Wednesday, July 25, 2012

அஞ்சறைப்பெட்டி 26/07/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
கோவை மாநகரின் பல இடங்களில் பாதாள சாக்கடை வெட்டுகிறேன் என்ற பெயரில் என்று வெட்டுகிறார்கள் இது போக்குவரத்துக்கு மிக பாதிப்புக்குள்ளாகிறது. ரோட்டை நடுவில் வெட்டை பக்கத்தில் மண்ணை போட்டு விடுகிறார்கள் இது பல நாட்களுக்கு இப்படியே இருக்கிறது இதற்கு எப்ப விமோச்சனம் கிடைக்கும் என்று தெரியவில்லை... 25 நிமிடத்தில் அலுவலகத்துக்கு வந்துடுவேன் இப்ப 50 நிமிடம் ஆகிறது...

...............................................................................................

பெட்ரோல் விலை 75 பைசா ஏற்றினார்கள் நேற்று திடீரென மறுபடியும் குறைத்துள்ளார்கள் இந்த பெட்ரோல் விலை நிர்ணயத்தில் ஒரு நிரந்திரம் இல்லாத வரை இப்படித்தான்... என்ன விலை ஏற்றும் அளவிற்கு விலை குறைப்பதில்லை...

...............................................................................................
 

 
சமீபத்தில் கேரள மழம்புலா அணைக்கு சென்றிருந்தேன் அப்போது கோவை அடுத்த சுங்க சாவடியில் சரியான போக்குவரத்து நெறிசல் அங்கு இருந்து கனரக ஓட்டுநர்களை விசாரிக்கும் போது எல்லாம் வசூல் தான் சார் என்றார்கள் தினமும் நடக்கும் போல தினமும் இவ்வளவு வாகனங்களுக்கு வசூல் என்றால் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொழுத்த வேட்டை தான்...
................................................................................................

 நம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிரனாப் முகர்ஜிக்கு நம் வாழ்த்துக்கள்...
 
 
...............................................................................................

மீண்டும் இந்திய மீனவர்கள் 23 பேரை கைது செய்துள்ளனர் இலங்கை கடற்படையினர் அவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை விட தமிழர்கள் என்பதால் தான் கைது செய்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது... பொறுத்திருந்து பார்ப்போம் இக்கொடுமைக்கு புதிய ஜனாதிபதி எதாவது முயற்சி எடுக்கிறாரா என்று...

...............................................................................................

இங்கிலாந்தில் பெண்கள் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் 2 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் பெண்களின் ஆசைகள் மற்றும் அவரது விருப்பங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
 
தங்களது செக்ஸ் குறித்து கூறும்போது, 28 வயதில்தான் பெண்களின் 'செக்ஸ்ஆசை' அதிகரிக்கம் என தெரிய வந்தது. அதே நேரத்தில் 32 வயதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றம் கூறினார். ஏனெனில் அப்போதுதான் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
 
அதே வேளையில் 28 வயதில் தங்களது இடை மற்றும் இடுப்பு பகுதி மிகவும் மெலிந்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வயதில்தான் கண்களும், மிக அழகாக 'பளிச்' என உள்ளது என 23 சதவீத பெண்கள் கருதுகின்றனர்.
 
மேலும் மார்பகங்கள் அழகாக இருப்பதை விரும்புவதாக 20 சதவீதம் பேரும், கால்கள் மெலிந்து நீளமாக அழகாக இருப்பதை விரும்புவதாக 41 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தங்களை கவர்ந்ததாக 19 சதவிகிதம் பேரும், ஆலிவுட் நடிகை மர்லினமன்றோ அழகு ஈர்த்ததாக 15 சதவிகிதம் பேரும் கவிஞர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் கவர்ந்ததாக 17 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

 ..................................................................................................
பள்ளி குழந்தைகள் சென்ற வேனில் உள்ளே சீட்டுக்கு அடியில் இருந்த ஓட்டையில் ஒரு குழந்தை விழுந்து பலி.. இதை விட கொடுமையான விசயம் வேறு என்ன சொல்ல முடியும்.. குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது அதற்கு தனி கட்டணம், பேருந்துக்கு தனி கட்டணம் என்று ஒவ்வொன்றுக்கும் தனிக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் அந்த அளவிற்கு பேருந்தை பராமரிக்க வேண்டும் காசு வாங்கினால் பத்தாதது அதற்கான தரமும் இருக்க வேண்டும். இதற்கு அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அந்த பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளை என்ன செய்வது என்று அதற்கு தனியாக யோசிப்பர். பெற்றோராகிய நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் பள்ளி வேனில் ஏற்றி விட்டால் போதாது மாதம் ஒரு முறை அந்த வேன் எப்படி இருக்கிறது என்று எட்டியும் பார்க்க வேண்டும்... 
..................................................................................................

புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.


இதன்மூலம் இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. அதனுடன் வயிற்றில் புற்றுநோய் உருவாகவும் இது வழிவகை செய்கிறது. மக்கள் நாள் ஒன்றுக்கு தங்கள் உணவில் 8.6 கிராம் உப்பு சேர்க்கின்றனர். இது அதிக அளவாகும். அதை 6 கிராம் ஆக குறைக்க வேண்டும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் தெரிவித்துள்ளது.


எனவே பொதுமக்கள் தங்கள் உணவு வகைகள் மற்றும் ரொட்டி போன்றவற்றில் குறைந்த அளவு உப்பு சேர்த்து அதன் மூலம் புற்றுநோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
..................................................................................................

அமெரிக்கா அரசாங்கம் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 96 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
 
இந்த விருது பெறுவோர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீதேவி விதுலசர்மா, பவான் சின்கா, பராக் ஏ.பதக், பிஜு பாரிக்கதான் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்ரீதேவி விதுலசர்மா, பவான் சின்கா ஆகியோர் துணை பேராசிரியராக இருக்கிறார்கள். பராக் ஏ.பதக் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலும், பிஜு பாரிக்கதான் ஹார்வார்டு மருத்துவ கல்லூரியிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். 
 
..................................................................................................



ரொம்ப நாளைக்கு பின் நான் ஈ படம் பார்த்தேன் அடுத்த நாளும் அந்த படத்தை பார்த்தேன் அந்த அளவிற்கு ரசிக்க வைத்திருந்தது அந்த படம்.. வில்லனை பழிவாங்கும் கதையுள்ள படம் நிறைய வந்துள்ளது. ஆனால் ஈ பழிவாங்கினால் எப்படி இருக்கும் என்பதை காட்டிய விதம் அருமை. அதிலும் ஈக்கு முகமூடி கவசம் என கிராபிக்ஸ் காட்சிகளாக இருந்தால் சீட்டின் நுனியில் உட்காந்து படம் பார்க்க வைக்கிறது. அந்த படத்தின் டைரக்டருக்கு ஒரு சாபஷ்...
 

தகவல்
சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி மையம் ஹாசினி ஹைஜீன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் சனி கிரகத்தின் ‘டைட்டன்’ என்ற துணை கோளை கடந்த 2004-ம் ஆண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அங்கு மீத்தேன் உறைந்த நிலையிலும், வாயு நிலையிலும் அதிகளவு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், டைட்டன் துணை கிரகம் பூமியை போன்ற இடஅமைப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இங்கு பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவற்றில் தண்ணீருக்கு பதிலாக மீத்தேன் திரவ நிலையில் ஓடுகிறது.


டைட்டனின் மேற்பரப்பில் அதிசயிக்கதக்க வகையில் பல எரிமலைகள் உள்ளன. மேலும் அங்கு போதுமான தட்பவெப்ப நிலையும் பல கனிம வளங்களும் உள்ளன. ஆனால், அது பார்ப்பதற்கு சனி கிரகத்தின் சந்திரன் போன்று உள்ளது.


டைட்டன் துணை கோளை பூமியில் இருந்து பார்க்க முடியாது. டைட்டன் துணை கோள் குறித்து எம்.ஐ.டி. மற்றும் டென்னீஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர்  பெண் என்னும் புதுமை என்ற பெயரில் எழுதி வருகிறார் கோவை மு சரளா. இவரின் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் வார்த்தை கோர்வை பலமாக பயன்படுத்தி இருப்பார்...

http://kovaimusaraladevi.blogspot.in/

 
தத்துவம்
 
சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்!

நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

20 comments:

  1. ஏங்கப்பா....ஒரு அஞ்சறைப்பெட்டி எவ்வளவு தகவல்!

    ***உள்ளூரிலிருந்து உலகம் வரை***

    கலக்கல், அப்புறோம் அந்த ஜானதிபதி நம்ம மீனவர் மேட்டரையெல்லாம் கவனிப்பாருன்னு கனவுலையும் நினைக்காதீங்க!

    ReplyDelete
  2. ***பள்ளி குழந்தைகள் சென்ற வேனில் உள்ளே சீட்டுக்கு அடியில் இருந்த ஓட்டையில் ஒரு குழந்தை விழுந்து பலி.***

    இந்த தவறுக்கு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது மட்டும் போதாது! பள்ளி நிர்வாகி முதற்கொண்டு டிரைவர் வரை எல்லாரையும் புடிச்சு உள்ள போட்டு கும்மனும் அப்பத்தான் பயம் இருக்கும் அடுத்தவனுக்கு!

    ReplyDelete
  3. பலப்பல தகவல்கள்...

    வேதனை தரும் விசயங்கள் :
    1) இந்திய மீனவர்கள் 23 பேர் கைதானது.
    2) வேனில் சீட்டுக்கு அடியில் இருந்த ஓட்டையில் ஒரு குழந்தை விழுந்து இறந்தது.

    அறிமுக பதிவர் தளத்திற்கு செல்கிறேன்.

    நன்றி. (த.ம. 4)

    ReplyDelete
  4. அஞ்சறைப்பெட்டி தரும் செய்திகள் வாசித்தேன்.
    மனதை கலங்க வைத்த செய்தி:
    //பள்ளி குழந்தைகள் சென்ற வேனில் உள்ளே சீட்டுக்கு அடியில் இருந்த ஓட்டையில் ஒரு குழந்தை விழுந்து பலி.//

    பெற்றோர் வேனில் ஏறி போய் பார்த்து
    தான் குழந்தைகளை அனுப்ப வேண்டும். இவ்வளவு கவனம் இல்லாமல் இருந்த நிர்வாகத்தை கண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை
    அறிவியல் துறையில் இந்திய வம்சா வழியினர்
    சிறந்து விளங்குவது பெருமிதம் கொள்ளச் செய்கிறது
    அருமையான பழமொழிகளை சேர்த்துக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரசிக்கும் படியான தொகுப்பு

    ReplyDelete
  7. மீனவர் பிரச்னை தீர சாமி (சனாதிபதி) வரம் தந்தாலும், பூசாரி(எஸ்.எம். கிருஷ்ணா) விடமாட்டார். எல்லையை தாண்டி இந்திய மீனவர்கள் செல்வதே பிரச்னைக்கு காரணம் என்று சமீபத்தில் கூறியுள்ளார் கிச்சு மாமா.

    ReplyDelete
  8. அருமை அனைத்தும்

    சுவாரசியத்தின்

    சுரங்கம்
    அஞ்சரை பெட்டி

    என்னை அறிமுகம் செய்ததற்கு
    சங்கவிக்கு இனிப்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பொறுத்திருந்து பார்ப்போம் இக்கொடுமைக்கு புதிய ஜனாதிபதி எதாவது முயற்சி எடுக்கிறாரா என்று...//

    பொறுத்திருந்து பார்த்தாலும் படுத்திருந்து பார்த்தாலும் மீனவர் பிரச்சினைக்கு சோனியாகான் என்னா சொல்லுதாங்களோ அப்படியே செய்வோம் - சனாதிபதி

    ReplyDelete
  10. தாம்பரத்தில் இருக்கும் அந்த பள்ளி மிக பெரிய பள்ளி.அந்த பள்ளி பஸ்ஸே இந்த லட்சணம் என்றால்??? போன வருடம் தான் அந்த பள்ளி தாளாளர் மகன் (ஆல்வின்)காலேஜ் டூர் போன இடத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

    அவருக்கு நிஜமாகவே நேரம் சரியில்லை போலும்.

    அந்த குழந்தையின் பெற்றோருக்கு யார் ஆறுதல் கூறுவது.

    ReplyDelete
  11. உணவில் உப்பு மற்றும் புளிப்பு குறைவாக சேர்த்துக்கொள்ளவேண்டும்...நல்ல தகவல்.

    ReplyDelete
  12. அப்படியே,,,என்னையும் அறிமுக படுவீங்க தானே...

    ReplyDelete
  13. அருமையான தகவல்கள் அஞ்சறைப்பெட்டியில்.

    எத்தனை குழந்தைகள்தான் இது போன்ற அலட்சியங்களுக்குப் பலியாவார்களோ?..

    ReplyDelete
  14. நிறையதகவல்களால் நிறைந்த அஞ்சறைப்பெட்டி நிறைவையும் கொடுத்தது!

    ReplyDelete
  15. உள்ளூரிலிருந்து உலகம் வரைன்னு சொல்லிட்டு வானத்துக்கும் போயிட்டீங்க! நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  16. வணக்கம் சொந்தமே.தங்கள் தளம் வருவது மகிழ்ச்சி.தகவல்கள் ருமை..ஆரம்பம் முடிவு!!!!அருமை.சந்திப்போம்.

    ReplyDelete