Wednesday, June 27, 2012

அஞ்சறைப்பெட்டி 28/06/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சென்னை அண்ணாமேம்பாலத்தில் பஸ் கவிழ்ந்தது கேக்கவே அவ்வளவு பயமாக உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கும் மேம்பாலத்தில் விபத்து என்றால் எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இதற்கு பல பேர் பல காரணங்கள் சொன்னாலும் ஓட்டுநரின் அஜாக்கிரதை தான் மிக முக்கிய காரணமாக இருக்கும். கொண்டை ஊசி வலைவைபோல் உள்ள அந்த வலைவில் ரொம்ப நிதானமாகத்தான் ஓட்ட வேண்டும். காயமடைந்தவர்களுக்கும் இறந்தவர்களுக்கும்  நம் ஆழ்ந்த இரங்கள்கள்..

ஓட்டுநர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன ஆட்கள் பத்தாததால் எக்ஸ்ட்ரா சிப்ட் பார்ப்பவர்கள் அதானல் தான் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. அடுத்து அரசு பேருந்துக்களின் பராமரிப்பு சொல்லித் தெரிவதில்லை நமக்கு... இனியாவது அரசு அதிக ஆட்களை வேலைக்கு எடுத்து பேருந்து பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பராமரிப்பு சரியாக இருந்தால் விபத்துக்கள் நிறைய குறையும்.

ஓட்டுநரின் ஆஜாக்கிரதை அனைவரும் அறிந்ததே. மாநகரத்தில் மட்டுமல்ல பட்டி தொட்டி எல்லாம் இது தான் நடக்கிறது.. வண்டியின் பேனர் மேல் பெண் பயணிகளை உட்கார வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசியபடி பேருந்தை இயக்குவது, செல்போன் பேசியபடி இயக்குவது, வேகமாக ஓடுக்கொண்டி இருக்கும் பேருந்தில் சிகெரெட் பத்தவைப்பது, ரிமோட்டை எடுத்து ஒவ்வொரு பாட்டாக மாற்றுவது என்று இவர்களின் அஜாக்கிரதையை சொல்லிக்கொண்டே போகலாம்...

எத்தனை தான் சொன்னாலும் கவனக்குறைவால் தான் விபத்து நடக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை....

...............................................................................................

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டும் குய்யோ முய்யோ என்று கொக்கரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விலை வீழ்ச்சி அடையும் போது பேசாமல் இருப்பது ஏனோ???

அப்படியே விலை குறைத்தாலும் அவர்கள் சமீபத்தில் ஏற்றிய விலையில் பாதிதான் குறைக்கின்றனர் ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி 65 ரூபாய்க்கு நாம் பெட்ரோல் போடும் போது இருந்த விலையை விட குறைவாக இருக்கிறது...ஆக இலாபம் சம்பாரிப்பதில் மிக உறுதியாக உள்ளனர் எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு உற்ற தோழனாக இருப்பது பெட்ரோல் துறையையை கையில் வைத்திருப்பவர்கள்...

பெட்ரோல் பெட்ரோல் விலை 4 வரை குறைகிறாம்... கொஞ்சம் சந்தோசமான செய்திதான் ஆனால் ஏத்துவது மட்டும் 4 மடங்கு இறக்குவது 1 மடங்கு விலை என்ற போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு... எது எப்படியோ விலை இறக்குனா சரிதான்...

...............................................................................................

கடந்த வாரம் பாண்டியில் கழிந்தன வார இறுதி நாட்கள்.. இங்க இருந்து போன் செய்து கேட்டால் எல்லா விடுதிகளும் ரொம்ப பிஸி போலத்தான் பேசறாங்க. அங்க போய் ஒரு 2 மணி நேரம் தேடியதில் குறைவான விலையில் நீச்சல் குளத்துடன் கூடிய விடுதி கிடைத்தது... சோ பாண்டி போறவங்க அங்க போய் கொஞ்சம் தேடினால் சாகய விலையில் அற்புதமான ரிசாட்கள் கிடைக்கின்றன... கூடவே ஆட்டம் பாட்டமும்...
................................................................................................

ஒரு வழியாக ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு பேர்தான் வேட்பாளர்கள் என்று முடிவாகிவிட்டது இனி தான் ஓட்டு வேட்டை எல்லாம். மாநில கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற அதிக சான்ஸ்...
...............................................................................................

நிறைய பேர் நிறைய இடங்கிளில் தங்கள் கருத்தாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தான் சொல்கின்றனர் ஆனால் அதை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான். படித்தவர்களே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்களை என்ன சொல்வது.

சமீபத்தில் பலியான அமைச்சரின் மகன் தலைக்கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிரிலக்கும் வாய்ப்பு மிக குறைவுதான்..

தலைக்கவசம் அணியுங்கள் உயிர் சேதத்தில் இருந்து தப்புங்கள்...

...............................................................................................

ரஷ்ய பெண் ஒருவர் தனது 7 மற்றும் 4 வயது மகன்களை 15வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்றுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்தவர் கலினா ரயப்கோவா(30). அவருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள். அவர் மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் 8வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது 2 மகன்களையும் குடியிருப்பின் 15வது மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வியாபார நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கலினாவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில்,
என் மனைவி என்னை எழுப்பி குழந்தைகள் மாடியில் இருந்து கீழே விழுவதாகத் தெரிவித்தாள். உடனே வெளியே ஓடிப் போய் பார்த்தபோது இரண்டு குழந்தைகள் கீழே கிடந்தனர். அப்போது அவர்களின் தாய் அங்கிருந்து வெளியே சென்றார். இவர்கள் உங்கள் குழந்தைகளா என்று கேட்டதற்கு, ஆம் நான் தான் தள்ளிவிட்டேன் என்றார்.

போலீஸ் விசாரணையில் கலினா கூறுகையில், குழந்தைகள் இருப்பது தொல்லையாக இருந்ததால் தான் அவர்களை மாடியில் இருந்து தள்ளி விட்டேன். தற்போது அவர்கள் வானில் தேவதைகளாகிவிட்டனர் என்றார்.

..................................................................................................

9ம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு தீர்த்த கணித ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்கள் ஆனால் இதெல்லாம் மிக குறைவான தண்டணை என்பேன் நான். ஆசான் வேலையில் இருந்த கொண்டு சாமியார் வேலை செய்யும் இவர்களை எல்லாம் கல்லால் அடித்தே கொள்ளவேண்டும்...
..................................................................................................

உலகப் புகழ்பெற்ற லண்டன் பிக் பென் கடிகாரத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் மகுடம் சூட்டி இந்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது.
இதை கொண்டாடும் விதமாகவும், ராணியை சிறப்பிக்கும் விதமாகவும் பிக்பென் கடிகாரம் 'எலிசபெத் டவர் கடிகாரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;
88 வயதாகும் எலிசபெத் ராணி மகுடம் சூட்டி,இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவரை சிறப்பிக்கும் விதமாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிக்பென் கடிகாரத்தின் பெயர் இனி எலிசபெத் டவர் கடிகாரம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஏகமனதாக வரவேற்று, ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி விரைவில் இப்பெயர் மாற்றம் குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிக் பென் டவர் என்பது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூண்டு ஆகும். நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.
இம்மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான்.
இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பிரபல குத்துச் சண்டை வீரரான பென் கான்ட் என்பவரின் புனைப் பெயர் பிக் பென் ஆகும். அவரது நினைவாகவே இம்மணிக்கூண்டிற்கு 'பிக் பென்' என அக்காலத்தில் பெயரிடப்பட்டதாம்.
தகவல்

வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி சாப்பிட்டால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக அலர்ட்டாக இருக்குமாம். அவர்களுக்கு மூளை பாதிப்பு நோய் எனப்படும் அல்சீமர் நோய் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

விடியும் போதே சிலர் காபியில்தான் கண் விழிப்பார்கள். ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி காபி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.

வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சீமர் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  முரண்சுவை என்ற பெயரில் கோவையைச் சேர்ந்த கோவி என்பவர் எழுதி வருகிறார். நிறைய பயன் உள்ள விசயங்களை அழகாக தொகுத்து கொடுத்துள்ளார்...

http://muransuvai.blogspot.com/
தத்துவம்
பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.

தூ‌க்க‌த்தை ஒ‌ழி‌த்தா‌ல் ஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.

இந்த உலகம் உன் வெற்றிக்கதையை படிக்க காத்துக்கொண்டு இருக்கிறது...

Sunday, June 24, 2012

கிராமத்து மனசு.... 1

 
கோழி கூவும் நேரத்தில் எங்கள் ஊரில் தேநீர் கடைகள் எல்லாம் ஒவ்வொன்றாக உயிர்த்தெழும்.. காலை எழுந்த உடன் தேநீர் கடையில் இருந்து பாடும் முருகனின் பக்தி பாடலும் அங்கு தேநீர் போடும் டீக்கடைக்காரரும் அவர் பாடும் பாடலும் இன்றும் நினைவிருக்கிறது அவர் அதிகாலையில் தேநீர் போடும் லாவகமும் அவரின் கைப்பக்குவத்தில் தேநீர் குடிக்க சுத்தது வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர் கடையில் கூடியிருப்பர். 
 
காலையில் கறந்த பசும்பாலை கடைக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு காத்திருந்து தேநீர் அருந்திவிட்டு மொத்த கூட்டமும் 6 மணிக்கு வரும் செய்தித்தாளை எதிர்நோக்கி காத்திருக்கும். உள்ளுர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அதற்கு முன் படித்த செய்திகள் என வகைவகையான செய்திகளை அள்ளலாம் அந்த தேநீர்கடையில்.
 
சுடுதண்ணீர், டீத்தூள், பால், சர்க்கரை இவை நான்கையும் கலந்தால் அது நேநீர் ஆனால் இதன் சுவை இடத்திற்கு இடம் ஊருக்கு ஊர் ஏன் நபருக்கு நபர் என ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை.  
 
நான் விரும்பி அருந்து கடைக்காரர் காலையில் எழுந்து குளித்து தான் கடை திறப்பார் நெற்றி முழுவதும் விபூதியும், கடையில் டேப்ரெக்கார்டரில் டி.எம்.எஸ்சின் கனீர் குரலும் என மனதுக்கு நிறைவாக இருக்கும் அவர் கடைக்கு செல்வது.

தேநீர் சாப்பிடுகிறாயா என்றெல்லாம் அந்த அதிகாலை நேரத்தில் கேக்கமாட்டார் ஆளைப்பார்த்ததும் டம்ளரை எடுத்து வைத்து அவர் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்வாரா குறைவாக சேர்த்துக்கொள்வரா என அவரே தீர்மானித்து சர்க்கரையும், பாலும் சேர்க்கும் அந்த இணைப்பை இப்பொழுது பார்த்தாலும் நின்று ரசிக்கத்தோணும். டம்ளரிர் தேநீரை ஊற்றிவிட்டு அதற்கு மேல் ஆளுக்கு ஏற்றபடி டிக்காசன் கலந்து எடுத்துக் கொடுப்பார். காலை நேரத்தில் தண்ணீர் அதிகம் கலக்காத பாலும், டிக்காசனும் கலந்த அந்த தேநீர் இன்று வரை எங்கும் குடித்ததில்லை...
 
அங்கு தேநீர் அருந்தும் போது ஏனோ மனதிற்குள் ஏற்படும் புத்துணர்ச்சி இன்றும் காண்கிறேன். இப்போது ஊருக்கு சென்றாலும் 5 மணிக்கே எழுந்து அந்த குரலைக்கேட்டு தேநீர் சாப்பிடுவதை இன்றும் விரும்புகிறேன்..
 
கிராமத்து மக்களின் அதிகாலை சொர்க்கமே தேநீர் விடுதிகள் தான். அதற்கு அப்புறம் தான் களை எடுப்பவர்களும் நாத்து நடுபவர்களும், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுபவர்களும் ஒவ்வொருவராக தங்கள் அணியுடன் கலைந்து செல்வர் அன்றைய பொழப்புக்கு..
 

அடுத்து நான் இன்று வரை வியந்த தேநீர் கடை என்றால் அம்மாபேட்டை முருகன் தியேட்டர் கேண்டீன் டீ தான் இது தம் டீ என்று தான் சொல்வார்கள்.. தேநீரில் ஏலக்காய், இஞ்சி போன்றவைகளை சேர்த்து தம் டீயாக போட்டு கேனீல் வைத்து ஒவ்வொன்றாக பிடித்துக் கொடுப்பார்கள் இதன் சுவை இன்று வரை எங்கும் குடித்ததில்லை சரியான அளவில் சர்க்கரை இஞ்சி அனைத்து சேர்த்த அற்புதமான தேநீர் எப்போது இங்கு படம் பார்க்க சென்றாலும் குறைந்த பட்சம் 5 தேநீராவது குடிப்பது என் வழக்கம் அந்த அளவிற்கு என்னை சுண்டி இழுத்தது இந்த தேநீர்.

அடுத்ததாக அந்தியூரில் சந்தைப்பேட்டைக்கு எதிராக இரண்டு தேநீர் கடைகள் உண்டு காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு எப்போது தேநீர் குடித்தாலும் அதே சுவையில் இருக்கும். இரண்டு கடைகளிலும் வெவ்வேறு சுவையில் இருக்கும் ஆனால் குடிக்க குடிக்க குடித்துக்கொண்டே இருக்கத் தோணும். காலை வீட்டிலே தேநீர் அருந்தினாலும் எதாவது ஒரு கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இங்கு சாப்பிடும் தேநீரும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

கிராம புறத்தில் தேநீர் சாப்பிடும் போது நிச்சயம் ரவுண்டு பன்னு அல்லது வருக்கி சாப்பிடுவது வழக்கம் காலை 6 மணிக்கே தேநீருடன் இரண்டு வருக்கி சாப்பிடும் போது காலை உணவு உண்டது போல் இருக்கும் தேநீர் வாங்கி அதில் இந்த வருக்கியை முக்கி ஊறவைத்து சாப்பிடுவது ஒரு வகையான சுவை. அந்த கால கட்டத்தில் இது மிக பிடித்திருந்தது ஆனால் இன்று அவ்வாறு சாப்பிட நேரம் குறைவு. இப்போது வருக்கிகளை அதிகம் கடையில் பார்ப்பது மிக கடினமாகிவிட்டது.
எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் நிச்சயம் தேநீர் அருந்தாமல் இருக்கமாட்டேன். தேநீர் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சுவை இருக்கும் அதற்கு காரணம் அந்த ஊர் தண்ணீர் மற்றும் தேநீர் போட்டுத்தருபவர்களின் கைப்பக்குவம் தான் இதற்க காரணம். தேநீர் அருந்துவது ஒரு சிலர் உடல் நலத்துக்கு கேடு என்பர் ஒரு சிலர் உடலுக்கு மிக நல்லது என்பர். எது எப்படி இருந்தாலும் காலையில் சூடான அரை டம்ளர் தேநீர் சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள் படிப்பது அன்று தினத்துக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் என்றால் அது மிகையாகது...

தேநீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த ஒன்று அது போலத்தான் நாம் ரசிக்கும் தேநீர் கடைகளும் அந்த நிகழ்வுகளும் மறக்கா ஒன்று... இதே போல் என் மனதில் உள்ள மறக்க முடியா நிகழ்வு, மனிதர்களை அவ்வப்போது கிராமத்து மனசு என்ற பெயரில் இனி அடிக்கடி சந்திக்கலாம் நினைவுகளோடு...

படங்கள் உதவி: கூகுள்...

Wednesday, June 20, 2012

அஞ்சறைப்பெட்டி 21/06/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சமீபத்தில் என் அக்கா வீட்டுக்கு சென்ற இருந்த போது அங்கு அவர் மகனின் பள்ளி டைரியை புரட்டினேன்.. அந்த டைரியில் மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தை விபரங்கள், மாத வருமானம் என அவர்கள் குடும்ப தகவல்கள் பல இருந்தன. இவை அனைத்தும் சரியானது தான்.. ஆனால் நேசனாலிட்டி பக்கத்தில் கேசட் என்று மறக்காமல் ஜாதி பெயரையும் குறிப்பிட்டு இருந்தனர். இதில் இவர்கள் ஜாதி பெயரை குறிப்பிடாமல் இருந்ததற்க அவர்கள் வகுப்பாசிரியர் சிகப்பு மையில் கேள்விக்குறி போட்டு அனுப்பி உள்ளார்.

இதற்கு பெயர் தான் காலக்ககொடுமை வருடம் 50000 கட்டணம் வாங்கிவிட்டு 3 ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஜாதியை சொல்லித்தரும் பள்ளி எதற்கு.. ஜாதியை குறிப்பிடுவதன் கூட இருக்கும் மாணவர்கள் அதைப்படிக்க வாய்ப்பிருக்கிறது.. பிஞ்சிலேயே மாணவர்களுக்கு ஜாதியை சொல்லித்தரும் பள்ளிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
...............................................................................................

இந்திய அரசியலில் குடியரசுத்லைவர் தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் அடித்துக்கொள்வதைப் பார்த்தால் நம் அரசியல் வளர்ச்சி சிரிக்க வைக்கிறது. அது ஒரு தலையாட்டும் பதவி தான் என்றாலும் மாநிலக்கட்சிகள்தான் நிர்ணயிக்கின்றன யார் வரவேண்டும் என்று.

காங்கிரஸ் பிரணாப்பை அறிவித்துள்ளது அநேகமாக இன்று மாலைக்குள் அவருக்கு எதிராக சங்மா நிச்சயம் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
...............................................................................................

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை அம்மா கூப்பிட்டு திட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்னையில் அதிமுக இன்று  அதிக இடங்களையும், மாநகராட்சியையும் கைப்பற்றியதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆட்சியில் கவுன்சிலர்களின் மக்களுக்கு கொடுத்த தொல்லை தான்.

அதே நிலைமை மீண்டும் அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்தால் நிச்சயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதன் தாக்கம் தெரியும் என்பதால் தான் அம்மா சுதாரித்து கவுன்சிலர்களை வரவைத்து ஒரு அட்வைஸ் செய்தது சந்தோசமான விசயம் கூடவே மாநகராட்சியை கலைக்க தயங்க மாட்டேன் என்பதும் கவனிக்கத்தக்கது. இது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊருக்கும் பொறுந்தும்...

................................................................................................

மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கீயி ஜனநாயக மீட்பு போராட்டம் நடத்தி வந்ததால் 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூ கீயி, சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் 4 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்த அவர், இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார்.  

24 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இங்கிலாந்து திரும்பியுள்ள சூ கீயி, அங்கு தனது குடும்பத்தினரை சந்தித்தார். 24 வருட இடைவெளிக்குப் பின் நடைபெற்ற இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தது. அதற்குப் பின்னர் தனது 67-வது பிறந்தநாளை முன்னிட்டு டப்லின் சென்ற சூ கீயிக்கு, பொதுமக்கள் சார்பாக பிறந்தநாள் கேக் பரிசளிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாடலும் பாடப்பட்டது.  

இங்கிலாந்து நாட்டவரான மைக்கேல் ஏரிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சூ கீயி, கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் இங்கிலாந்தில் நீண்டகாலம் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

...............................................................................................

இந்த வருடம் பருவமழை மிக குறைந்துள்ளால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக குறைந்து வருகிறது. இது டெல்டா விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தரும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் அணைக்குள் மூழ்கி இருக்கும் கோபுரங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. இது காணக்கிடைகக்காத ஒரு நிகழ்வு..

...............................................................................................

ஆடுகள் என்றாலே உரோமத்துக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட வேண்டியவை என்று நினைக்கும் ஐரோப்பியர்களே நெகிழ்ந்து போகும் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. லண்டன் பல்கலைக் கழகத்தாரின் நெடிய ஆராய்ச்சி தெரிவிக்கும் உண்மைகள் நம்மில் பலரின் கண்ணையும் திறக்க உதவக்கூடும்.ஆடுகள் தங்களுடைய குட்டிகளைப் பிரிந்தாலும் அவற்றின் குரலை மறப்பதில்லை.

ஓராண்டுக்குப் பிறகு கூட குட்டியின் குரல் கேட்டால், அது எங்கே இருக்கிறது என்று நாலா திசைகளிலும் உற்றுப் பார்த்து தேடுகிறது தாய் ஆடு.நாட்டிங்காம்ஷைர் என்ற இடத்தில் ஆட்டுப் பண்ணையில் சில குட்டிகளின் குரல்களை ஓலி நாடாவில் பதிவு செய்தார்கள். சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு, அந்தக் குட்டிகள் தாய் ஆடுகளைப் பிரிந்தநிலையில் அந்தப் பண்ணைக்குச் சென்று ஒலிபரப்பினார்கள். அப்போது தாய் ஆடுகள் தத்தமது குட்டியின் குரலைக் கேட்டவுடன் தலையை உயர்த்தி, அது எங்கே என்று நாலா பக்கங்களிலும் பார்த்ததையும் தேடியதையும் பதிலுக்குக் குரல் கொடுத்ததையும் கண்டு நெகிழ்ந்தார்கள்.

குட்டி எதிரில் இல்லை என்றதும் எல்லா தாய் ஆடுகளுமே சோகத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்தன.தாய் ஆடுகள் தங்களுடைய குட்டிகளை அவற்றின் குரல்கள் மூலமும் உடலில் உள்ள சில குறிகள் மூலமும் வாசனை மூலமும் அடையாளம் காண்கின்றன.மந்தையாக வாழும் இயல்புடைய ஆடுகள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரைதேடும் இயல்பின. தாய் ஆடுகள் தன்னுடைய பிள்ளை ஆடுகளின் குரல்களை அறிந்திருப்பதால் இரவில் அவை ""சேர வந்தால்'' தவிர்த்துவிடுகின்றன.

சீல் என்று அழைக்கப்படும் கடல்வாழ் பிராணி, யானைகள், அணில்கள் போன்றவையும் தங்களுடைய உறவினர்களைப் பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகும் குரலை வைத்து அடையாளம் காணும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குணம் இந்தப் பிராணிகளுக்கு மட்டுமல்லாது ஏனைய பலவற்றுக்கும்கூட பொதுவானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


..................................................................................................

ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் 3 பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.  ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான், அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்; ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

 (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)  எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட!  இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது.  ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவா? வீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.

 நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களே, அப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.  ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம், டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்பு' போட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்து, அழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள்.

அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும், இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.  இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள், பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!
..................................................................................................

சீனாவில் இருந்து ஷென்ஷோ-9 என்னும் மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.
3 பேரோடு செல்லும் இந்த விண்கலத்தில் முதல்முதலாக ஒரு பெண் செல்கிறார். 33 வயதான லியூ யாங் என்கிற அவர் விமானியாக இருந்துள்ளார். அவரால் இயக்கப்பட்ட விமானத்தில் 18 புறாக்கள் மோதிய போது சாமர்த்தியமாக அதனை தரையிறக்கினார்.
இந்த சாமர்த்தியம்தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பை அளித்துள்ளது. ரஷியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் பெண் ஒருவரை விண்ணில் செலுத்துகிறது. அவரோடு ஜிங் ஹாய்பெங் மற்றும் லியூ வாங் ஆகியோரும் செல்கின்றனர்.

..................................................................................................

இந்த வார இறுயில் பாண்டியில் 2 நாட்கள் டேரா போடுகிறேன்.. பாண்டியில் யாராவது நண்பர்கள் இருந்தா சொல்லுங்கோ சந்திப்போம்...

தகவல்
இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் என்பவர், ரத்தக்குழாயை ஸ்டெம் செல் மூலம் தயாரித்து, 10 வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு குடல், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ரத்தக்குழாய் பழுது பட்டதால், இதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஸ்வீடன் நாட்டின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் தலைமையிலான குழுவினர், இறந்து போன ஒருவரின் ரத்தக்குழாயை எடுத்து, சிறுமியின் எலும்பு மஜ்ஜையிலிருந்து செல்களை எடுத்து, புதிய ரத்தக்குழாயை உருவாக்கினர். இந்த குழாயை, தற்போது சிறுமிக்கு பொருத்தி உயிரை காப்பாற்றியுள்ளனர். மருத்துவ வரலாற்றில், இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  நட்புடன் சௌம்யா என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். இவருடைய காதல் கவிதைகள் அனைத்து நெஞ்சை கொள்ளை கொள்பவை... ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்...

http://sowmyathinkings.blogspot.in/
தத்துவம்

சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

வேலை மனிதனைக் கொல்லாது.. கவலைதான் கொல்லும்...

நாம் உண்மையாக வாழ்வது என்றால்,கடமையைச் சரியாக செய்வது என்றுதான் அர்த்தம்.

Monday, June 18, 2012

பவானிசாகர் அணை.. ஒரு சிறு பயணம்...

ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு சிறப்பு இருக்கும் இவ்வார இறுதியில் ஊருக்கு செல்லலாம் என்று கிளம்பும் போது மகன் தண்ணீரில் விளையாட ஆசைப்பட ஊருக்கும் செல்லும் வழியில் ஒரு 15 கிலோமீட்டர் குறுக்கே சென்றால் பவானிசாகர் அணை வரும் என்று அங்கு மகனை வாய்க்காலில் குளிக்க வைக்கலாம் என்று புளியம்பட்டியில் இருந் து பவானிசாகர் சொல்லும் சாலையில் சிறு அடர் காட்டுக்குள் சாலை மட்டும் நடுவில் இதில் சில்லென்ற காற்றில் பயணம் மேற்கொண்டோம்...


வழி எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வாழையும், மல்லிகைப்பூவும் அதிகம் பயிரிட்டு இருந்தனர். இங்கு விளையும் வாழைப்பழம் மற்றும் வாழை இலைகள் அதிகம் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றனவாம்.  மைசூர் மல்லி என்று கேள்விப்பட்டு இருப்போம் மைசூருக்கு செல்லும் மல்லிகையில்ல் 40 சதவீத மல்லி பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் இருந்து தான் செல்கின்றனவாம்.. 


பவானிசகாரில் நிறைய அரசு அலுவலர் பயிற்சி நிலையங்கள் நிறைய இருக்கின்றன இதில் குறிப்பிட்டு சொல்ல இந்தி சிவில் சர்வீஸ்க்கான பயிற்சி நிலையமூம் உள்ளது. மின்சாரத்துறையின் பல பயிற்சி நிலையங்கள் இயற்கையான சுற்றிலும் மரங்கள் கொண்டு வீடு இருப்பதே தெரியவில்லை அந்த அளவிற்கு அளகாக உள்ளது பவானிசாகர். இங்கிருந்து அணையில் தூரம் 2 கிலோமீட்டர். அணை செல்லும் முன்பே மீன்வாசம் மூக்கைத் துளைத்தது அரசு மீன் பண்ணை மூலம் மீன் விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருந்தது அனைத்து நாட்களும் காலை முதல் மாலை வரை இங்கு மீன் கிடைக்குமாம். இங்கிருந்து மீன்கள் கோவை, திருப்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றதாம்.


வாகன நிறுத்திமிடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது சில்லென்று பலத்தை மழை ஒரு 5 நிமிடம் மட்டுமே பெய்தது. வாகனம் நிறுத்த 15 ரூபாயை கொடுத்து விட்டு சுற்றிலும் மீன் வாசனையோடு அனையின் பூங்காவிற்கு சென்றோம் வழியில் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வாங்க மீன் சாப்பிடலாம், வாங்க மீன் சாப்பிடலாம் என்று ஒவ்வொரு கடையிலும் அழைக்கின்றனர். 

பொதுவாக இந்த மாதிரி சுற்றுலாத்தளங்களில் நான் மீன் சாப்பிட மாட்டேன் இங்க லோகு, கட்லா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் தான் கிடைக்கும் அதுவும் அணைக்கு அருகில் இருப்பாதல் ப்ரஸ்சாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட்டால் அது ஏமாற்றம் தான். இங்கு பழைய குளிர்சாதனப்பெட்டியில் வைத்த மீன்களைத்தான் விற்பார்கள் அதனால் நாம் அரசு மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று மீன் வாங்கி இவர்களிடம் வறுக்க கொடுக்கலாம் எண்ணெய்யும் நாமே வாங்கித்தாந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் அதிகம் செல்லும் கொடிவேரி அணை, மேட்டூர் அணை, ஒகேனக்கல் எல்லாம் இப்படித்தான் செய்வோம் இல்லையேல் அங்கு மீன்சாப்பிட மாட்டேன். சாப்பிட்டால் பின்விளைவு அடுத்த நாள் அதிகம் இருக்கும் என்பதால்...


பூங்காவிற்கு தலைக்கு 4 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே சென்றோம்.. 



பவானிசாகர் அணை பூங்கா...

இந்த சீசனில் தண்ணீர் அதிகம் இல்லாதது பூங்கவைப் பாத்ததும் தெரிகிறது. பூங்காவில் எங்கும் தண்ணீர் ஓடவில்லை தண்ணீர் செல்லும் நீரூற்றுக்கள் காய்ந்து கிடக்கின்றன. மற்றபடி பூங்கா முழுவதும் புதிதாக டைல்ஸ் ஒட்டி நடைபாதை எல்லாம் புதுப்பித்துள்ளனர். குழந்தைகள் விளையாட சீசா, சறுக்கல், சிறு ராட்டினம், தூரி என்று பல விளையாட்டுக்கள்  குழந்தைகளுக்காக நன்கு பராமரித்து வைத்துள்ளனர். பல இடங்களில் புல்வெளி காயந்தும் சில இடங்களில் பச்சை பசேலென அழகாக உள்ளது. நிறைய குடும்பங்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டோடு புல்வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். குடிப்பதற்கு பல இடங்களில் தண்ணீர் குழாய்கள் வைத்துள்ளனர்.

பூங்காவினுள் மீன் குழம்பு மற்றும் வறுவலுடன் சாப்பாடு கிடைக்கிறது சுவை சுமார் தான் என்றனர் சாப்பிட்டவர்கள். புகைப்படங்கள் எடுக்க அழகான பல இடங்கள் உள்ளன. அடுத்து ஈரோடு, கோவையைச் சேர்ந்த காதலர்கள சந்திக்க அருமையான இடம் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு காதலர்கள் கூட்டம் நிரம்பி இருந்து. எங்கு பார்த்தாலும் சிறு சந்து பொந்துகளில் அவர்களை அதிகம் காண முடிந்தது. 


குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுளிக்கும் அளவில் ஒரு சிலர் ஈடுபட்டாலும் மற்றவர்கள் ஒகே என்று சொல்லாம். ஒரு நாள் சுற்றுலா செல்ல முடிவெடுத்தால் அருகில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் மற்றும் கொடிவேரி அணையை சுற்றுப்பார்க்கும் போது அழகாக ஒரு நாள் பொழுது செல்லும். அணையின் மேற்பகுதிக்கு செல்ல அனுமதி தற்போது இல்லை. சிறுவயதில் ஆடி 18 சமயத்தில் இங்கு வந்து மேல் ஏறி ஆட்டம் போட்டது நினைவிருக்கிறது. 
பவானிசாகர் அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறும் நீலகிரியில் உற்பத்தியாகி வரும் மேயாறும் இணைந்து பெரிய ஆறாக உருவாகிறது பவானி நதி. இந்நதியின் குறுக்கே சத்தியமங்கலத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் . ஆசியாவில் மிகப்பெரிய மண் அணை என்றும் கூறுவர். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். இங்கு இரண்டு இடங்களில் புனல் நீர்மின் திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 


ஈரோடு மாவட்டத்தில் காவிரி பாய்ந்தாலும் ஈரோடு மாவட்ட விவாயிகள் அதிகம் பயன்படுத்தும் நீர் பவானி நீர் தான். இங்கு உள்ள விவசாய பகுதிகள் இந்நீரை நம்பியே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இரு பகுதிகளாக  பிரிக்கப்பட்டு வருடாவருடம் ஒரு பகுதிக்கு  நெல்லுக்கும், மறு பகுதிக்கு புஞ்சை பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆகமொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. இவ்வணையின் மூலம் பழைய வாய்க்காலான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெருகிறது. அவைகளுக்கு வருடா வருடம் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது.கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ,000 ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000 ஏக்கரும், பாசனம் பெருகிறது. 

  நானும் மகனும்

ஒரு நாள் சுற்றுப்பணயத்துக்கு  ஏற்ற இடம் அதிகப்ட்சம் செலவு 300க்குள் அடங்கும்.
 

Wednesday, June 13, 2012

அஞ்சறைப்பெட்டி 14/06/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிமையான ஓர் அனுபவம் கோவையில் எங்களால் அரங்கேற்றப்பட்டது கோவையைச் சேர்ந்த பதிவர்கள் பரஸ்பரம் , அறிமுகம் என்று களை கட்டியது எங்கள் நினைவுகள். கலந்து கொண்ட எங்கள் கோவை வலைப்பதிவர்கள்...
 

...............................................................................................


இந்த வாரத்தில் நாடு முழுவதும் நித்தியானந்தாவைப் பற்றிதான் பேச்சு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
என்னைப் பொறுத்த வரை நித்தியானந்தாவின் மேல் தவறு எதுவும் இல்லை என்பேன் அவர் நல்லவர் இல்லை என்று அறிந்தும் அவரைச்சுற்றி சுற்றி அவரை சந்திக்க செல்லும் மக்களைத்தான் குற்றம் சொல்வேன். நீங்கள் இடம் கொடுத்ததால் தான் தவறு செய்கிறான்.

சாமியார்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம் இதை இன்னும்புரிந்து கொள்ளாமல் அவர் பின் சென்றால் கை என்ன காலைத் தூக்கி கூட மேலே வைப்பார்..

எப்படியும் நித்தி விரைவில் வெளியே வரத்தான் போகிறார்.. மீண்டும் சிஷ்யைகள் அவரைச்சுற்றி சுற்றி வரத்தான் போகிறார்கள் நாம் திட்டிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம்...
...............................................................................................

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று எல்லா கட்சிகளும் தேர்வு செய்ய திக்குமுக்காடுகின்றன. காங்கிரசும், பாரதியஜனதாவும் சிறிய கட்சிகளின் ஆதரவை நோக்கி செல்கின்றனர். இம்முறை மாநில கட்சிகளின் விருப்பம் தான் விரைவில் நிறைவேறும் போல...
................................................................................................

கரூர் மாவட்டம் சணப்பிரட்டி எஸ்.வெள்ளாப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சிதம்பரம்(லேட்) என்பவரது மகன் மணிகண்டன்(17). அவரது தந்தை சிதம்பரம் இறந்து விட்ட நிலையில், கட்டிட தொழிலாளியான அவரது தாய் லதாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். மணிகண்டன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 480 மதிப்பெண் பெற்று பலரது புருவத்தையும் உயர வைத்தார்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1ல் சேர்ந்தார். சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வில் மணிகண்டன் 1,188 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். அவர் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டனின் வறுமையை அகற்றவும், அவரது கல்விக்கு கை கொடுக்கவும் (கரூர் மாவட்டம்) கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் அவரது 13வது மாத சம்பளத் தொகையான ரூ. 50,000த்தை அந்த மாணவனின் மருத்துவ படிப்பு செலவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். காமராஜ் தனக்கு கிடைத்த 12 மாத சம்பளத்தை சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு வழங்கி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப்போல எல்லா எம்எல்ஏக்களும் தங்கள் ஊதியத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட்டால் அதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை...

...............................................................................................


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.

அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட அதிகம்... 1300 திரையரங்குகள்!

வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.
படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை.

 ரோபோ ரஜினி முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும் மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.
...............................................................................................

ஜீன் 12 எப்போதும் காவிரியில் டெல்டா விவசாயிகளுக்காக தண்ணீர் திறந்து விடும் நாள் இந்நாளைத்தான் அநேக விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பர். இந்த வருடம் மழை பொய்த்துப்போனதால் தண்ணீர் திறக்கவில்லை மக்களும் வானத்தை பார்த்து பெருமூச்சு விட வேண்டிய நிலையில் உள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்பதை விட வருணபகவானிடம் கேட்பதே மேல்...
..................................................................................................

டெங்கு காய்ச்சல் வந்தாலும் வந்தது கிராமப்புறங்களில் எல்லாம் கொசு மருந்து புகையை அடிக்கின்றனர். முன்பு மாநகராட்சி, நகராட்களில் தான் அதிகம் காண முடியும் ஊராட்சியில் மருந்து அடிப்பது குறைவுதான் இந்த முறை எங்கள் கிராமத்துக்கு சென்றிருந்தபோது கொசுவை ஒழிக்க புகை அடிப்பதைப்பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி..
இந்த புகையினால் கொசு ஒழியுமா என்றால் அது கொசுவிற்கே வெளிச்சம்...
..................................................................................................

இந்த வாரம் குடிகமன்களுக்கு வருத்தமான செய்தி பீர் விலையை உயர்த்துவது தான். என்ன தான் விலையை உயர்த்தினாலும் அந்த பொருளை நாம் வாங்கமல் இருக்கப்போவதில்லை அது போலத்தான் பீரும்...
விலையை உயர்த்தினால் குடிக்கமா விட்ருவாங்களா...
..................................................................................................

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். இவரது மனைவி சமந்தா. இவர்களுக்கு நான்சி (8), ஆர்தர் (6) மற்றும் புளோரன்ஸ் (22 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இங்கிலாந்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளமையான பிரதமர் என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கிங்ஹாம் சியரில் காஸ்டனில் உள்ள பிளப் இன் என்ற ஓட்டலில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார்.
அதில், பங்கேற்க மனைவி சமந்தா மற்றும் 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றார். விருந்து முடிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகள் ஆர்தர், புளோரன்சுடன் காரில் பிரதமர் இல்லம் உள்ள டவுனிங் தெருவுக்கு புறப்பட்டார்.
காரில் தாயார் சமந்தாவுடன் 8 வயது மகள் நான்சி இருப்பதாக பிரதமர் கேமரூன் நினைத்தார். அதேபோன்று இவருடன் அவள் இருப்பதாக சமந்தா நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு.
விருந்து முடிந்து திரும்பியபோது இவர்கள் இருவரும் தங்களது மகள் நான்சியை அங்கேயே தவறவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் விருந்து நடந்த ஓட்டலின் கழிவறையில் நான்சி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார். அவளை ஓட்டல் ஊழியர் பார்த்து விசாரித்தார். அப்போதுதான் அவளது தந்தை இங்கிலாந்து பிரதமர் கேமரூன் என தெரிய வந்தது.

..................................................................................................

எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் முபாரக்கின் ஆதரவாளரும் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் உச்சக்கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அப்போது சுமார் 200 ஆண்கள் சேர்ந்து பெண்களுக்கு செக்ஸ் தொல்லையும், கொடுமைகளும் இழைத்தனர். இதை எதிர்ப்பு தெரிவித்து நேற்று தக்ரீர் மைதானத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 50 பெண்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வளையமாக கைகோர்த்தப்படி சில ஆண்கள் சுற்றி நின்றனர். அதையும் மீறி சில ஆண்கள் பெண்களை கேலியும் கிண்டலும் செய்தும், கட்டித்தழுவியும் செக்ஸ் கொடுமை செய்தனர்.

மேலும், கைகளை பிடித்து இழுத்தும், துணிகளை அகற்ற முயற்சித்தும் மானபங்கம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அருகே இருந்த அகதிகள் முகாம்களில் புகுந்து தங்களின் மானத்தை பாதுகாப்பு கொண்டனர்.
தகவல்
இன்றைய பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் டென்சன் ஆகாதவர்களே இல்லை என்று சொல்லலாம். பணிச்சுமை, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் டென்சன் உருவாகிறது. நாளடைவில் இதுவே மன அழுத்தம் (டிப்ரஷன்) நோயில் தள்ளி விடுகிறது.

இந்தியாவில் மன அழுத்தம் நோய்க்காக மனநல டாக்டர்களிடம் சென்றால் ரிலாக்ஸ் ஆக இருக்க கற்றுக் கொள்ளுங்கள், வாக்கிங் செல்லுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டது.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மன அழுத்த நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. மன அழுத்த நோய்க்கு மருந்து உட்கொள்தல் தவிர உடற்பயிற்சி செய்தால் குறையுமா என்று லண்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகம், எக்செடர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஆய்வு நடத்தியது.

இதற்காக அவர்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்படட 18 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட 361 பேரை பயன்படுத்தினார்கள். அவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.

ஒரு பிரிவினர் வழக்கமாக அவர்கள் செய்யும் பணியை எப்போதும் போல் மேற்கொள்ளச் செய்தனர். மற்றொரு பிரிவினரை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். 12 மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

இதில் உடற்பயிற்சியால் அவர்களது மன அழுத்தம் கொஞ்சம்கூட குறையவில்லை என தெரிய வந்தது. உலகில் முதல் முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் கார்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  மழை கழுவிய பூக்கள் என்ற பெயரில் அதிசயா என்பவர் எழுதி வருகிறார்.. பெண்ணைப்பற்றியும், அவளின் நட்பு, காதல் பந்தம் என கவிதைகளில் புகுந்து விளையாடுகிறார்... படியுங்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்...

http://athisaya.blogspot.in/
தத்துவம்

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கும்....

பேசும் போது எல்லாவற்றையும் நன்றாக யோசி, ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே...

Tuesday, June 12, 2012

கோவையில் உற்சாகமான உள்ளுர் பதிவர் சந்திப்பு..002

கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள் அவரிகளின் சுயஅறிமுகம் செய்த போது அவர்களைப்பற்றிய எனது தொகுப்புக்கள் இந்த தொகுப்புற்கு மிக உதவியர் கவிதாயினி சரளா.
 தீயா வேலை செய்கிறார்கள்
The Kid with Pike ப்ரஞ்ச் படம்

கோவி அவர்கள் ( முரன்சுவை ) கவிதைகளின் தேவைகளைகளை பற்றி அருமையாக விளக்கினார் மேலும் வலை ஆரமிக்கும் முன் பின் நிகழ்வுகளை வரிசகரமாக அடுக்கியது கேட்கவே சுவாரசியமாக இருந்தது .

அடுத்ததாக ஐயா கந்தசாமி அவர்கள் பேசுகையில் நம் நோக்கம் குறிக்கோள் இவைகளை பதிவுகள் மூலமாக உலகறிய செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சபாபதி வெற்றிக்கு அருகில் மூலிகைகளை படம் எடுத்து அதன் இயற்பெயர் அறிவியல் பெயர் அதன் பயன் என கலக்கல் பதிகளை தன் வலையில் நிரப்பியிருக்கிறார் .

 யோகநாதன் .பேருந்து நடந்துனராக இருந்துகொண்டு மனித சமூகத்திற்கு இவர் ஆற்றும் பணி அளவிட முடியாதது .....மரங்களை காக்க இவர் மேற்கொள்ளும் போராட்டங்களும் அரசை எதிர்த்து அரசு ஊழியனான அவர் செய்யும் செயல்கள் பாராட்ட வைக்கின்றது மனிதனாய் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற இவரின் லட்சிய பயணம் கண்டு வியந்தோம் .

வின்சென்ட் இயற்க்கை மற்றும் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை ஆதாரபூர்வமாக தன்னயுடைய தளத்தில் வெளியிடுகிறார். பல மர வகைகளை எப்போது கேட்டாலும் அதன் நன்மைகள் தீமைகள் என்று அனைத்தையும் சொல்லக்கூடியவர். மூலிகை பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
நறுமுகை தேவி முகநூலில் இவருக்கு என்று தனி இடம் பிடித்திருக்கிறார் இலக்கியம் பல்சுவை கட்டுரைகள், கவிதைகள் என தனி முத்திரை பதிக்கிறார். . ஆண் பெண்ணின் ஆரோக்கியமான உறவையும் முகநூளில் காணப்படும் நட்பின் பயம் பற்றியும் வெளிப்படையாக விவரித்தார்.
பெருமாள் சக்தி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கோவை மாவட்ட தலைவர் ) இவரின் கார்கில்  பற்றிய இரண்டாயிரம் மீட்டர் கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் மேலும் பல நுண் இலக்கியங்களை வெளியிட்டு இருக்கிறார் இவரின் சாதனை போற்றுதற்குரியது .

விஜி ராம் இவர் நேசம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை நடத்துகிறார் அதை பற்றிய செய்திகளையும் மரகன்றுகளை கொடுத்து அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார்.

எழில் .இவர் நிகழ்காலம் என்னும் பெயரில்   பல்சுவை நிகழ்வுகளை பதிவு செய்கிறார். பெரியார் பற்றிய சிந்தனைகளை அதிகம் பகிர்ந்தார்.


சங்கவி இவர் கிராமத்து விருந்து என்ற நோக்கில் அழித்து வரும் பாரம்பரியங்களை பற்றியும் பல நிகழ்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு செய்கிறார். மற்றும் அரசியல் பதிவுகள் எழுதி வருகிறார்.

 கோவை மு சரளா இவர் பெண் என்னும் புதுமை என்ற தளத்தில் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை தனது கவிதைகளின் தொகுத்துள்ளார் .சமூகம் சார்ந்த பணிகளில் அக்கறை மிக்கவர். இவரின் முள்ளிவாய்க்கால் கவிதைகள் பிரபலம்.
கோவை நேரம் ஜீவா கோவையின் புகழ் பரப்பும்  மனிதர். கோவையை சுற்றியும் அதன் கோவைக்குள்ளும் அறிய கிடைக்காத பல விசயங்களை நம்மோடு பகிருகிறார். ( பாண்டியன் ஊறுகாய் என்பதை பற்றி ருசிகரமான ஒரு பதிவை வெளியிட்ட பெருமைக்குரியவர்). 

யோகமணி ராமராஜ் குழந்தைகளின் மேல் அதிக அன்பும் பாசமும் மிக்கவர்.. இவருக்கு மிகவும் பிடித்தமானது ஜோக்ஸ்... ரொம்ப ரொம்ப ரசித்து சொல்கிறார் நினைவுகளை...

 வீடு சுரேஷ் கோவை பதிவர் குழும பேனர் டிசைன் இவரால உருவாக்கப்பட்டது நல்ல திறமைமிக்க தன்னடக்கம் மிகுந்தவர் அவரின் கிராம சூழல் பற்றி கவிதைகள் பதிவுகள் வெளியிடுகிறார். முக்கியமாக அஞ்சலியின் ரசிகர்...

உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி பிடித்து மற்றவருடன் பகிர்வதில் பெரும் ஆனந்தம் கொள்ளும் அற்புத மனிதர் இவர் வெளியிட்ட ரஷ்ய சினிமா இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய பொறுப்பான படம் .....
 முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் இருந்தது ...

 சம்பத்குமார் தமிழ் பேரன்ட்ஸ் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அருமையான பதிவுகளை வெளியிடுகிறார் தானே முன் வந்து மற்றவருக்கு உதவும் மனிதர் தொழில் நுட்ப சந்தேகங்களை தீர்க்க முனைந்து வந்து உதவினார் .

 சிவசங்கரன் பொள்ளாச்சிய சேர்ந்த இவர் காதல் தோல்வியால் பதிவு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார் .......மீண்டும் ஒரு காதல் கைகூடினால் பதிவு எழுதுவதாக உறுதி அழித்து சென்றார் ஆகவே அவரின் காதல் கை கூட வாழ்த்துக்கள். இவரின் பொழுது போக்கு மாடு மேய்ப்பது..
கோவை சக்தி மரம் வெட்டுதல் தடுக்கும் பல பதிவுகளையும் ,பங்கு சந்தை நிகழ்வுகளையும் பளிச்சென்று தெரியும் வகையில் பதிவு செய்கிறார் மிகவும் அடக்கமான மனிதர்.

ஸ்ரீதர் இவர் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றியும் சமூக நோக்கில் பேசினார்.

கலாகுமரன் இனியவை கூறல் என்ற தளத்தில் அறிவியல், இயற்கை மற்றும் பல்சுவை பதிவுகளை வெளிடுகிறார் ......சுற்றுசூழல் ஆர்வலர் .....

பாபுராஜ் நகை தொழில் செய்யும் இவர் பங்கு சந்தை பற்றிய பல செய்திகளை பதிவிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்வி இவருக்கு ஒரு தடையில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

என் கணேசன் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் இவர் பல பயனுள்ள பதிவுகளை கொடுத்து எல்லோரையும் அசத்துகிறார் .தன்னம்பிக்கை பற்றியும் ஆன்மிகம் பற்றியம் ஆனந்த விகடனில் இவரின் கட்டுரைகள் வெளி வந்திருகின்றன .

ஆனந்தன் பத்திரிக்கை நிருபர் அமையான கடலில் புறப்படும் அதிவேக அலைபோல அவரிடம் இருந்து புறப்பட்ட வார்த்தைகள் சமூகத்தின் மீது கொண்ட கோபம் இவை எல்லாம் அவரை ஆச்சர்யம் கொள்ள செய்கிறது.


வினோத் இளைய தலைமுறையின் சக்தியாக இவரை பார்க்க முடிகிறது வார்த்தைகளில் புது வேகம் இயற்கையை பாதுகாக்க இவர் மேற்கொள்ளும் பணி சிறப்புக்குரியது வனத்துறை உதவியுடன் நல்ல மரகன்றுகளை தரிசு நிலங்களில் வளர்க்க உதவுகிறார் .......நீரின் உபயோகம் பற்றி கேள்வி கேட்டு எல்லோரையும் மௌனமாக்கினார்.

ஈரம் மகி மகேந்திரன் உண்மையில் நெஞ்சில் ஈரம் இருக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர் ஆதவற்ற நிலையில் சாலையோரம் இருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளோடு செய்தும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்தும் மனித குலத்திற்கு பெருமை சேர்க்கும் மகத்தான மனிதர் இவருக்கு பெரிதும் உதவியது முகநூல் நண்பர்கள் என்று அழுத்தமாக அவர் கூறியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

ராஜா நடராஜன் இவரை போல தன்னடக்கத்துடன் ஒரு உரையை யாராலும் ஆற்ற முடியாது அத்தனை இரத்தின சுருக்கம் .
கோவை சதீஸ் அகிம்சா சோசியல் சர்வீஸ்  மூலம் ஏழைகளுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மரம் நடுதல் போன்ற பயனுள்ள செயல்களை செய்யும் இளைனர் ......உதவும் மனப்பான்மை மிக்கவர் .
 எஸ்.ஆர். சேகர் டாக்டர் பினாயில் நிறுவன உரிமையாளர். சந்தன சிதறல் வலைதளத்தில் பல சுவைமிக்க கவிதை அரசியல் என பதித்துள்ளார் காட்சிக்கு எளியவர் எதையும் ஆழ்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு மிக்கவர்.


வா.மு.முரளி கோவையில் உள்ள பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வ மிக்கவர் இவரின் கவிதை வரிகளும் எழுத்துக்களும் நெஞ்சில் நிற்கும்.

பாலகணேஷ் கோவையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியிம் இவரின் பாலவின் பக்கங்கள் பிரபலம்.. டிவிட்டரில் தனது கருத்துக்களை அதைகம் சொல்பவர்.


பாலாஜி ............இணைய வடிவமைப்பாளர் ,பல இலவச கல்வி சேவைகளை செய்கிறார்.





அடுத்த பதிவில் நில சுவாரஸ்யமா படங்களுடன் நிறைவு பெறப்போகிறது கோவை பதிவர் சந்திப்பு...