Wednesday, June 20, 2012

அஞ்சறைப்பெட்டி 21/06/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சமீபத்தில் என் அக்கா வீட்டுக்கு சென்ற இருந்த போது அங்கு அவர் மகனின் பள்ளி டைரியை புரட்டினேன்.. அந்த டைரியில் மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தை விபரங்கள், மாத வருமானம் என அவர்கள் குடும்ப தகவல்கள் பல இருந்தன. இவை அனைத்தும் சரியானது தான்.. ஆனால் நேசனாலிட்டி பக்கத்தில் கேசட் என்று மறக்காமல் ஜாதி பெயரையும் குறிப்பிட்டு இருந்தனர். இதில் இவர்கள் ஜாதி பெயரை குறிப்பிடாமல் இருந்ததற்க அவர்கள் வகுப்பாசிரியர் சிகப்பு மையில் கேள்விக்குறி போட்டு அனுப்பி உள்ளார்.

இதற்கு பெயர் தான் காலக்ககொடுமை வருடம் 50000 கட்டணம் வாங்கிவிட்டு 3 ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஜாதியை சொல்லித்தரும் பள்ளி எதற்கு.. ஜாதியை குறிப்பிடுவதன் கூட இருக்கும் மாணவர்கள் அதைப்படிக்க வாய்ப்பிருக்கிறது.. பிஞ்சிலேயே மாணவர்களுக்கு ஜாதியை சொல்லித்தரும் பள்ளிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
...............................................................................................

இந்திய அரசியலில் குடியரசுத்லைவர் தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் அடித்துக்கொள்வதைப் பார்த்தால் நம் அரசியல் வளர்ச்சி சிரிக்க வைக்கிறது. அது ஒரு தலையாட்டும் பதவி தான் என்றாலும் மாநிலக்கட்சிகள்தான் நிர்ணயிக்கின்றன யார் வரவேண்டும் என்று.

காங்கிரஸ் பிரணாப்பை அறிவித்துள்ளது அநேகமாக இன்று மாலைக்குள் அவருக்கு எதிராக சங்மா நிச்சயம் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
...............................................................................................

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை அம்மா கூப்பிட்டு திட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்னையில் அதிமுக இன்று  அதிக இடங்களையும், மாநகராட்சியையும் கைப்பற்றியதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆட்சியில் கவுன்சிலர்களின் மக்களுக்கு கொடுத்த தொல்லை தான்.

அதே நிலைமை மீண்டும் அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்தால் நிச்சயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதன் தாக்கம் தெரியும் என்பதால் தான் அம்மா சுதாரித்து கவுன்சிலர்களை வரவைத்து ஒரு அட்வைஸ் செய்தது சந்தோசமான விசயம் கூடவே மாநகராட்சியை கலைக்க தயங்க மாட்டேன் என்பதும் கவனிக்கத்தக்கது. இது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊருக்கும் பொறுந்தும்...

................................................................................................

மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கீயி ஜனநாயக மீட்பு போராட்டம் நடத்தி வந்ததால் 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூ கீயி, சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் 4 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்த அவர், இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார்.  

24 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இங்கிலாந்து திரும்பியுள்ள சூ கீயி, அங்கு தனது குடும்பத்தினரை சந்தித்தார். 24 வருட இடைவெளிக்குப் பின் நடைபெற்ற இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தது. அதற்குப் பின்னர் தனது 67-வது பிறந்தநாளை முன்னிட்டு டப்லின் சென்ற சூ கீயிக்கு, பொதுமக்கள் சார்பாக பிறந்தநாள் கேக் பரிசளிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாடலும் பாடப்பட்டது.  

இங்கிலாந்து நாட்டவரான மைக்கேல் ஏரிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சூ கீயி, கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் இங்கிலாந்தில் நீண்டகாலம் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

...............................................................................................

இந்த வருடம் பருவமழை மிக குறைந்துள்ளால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக குறைந்து வருகிறது. இது டெல்டா விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தரும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் அணைக்குள் மூழ்கி இருக்கும் கோபுரங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. இது காணக்கிடைகக்காத ஒரு நிகழ்வு..

...............................................................................................

ஆடுகள் என்றாலே உரோமத்துக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட வேண்டியவை என்று நினைக்கும் ஐரோப்பியர்களே நெகிழ்ந்து போகும் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. லண்டன் பல்கலைக் கழகத்தாரின் நெடிய ஆராய்ச்சி தெரிவிக்கும் உண்மைகள் நம்மில் பலரின் கண்ணையும் திறக்க உதவக்கூடும்.ஆடுகள் தங்களுடைய குட்டிகளைப் பிரிந்தாலும் அவற்றின் குரலை மறப்பதில்லை.

ஓராண்டுக்குப் பிறகு கூட குட்டியின் குரல் கேட்டால், அது எங்கே இருக்கிறது என்று நாலா திசைகளிலும் உற்றுப் பார்த்து தேடுகிறது தாய் ஆடு.நாட்டிங்காம்ஷைர் என்ற இடத்தில் ஆட்டுப் பண்ணையில் சில குட்டிகளின் குரல்களை ஓலி நாடாவில் பதிவு செய்தார்கள். சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு, அந்தக் குட்டிகள் தாய் ஆடுகளைப் பிரிந்தநிலையில் அந்தப் பண்ணைக்குச் சென்று ஒலிபரப்பினார்கள். அப்போது தாய் ஆடுகள் தத்தமது குட்டியின் குரலைக் கேட்டவுடன் தலையை உயர்த்தி, அது எங்கே என்று நாலா பக்கங்களிலும் பார்த்ததையும் தேடியதையும் பதிலுக்குக் குரல் கொடுத்ததையும் கண்டு நெகிழ்ந்தார்கள்.

குட்டி எதிரில் இல்லை என்றதும் எல்லா தாய் ஆடுகளுமே சோகத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்தன.தாய் ஆடுகள் தங்களுடைய குட்டிகளை அவற்றின் குரல்கள் மூலமும் உடலில் உள்ள சில குறிகள் மூலமும் வாசனை மூலமும் அடையாளம் காண்கின்றன.மந்தையாக வாழும் இயல்புடைய ஆடுகள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரைதேடும் இயல்பின. தாய் ஆடுகள் தன்னுடைய பிள்ளை ஆடுகளின் குரல்களை அறிந்திருப்பதால் இரவில் அவை ""சேர வந்தால்'' தவிர்த்துவிடுகின்றன.

சீல் என்று அழைக்கப்படும் கடல்வாழ் பிராணி, யானைகள், அணில்கள் போன்றவையும் தங்களுடைய உறவினர்களைப் பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகும் குரலை வைத்து அடையாளம் காணும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குணம் இந்தப் பிராணிகளுக்கு மட்டுமல்லாது ஏனைய பலவற்றுக்கும்கூட பொதுவானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


..................................................................................................

ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் 3 பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.  ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான், அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்; ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

 (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)  எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட!  இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது.  ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவா? வீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.

 நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களே, அப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.  ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம், டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்பு' போட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்து, அழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள்.

அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும், இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.  இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள், பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!
..................................................................................................

சீனாவில் இருந்து ஷென்ஷோ-9 என்னும் மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.
3 பேரோடு செல்லும் இந்த விண்கலத்தில் முதல்முதலாக ஒரு பெண் செல்கிறார். 33 வயதான லியூ யாங் என்கிற அவர் விமானியாக இருந்துள்ளார். அவரால் இயக்கப்பட்ட விமானத்தில் 18 புறாக்கள் மோதிய போது சாமர்த்தியமாக அதனை தரையிறக்கினார்.
இந்த சாமர்த்தியம்தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பை அளித்துள்ளது. ரஷியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் பெண் ஒருவரை விண்ணில் செலுத்துகிறது. அவரோடு ஜிங் ஹாய்பெங் மற்றும் லியூ வாங் ஆகியோரும் செல்கின்றனர்.

..................................................................................................

இந்த வார இறுயில் பாண்டியில் 2 நாட்கள் டேரா போடுகிறேன்.. பாண்டியில் யாராவது நண்பர்கள் இருந்தா சொல்லுங்கோ சந்திப்போம்...

தகவல்
இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் என்பவர், ரத்தக்குழாயை ஸ்டெம் செல் மூலம் தயாரித்து, 10 வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு குடல், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ரத்தக்குழாய் பழுது பட்டதால், இதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஸ்வீடன் நாட்டின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் தலைமையிலான குழுவினர், இறந்து போன ஒருவரின் ரத்தக்குழாயை எடுத்து, சிறுமியின் எலும்பு மஜ்ஜையிலிருந்து செல்களை எடுத்து, புதிய ரத்தக்குழாயை உருவாக்கினர். இந்த குழாயை, தற்போது சிறுமிக்கு பொருத்தி உயிரை காப்பாற்றியுள்ளனர். மருத்துவ வரலாற்றில், இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  நட்புடன் சௌம்யா என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். இவருடைய காதல் கவிதைகள் அனைத்து நெஞ்சை கொள்ளை கொள்பவை... ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்...

http://sowmyathinkings.blogspot.in/
தத்துவம்

சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

வேலை மனிதனைக் கொல்லாது.. கவலைதான் கொல்லும்...

நாம் உண்மையாக வாழ்வது என்றால்,கடமையைச் சரியாக செய்வது என்றுதான் அர்த்தம்.

10 comments:

  1. வணக்கம் தல

    ம்ம்........ என்னாது பாண்டியா? நீங்க கலக்குங்க

    ReplyDelete
  2. நான் கோவையில் உள்ள L G B யில் interview அட்டென் பண்ண போன வாரம் சென்றிருந்தேன் அவர்கள் ஒரு application form கொடுத்து fill பண்ண சொன்னார்கள் நான் காஸ்ட் ல் ஜாதி பெயரையும் ஜாதியையும் குறிக்க வில்லை .உடனே HR பெர்சன் கண்டிப்பாக குறிக்க வேண்டும் எனவும் ஒரிஜினல் சேர்டிபிகட் ம் காண்பிக்க வேண்டும் எனவும் கூறினர் .இத்தனைக்கும் எனக்கு 10 வருட அனுபவம் உள்ளது .அனுபவத்தை வைத்து வேலையா அல்லது ஜாதியை வைத்து வேலையா ?.உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் இவர்களை திருத்த முடியாது.

    ReplyDelete
  3. தாய்பாசம் மனிதர்களுக்கு மட்டும் தான் என்பவர்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்...பெங்குவின்கள் குடும்பமாக வசிப்பதை பார்கிறோம். டால்பின்களும் குரலை வைத்து அடையாளம் காண்பதாக சொல்கிறார்கள். குடும்ப பாட்டு கூட இருக்குமோ..?

    ReplyDelete
  4. Pondy trip with family or without family??

    ReplyDelete
  5. நானும் இருக்கிறேன்..

    ReplyDelete
  6. நல்ல கலக்கல் செய்தி

    ReplyDelete
  7. வரும்போது பாண்டியில் இருந்து போஸ்டர் பீர் வாங்கி வாங்க...ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  8. எல்லாம் அருமை...
    பிரதீபா பாட்டில் என்ற உயிர்காலேஜ் பண்ணின அலும்பு இப்ப எல்லா பயலுகளையும் ஜனாதிபதி பதவி ஆசையை தூண்டி விட்டுருச்சின்னி நினைக்கிறேன்.... பிரணாப்புக்கு நல்ல பெட்டா ரெடி பண்ணனும்... தூக்கத்தில்தான் அதிக நேரம் செலவிடுவாரு போல....

    ReplyDelete