Monday, July 23, 2012

கிறுக்கல்கள்...


 கவிதைகளை சுட்டு சுட்டு
எழுதினாலும் உன்னை
வர்ணிக்க போதிய
வார்த்தைகள் அவ்வளவு
சுலபமாக கிடைப்பதில்லை.....

-----------------------------------------------------

உன் பார்வை
வரம் வேண்டி
தினமும் தவியாய்
தவிக்கிறேனடி... 

----------------------------------------

உன்னைக்கான
காடு, மழை
தாண்டி வந்த
என்னை
நடு ஆற்றில்
தவிக்க விட்டுட்டாயே...

------------------------------------------------

அள்ள அள்ள
குறையாது
முகாந்திரம்
இல்லாத
என் பேச்சும்
உன் பேச்சும் 


அரைகுறை ஆடையில்
மழைச்சாரலில்
நனைந்தவனை
கண்களில் அனல்
தனிய முத்தமிட்ட
உன்செவ்விதல்களின்
வெப்பம் என் கண்ணை
நோக்கி சுடர் விட
உன் கண்ணும்
பனிந்தது நம்
அனைலை தணிக்க....

--------------------------------------

நீ அருகில் இருக்கும்போது
ஒன்னுமே தோண
மாட்டிங்குது...

விலகியதும்
துள்ளிக்குதித்து
அள்ளி அணைக்கிறது
உன் நினைவுகள்.... 


காலங்காத்தாலே
நீ ஈரக்கூந்தலில்
நிற்பதை அரை குறை
கண்ணோடு பார்க்கும் நான்

உன் ஈரக்கூந்தலில்
இருந்து உதிர்க்கும்
தண்ணீர் என் கன்னத்த்தில்
பட்டு உடல் சிலிர்ப்பதால்
மீண்டும் உன்னை
அணைக்கத்தோனுதடி....

-------------------------------------

பல வருடங்கள் கழித்து
அவளை பல இன்னல்களுக்கு
பின் சந்தித்தேன்...

பார்த்த அவளுக்கும் வெட்கம்
பார்க்க போன எனக்கும் வெட்கம்...

ஏண்டா இந்த வெட்கத்தை
கண்டுபிடிச்சீங்க...
பாடா படுத்தது வெட்கம் என்னை...

----------------------------------------------

யாருக்கும் கிடைக்காத
கவிதை ஒன்று எனக்கு
கிடைத்தது...

இவள் தான்
அந்த கவிதை....



உன் சிரிப்பினில்...
உன் சிரிப்பினில்...

அதற்கு மேலே
எழுத முடியல...
கற்பனையிலே என்னை
கவுத்திட்டியேடி...



வெடுக்கென்று
அனைத்து
உன் விருப்பம்
போல் ஆள்கிறாய்...
என் கையில்
உன் அங்கம்
சிக்காதவாறு
உனக்குள் என்னை
சிறைப்படுத்துகிறாய்...

இதுதான் காமமோ????
--------------------------------------

இக்கவிதைகள் அனைத்தும் எனது முகநூல் கிறுக்கல்கள்...

11 comments:

  1. வர்ணனை, ஆவல், ஆசை என பலவற்றை வரிகள் சொல்கின்றன... நன்றி... (த.ம. 2)

    ReplyDelete
  2. கிறுக்கல் இல்ல..
    இது கலக்கல்..
    :-)

    ReplyDelete
  3. அருமையாக உள்ளன. கவிதைக்கான வடிவமைப்பும் நெருடாமல் தெளிவாக உள்ளன,

    ReplyDelete
  4. ஆளாளுக்கு 'கிறுக்கல்கள்' தலைப்ப பிடிச்சே தொங்கறாங்க. நீங்க மாத்தலாமே?

    //உன்னைக்கான காடு, மழை தாண்டி வந்த என்னை நடு ஆற்றில் தவிக்க விட்டுட்டாயே...//

    வைகோ அண்ணன் 'ஜெ'வுக்காக எழுதிய வரிகளா?

    ReplyDelete
  5. நான் ஒண்ணும் சொல்லல தலைவரே..

    கலங்குங்க...

    ReplyDelete
  6. சிறப்பாக உள்ளது. எழுத்துப் பிழைகள் தவிர்த்தால் இன்னும் மிளிரும்! வாழ்த்துக்களும் நன்றியும்!
    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html

    ReplyDelete
  7. கிறுக்கல்கள் ம்ம்ம் அருமை கலக்குங்க

    ReplyDelete
  8. நமக்கு பிடிச்ச பத்மப்ரியா... அவ்வவ் யாருகிட்டயும் சொல்லிராதீங்க ஹி ஹி ஹி

    (TM 7)

    ReplyDelete
  9. யாருக்கும் கிடைக்காத
    கவிதை ஒன்று எனக்கு
    கிடைத்தது...

    இவள் தான்
    அந்த கவிதை....//

    படங்களுடன் எண்ணச் சிதறல்கள்
    மிக மிக அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. paadaa paduthureenga...

    nalla rasanai!

    ReplyDelete