உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த ஞாயிறன்னு மாலை காரில்
வந்து கொண்டு இருக்கும் போது பேரூரை தாண்டி நிறைய கூட்டம் எனக்குத்
தெரிந்த நண்பர்கள் நிறைய நின்று கொண்டு இருந்ததால் இறங்கி என்ன என்று
விசாரிக்கும் போது உயிர் போய் உயிர் வந்தது.. 4 மாணவர்கள் (அனைவருக்கும்
20க்குள் தான் வயது) இவர்கள் எல்லாம் கோவைக்குற்றாலம் சென்று விட்டு ஒரே
இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் வந்து கொண்டு இருந்துள்ளனர் முன்
சென்ற தனியார் பேருந்து ( கேக்க வேணாம் இவர்கள் செல்லும் வேகம்) சென்று
கொண்டு இருந்துள்ளது இவர்கள் அந்த பேருந்தை முந்தி சென்றதும் இவர்கள்
இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்ததால் வண்டி ஆப் ஆக பின்னால் வந்த
பேருந்து அடித்து தூக்கிவிட்டது நான்கு பேரும் நான்கு பக்கம் பறக்க எதிரே
வந்த ஆட்டோவின் மீது இரண்டு பேர் விழ அந்த ஆட்டோவில் வந்தவர்களும்
படுகாயம்...
இந்த விபத்தை கேக்க மனது படு வேதனையடைந்தது.. முதலில் 4 பேர் ஒரு வாகனத்தில் வந்தது தப்பு, மது அருந்திவிட்டு வந்தது தப்பு, அதிக வேகம் தப்பு, பெட்ரோல் இருக்கா என்று பார்க்காதது தப்பு என அனைத்து தப்பும் இந்த மாணவர்கள் மேல் தான் சொல்ல முடியும். இத்தனை தவறை செய்யும் நம் ஆட்கள் ஒரு நாள் போலீசார் வாகன சோதனை நடத்துவதை வந்துட்டாங்கய்ய பிடுங்குவதற்கு என்கிறோம்...
என்னைப்பொறுத்த வரை போலீசார் தினமும் வாகன சோதனை நடத்த வேண்டும் அதுவும் எல்லா சாலையிலும் நடத்தவேண்டும் அப்போது தான் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறைய வாய்ப்பிருக்கிறது (குறையத்தான் வாய்ப்பே தவிர முற்றிலும் தவிர்க்கமுடியாது)

............................................................ .............................. .....
பருவ மழை அதோ இதோ என்று கடைசியாக பொய்த்துவிட்டது. நிச்சயம் இது மிகப்பெரிய இழப்பு தான் நம் விவசாயிகளுக்கு பருவத்தே பயிர் செய் என்று சும்மாவ சொன்னாங்க.. இந்த பருவம் தான் விவசாயிகளின் மிக முக்கிய பருவம் இது பொய்த்துவிட்டால் அனைவரும் வானத்தை பார்த்து தான் உட்கார வேண்டி இருக்கிறது... நதி நீரை இணைத்தல், கடல்நீரை குடிநீர் ஆக்குதல் என்று தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தண்ணீருக்கும் எதாவது ஆராய்ச்சி செய்து வேறு வழியை செல்வதை தவிர வேறு வழியில்லை...
............................................................ .............................. .....
கர்நாடக அரசிலை பார்த்தால் தினமும் தானாகவே சிரிப்பு வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் திட்டத்தை அறிவிக்க நேரமின்றி எப்படி பதவியை காப்பாற்றுவது என்ற நினைப்புத்தான் அங்குள்ளவர்களுக்கு போலும்.. போகும் போக்கை பார்த்தால் மாதம் ஒரு முதல்வர் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
............................................................ .............................. ......
ரொம்ப நாளக படித்துக்கொண்டிருந்த எழுத்தாளர் பாலமுருகனின் சோளிகர் தொட்டி தற்போது தான் முழுதாக படித்து முடித்தேன். நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். ஓர் இனம் எவ்வாறு அளிக்கப்பட்டது என்பதை விட அவர்களின் வாழ்க்கை முறை வாழ்ந்த விதம் என அந்த இனத்தின் ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக எழுத்தாக்கி உள்ளார். நிச்சயம் படிக்கும் போது பெருமைப்படுவோம்...
........................................................... .............................. ......
தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கி குடிக்கும்
போது அரிசி 1 ரூபாய் ஏற்றினால் என்ன தவறு என்கிறார் இந்தியாவின் உள்துறை
அமைச்சர் நிறைய முறை அமைச்சராக இருந்தவர் நிதி அமைச்சராக இருந்தவர்
சொல்லும் பதிலா இது? அரிசி ஏழை பாழையில் இருந்து கோடீஸ்வரன் வரை அனைவரும்
தினமும் பயன் படுத்துகிறார்கள். பாட்டில் தண்ணீர் அனைவரும்
பயன்படுத்துகிறார்களா என்ற கூட தெரியாதை இவரை என்ன சொல்வது... இப்படியோ போன
நாம் வல்லரசு ஆன மாதிரி தான்....
......................................................... .............................. ........
ஆடி மாதம் வருகிறது ஆடி வந்தாலே என்னைப்போன்ற
கிரமாத்தான்களுக்கு சந்தோசம் தான் ஊரைச்சுற்றி உள்ள முனியப்பன் கோவில்களில்
கிடா விருந்தும், தேர்திருவிழாவும் களை கட்டும்.. இந்த வருடம்
காத்திருக்கிறேன் ஆடி கிடா விருந்திற்காக....
............................................................ .............................. ........
என்ன வேண்டும் தருகிறேன்: லஞ்சம் வாங்காதீர்கள் இப்படி
சொன்னவர் திருப்பூர் எஸ்.பி ஆஸ்ரா கார்க்... இப்படி எல்லா எஸ்பியும்
இருந்தால் மக்களும் ரொம்ப நிம்மதியாக இருப்பாங்க... முக்கியமாக அவர்கள்
லஞ்சம் வாங்கத அளவிற்கு முதலில் நாம் நடந்து கொள்ளவேண்டும். நாம்
அனைத்திலும் சரியாக இருந்தால் அவர்கள் ஏன் இலஞ்சம் கேட்கப்போகிறார்கள்..
............................................................ .............................. ........
உணவில் சுவை மற்றும் மணம் சேர்க்க பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதில், மிளகாய் வத்தலும் ஒன்று. அந்த மிளகாய் வத்தல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி ஸ்டீபன் ஒயிட்டிஸ் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது. அது கடினமான வெப்பத்தை தரக்கூடியது. அதனால் கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.
இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல் அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும் மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
............................................................ .............................. ........
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம்
விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய
‘பான்காம்’ என்ற காமிராவும் நிறுவப்பட்டுள்ளது.
அந்த காமிரா செவ்வாய் கிரகத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அந்த காமிரா படம் பிடித்து அனுப்பிய 817 போட்டோக்களை ‘நாசா’ விண்வெளி மையம் சமீபத்தில் வெளியிட்டது.
அவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தின் சிவந்த நிலப்பரப்பு, மண் மற்றும் காற்றில் பறக்கும் தூசிகள், 14 மைல் அகலம் உள்ள எரிமலைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

தகவல்
கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவியாக புதிய இணையதளம்
இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பலர் கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடியாமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது.
கள்ள நோட்டுகளை எந்தெந்த முறையில் கண்டுபிடிக்கலாம் என்ற விவரம் அதில் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி www.paisaboltahai.rbi.org.in ரூபாய் நோட்டுகளின் பெரிய அளவிலான படங்களையும் (போஸ்டர்) கள்ள நோட்டு தொடர்பான ஆவண படத்தையும் அந்த இணையதளத்தில் இருந்து நுகர்வோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் ஒற்றைக்குயில் என்று பெயரிட்டு அற்புதமான பல கவிதைகள் கொடுத்துள்ளார்...
http://www.otraikuyil.
தத்துவம்
சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
தவறுசெய்து விட்டோம் என்று உன் மனதிற்கு தெரிந்தால், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே....
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
தவறுசெய்து விட்டோம் என்று உன் மனதிற்கு தெரிந்தால், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே....
தத்துவம் தகவல் அரசியல் சமூகம் என ஒரு அஞ்சரை பெட்டிக்கான அனைத்தும் ...........அருமை
ReplyDeletepala thakavalkal!
ReplyDeletesuvai!
நம்ம ஊர் முதல் உலக நடப்புகள் வரை அருமையான சமூக அலசல்கள். முத்தாய்பான தத்துவம். என பல சுவைகளை தந்து அசத்திட்டீங்க.
ReplyDeleteஎன்ன வேண்டும் தருகிறேன் என ஆரம்பித்து தகவலோடு முடித்த விதம் அருமை .
ReplyDeleteஅஞ்சறைப் பெட்டியைப் போலவே
ReplyDeleteபயனுள்ள பொருட்கள் அடங்கிய அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma9
ReplyDelete