Sunday, July 22, 2012

வாழைத்தண்டு போல உடம்புக்கு வாழைத்தண்டு சாப்பிடுங்க...


வாழைத்தண்டு போல உடம்பு அலேக் என்று தான் நாம் வாழைத் தண்டைப்பற்றி நிறைய பாடியும், பெண்களை வர்ணிப்பதற்கும் பயன்படுத்தி இருக்கிறோம். மிக குறைந்த விலையில் அதிக நன்மைகள் கொண்ட உணவுப் பொருள் என்றால் அது வாழைத்தண்டுக்கும் இடம் உண்டு.

நம் கூட்டில் இருக்கும் வாழை மரங்களை வெட்டினால் கடைசியாக மிஞ்சுவது இது தான் இதில் தான் எத்தனை நன்மைகள்..

இன்று நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் மற்றும் நம் வேலைப்பளு அதிக நேரம் ஓய்வின்மை இந்த காரணத்தால் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை குறைத்துக்கொண்டோம் இதனால் சிறுநீர்ப்பிரச்சனை அதிகம் இருக்கிறது இதற்காகான அரு மருந்து என்றால் அது வாழைத்தண்டு தான்...

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டு வாரம் இருமுறை சாப்பிட்டு வரும்போது அது உடலில் உள்ள நீரை அதிகம் வெளிக்கொண்டு வருகிறது இதனால் தேவையில்ல கழிவுநீர்கள் வெளியேறும் போது உடல் எடை குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.. வாழைத்தண்டு போல உடம்பு கிடைக்கனும் என்றால் இதை நிறைய சாப்பிடவேண்டும்...

சிறுநீரக பிரச்சினை

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்

தென்னிந்தியாவில் பல விதங்களில் வாழைத்தண்டு சமைக்கப்படுகிறது. வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர்கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் கோளாறுகள்

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.

வாழைத்தண்டு சூப்பும் நன்மைகளும்...

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால்  கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.

மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம்  பாதிக்கப் பட்டிருக்கும்.  ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும்.  இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும்.  இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு.

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.  இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.

இரத்த அழத்தத்தைக் குறைக்கும்.  வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

விலை குறைவா கிடைக்கும் வாழைத்தண்டை  சாப்பிடாம விட்டுடாதீங்க... அப்புறம் வருத்தப்படாதீங்க...

 

22 comments:

  1. உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய வல்லது வழைத்தண்டு...

    நல்லதொரு பதிவு..

    ReplyDelete
  2. வாழைத்தண்டு பற்றிய நல்ல விழிப்புணர்வு பதிவு. நிறையபேர் அதை ஒதுக்குகிறார்கள். சிறுநீரக பிரச்சினை ஏதாவது வந்தபின்தான் தேடிப்போகிறார்கள்.

    ReplyDelete
  3. எந்த உணவுகளையும் சிறுவயதில் இருந்தே பழகி கொள்ள வேண்டியது அவசியம். இதை ஏன் நான் சொல்றேன்னா.. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பின் புதுசா வாழைத்தண்டு சாப்பிடுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். நம் உடலின் சுரப்பிகள் நல்ல வகையில் தூண்டப்பட சிறு வயதில் இருதே நல்ல உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். நம்மைப்பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. உணவே மருந்து என்பது ஆன்றோர் வாக்கு.
    கீரை வாழைத்தண்டு பாகற்காய் அவசியம் நம் உடலுக்கு தேவை. மிக நல்ல விழிப்புணர்வு கட்டுரை, நண்பரே.

    ReplyDelete
  4. மிகச்சிறப்பான தகவல்களுடன் வாழைத்தண்டு பற்றிய பதிவு அருமை!

    ReplyDelete
  5. மிக முக்கிய உணவு...அதுவும் சிறுநீரகம் பாதுக்காப்புக்கு...வாழைத்தண்டை விட்டா ஆளேது...அருமையான பதிவு நன்றி!

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. நம்ம வீட்டுல வாரத்துல ரெண்டு நாள் உண்டு இந்த வாழை தண்டு பொரியல்...

    ReplyDelete
  8. வாழைத்தண்டில் இத்தனை சிறப்புகளா., அருமையான தகவல் தல! (TM 6)

    ReplyDelete
  9. அருமையான மருத்துவ குறிப்பு..

    ReplyDelete
  10. படித்து ,பின்பற்ற வேண்டிய பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு.
    வாழைத்தண்டின் பயன்கள் எல்லாவற்றையும் தொகுத்து அருமையா தந்துள்ளீர்கள் சார் ! நன்றி ! (த.ம. 7)

    ReplyDelete
  12. வாழைத்தண்டு இயற்கை நமக்கு அளித்த கொடை....!நல்ல பதிவு சங்கவி!

    ReplyDelete
  13. இங்கே (பிரான்சில்) கைடைத்தால் சாப்பிலாம் தான் சார்.

    பயனுள்ள பதிவுங்க.

    ReplyDelete
  14. சமீபத்தில் சிறு நீரகக் கல்லினால்
    அவதிப்பட்ட என் பெண்ணுக்கு
    இரண்டு முறை வாழைத்தண்டு ஜூஸ்
    கொடுத்ததுமே அதன் பலன் தெரிந்தது
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிவுக்கு நன்றி

    ReplyDelete
  15. பயன்படும் பதிவு

    ReplyDelete
  16. மிக அருமையான காய்கறி இது என்பதை நாங்கள் அனுபத்தில் உணர்ந்துள்ளோம் நன்றி

    ReplyDelete