Monday, June 18, 2012

பவானிசாகர் அணை.. ஒரு சிறு பயணம்...

ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு சிறப்பு இருக்கும் இவ்வார இறுதியில் ஊருக்கு செல்லலாம் என்று கிளம்பும் போது மகன் தண்ணீரில் விளையாட ஆசைப்பட ஊருக்கும் செல்லும் வழியில் ஒரு 15 கிலோமீட்டர் குறுக்கே சென்றால் பவானிசாகர் அணை வரும் என்று அங்கு மகனை வாய்க்காலில் குளிக்க வைக்கலாம் என்று புளியம்பட்டியில் இருந் து பவானிசாகர் சொல்லும் சாலையில் சிறு அடர் காட்டுக்குள் சாலை மட்டும் நடுவில் இதில் சில்லென்ற காற்றில் பயணம் மேற்கொண்டோம்...


வழி எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வாழையும், மல்லிகைப்பூவும் அதிகம் பயிரிட்டு இருந்தனர். இங்கு விளையும் வாழைப்பழம் மற்றும் வாழை இலைகள் அதிகம் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றனவாம்.  மைசூர் மல்லி என்று கேள்விப்பட்டு இருப்போம் மைசூருக்கு செல்லும் மல்லிகையில்ல் 40 சதவீத மல்லி பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் இருந்து தான் செல்கின்றனவாம்.. 


பவானிசகாரில் நிறைய அரசு அலுவலர் பயிற்சி நிலையங்கள் நிறைய இருக்கின்றன இதில் குறிப்பிட்டு சொல்ல இந்தி சிவில் சர்வீஸ்க்கான பயிற்சி நிலையமூம் உள்ளது. மின்சாரத்துறையின் பல பயிற்சி நிலையங்கள் இயற்கையான சுற்றிலும் மரங்கள் கொண்டு வீடு இருப்பதே தெரியவில்லை அந்த அளவிற்கு அளகாக உள்ளது பவானிசாகர். இங்கிருந்து அணையில் தூரம் 2 கிலோமீட்டர். அணை செல்லும் முன்பே மீன்வாசம் மூக்கைத் துளைத்தது அரசு மீன் பண்ணை மூலம் மீன் விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருந்தது அனைத்து நாட்களும் காலை முதல் மாலை வரை இங்கு மீன் கிடைக்குமாம். இங்கிருந்து மீன்கள் கோவை, திருப்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றதாம்.


வாகன நிறுத்திமிடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது சில்லென்று பலத்தை மழை ஒரு 5 நிமிடம் மட்டுமே பெய்தது. வாகனம் நிறுத்த 15 ரூபாயை கொடுத்து விட்டு சுற்றிலும் மீன் வாசனையோடு அனையின் பூங்காவிற்கு சென்றோம் வழியில் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வாங்க மீன் சாப்பிடலாம், வாங்க மீன் சாப்பிடலாம் என்று ஒவ்வொரு கடையிலும் அழைக்கின்றனர். 

பொதுவாக இந்த மாதிரி சுற்றுலாத்தளங்களில் நான் மீன் சாப்பிட மாட்டேன் இங்க லோகு, கட்லா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் தான் கிடைக்கும் அதுவும் அணைக்கு அருகில் இருப்பாதல் ப்ரஸ்சாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட்டால் அது ஏமாற்றம் தான். இங்கு பழைய குளிர்சாதனப்பெட்டியில் வைத்த மீன்களைத்தான் விற்பார்கள் அதனால் நாம் அரசு மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று மீன் வாங்கி இவர்களிடம் வறுக்க கொடுக்கலாம் எண்ணெய்யும் நாமே வாங்கித்தாந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் அதிகம் செல்லும் கொடிவேரி அணை, மேட்டூர் அணை, ஒகேனக்கல் எல்லாம் இப்படித்தான் செய்வோம் இல்லையேல் அங்கு மீன்சாப்பிட மாட்டேன். சாப்பிட்டால் பின்விளைவு அடுத்த நாள் அதிகம் இருக்கும் என்பதால்...


பூங்காவிற்கு தலைக்கு 4 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே சென்றோம்.. 



பவானிசாகர் அணை பூங்கா...

இந்த சீசனில் தண்ணீர் அதிகம் இல்லாதது பூங்கவைப் பாத்ததும் தெரிகிறது. பூங்காவில் எங்கும் தண்ணீர் ஓடவில்லை தண்ணீர் செல்லும் நீரூற்றுக்கள் காய்ந்து கிடக்கின்றன. மற்றபடி பூங்கா முழுவதும் புதிதாக டைல்ஸ் ஒட்டி நடைபாதை எல்லாம் புதுப்பித்துள்ளனர். குழந்தைகள் விளையாட சீசா, சறுக்கல், சிறு ராட்டினம், தூரி என்று பல விளையாட்டுக்கள்  குழந்தைகளுக்காக நன்கு பராமரித்து வைத்துள்ளனர். பல இடங்களில் புல்வெளி காயந்தும் சில இடங்களில் பச்சை பசேலென அழகாக உள்ளது. நிறைய குடும்பங்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டோடு புல்வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். குடிப்பதற்கு பல இடங்களில் தண்ணீர் குழாய்கள் வைத்துள்ளனர்.

பூங்காவினுள் மீன் குழம்பு மற்றும் வறுவலுடன் சாப்பாடு கிடைக்கிறது சுவை சுமார் தான் என்றனர் சாப்பிட்டவர்கள். புகைப்படங்கள் எடுக்க அழகான பல இடங்கள் உள்ளன. அடுத்து ஈரோடு, கோவையைச் சேர்ந்த காதலர்கள சந்திக்க அருமையான இடம் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு காதலர்கள் கூட்டம் நிரம்பி இருந்து. எங்கு பார்த்தாலும் சிறு சந்து பொந்துகளில் அவர்களை அதிகம் காண முடிந்தது. 


குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுளிக்கும் அளவில் ஒரு சிலர் ஈடுபட்டாலும் மற்றவர்கள் ஒகே என்று சொல்லாம். ஒரு நாள் சுற்றுலா செல்ல முடிவெடுத்தால் அருகில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் மற்றும் கொடிவேரி அணையை சுற்றுப்பார்க்கும் போது அழகாக ஒரு நாள் பொழுது செல்லும். அணையின் மேற்பகுதிக்கு செல்ல அனுமதி தற்போது இல்லை. சிறுவயதில் ஆடி 18 சமயத்தில் இங்கு வந்து மேல் ஏறி ஆட்டம் போட்டது நினைவிருக்கிறது. 
பவானிசாகர் அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறும் நீலகிரியில் உற்பத்தியாகி வரும் மேயாறும் இணைந்து பெரிய ஆறாக உருவாகிறது பவானி நதி. இந்நதியின் குறுக்கே சத்தியமங்கலத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் . ஆசியாவில் மிகப்பெரிய மண் அணை என்றும் கூறுவர். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். இங்கு இரண்டு இடங்களில் புனல் நீர்மின் திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 


ஈரோடு மாவட்டத்தில் காவிரி பாய்ந்தாலும் ஈரோடு மாவட்ட விவாயிகள் அதிகம் பயன்படுத்தும் நீர் பவானி நீர் தான். இங்கு உள்ள விவசாய பகுதிகள் இந்நீரை நம்பியே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இரு பகுதிகளாக  பிரிக்கப்பட்டு வருடாவருடம் ஒரு பகுதிக்கு  நெல்லுக்கும், மறு பகுதிக்கு புஞ்சை பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆகமொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. இவ்வணையின் மூலம் பழைய வாய்க்காலான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெருகிறது. அவைகளுக்கு வருடா வருடம் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது.கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ,000 ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000 ஏக்கரும், பாசனம் பெருகிறது. 

  நானும் மகனும்

ஒரு நாள் சுற்றுப்பணயத்துக்கு  ஏற்ற இடம் அதிகப்ட்சம் செலவு 300க்குள் அடங்கும்.
 

8 comments:

  1. வணக்கம் தல

    படிச்சிட்டு அப்பாலிக்க வாரேன்

    ReplyDelete
  2. அருமையான புகைப்படங்களுடன் அனுபவ கட்டுரை அருமை.!

    ReplyDelete
  3. நான் அங்கே வரும் போது இங்கேயெல்லாம் கூட்டிட்டு போகணும் இல்லைன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்கள் அழகிய பகிர்வு மீன் சுவைப்பது பற்றிய அனுபவ சுவை அசத்தல் ........

    ReplyDelete
  5. மகன் தண்ணீரில் ஆட...///அப்பா நீங்க...எதுல...?
    நல்ல பதிவு...

    ReplyDelete
  6. நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க .அருமை

    ReplyDelete
  7. very nice dear brother...tank u vrey much..informations r very use full and nice thanks once again...

    ReplyDelete