Wednesday, January 11, 2012

அஞ்சறைப்பெட்டி 12.01.2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

2012ல் முதல் அஞ்சறைப்பெட்டி கடந்த வாரம் எழுத இயலவில்லை அதற்கு காரணம் உடனுக்குடன் எனது தகவல்கள் எல்லாம் பேஸ்புக்கில் அப்டேட் செய்வதால் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து எழுத முடியாமல் போனது. வர வர பதிவுலகத்தைக்காட்டிலும்  பேஸ்புக்மேல் காதல் அதிகமாகிக்கொண்டு போகின்றது.. இதனால் இந்த வாரம் திங்கட்கிழமையே எழுத ஆரம்பித்துவிட்டேன் அஞ்சறைப்பெட்டியை...

...............................................................................................

கடந்த வாரம் ஊருக்குச் சென்ற போது எங்கள் ஊரில் இருந்து ஈரோடு செல்ல 50 நிமிடங்கள்தான் ஆகும் ஆனால் தற்போது சாலை இருக்கும் கேவலமான நிலைக்கு 1.40 நிமிடம் ஆகிறது. அதுவும் இல்லாமல் காரில் சென்றால் வண்டி ஆடுகிற ஆட்டத்திற்கு எந்த பொருள் கழன்டு விடும் என்ற பயத்திலோயே வண்டி ஓட்ட வேண்டி இருக்கிறது. பவானி மேட்டூர் சாலைக்கு என்று தான் விடிவு காலம் வருமோ???

...............................................................................................

திருவாதரை அன்று காலை சிவன் கோயிலுக்கு சென்றால் நல்லாதாம் அதுவும் எனக்கு திருவாதரை நட்சத்திரம் என்பதால் நான் நிச்சயமாக செல்ல வேண்டும் என்று எனது மனைவி நடுராத்திரி 5 மணிக்கே எழுச்செய்து கோயிலுக்கு சென்றோம் அங்கு வரிசையில் 2 மணி நேரத்திற்கு மேல் நின்றோம் சிவனை தரிசிக்க. சன்னிதானம் வாசலுக்கு சென்றதும் விஐபி வருகிறார் என்று அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் விஐபிக்க என்ற பெயரில் ஒரு 50 பேரை உள்ளே அனுப்பினார் அவரைப்பார்த்து சார் நாங்க 2 மணி நேரத்துக்கு மேல் நிற்கின்றோம் என்ற கேட்டதற்கு ஒரு 5 நிமிடம் தான் பொறுத்துக்குங்க என்று கெஞ்சல் தோணியில் சொன்னார்... இப்போது பின்னாடி இருந்து ஒரு குரல் ரொம்ப வாங்கிட்டார் போல என்று... அவர் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். எங்கள் பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவருக்கு கூளைகும்பிடு போடுறதே பொழுப்பா போச்சு என்று அவர் அடித்த கமெண்டில் சுத்தி இருந்தவர்கள் எல்லாம் சந்தோச புன்னகை...

இந்த கோயில் வரிசை விசயத்தில் கேரளாக்காரர்களை பாராட்ட வேண்டும் யாராக இருந்தாலும் வரிசையில் தான் வரவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு இன்றும் தொடர்கிறது... ஆனால் நம்வூரில் பணம் இருந்தால் முன்னே இல்லாதவன் பொது தரிசனம் இந்த கொடுமையை அந்த கடவுள் தான் கேக்கனும்...


...............................................................................................

கடலூரை புரட்டிப்போட்டுவிட்டது தானே.. இது நாள் வரை இல்லாத பாதிப்பு இந்த முறை அதுவும் செல்போன் டவரால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஏராளமாம். பாவம் அந்த சோலைவனம் தற்போது பாலைவனமாகிவிட்டது என்பதில் மிக்க வருத்தம். இதற்காக அளிக்கப்படும் நிவாரண உதவிகளில் அங்கங்கு சத்தம் இருந்தாலும் நிவாரணப்பணிகள் ஒரளவு மனதை திருப்பி அளிக்க வைக்கிறது.

இந்த நிவாரணப்பணிக்காக திமுக சார்பில் 50 லட்சம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது அந்த பணம் முழுவதும் மக்களுக்கு சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி... பணமாக கொடுப்பதற்கு பதில் நான்கு கிராமங்களை தத்து எடுத்து நிவாரண பணிகள் மேற்கொண்டு இருக்கலாம்..

................................................................................................

தமிழ் வாரப்பத்திரிக்கையில் என்னைப்பொறுத்த வரை மிகவும் மட்டாமான பத்திரிக்கை தர்மமே இல்லாத செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை எதுவென்றால் அது நக்கீரன் தான்.. அது போல் பத்திரிக்கை விற்பதற்கும், நக்கீரன் என்ற ஒரு பத்திரிக்கை இருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மாட்டுக்கறி மாமி என்று முதல்வரை கேவலமாக சித்திரிச்சு அதற்கு ஒரு செய்தியைப் போட்டுள்ளனர். இவர்கள் பத்திரிக்கை விற்பதற்கு பதில் வேறு பிழைப்பு பிழைக்கலாம்...
................................................................................................

தூத்துக்குடியில் மருத்துவர் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் அதைக்காரணம் காட்டி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மருத்துவமனையை புறக்கனித்ததால் எத்தனை அப்பாவி மக்கள் வேதனைப்பட்டு இருப்பார்கள் என்று அறிய வேண்டும். மருத்துவர்கள் எல்லாரும் தவறானவர்கள் என்று எங்கும் எப்போதும் சொல்ல விரும்பவில்லை ஆனால் பணத்திற்கு அடிமையாகிய நிறைய மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் இதை யாரும் மறுக்க இயலாது...

மருத்துவர்களே உங்கள் போராட்டத்தால் எத்தனை அப்பாவிகள் மனம் வேதனைப்பட்டு இருப்பர் என்று யோசித்துப்பாருங்கள்..

...............................................................................................

கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.   புதுவை மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். கொடுப்பதற்கு என்று ஒரு மனம் வேண்டும் அது நித்தியானந்தாவிற்கு இப்போது வந்திருக்கும் போல... எத்தனை திட்டினாலும் இவர் செய்யும் இச்செயல் மிகவும் பாராட்டத்தக்கது...

..................................................................................................

ஆஸ்திரேலியா சென்று உள்ள நம் இந்திய அணி மன்னைக்கவ்வுகின்றது உள்ளுரில் வெற்றி கொடி நாட்டும் நாம் வெளியூரில் டவுசர் கிழிய ஓட வேண்டி இருக்கு...
..................................................................................................


அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது.   புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. 
இத னால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும்.
அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

..................................................................................................

புத்தககண்காட்சியில் எனக்கு இரண்டு புத்தகங்கள் வேண்டும் என்று அண்ணன் வீடு திரும்பல் மோகன்குமாரிடம் கேட்டு இருந்தேன். அவர் மறக்காகமல் நான் கேட்ட கண்ணதாசனின் வனவாசமும், கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகள் புத்தகம் வாங்கி அனுப்பி இருந்தார் மிக்க  மகிழ்ச்சி எனக்கு. 
மோகன் அண்ணாவுக்கு மிக்க நன்றி...
..................................................................................................

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள்...

பொங்கல் தினத்தன்று அனைவரும் தொலைக்காட்சியின் முன் உட்காரமால் குடும்பத்துடன் பொங்கல் வைத்து சந்தோசமாக பேசி சிரித்து மகிழுங்கள்... தொலைக்காட்சிக்கு அடிமையாகாதீர்கள்...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் இந்த தை திருநாளில் நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..


தகவல்


ஜெர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்தில் எலிகளின் விந்தணுவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலிகளின் “ஜெர்ம்” செல்களில் இருந்து அவற்றை தயாரித்துள்ளனர். அவை நல்ல சத்தானவையாகவும் மரபணு பாதிப்பு இல்லாதவையாகவும் உள்ளன. 
எனவே இவற்றின் மூலம் எலிக் குட்டிகளை உருவாக்க முடியும் என இக்குழுவின் இஸ்ரேல் விஞ்ஞானி மகமூத் ஹலேகெல் தெரிவித்துள்ளார்.   இதே முறையில் ஆண்களின் விந்தணுவையும் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆணின் விரையில் உள்ள “ஜெர்ம்” செல்களில் இருந்து இதே போன்று தரமான விந்தணுவை உருவாக்க முடியும். 
இதன் மூலம் ஆண்மையற்ற ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வுகள் பரிசோதனை கூடத்தில் நடந்து வருகின்றன. தற்போது அவை தோல்வி அடைந்தாலும், விரைவில் அதில் வெற்றி பெறுவோம் என்று விஞ்ஞானி ஹலேகெல் தெரிவித்துள்ளார்.



அறிமுகபதிவர்

இந்த வார அறிமுக பதிவர் வான் மழை போற்றுவோம் என்ற பெயரில் தனது கவிதையை பதிவாக்கு வருகிறார் குமரன் அவர்கள்.. மிகவும் ரசிக்கவைக்கும் கவிதைகள் பதிவு... அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://kumarankrishnan.blogspot.com/2012/01/blog-post.html


தத்துவம்

முடியாதது என்று எதுவும் இல்லை..! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!.......!


தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை
ஆரம்பிக்கிறது. 



அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்


எனது முகநூல் அப்டேட்ஸ்...

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? ## ஒவ்வொரு மாநிலத்துக்கும் சண்டைய மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறோம்...

 
வர்த்தகத்தில் சீனாவை முன்மாதிரியாக கருத வேண்டும்: ப.சிதம்பரம் ## அப்ப முந்தக்கூடாதா????

5 கோடியைத் தாண்டியது தமிழக வாக்காளர் எண்ணிக்கை: பிரவீண் குமார் ### அடுத்த வருடம் 6 கோடியை பிடிச்சுடுவமுள்ள...

புதிய அணைக்கு மக்கள் ஒப்புதல்: உம்மன் சாண்டி ### கேரள மக்களா ??? இல்லை உங்க அரசியல் மக்களா ???


 சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை கேட்கும் சுப்ரீம் கோர்ட் ###
தமிழ்நாட்டுக்கு அடுத்த பிரச்சனை கிடைச்சிடுச்சு...

இன்று காலை சிக்னலில் இருசக்கர வாகனத்தில் இருக்கும் போது இரண்டு மிஸ்டு கால்.. 3 வது காலை அட்டன் செய்தேன் இப்படி பேசியது...

ஏண்ணா இந்த தியேட்டர்ல பின் சீட்ல உட்கார்ந்து இருப்பவன் காலை விடுறான் !!!

விடுடி... கவலைப்படாதே இடைவேளையில் உன் முகத்தை பார்ப்பான்..!!!

உங்களுக்கு இந்த மாதிரி ஜோக்ஸ் வேண்டுமா 1யை பிரஸ் பன்டுங்க...

காலங்காத்தால கொலவெறி ஏத்திட்டானுக பிஎஸ்என்எல் காரணுக...


நண்பர்களே என்னை பேஸ்புக்கில் பின்தொடர search: sathish Sangkavi

19 comments:

  1. அஞ்சறைப்பெட்டியின் மணமில்லை சங்கவி.. நீயூஸ் பேப்பர் படிக்கிற மாதிரி நார்மலா இருக்கு..பழையபடி எழுதுங்க..இதுக்கு நாங்க ரெகுலர் வாசகர்கள்..

    ReplyDelete
  2. தற்போதய பல செய்திகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அருமையாக உள்ளது

    ReplyDelete
  3. நக்கீரன் மேட்டர் டாப்..

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  5. அஞ்சறைப் பெட்டி... பல் சுவை...

    ReplyDelete
  6. காரம்-மணம்-சுவை..

    ReplyDelete
  7. முகநூலில் மூழ்கினாலும் அஞ்சறைப்பெட்டியை மறக்காதிங்க.

    ReplyDelete
  8. //வர வர பதிவுலகத்தைக்காட்டிலும் பேஸ்புக்மேல் காதல் அதிகமாகிக்கொண்டு போகின்றது..//


    நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா???

    இந்த தொல்லைக்கு பயந்து தான் நா முகநூலுக்குள்ள போறதேயில்ல.

    ReplyDelete
  9. தகவல்களின் பகிர்வுக்கு நன்றி சதிஷ்.

    ஆனா எல்லா தகவலிலுமே ஏதோ ஒரு அவசரம் தெரிகிறதே..

    ReplyDelete
  10. பொங்கல் வாழ்த்துக்கள்..
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    ReplyDelete
  11. அஞ்சரை பெட்டி பல தகவல்களைப் தெரிய உதவியது நக்கீரனுக்கு லைட்டா சூடு போட்டிருக்கிறிங்க...பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பேஸ்புக்மேல் காதல் அதிகமாகிக்கொண்டு போகின்றது.. ....

    என் முகநூலில் இந்த குறிப்பை நேற்றுதான் சொன்னேன் ’ஃபேஸ்புக் வந்த பின் வலைப்பூ வடுகிறது என்று...

    இந்த பதிவை என் ஃபேஸ்புக்கில் ஏற்றியிருக்கிறேன்

    ReplyDelete
  13. nakkeeran pathi nalla sonneenga
    revathi

    ReplyDelete
  14. nakkeeran pathi nalla sonneenga
    revathi

    ReplyDelete
  15. // நடுராத்திரி 5 மணிக்கே //

    நான் தினமும் காலை 3 மணிக்கே எழிந்து விடுகிறேன். அதற்கு என்ன பெயர்?

    ReplyDelete
  16. நிறைய விபரங்கள்.
    நல்ல பதிவு.
    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. //தமிழ் வாரப்பத்திரிக்கையில் என்னைப்பொறுத்த வரை மிகவும் மட்டாமான பத்திரிக்கை தர்மமே இல்லாத செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை எதுவென்றால் அது நக்கீரன் தான்.. அது போல் பத்திரிக்கை விற்பதற்கும், நக்கீரன் என்ற ஒரு பத்திரிக்கை இருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மாட்டுக்கறி மாமி என்று முதல்வரை கேவலமாக சித்திரிச்சு அதற்கு ஒரு செய்தியைப் போட்டுள்ளனர். இவர்கள் பத்திரிக்கை விற்பதற்கு பதில் வேறு பிழைப்பு பிழைக்கலாம்...//க க க போ. இருந்தாலும் செம தில்லுங்க உங்களுக்கு

    ReplyDelete
  18. நல்ல பதிவு. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete