மிக அருமை! சாப்பாடு பற்றிய பழமொழிகள் நிதர்சனமான உண்மை! சிந்தனைச் சிறகுகளை தங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி... Thank you opening batsman.... நீங்க போட்ட முதல் கமெண்ட்ட்.... எப்பவுமே நினைவிருக்கும்.... மிக்க நன்றி....!!!

    ReplyDelete
  9. அனைத்தும் அருமை
    எழுத்துக்களில் ஒரு புதுமை.........
    கருத்துக்களில் செழுமை ...........

    மொத்தத்தில் இனிமை .........

    ReplyDelete
  10. வந்துவிட்டேன்.

    ReplyDelete
  11. கலக்கல் நண்பரே.! அனைத்து தகவலும் அருமை!

    ReplyDelete
  12. பூச்சு பொருகளினால் அதிக கெடுதல் யார் கேட்கராங்க. அழகு அவங்க சொத்து அதுக்கு அவங்க எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். மேக்கப் பூச்சினால் எப்படி உடல் நிலை பாதிப்பு தெளிவான விளக்கம் நண்பரே.

    ReplyDelete
  13. // ஒரு காலத்தில் தமிழன் அடிமையாக மற்றவர்களிடம் இருந்தது போல்//

    அதென்ன ஒருகாலத்தில்? அம்மாவின் முன் இனியும் நெடுஞ்சாண் கிடையாக விழப்போகும் செங்ஸ் மாதிரியான ஆட்களை யார் என நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  14. பெண்களை அறிவாளி என ஒத்துக்கொண்ட ஆய்விற்கு நன்றி. கொஞ்சம் ஹைலைட் செய்திருக்கலாமே!

    ReplyDelete
  15. ஏ.டி.எம்.கே.வில் ஏன்டா இரண்டாம் கட்ட தலைவர்கள் உதயமாவதே இல்லை என்பதற்கு செங்கோட்டையன் போன்றோரை அம்மா அடிக்கடி பந்தாடுவதே சாட்சி!!

    ஆக்கபூர்வ செயலுக்கு சரியான முறையில் சட்டென முடிவெடுப்பதே அதிரடி. இது அடாவடி சாரே.

    ReplyDelete
  16. முதல்முறையாக வருகிறேன். அஞ்சரைப்பெட்டி தகவல்கள் நிறைந்த பெட்டி.

    ReplyDelete